திங்கள், 6 ஏப்ரல், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-04-03


மதச்சார்பின்மை

மதச்சார்பின்மை என்ற கொள்கைக்கு அவ்வப்பொழுது மாற்றுப் பொருள் சொல்லி, நடைமுறையில் அக்கிரகாரமயமாகவே ஆட்சி நடப்புகள், அரசு அலுவலக நடவடிக்கைகள் அமைந்து வந்தாலும், சில மாநிலங்களில் உண்மையான மதச்சார்பின்மை பக்கம் தொட்டுக்கொள்கிற அளவிலும், துடைத்துக்கொள்கிற அளவிலும் ஆணைகள் பிறப்பிக்கவும் பட்டன.

1974 அக்டோபரில் கேரள மாநிலத்தில் ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

மதச்சார்பற்ற கொள்கைக்கு விரோதமாக மத நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதனால் வகுப்புக் கலவரங்களுக்கு வித்திடக்கூடிய சூழ்நிலை உருவாகிறது. எனவே மத நிகழ்ச்சிகளில் அரசு ஊழியர்கள் கலந்துகொள்வது தடை செய்யப்படுகிறது. இந்த ஆணை அரசாங்க பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கும் பொருந்தும் என்றும் அவ்வாணையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த செய்தி 1974 அக்டோபர் 11 நாளிட்ட செய்தி ஏடுகளிலும் வெளிவந்தது.

வெங்கடேசுவரா பல்கலைக் கழகத்தில்

ஆந்திர மாநிலம் வெங்கடேசுவரா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் சச்சிதானந்தமூர்த்தி அவர்கள் 1976 அக்டோபரில் ஒரு சுற்றறிக்கையைப் பல்கலைக் கழகத்தின் பல்வேறு துறைகளுக்கும் அனுப்பினார்.

1) பல்வேறு மதங்களை உள்ளடக்கிய மதச்சார்பற்ற ஜனநாயகக் குடிஅரசு நாட்டில், ஒரு மதத்துக்குச் சொந்தமான பாடலை கடவுள்வாழ்த்து பாடக்கூடாது. எனவே பல்கலை நிகழ்ச்சிகள் எதிலும் கடவுள் வாழ்த்து தேவையில்லை. எல்லா மதப் பாடல்களையும் பாடுவது என்பது நடைமுறைக்கு ஒத்துவராது.

2) தேசியகீதம் - குடியரசுத் தலைவர், பிரதமர், கவர்னர் முதலமைச்சர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் மட்டுமே இசைக்கப்படவேண்டும்.

3) பல்கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் விருந்தினர்களுக்கு மாலைகள் அணிவிக்கக் கூடாது. பல்கலைக் கழகத்திற்கு வெளியே இருந்துவரும் விருந்தினர்களுக்கு மலர்ச் செண்டு அளிக்கலாம் என்று ஆணை ஒன்றினைப் பிறப்பித்தார்.

பார்ப்பனர்களும், இந்து ஏடும் கொடுத்த பெருந்தொல்லையால் சில நாட்களில் இந்த ஆணையில் திருத்தம் செய்யும்படி நேர்ந்தது.

தமிழ்நாட்டில்

அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சர் ஆனநிலையில் மிக முக்கிய ஆணை ஒன்றினைப் பிறப்பித்தார். பொது (ஜெனரல்-எம்) இலாகா நினைவுக் குறிப்பு எண். 7553/66-2 நாள் 29 ஏப்ரல் 1968.

பொருள் : எந்த மதத்தைச் சேர்ந்ததாயினும் கடவுள்கள் - பெண் கடவுள்கள் - படங்கள் - சிலைகள் ஆகியவற்றை பொது அலுவலகங்களிலிருந்து நீக்குதல்.

இலாகா தலைவர்களுக்கு அறிவித்துக் கொள்ளப்படுவதாவது : மதச்சார்பற்ற கொள்கை உடைய ஆட்சியாதலால் எந்த மதத்தைச் சார்ந்த சாமியார்கள், (சாதுக்கள், மகான்கள், அவதாரங்கள் உட்பட) கடவுள்கள், பெண் கடவுள்கள் ஆகியவற்றின் படங்கள் - சிலைகள் முதலியவற்றை அரசாங்க அலுவலகத்தில் அல்லது அரசுக்குச் சொந்தமான இடத்தில் வைத்திருப்பது சரியல்ல என்று அரசாங்கம் கருதுகிறது.

இந்தக் கட்டடங்களில் இவை இருக்குமானால், அவற்றை படிப்படியாகவும்,எந்தவித ஆடம்பரமும் அல்லாமலும், பிறர் கவனத்தை ஈர்க்காத வகையில் அல்லது எந்தவித அசம் பாவிதமும் நிகழாத வகையிலும் அகற்ற வேண்டும்.



- சி.ஏ. ராமகிருஷ்ணன் அரசு தலைமைச்செயலாளர்


முதலமைச்சர் அண்ணா அவர்களால் பிறப் பிக்கப்பட்ட உண்மையான மதச்சார்பின்மைக் கொள்கைக்கேற்ற ஆணையிது!

------------------நன்றி:-"விடுதலை" 3-4-2009


More than a Blog Aggregator

by பழமைபேசி
இந்த வாரம் ஒரே வேலை முசுவுங்க. வலைப்பக்கம் தலை வெச்சிக்கூடப் படுக்க நேரமில்லை. எருமைக்குப்(Buffalo, NY) போயிட்டு இராவுல வந்து சேர்ந்தாச்சு. இனி எதையாவது சொல்லிப் பதிவு ஒன்னைப் போடுவோமுன்னுதான்...இஃகிஃகி!!

போன வாரங்கள்லே, எத்துனை வகையான அழுகைகள் இருக்குன்னு பார்த்தோம். இப்ப, அந்த அழுகைகளுக்கான காரணங்கள் என்னவா இருக்க முடியும்ங்றதை அலசித் துவைச்சிக் காயப் போடலாம் வாங்க!

இளிவே இழவே அசைவே வறுமையென
விளிவில் கொள்கை அழுகை நான்கே!

இப்படிப் பாட்டுலயே அழுகைக்கு நான்கு காரணங்கள் இருக்குன்னு தொல்காப்பியர் சொல்றாருங்க.

இளிவு, இழிவு, இளப்பம்ங்றது ஒரு பொருட் கிளவிகள். இழிவாகுறது, வலியன் எளியன் ஆகுறதுங்க. அப்ப, அடுத்தவங்க இழிவைக் கண்டு தான் அழுவறதும், தன்னோட இழிவு கண்டு அடுத்தவங்க அழுவுறதும் இந்த வகையில வருதுங்க.

இழவு, இழப்புங்றது ஒரு பொருட் சொல்லுகள். இழவுங்றது, உயிரோ, பொருளோ, எதோ ஒன்னை இழந்து போறது. அடுத்தவங்க இழப்புக்கும், தன்னோட இழப்புக்கும் அழுவுறது.

அசைவு, தளர்ச்சி, நிலைமாறுகைங்றது ஒரு பொருட்கிளவிகள். அதாவது, இருந்த நிலையிலிருந்து தாழ்ந்து போறது.

வறுமை, நல்குரவுங்றதும் ஒரு பொருட் சொல்லுகதான். வறுமைன்னா என்னன்னு சொல்லத் தேவை இல்லை. இல்லாமல் போதல்!

இதுகெல்லாந்தாங்க, அழுகைக்கான மூல காரணங்கள். சரி, வந்துட்டீங்க, இந்த கணக்குக்கும் விடை சொல்லிட்டுப் போங்க!! இஃகிஃகி!!

ஒரு இராசா அரண்மனைக்கு 24 வாசலுண்டு. இந்த இராசாவுக்கு ஒரு பால்காரன் பால் கொண்டு வந்தான். முதல் வாயிற்காக்கிற கொல்லன் நாழிபால் எடுத்துக் கொண்டு நாழி தண்ணீர் வார்த்தான். இப்படியாக, இருபத்து நான்கு வாயிற்காரரும் நாழி பால் எடுத்துக் கொண்டு நாழி தண்ணீர் வார்த்தார்கள். அதன் பிறகு பால் கொண்டு போய் இராசாவின் முன்னே வைத்தான் பால்காரன். இராசாவும், பாலைப் பார்த்து, அது தண்ணீராய் இருக்கக் கண்டு 24 பொன் அபராதம் விதித்தான். அதன்பிறகு, பால்காரன் வாசற்காரர்கள் செய்த செயலைச் சொல்லவே, அந்த அபராதத் தொகையை வாயிற்காரர்கள் கட்டினார்கள். அப்படியானால், ஒவ்வொரு வாயிற்காரரும் கட்டிய தொகை என்ன?


மனிதநேய மக்கள் கட்சியின் அரசியல் உயர்நிலைக் குழு நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுடைய நிலைபாடு குறித்து இறுதி முடிவு எடுக்கப் பட்டுவிட்டதாகவும், இதனை நாளை சென்னையில் நடக்க இருக்கும் கட்சியின் செயற்குழுவில் அறிவிக்கும் என்றும் இன்று அறிவித்துள்ளது. இதனைத் தெரிவித்த அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் இஸ்மாயில் ம.ம.க.வின் முடிவு தமிழக அரசியலின் போக்கை மாற்றியமைக்கும் என்று கூறினார்.

தி.மு.க. தரப்பில் ஒரு தொகுதி தர முன் வந்தததால் கூட்டணியில் சிக்கல் நிலவியது. பின்னர் தி.மு.க. இரு தொகுதிகளை ஒதுக்கித் தர முன்வந்துள்ளதாகவும், ஆனால் ம.ம.க. வேட்பாளர்கள் உதய சூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனை முன் வைக்கப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனை ம.ம.க. ஏற்கவில்லை எனவும், மத்திய சென்னை, வேலூர், மயிலாடு துறை, தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய தொகுதிகளில் ம.ம.க. தனித்துப் போட்டியிடக் கூடும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.


More than a Blog Aggregator

by rammalar
A
வன்னியில் சிறிலங்கா படையினர் இன்று நடத்திய எறிகணை, தொலைதூர துப்பாக்கிச் சூடு மற்றும் எம்ஐ-24 ரக உலங்குவானூர்தி தாக்குதல்களில் 28 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 41 பேர் காயமடைந்துள்ளனர்.
Now watch Kuttithirai PLUS LIVE Broadcast!
Brought to you by Thamizhan Broadcastic Corporation.

கருத்துகள் இல்லை: