இண்டர்வெல் முடிந்து பரபரப்பாய் போய் கொண்டிருந்தது அயன் திரைப்படம், திடீரென்று படம் கட் ஆகியது. மெலொடி தியேட்டரில் டிஜிட்டல் புரொஜெக்ஷன் என்பதால் படம் திரும்ப வருவதற்கு சற்று நேரம் ஆனது. (ஏன் என்பதற்கான காரண்ம் பின்னால்). நொந்து போன ரசிகர்கள்களின் விசிலும், சத்தமுமாய் தியேட்டரே அல்லோல கல்லோலபட, திடீரென படம் முதலில் இருந்து ஆரம்பித்தது, திரும்பவும் கட் ஆகி, பாதியிலிருந்து ஆரம்பிக்கபட்டு, கட், மீண்டும் ஸ்டார்ட். ஆனால் இப்போது ஆரம்பித்ததோ நாங்கள் பார்த்து கொண்டிருந்த காட்சியிலிருந்து அரை மணி நேரம் கழித்து வரும் காட்சியிலிருந்து. ஏற்கனவே முதல் காட்சியில் படம் பார்த்திருந்த ரசிகர்கள் காட்சிகளில் ஜம்ப் ஆகிவிட்டது எதிர்த்து புரொஜெக்டரில் துணியை வைத்து மூடி, கலாட்டா செய்ய ஆரம்பித்தார்கள்.
தியேட்டர்காரர்களோ, அப்படியே ஓட்டினால் சரியாகிவிடுவார்கள் என்று நினைத்து மேலும் படத்தை ஓட்ட நினைக்க, உயரமான ஒருவர் சீட்டின் மீது ஏறி தன்னுடய டவலால் முழு புரொஜெக்ஷன் திரையையும் மறைக்க, தியேட்டர் மேனேஜர் ஆட்களுடன் வந்து, மிரட்ட, மக்களும் ஒன்று சேர்ந்து கத்த, வேறுவழியில்லாமல் மறுபடியும் கட் ஆகி கரெக்டான இடத்திலிருந்து பட்ம் ஆரம்பித்தது.
படம் ஆரம்பித்து ஒரு பாடல் காட்சியின் போது திடீரென தியேட்டருள் ஒரு இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் சகிதமாய் திரையை மறைத்த உயர இளைஞரை அழைத்து கொண்டு போனார்கள், இதை பார்த்த மக்களூம் நமக்காக போராடிய ஒருவரை போலீஸை வைத்து அழைத்து போவதை பார்த்து கொதித்து எழுந்து மேலும் பலர் அவர்களின் பின்னே போக, வெளியே போனவுடன், அவரை போலீஸார் அடிக்க முற்பட, அதற்குள் வெளியே சென்ற ரசிகர்கள் உள்ளே புகுந்து மேனேஜர் நோக்கி கத்த, ஒருகிணைந்த மக்கள் ச்க்திக்கு முன்னால் ஒன்றும் செய்ய முடியாமல் மேனேஜர் தன் தவரை ஒத்துக் கொண்டு, வெளியேறினார்.
இதே போல பல தடவை சத்யம் திரையரங்கில் நடைபெற்றிருக்கிறது. அப்போதெல்லாம் லோக்கல் ஸ்பிக்கர் மூலமாய் தியேட்டரின் உள்ளே வ்ந்து இத்தனை நிமிடங்களுக்குள் பிரச்சனை சரி செய்யப்படும் என்று அறிவிப்பர்கள். மீறி நேரம் ஆகும் என்றால் உங்கள் பணம் திரும்ப வாங்கிக் கொள்ளலாம். பார்க்கிங்க் சார்ஜ் உட்பட், இதுவல்லவா நிர்வாகம்.
அநியாயத்துக்கு எதிராய் எழும் மக்கள் சக்தியின் பவர் இது. இதே போல் மக்கள் அனைவரும் தங்களுக்கு எதிராய் நடக்கும் எல்லாவிதமான அநியாயங்களுக்கும் பொங்கியெழுந்தால் கண்டிப்பாய் நியாயம் கிடைக்கும்.
டிஜிட்டல் புரொஜக்ஷன் பிரச்னை
டிஜிட்டல் புரொஜக்ஷனில் படம் ஓடிக் கொண்டிருக்கும் போது சில சமயம் ஹாங் ஆகி படம் கட் ஆகிவிடும், நாம் திரும்பவும் கம்யூட்டரை ரீபூட் செய்து படத்தின் டைம் கோடை தெரிந்திருந்தால் சரியாய் அந்த கோடுக்கு வரவைத்து படத்தை ஆரம்பிக்கலாம். முக்கால் வாசி தியேட்டர்களில் சாதாரண ப்ரஜெக்ஷன் தியேட்டர்களில் எப்பவுமே இரண்டு புரெஜெக்டரில் மாறி, மாறி படம் ஓட ஒரு அசிஸ்டெண்டாகவது, இருப்பார். ஆனால் ப்ளாட்டர், டிஜிட்டல் புரொஜக்ஷன் வந்த பிறகு அசிஸ்டெண்ட் கட், ஆப்பரேட்டர் ஒருவர் மட்டுமே சுவிட்சை ஆன் செய்தவுடன் அது பாட்டுக்கு ஓட ஆரம்பித்து விடும், சரியாக இண்டர்வெல் சமயத்தில் வந்து ஆப் செய்தால் போதும். அதனால் இருக்கும் ஒரு ஆப்பரேட்டரும் படம் கட் ஆனது, ரசிகர்கள் சத்தத்தினால் தெரியவந்து அத்ற்கு பிறகு உள்ளே வருவதால் டைம் கோட் தெரியாமல் தேட வேண்டிவருகிறது.
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
இந்த தேர்வுக்கு...3 நாட்கள்..540 பேரிடம்..நேர்காணல் தேவையா? நமக்கு தெரியவில்லை.
பாவம் கலைஞர்...அவரை நீண்ட நேரம்..இல்லை..இல்லை..நீண்டநாட்கள் ..அவர் உடல் நிலை சரியில்லாத நேரத்தில் மீண்டும் உட்கார வைத்து விட்டார்கள்.
சரி...தலைப்புக்கு வருவோம்...
வேட்பாளர்களின் வாழ்க்கை குறிப்பை..மாறனின் குடும்ப தினசரியில் எழுதி உள்ளார்கள்.
அதில்..தயாநிதி மாறன் பற்றி...
1966ஆம் ஆண்டு டிசம்பர் 5 ல் பிறந்தார்.லாயோலா கல்லூரியில் பி.ஏ.,(பொருளாதாரம்) படித்தார்.1994ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் ந்டந்தது.மனைவி பிரியா தயாநிதி மாறன்.இவர்களுக்கு ஒரு
மகள், ஒரு மகன் உள்ளனர். என்றெல்லாம்...ஒரு பெரும் தலைவருக்கான சுய சரிதம் பாடியுள்ளனர்.
மேலும்..ஒன் இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்..தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.. என்றெல்லாம் புகழ் பாடப்பட்டுள்ளது..
மாணவ சமுதாயமே...உழைக்கும் இளைஞர்களே..இவர் பற்றிய விவரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்..
யார் கண்டது...நாளைக்கே இவர் சம்பந்தமான கேள்விகள்...நீங்கள் எழுதப்போகும் பரிட்சைகளில் கேட்கக்கூடும்.
உதரணத்திற்கு...1966..டிசம்பர் 5 முக்கியமான தினம் ..அது என்ன ..என்று கேட்டால்...உடனே..தயாநிதி பிறந்த நாள் என்ற ஞாபகம் உங்களுக்கு வரவேண்டும்.
கதாநாயகி போகும் இடமெல்லாம் கதாநாயகன் வந்து நின்றான். அவள் பின்னாலேயே போனான். தொலைக் காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த யூ.கே.ஜி படிக்கும் சிறுவன் கேட்டான். "ஏம்மா.. அவன் அவளை டிஸ்டர்ப் செய்றான்".
பத்திரிகை ஒன்றில் ஒரு கதாநாயகன் ஒரு கதாநாயகியை கட்டிப் பிடித்த நிலையில் இருந்தான். அதற்கு கீழே சிறுவன் எழுதினான். "திஸ் இஸ் நோ மேரேஜ். ஐ திங்க் லவ் மேட்டர்". அப்போது அவன் ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான்.
மெகா தொடர் ஒன்றில், இருட்டான அறையில் தனியாய் ஒரு பெண் மேஜை விளக்கின் வெளிச்சத்தில் எழுதிக் கொண்டிருந்தாள். இடையிடையே பொங்கி வரும் கண்ணீரை துடைத்துக் கொண்டும் இருந்தாள். பார்த்துக் கொண்டிருந்த சிறுவன் சொன்னான். "இப்போ அவ வீட்டை விட்டு சூட்கேஸோடு ஓடிருவா". சிறுவன் இப்போது இரண்டாம் வகுப்பு.

விதி எழுதி எழுதி
சலித்த பிரம்மன்
பலரக்கு
விதி எழுதும்
பொருப்பை
உன்னிடம் ஒப்படைத்தானோ?
-*-
ஜன்னல் திரை
நீங்கி நீங்கி மறைகின்றது
உன் முகம்
மங்கி மங்கி சுடர்கின்றது
என் இதயம்
வீங்கி வீங்கி உடைகின்றது.
-*-
நீ வைத்து
அழகு பார்த்து விட்டு
தூக்கி எறிந்து விட்டாய்
உன்
கூந்தலில் அம்மலரையும்
இதயத்தில் என்னையும்.
-*-
ஊதி அனைப்பது
நீ என்றால்
என் உயிரும்
மொழுகுவர்த்தியாகட்டும்.
-*-
நீ…. தூங்குகின்றாய்
நிம்மதியாய்
என்
இரவுகளை
அபகரித்துக் கொண்டு.
-*-
ஹீரோயினிடம் அவர் இயல்பாய் பேசியதை பார்த்து நான்கு நாட்கள் தூக்கம் இல்லாமல் தவித்த பெண் ரசிகர்கள் ஏராளம். அந்த வீடியோவை பாருங்க....
ஹீரோயின் நம்மைவிட அரை அடி உயரம் என்றபோதிலும், தனது வசீகர பார்வையால் ஹீரோயின் மனதில் நமது செருப்புகளிலும் இடம் பிடித்துவிடுகிறார் இந்த கருப்பு மாதவன்! ஹீரோயினிடம் தண்ணி அடிச்சுட்டு பாட சொல்வது தமிழ் சினிமாவின் இன்னொரு புதுமை!
ஆங்கில புலமை கொண்ட விஜய்காந்துக்கே மிரட்டல் விடும் அளவுக்கு எங்கள் மார்டன் சூர்யா ஆங்கிலம் பேசுவது அருமையிலும் அருமை! மஞ்ச காட்டு மைநா என்று பெண்களை பார்த்து பாடும் காலம் மலை ஏறிபோச்சு. வந்துவிட்டார் எங்கள் மஞ்ச காட்டு நைனா!
ஒவ்வொரு படத்தின் ப்ளஸ் அதன் கிளைமெக்ஸ் காட்சியாக இருக்கவேண்டும். அப்படி நிறைய படங்கள் அமைவதில்லை. நாயகன், கன்னத்தில் முத்தமிட்டால், குட்டி, சேது போன்ற ஒருசில படங்களே கிளைமெக்ஸில் நம்மை உருக வைத்தது. அந்த வரிசையில் இப்படத்தின் கிளைமெக்ஸ் தாய்க்குலங்களின் கண்களை கண்ணீர் குளமாக்கியது. இந்த காட்சியை பார்த்த பிறகு, இவருக்கு நிறைய பெண் ரசிகர் மன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதுமட்டும் அல்லாமல், 60 அடி உயரத்தில் இவருக்கு ஒரு கட் அவுட், கண்ணம்மாபேட்டையில்!
நமது கலாச்சாரத்தில் புதுமையை புகுத்தி, கல்யாணம் முடிந்து காரை சுற்றி வருகிறார் இந்த பெண்களின் நாயகன்! நிச்சயம் நீங்கள் கண் கலங்குவீர்கள். ஆக, ஒரு கைகுட்டையை கையில் வைத்து கொள்ளுங்கள்.... இதுக்கு மேல என்னால எழுத முடியல... கண்ணு கலங்கிட்டு!! :(
அவரின் தீவிர ரசிகர்கள் அவருக்கு கொடுக்க போகும் பட்டம் "புரட்சி புறா"


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக