இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் பெரியார் திராவிடர் கழகம் தீவிரம் காட்டி வருகிறது. இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள், இயக்குநர் சீமானின் பேச்சுக்கள், கொழுவை நல்லூர் முத்துக்குமரனின் இறுதி நிமிடங்கள் மற்றும் தமிழர்களுக்கு ஆதரவான கவிதைகள் கொண்ட டிவி டியை தயாரித்து, அதனை வெளியிடப் போவதாக அறிவித்தது.
இதனை வெளியிட காவல்துறை அனுமதிக்கவில்லை. இருப்பினும் அதனை மக்கள் மத்தியில் எப்படியாவது சேர்த்துவிடும் முயற்சியில் பெரியார் கழக நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு தனியார் தொலைக்காட்சியில் பேட்டியளித்த பெரியார் திராவிடர் கழக நிர்வாகிகள் அந்த டிவிடியின் ஒரு இலட்சத்திற்கும் மேற் பட்ட பிரதிகளை ஏற்கனவே தமிழகம் முழு வதும் வியோகித்து விட்டதாக குறிப்பிட்டிருந்தனர். இதனையடுத்து தமிழகம் முழுவதும் உளவுத்துறையினர் மற்றும் காவற்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தூத்துக்குடியில் அந்த குறிப்பிட்ட டிவிடிகள் இரகசியமாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. மேலும் பொதுமக்கள் கூடும் பகுதிகள், மார்க்கெட், டீக்கடைகள், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட பகுதிகளில் சிலர் வந்து இந்த குறிப்பிட்ட டிவிடிகளை யாரும் அறியாதவகையில் பைக்குகள் மீதும், கார்கள் மீதும், உடமைகள் மீதும் போட்டு விட்டு செல்கின்றனர்.
முத்திரைகளோ அல்லது முகவரிகளோ இல்லாத இந்த டிவிடிகளின் கவரில் ஒரு கடிதம் இணைக்கப்பட்டுள்ளது. அதில் இந்த டிவிடி உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடியது. பலரின் வாழ்வில் ஒளியற்றக்கூடியது. நமது எதிரிகளை அடையாளம் காட்டுவது. ஆகவே கட்டாயம் பாருங்கள். தெரிந்தவர்களுக்கு பிரதி எடுத்துக் கொடுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மொத்தம் 3 வீடியோ பைல்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஒன்றில் இயக்குநர் சீமான் பேச்சின் முழு பதிவும், மற்றொன்றில் இலங்கை தமிழர்கள் சிலர் பேட்டியும் இடம்பெற்றுள்ளன.
தற்போது தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த டிவிடிகள் காவற்துறை தடையை மீறி விநியோகிக்கபட்டு வருவதால் தூத்துக்குடி தொகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு இந்த யுத்த நிறுத்தம் எதிர்வரும் 13ம் மற்றும் 14ம் திகதிகளில் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
48 மணிநேர தற்காலிக யுத்தநிறுத்தம் அறிவிக்கப்பட்ட அதேவேளை, சிறிலங்காவின் உள்ளூர் ஊடகங்களுக்கு மனித அவலத்திற்கான யுத்தம் என்பதை வலியுறுத்தி மிகப்பெரிய அளவில் பரப்புரைகளை மேற்கொள்ளுமாறும், இதனால் சர்வதேச ரீதியில் புலம்பெயர் தமிழர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டங்களின் அழுத்தங்கள் முறியடிக்கப்பட வேண்டும் எனவலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் போர் நிறுத்தம் வரும் காலப்பகுதியில் அனைத்துலகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் காணொளிகள் மற்றும் புகைப்படங்களைச் சேகரித்து செய்திகளை வெளியிடுமாறு அரசாங்கதினால் சிங்கள ஊடகங்களுக்குப் பணிக்கப்பட்டுள்ளது.
ஒருபுறம் போர் நிறுத்தத்தை அறிவித்துக்கொண்டு மக்கள் பாதுகாப்பு வலயம் நோக்கி பெரும் தாக்குதல்களைத் தொடுத்துக் கொண்டிருக்கும் சிறிலங்கா படையினர் இக்கால இடைவெளியில் தனது முழுமையான சுடுதிறனையும், படையினரின் மனித வலுவைப் பயன்படுத்தியும் எஞ்சியுள்ள பிரதேசங்களையும் ஆக்கிரமிக்கத் திட்டமிட்டுள்ளது என படைத்துறை உள்ளகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
எனவே சிறிலங்கா அரசின் இந்த கபடத்தனமான செயலின் ஊடாக மேற்கொள்ளப்படவிருக்கும் பெரும் இன அழிப்பு நடவடிக்கை திட்டத்தை தவிடுபொடியாக்க, சர்வதேச ரீதியாக தமிழர்கள் முன்னெடுக்கப்படும் தொடர் போராட்டங்களைக் கைவிடாது மேற்கொள்வதன் மூலம், சிறிலங்காவுக்கு சர்வதேசத்தின் அழுத்தங்கள் பிரயோகிக்க வழியேற்படும் என்பது நினைவூட்டத்தக்கது.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பவை வருமாறு:
குறிப்பாக கடந்த சில நாள்களில் அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள மனிதப் பேரவலம் குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. கடந்த 9 நாள்களில் மட்டும் 707 பொது மக்கள் கொல்லப்பட்டனர். ஆயிரம் பேர்வரை படுகாயமடைந்துள்ளனர்.
அங்கு மனிதாபிமான உதவிகள் தடுக்கப்பட்டமையினால் மனிதப் பேரவலம் தீவிரமாக்கப்பட்டுள்ளது. உணவு, மருந்துப் பொருள்களை ஆயுதமாகப் பயன்படுத்துவது சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களுக்கு எதிரானது. முன்னர் ஒரு போதும் எதிர்நோக்காத இன்னல்களை தற்போது தமிழ் மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.
பாதுகாப்பு வலயத்திலேயே மக்கள் பாரிய அழிவுகளைச் சந்தித்து வருகின்ற அதேவேளை, தமிழ் மக்கள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்; கைது செய்யப்பட்டுள்ளனர். காணாமற் போயுள்ளனர்.
இலங்கை அரசு தற்போது பாதுகாப்பு வலயத்தை கைப்பற்றும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கப் போவதாக அறிவித்துள்ளது. அங்குள்ள மூன்று இலட்சம் மக்களை அழிப்பதற்கான முயற்சியே இதுவாகும்.
எனவே சர்வதேச சமூகமும் இந்தியாவும் இணைந்து உடனடியாக இராணுவ நடவடிக்கை நிறுத்தி யுத்த நிறுத்தத்தை அறிவிக்க இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றுள்ளது.

வரலாற்றில் இதே ஏப்ரல் 13ம் தேதி. 1908ம் வருடம்.
முசாபூர் மாவட்டத்தின் கொடூரமான மாஜிஸ்ட்ரேட்டாக இருந்த கிங்ஸ்போர்டு மீதி இளைஞர்கள் குதிராம் போஸும், பிரபுல்லசகியும் குண்டி வீசினர். கிங்ஸ்போர்டு தப்பி விட்டான். போலீஸிடம் பிடிபடாமல் தன்னையே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு பிரபுல்லசகி இறந்து போனார். குதிராம் போஸ் சிறையிலடைக்கப்பட்டு 1908 ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி காலை 6 மணிக்குத் தூக்கிலிடப்பட்டார்.
சிறையில் 16 வயதே நிரம்பிய குதிராம் போஸ் எழுதி வைத்திருந்த பாடல்:
"ஒருமுறை விடைகொடு அம்மா!
என் அருமை அம்மா!
நான்
மீண்டும் பிறப்பேன்
சித்தியின் வயிற்றில்...
பிறந்தது நான்தான் என்பதையறிய
குழந்தையின் கழுத்தைப் பார்
அதில் சுருக்குக் கயிற்றின்
தடம் இருக்கும்"
குதிராம் போஸ் தூக்கிலிடப்படும் போது, அவரது சித்தி கருவுற்றிருந்தார்கள். உடனடியாக மீண்டும் இந்த மண்ணில் பிறந்து, மீண்டும் போராட வேண்டும் என்ற வேட்கை தெறிக்கும் கவிதை. இவர்களின் காலடித்தடங்கள் வழியாகத்தான் ஆகஸ்ட் 15, 1947 இந்தியாவுக்கு வந்தது.
*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக