திங்கள், 6 ஏப்ரல், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-04-03

சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள ரொமெண்டிக் திரில்லர் படம் கோவா. சிநேகா ரொமேண்டிக் வில்லியாக அவதாரமெடுக்கிறார்.இப்படத்தில் நடிக்க ஜெய்-யை ஒப்பந்தம் செய்திருந்தனர். ஆனால் ஜெய் தனது "ஜோசியப்" பேச்சினால் திரையுலகின் கோபத்தை சம்பாதித்துக் கொண்டார். தயாரிப்பாளர் சங்கம் இவருக்கு ரெட்கார்ட் போட்டு ஆறு மாதத்திற்கு புதுப்படத்தில் நடிக்க தடைவிதித்துள்ளது.இதனைத் தொடர்ந்து சௌந்தர்யா ஜெய்-க்கு பதிலாக இன்னொரு ஹீரோவைப்போட யோசித்தார். ஆனால் இயக்குனர் வெங்கட்பிரபுவிற்கு ஜெய்-யை மாற்றவிருப்பமில்லை.இதனால் ஒரு மாதத்திற்கு முன்னர் தொடங்கவேண்டிய கோவா படப்பிடிப்பு தள்ளிக்கொண்டேபோனது. படப்பிடிப்பு ஆரம்பிக்காத நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்தின் நிறுவனமான ஆக்கர்ஸ் நிறுவனத்தின் பார்ட்னரான வார்னர் பிரதர்சின் கெடுபிடி அதிகமாகியது. மேலும் பார்ட்னர்ஷிப்பை முறித்துக்கொள்வோம் என எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது.இதனைத் தொடர்ந்து சௌந்தர்யா அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்.உடனடியாக வெங்கட்பிரபு மற்றும் குழுவினரோடு கோவா சென்று இரண்டு குத்துப்பாடல்களை படமாக்க ஆரம்பித்தனர்.மேலும் தயாரிப்பாளர் சங்கத்திடம் தன்நிலையை எடுத்துச் சொல்லி ஜெய்-க்கு கோவா படத்தில் மட்டும் நடிக்க விதிவிலக்கு வாங்கியுள்ளார்.இதனையடுத்து இன்று ஜெய் கோவா-படத்தில் நடிக்க கோவா  பறக்கிறார். கோடம்பாக்கத்து பட்சியோ - தன் மகளின் நிலைகண்டு ஸ்டார் அப்பா முக்கிய நபர்களுக்கு போன்போட்டு இத்தடையை தளர்த்தி உதவியிருக்கிறார் என நம் காதில் கிசுகிசுத்தார். எது எப்படியோ !! ஜெய்-க்கு கோவாவில் கொண்டாட்டம் தான்!!

Sony on Thursday announced the HDR-TG5V, a high-definition (HD) camcorder that is equipped with a GPS receiver and can geotag recorded videos and still photos.

With the HDR-TG5V's GPS receiver, as well as built in support for Navteq digital maps, Sony says that location data can be added to recorded files. You can view maps on the camcorder's 2.7-inch LCD as well as find geotagged locations on the map. Sony includes PC software that Windows users can use to via geotag information on a map; for Mac users, the geotags can use by iPhoto '09's Places feature.

Using a 1/5-inch Exmor CMOS sensor, the HDR-TG5V records AVCHD video at 1,920-by-1,080 resolution and 4-megapixel still photos. The camcorder has 16GB of built-in memory, enough room for 110 minutes of video at the highest quality setting. There's also a slot for Memory Stick Pro Duo cards to increase the storage capacity.

The camcorder includes features such as face detection, smile shutter, built-in flash, 10X optical zoom, Dolby Digital stereo recording with a built-in zoom microphone, a super slow motion recording mode, image stabilization, HDMI and USB 2.0 ports, and a rechargeable battery.

More Details : Click Here

சமீபத்தில் ஒரு ஆங்கிலப்பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் நயன்தாரா "தமிழ்நாட்டில் பெண்களுக்கு சின்னத்திரையில் தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சிரீயலில் பெண்களுக்கு பவர்புல் கேரக்டர் அளித்து, கதையையும் அவர்களைச் சுற்றி நகருமாறு பார்த்துக்கொள்கின்றனர். ஆனால் வெள்ளித்திரையில் ஹீரோயிசம் மட்டுமே ஜெயிக்கிறது. ரசிகர்களும் ஹீரோயிசத்தை தான் விரும்புகின்றனர். அதனால் பெரும்பாலான படங்களின் கதைகள் ஹீரோவைச் சுற்றியே இருக்கின்றன. ஒரு சில படங்களில் மட்டுமே ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அந்த விசயத்தில் அசின் கொஞ்சம் லக்கி!! கஜினியில் அசினுக்கு ஸ்ட்ராங்கான கேரக்டர்.அந்த மாதிரி வெயிட்டான ரோல்கள் எனக்கு கிடைக்கவில்லை.இன்னும் சொல்லப்போனால் அசினும் கஜினிக்குப்பிறகு அந்த மாதிரி வெய்ட் கேரக்டர்களில் நடிக்கவில்லை. ஹீரோயின் சப்ஜெட் படங்களும், ஹீரோயின்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் கதைகள் கொண்ட படங்களுக்கு நான் மட்டுமல்ல திரிஷா மற்றும் அசின் கூட நடிப்பதற்கு ரெடியாக உள்ளோம். ஆனால் எதுவும் கிடைத்தபாடில்லை என ஏக்கப் பெருமூச்சு விட்டிருக்கிறார் நயன் தயாரிப்பாளர்களும் , இயக்குனர்களும் கவனிக்க.....!


More than a Blog Aggregator

by மணிகண்டன்
புவியீர்ப்பு சக்தி

வேறுபட்ட, வித்தியாசமான, குடும்பப்பாங்கான, மசாலாவான, வகையறுக்கப்படாத - இந்த வகையறையில் வரும் எந்த தமிழ் / ஹிந்தி படமா இருந்தாலும் ஒரு நிச்சயமான காட்சி ஒற்றுமை இருக்கு. அதாவது நம்ப ஹீரோ, ஹீரோயின் வூட்டுக்கு முதல் முறையா வராருன்னு வச்சிக்கோங்க. ஹீரோயின் வூட்டுல யாரும் இருக்கமாட்டாங்க. அந்த அம்மா, அப்பதான் குளிச்சுட்டு துண்டு கட்டிக்கிட்டு வெளில வருவாங்க. அவங்களோட துண்டுக்கும், புவியீர்ப்பு சக்திக்கும் ஒரு பைட் நடக்கும். இயக்குனரோட முடிவு நியூட்டனுக்கு ஆதரவாவே இருக்கும்.பாட்டு நல்லா இருக்கே, படம் ஏதோ வித்தியாசமா இருக்குன்னு சொன்னாங்களேன்னு டெல்லி - 6 பாத்தேன். மரண மொக்க.

அடிக்க வராதீங்க. நான் காலா பந்தர்ங்கர ஹிந்தி வார்த்தைய வெண்மேகம்ன்னு புரிஞ்சிக்கற ஆளு. அதுவும் சப்-டைட்டில் இல்லாம வேற பாத்தேன். சோ, நீங்களும் ஒருமுறை பைட் பாக்க ஆசைப்பட்டா, மீ நோ அப்ஜெக்க்ஷன்.
********************************************

அன்புள்ள சுந்தர் மாமாவுக்கு,
நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க ? ஒரு வாரமா இங்க ஒண்ணும் ஸ்பெஷல் இல்ல . அடிக்கடி கடுதாசு போடு. ஆனா போன முறை நீ எழுதினது சரியா புரியல. கடுதாசில கதை எழுதாத. இந்த மாதிரி சிம்பிள்ளா எழுது.

இப்படிக்கு
மணி
********************************************
Golden Handshake

ஸ்வன் கோரன் எரிக்சன் இங்கிலாந்துக்கு கால்பந்து கோச்சா இருந்தாரு. 2006ல அவர அந்த பதவிலேந்து நீக்கினாங்க. அதுக்கு 3-4 மில்லியன் நஷ்டஈடு கொடுத்தாங்க. வாங்கிக்கிட்டாரு. 2007ல மான்செச்டேர் சிடின்னு ஒரு கால்பந்து கிளப்புக்கு கோச்சா இருந்து பின்ன நீக்கப்பட்டாரு. மறுபடியும் 4 மில்லியன் நஷ்டஈடு கொடுத்தாங்க. வாங்கிக்கிட்டாரு. நேத்திக்கு மெக்சிகோ அணி கோச் பதிவிலேந்து நீக்கி இருக்காங்க. இந்தமுறை 7 மில்லியன் போல.

நான் முன்னாடி வேல செஞ்ச கம்பெனி CEO பேரு கார்லி பியோரினா. அவங்கள 2005ல வேலைய விட்டு தூக்கினாங்க. நஷ்ட ஈடா 20 மில்லியனுக்கு மேல கொடுத்தாங்கன்னு செய்தி வந்தது. இவங்க தான் போன வருஷம் தேர்தல் போது ஜான் மக்கைன் டீமுக்கு நிதித்துறை ஆலோசகர். ஜான் மக்கைன்னோட சேர்ந்து Golden Handshake ஸ்கீமுக்கு எதிரா குரல் கொடுத்தாங்க.

நான் கூட பதிவு எழுதறதுலேந்து நீங்கிக்க ரெடி. சாமியோவ் !
*******************************************

சின்ன வயசுல, எதாவது துடுக்குத்தனம் பண்ணினா, அப்பா ஆபிஸ்லேந்து பூத கண்ணாடில பாத்துக்கிட்டு இருக்காருன்னு சொல்லி மிரட்டுவாங்க. கொஞ்சம் வயசு ஆனதுக்கு பிறகு பண்ற தப்பு எல்லாத்தையும் பாக்க சாமி இருக்காருன்னு பயம் காட்டுவாங்க. இப்ப இது எல்லாத்தையும் உண்மை ஆக்கிடுவாங்க போல. கூகிள் ஸ்ட்ரீட் வியூ உபயோகிச்சு பாருங்க.
**********************************************

ப்ளாக்ல யாராவாது குழந்தை போட்டோ போட்டாக்க, நான் அந்த பதிவ நிச்சயமா பாப்பேன். வரும் எல்லா பதிவுக்கும் ஒரு பதில் பின்னூட்ட டெம்ப்ளேட் இருக்கு. "மறக்காம குழந்தைக்கு சுத்தி போடுன்னு" சொல்லுவாங்க. ஆசையா, அக்கறையா தான் சொல்றாங்க. ஆனாலும், குழந்தைய பாத்தா எல்லாரும் வாழ்த்த தான் செய்வாங்க. ஏன் கண்ணு வச்சிடுவாங்கன்னு நமக்கு தோணுது.
******************************************

டெம்ப்ளேட் பத்தி வேற எழுதி இருக்கேன். பொதுவாவே, கட்டுமானத்துக்கு கட்டுப்பட்டவன் நான். ஏ ஜோக், நகைச்சுவை துணுக்கு எதுவும் ஸ்டாக் இல்ல. அதுனால

விழிகள் நட்சத்திரங்களை வருடினாலும்
உன் விரல்கள் என்னவோ ஜன்னல் கம்பியோடு தான்.

(எங்கேயோ, எப்பவோ படிச்சது. யாரு எழுதினதுன்னு தெரியாது. இது நல்ல கவிதையா தான் இருக்கணும். எனக்கே ஞாபகம் இருக்கே.)
இந்தியில் தசாவதாரம் பட ரிலீசுக்கான பிரஸ் மீட் இரண்டு நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. கமல் தசாவதாரம் ரிலீசாக்கான காலதாமதம், படப்பிடிப்பின் போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து நிருபர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். எல்லா நட்சத்திரங்களிடமும் கேட்கப்படும் "அரசியலுக்கு வரும் எண்ணமுண்டா?" என்ற அரதபழசான கேள்வி இவரிடமும் கேட்கப்பட்டது. அதற்கு கமல் " உண்மையாக மக்களுக்கு உழைப்பவர்கள் தான் அரசியலுக்கு வர வேண்டும். இது நாள் வரை எனக்கு பல அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.மேலும் சில கட்சிகள் ஒரு படி மேலே சென்று நீங்கள் தான் எமது பிரதம வேட்பாளர் என்றெல்லாம் சொல்லி அரசியலுக்கு வர அழைப்பு விடுத்தார்கள். ஆனால் எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் சிறிது கூட இல்லை.மக்களுக்கு நான் சொல்ல விரும்புவதை சினிமா வாயிலாகவே சொல்லிவிடுகிறேன்.நாயகன்,ஹேராம்,இந்தியன்,தசாவதாரம் போன்ற படங்கள் மூலம் நான் சொல்ல விரும்பும் கருத்துக்களை தெரிவித்துள்ளேன்." என்றார். கமல் சார்...இந்த கேள்வி உங்களை தொடர்ந்து கொண்டே இருக்கும்....!!
தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் ஒவ்வொரு கட்சியும் தங்களது எதிர்க்கட்சியை முந்தும் விதத்தில் அறிக்கை வெளியிட்டுக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில்,மாதந்தோறும் 25 கிலோ அரிசி அல்லது கோதுமை கிலோ மூன்று ரூபாய்க்கு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து பாஜக நேற்று வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் "வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு மாதந்தோறும் 35 கிலோ அரிசி தலா 2 ரூபாய்க்கு வழங்கப்படும் என்றும், கோதுமை மூன்றரை ரூபாய்க்கு வழங்கப்படும்" என்றும் அறிவித்துள்ளது. மேலும் இவர்களின் தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: பயங்கரவாதத்தை ஒடுக்க பொடா சட்டத்தைப் மீண்டும் கொண்டுவருவது பாக்கு நீரிணையில் உள்ள ராமர் சேது எனப்படும் மணல் திட்டுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் தடுப்பது ராமர் கோயில் கட்டுவது ஆண்டு வருமான வரி விலக்கு வரம்பு மூன்றரை லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பது சட்டவிரோதமாக வெளிநாட்டு வங்கிகளில் வைக்கப்பட்டிருக்கும் இந்தியப் பணத்தை மீட்பது --- இப்படி போகிறது இவர்களின் அறிக்கை இவர்களின் அறிக்கைக்கு பதில் அறிக்கையை பல கட்சிகளிடம் இன்னும் சில நாட்களில் எதிர்ப்பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை: