
இலங்கை வந்துள்ள ஐ.நா.வின் செயலாளர் நாயகத்தின் உள்ளுரில் இடம்பெயர்ந்த மக்களுக்கான பிரதிநிதி பேராசிரியர் வோல்டர் கேலன் இன்று வவுனியாவுக்கு விஜயம் செய்து வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.
விசேட வவுனியா முகாம் வன்னி இராணுவ தலைமையகத்திலிருந்து செட்டிகுளம் கதிர்காமர் நிவாரண கிராமம் அருவித்தோட்டம் முகாம் ஆகியவற்றுக்கு சென்று பார்வையிட்டனர். இவருடன் மீள் குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன், சமாதான செயலகப் பணிப்பாளர் ரஜீவ் விஜேயசிங்க, வவுனியா அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரும் முக்கிய இராணுவ அதிபர், பொலிஸ் அதிகாரிகளும் இங்கு சென்றிருந்தனர். .



மக்களின் நிறைகுறைகள், மக்களுக்கான சேவைகள், ஏற்கனவே தங்கவைத்த மக்களுக்கு செய்யப்பட்ட வசதிகள் மேலும் செய்யப்பட வேண்டிய சேவைகள் என்பன குறித்து அனைத்து தரப்பினரிடமும் கலந்துரையாடினர். அதன் பின்னர் வன்னி இராணுவ தலைமையகத்துக்குச் சென்று இராணுவ உயர் அதிகாரிகளைச் சந்தித்தனர். வவுனியா நகரப் பகுதிகளையும், சில நலன்புரி நிலையங்களையும் விஜயம் செய்தனர்.
வி.காந்த் : நான் மக்களுடனும் தெய்வத்துடனும் தான் கூட்டணி
நிருபர் : ஐயோ கேப்டன்... நான் நீங்க யாரு கூட கூட்டணின்னு கேட்கவரல... இதையே சொல்லிக் கிட்டு இருந்தால் அப்பறம் ஆடுமாடுகள் எங்கள் கூட கூட்டணி அமைக்கவில்லையான்னு கேட்டு போர்கொடி தூக்கும்
வி.காந்த் : பின்னே என்ன கேட்க வந்த இங்க, திமுக அரசின் உளவு படை ஆளா நீ
நிருபர் : உளவும் இல்லை களவும் இல்லை, நான் உங்களை பேட்டி எடுக்க வந்திருக்கிறேன்
வி.காந்த் : திமுகவும், அதிமுகவும் மாறி மாறி கொள்ளையடித்திருக்கிறார்கள்
நிருபர் : உங்களுக்கும் ஒரு சான்ஸ் வேணுங்கிறிங்க, அதைத்தான் எல்லா மேடையிலும் சொல்லி இருக்கிங்களே, அது பத்திக் கேட்கல, ஈழ தமிழர் நலனுக்காக தேர்தலை புறக்கணிப்பேன் என்று சொன்னிங்க, ஆனால் பெரிய கட்சிகளையெல்லாம் முந்திக்கிட்டு வேட்பாளர் அறிவிச்சு...தேர்தல் பிரச்சாரமெல்லாம் பண்ணுறிங்க
வி.காந்த் : நீ எந்திரி...நீ கருணாநிதியோட ஆளேத்தான்....இருந்தாலும் சொல்றத கேட்டுட்டுப் போ... நான் நிக்காமல் இருந்தால் எனக்கு வர்ற ஓட்டையெல்லாம் அள்ளிடலாம் என்று கருணாநிதி நினைக்கிறார், நீ அவரோட ஆள்
நிருபர் : நான் ப்ரஸ்காரனுங்க
வி.காந்த் : இன்னொன்னும் சொல்றேன், நான் புறக்கணிக்கிறேன் என்று சொன்னதை வச்சுதான் செல்வி ஜெயலலிதா ஈழ ஆதரவுக்கு உண்ணாவிரதம் இருந்தாங்க....சோ....என்னோட திட்டத்தையெல்லாம் காப்பி அடித்து அதிமுகவும், திமுகவும் செயல்படுத்து, ஈழமக்கள் ஆதரவு தமிழர்கள் எனக்குத்தான் ஓட்டுப்போடுறாங்க, கருணாநிதி ஒரு கருநாகப் பாம்பு, ஜெயலிதா ஒரு செந்தேள்
நிருபர் : வாரிசு அரசியலை வாய்க்கு வந்தப்படி திட்டினிங்க, இப்ப ஒங்க மச்சானையே வேட்பாளராக நிறுத்தி இருப்பதாக
வி.காந்த் : இந்த விஜயகாந்த் மொதலமச்சர் ஆன பிறகும் வாரிசு அரசியலை வளர்த்தால் வந்து கேளுங்க, என் மச்சான் என்றாலும் அவரும் இம் மண்ணின் மைந்தன், அவருக்கும் போட்டி இட எல்லா உரிமையும் இருக்கு
நிருபர் : என்ன இருந்தாலும் மக்கள் வாரிசு அரசியல் என்று தானே சொல்லுவாங்க
வி.காந்த் : என்னது மக்கள் கேட்பாங்களா ?: அவங்கக் கூடவும் தெய்வத்துக் கூடவும் தான் என் கூட்டணி, என்னோட மக்கள் என்கிட்ட எப்படி கேட்பாங்க, என்னோட தெய்வம் என்கிட்ட எப்படி கேக்கும்...நீ கருணாநிதியோட ஆளே தான்.... எந்திரு
நிருபர் : கடைசியாக ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க.... முன்னால் முதல்வர்கள் ஊர அடிச்சு ஒலையில் போடுறதா சொல்ற நீங்க.... ஆட்சியில் இல்லாத போதே...மதுராந்தகம் பக்கம் பொறம்போக்கு நிலங்களை வளைச்சுப் போட்டு...மின்சார வேலி அமைச்சிருக்கிங்களாமே...அது பற்றி முன்பு பலமாக பேச்சு அடிபட்டதே
நிருபருக்கு சரமாரியாகவும், பலமாகவும் அடிபட்டது
என்னோட வேலையிடத்துல உடன் வேலை செய்யுற அமெரிக்க வெள்ளைச்சாமி, அலுவலக நேரத்துல செய்யுற ஒரு நல்லகாரியம்ன்னா, அது அவன் அன்றாடம் ஆங்கில அகரமுதலியில பதிவாகிற புதுச் சொற்கள், மற்றும் அறிவியல் சுற்றறிக்கையில இடம் புடிக்கிற புதுக் கண்டுபிடிப்புகளையும் படிச்சு, எங்ககூட அந்த தகவல்களைப் பகிர்ந்துகிடுறதுதாங்க.
அப்படி அவன் சமீபத்துல சொன்னது, உருப்பெருக்காடியில பார்த்து, கொசுக்கு 22 பல் இருக்குறதை உறுதிப்படுத்தின செய்திங்க. அமெரிக்கக் கொசுக்கு 22 பல்லுன்னா, நம்ம ஊர்லயும் அப்படித்தாங்க இருக்கும். ஆசுவாசப்படுத்திகுங்க, வெந்திப்பு(tension) வேண்டாம், உடலுக்கு ஆவாது!
சரி, நேற்றைக்கு நீர்நிலையப் பாக்குறோம் பேர்வழின்னு, பாதிக்கடல்தான் தாண்டினோம். வாங்க, மிச்ச சொச்சத்தையும் பாத்துப்புடலாம்.
- தளிக்குளம் (tank sorrounding a temple): கோவிலின் நாற்புறமும் சூழ்ந்த அகழி போன்றதொரு நீர்நிலை
- தாங்கல் (Irrigationtank): தமிழகத்தின் ஒரு பகுதியில் ஏரியின் மறு பெயர்
- திருக்குளம் (Temple tank): 'புட்கரணி' எனும் வடமொழிச் சொல்லின் தமிழாக்கம். கோவிலுக்கு அணித்தாகிய குளம்.
- தெப்பக்குளம் (Temple tank along with parapet walls): மக்கள் காண்பதற்கேற்ப உள்ள கோயிற்குளம்.
- தொடுகிணறு (Digwell): ஆற்றின் ஊடகத் தோண்டிய கிணறு
- நடைகேணி (Large well with steps): நடந்து சென்று தண்ணீர் எடுக்கக் கூடிய கிணறு
- பிள்ளைக்கிணறு (Well in middle of lake): குளம், ஏரி போன்றவற்றின் உள்ளமைந்த கிணறு
- பொங்குகிணறு (Well with bubbling spring): கொப்புளித்து ஊற்றெடுக்கும் கிணறு
- பொய்கை (Nature Lake): தாமரை முதலிய மண்டிக் கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீர்நிலை
- மடு (Deep place in a river): ஆற்றினிடையே உள்ள ஏதமான ஆழ் பகுதி
- மடை(Small sluice with single ventway): ஒரு கண்ணுடைய சிறுமதகு
- மதகு (Slice with many ventways): அடைப்புத் திறப்பு கொண்ட பல கண்களாய் அமைந்த மடை
- மறுகால்(Surplus water channel): மிகைநீர் கழிக்கக் கூடிய கால்வாய்
- வலயம்(Round tank): வட்டமாய் அமைந்த குளம்
- வாய்க்கால் (Small water course): ஏரியிலிருந்து பயிருக்கு நீர் பாயும் சிறு கால்
- வாவி (Stream): ஆற்று, ஊற்று நீர் வழிந்தோடு நிலை, நீரோடி
- புனற்குளம் (Tank of rain water): அகத்தில், மழைநீரால் நிரம்பியுள்ள நீர்நிலை
- பூட்டைக்கிணறு(Well with water lift): கம(வ/ப)லை நீர் பாய்ச்சும் அமைப்புள்ள கிணறு
இது போக, நீர்நிலையைப் பொதுவாகக் குறிக்கும் பெயர்கள்: அருநிலை, அலந்தை, இலந்தை, உடுவை, உவளகம், உவன்றி, ஏல்வை, கயம், குடா, குழி, கொண்டம், பள்ளம், கோட்டகம், சரசு, சலதரம், சலாசயம், சித்தேரி, சுண்டை, சூழி, தட்டம், தாங்கல், பயம்பு, வாரி, ஓருமம். இந்த சொற்களுக்கு, ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் இருப்பனவாதலால், மேற்குறிப்பிட்ட பட்டியலில் இடம் பெறவில்லை மக்காள்.
இதை அவர் பதப்படுத்தி தனது வரவேற்பறையில் வைத்துள்ளார். அதைப்பற்றிக் கேட்டதற்கு அந்த இதய வடிவ உருளைக்கிழங்கை வெட்டத் தனக்கு இதயமே வரவில்ல என்றார்.









கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக