செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு தொடர்பான விசாரணைகள் நாளைய தினம் சென்னை உயர் நீதிமன்றில் நடைபெறவுள்ளது.
இந்திய பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்த வழக்கின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த கருப்பன் என்பவரினால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கம் பாரியளவிலான ஆயுதங்களை இலங்கை அரசாங்கத்திற்கு விநியோகம் செய்து வருவதாகவும், உடனடியாக இந்த நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து கொழும்புக்கு கடந்த சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமானம் செல்லும். அந்த விமானம் சென்னை வராததால் பகல் 12 மணிக்குப் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதில் பயணம் செய்வதற்காக 160 பயணிகள் பாதுகாப்பு சோதனை முடிந்து முதல் மாடியில் காத்திருந்தனர்.
நீண்ட நேரமாகக் காத்திருந்ததால் பயணிகளுக்கு சிற்றுண்டி, குளிர்பானத்தை ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிர்வாகம் வழங்கியது. குளிர்பானம் அருந்தியவுடன் பயணிகள் சிலர் வாந்தி எடுத்தனர். உடனே குளிர்பான போத்தல்களைப் பார்த்தபோது அவை காலாவதியானவை என்று தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த விமான பயணிகள் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிர்வாக ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். அதற்குள் மேலும் சிலர் வாந்தி எடுக்கத் தொடங்கினர். இதனைக் கண்ட பயணிகள் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
தனியார் ஒப்பநதக்காரர் கொடுத்த குளிர்பானத்தையே தாங்கள் வழங்கியதாக ஊழியர்கள் கூறினர். அதனைத் தொடர்ந்து பயணிகள் அனைவருக்கும் புதிய குளிர்பானம் வழங்கப்பட்டது. அதன்பின்னர் பிற்பகல் 12.20 மணிக்கு விமானம் கொழும்பை நோக்கி புறப்பட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரீஸ் நகரத்திலுள்ள அமைதிச்சுவர் அமைந்துள்ள பகுதியில் சிறுவர் முதல் முதியவர் வரை ஒன்று திரண்டு வானதிர உணர்ச்சி முழக்கங்களைக் கூவி பெரும் உணர்ச்சிப் பெருவாகத்தை வெளிக் கொணர்ந்திருந்தனர்.

இதே நேரம் கடந்த ஐந்து நாட்களாக நீர், ஆகாரமின்றி உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்த நான்கு தமிழ் இளைஞர்கள் நேற்று இரவு முதல் நீரருந்தி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
நேற்று சனிக்கிழமை இரவு உண்ணாவிரதம் நடைபெற்ற இடத்திற்கு வந்த ஒபவில்லியே நகர பிதா (மேயர்) உண்ணாவிரதம் இருப்பவர்களின் கோரிக்கைகளை நேரில் கேட்டறிந்தார். உண்ணாவிரதம் இருப்பவர்கள் நீரருந்தி உண்ணாவிரதத்தை தொடருமாறும், செவ்வாய்கிழமை இவர்களது கோரிக்கை தொடர்பான முடிவொன்றைப் பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்திருந்தார்.

அவரது நியாயமான கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மக்கள் உண்ணாவிரதம் இருந்த இளைஞர்களை நீரருந்திப் போராட்டத்தை தொடருமாறு வற்புறுத்தியதை அடுத்து இளைஞர்கள் நகரபிதாவினதும் கூடியிருந்த மக்களினதும் கோரிக்கையை ஏற்று நீரருந்தி உண்ணாவிரதத்தை தொடரச் சம்மதித்தனர். இதனையடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்களுக்கு நகரபிதா நீரை அருந்தவைத்தார்.
எனினும், வருகின்ற செவ்வாய்கிழமை முடிவொன்றினைப் பெற்றுத் தராதுவிட்டால் தாம் மீண்டும் நீர் அருந்தாமலேயே போராட்டத்தை தொடரப்போவதாக இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், விரைவாக தான் முடிவொன்றை பெற்றுத்தருவதாக பரிஸ் நகரபிதா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக