திங்கள், 6 ஏப்ரல், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-04-04

சோம்பேறியின்ட சமையல் கட்டுநான் சமைத்தவை, ரசித்தவை, இது வரை யாரும் ருசிக்காதவைவெயில் காலம் என்றாலே எங்க வீட்டில் சிலருக்கு கவலை! பின்னே இன்று வென்னீர் கிடைக்காதே. அதனாலேயே வெயில் காலங்களில் திருட்டுத்தனமாக வென்னீர் சமைப்பதுண்டு(!?). இன்று காலையிலேயே வென்னீர் வைப்பது என நினைத்ததை செயல்படுத்தியது கீழே:வென்னீர்:தேவையானவை:1) அடுப்பு(கேஸ் அடுப்பாக இருந்தால் எரி வாயு கண்டிப்பாக இருக்க வேண்டும்)2)


இது எனது 25 வது பதிவு ..,

மொத்த பார்வையாளர்கள் - 8393 .

நன்றி:- Tamilish, nTamil, Newspaanai, ulavu, tamilveli

சக பதிவர்களுக்கும், பார்வையிட்ட, விமர்சித்த அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றிகள்..,

மேலும் இன்று 05.04.2009 எனது பிறந்த நாள் ..,



ஆஸ்திரேலியாவின் மர்ரே டார்லிங் நதி படுகை பற்றி DW-TV ஒரு வீடியோ காட்சி உங்கள் பார்வைக்காக. பறவைகள், மீன்கள் இல்லாத ஒருநிலை. கடைசி காட்சி என்னை அதிரவைத்தது. மழை இல்லாமல் போனால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை நமக்கு பாடமாக தந்துள்ளார்கள். அவசியம் கடைசிவரை பாருங்கள். முடிந்தால் பின்னூட்டமிடுங்கள்.

ஆனந்த விகடனில் வெளியான முத்திரைக் கவிதைகள் சிலதை ஏற்கனவே இந்தப் பதிவில் வாசித்திருப்பீர்கள். இன்னும் சில இங்கே.


அகத்தகத்தகத்தினிலே

காதலர் தினம்,
அன்னையர் தினம்
என வரிசையாய்
எல்லா தினங்களின் போதும்
நீ கொடுத்த
முத்தங்கள், கடிதங்கள்,
வாழ்த்து அட்டைகள், பரிசுகள்
என எல்லாவற்றையும்
அடிக்கடி நினைத்துப் பார்த்து
உயிர்த்திருக்கிறேன் பலமுறை.
வழக்கமானதொரு
மாலைப்பொழுதில்
என் தலை கோதி, உச்சி முகர்ந்து
'.....ப் போல் இருக்கிறார்ய்'
என்று அனிச்சையாய்
யாரோ ஒரு நடிகனின் பெயரை
நீ சொன்னபோது
செத்துப்போய்விட்டேன்
ஒரேயடியாக

- ஆதி

நிலாசேனல்

தூக்கம் தொலைந்த இரவில்
எலெக்ட்ரான்கள் ஒளிரும் திரையில்
குறையாடைக் குமரிகளின்
பூனைநடை அலுத்து
கிழநாயகனால் கழுத்து முகரப்பட்ட
இளநாயகியின் பொய்க்கிறங்கலில் சலித்து
ஆண்குரலில் சிரித்த
வெள்ளைக்காரியை வெறுத்து
ஓடுடைந்து வெளியில் வரும்
பறவைக்குஞ்சையும் பார்க்கப்பிடிக்காமல்
ஒற்றைப் பொத்தான் அழுத்தலில்
உலகத்துக் கதவுகளையெல்லாம் மூடிவிட்டு
இருள் சூழ்ந்த அறையின்
ஜன்னலுக்கு அப்பால் விழித்திருந்த
நிலவோடு சிநேகிதமானேன்.

- எஸ்.பாபு


வலி

ஓங்கி ஒலிக்கும்
கெட்டிமேளத்தில்
அமுங்கிப் போகிறது
யாரோ ஒருத்தரின்
விசும்பல் சத்தம்
எப்போதும்

- வித்யாஷங்கர்

'சிட்டி'சன்

நாரை நடக்கும்
குளத்தில்
நண்டு பிடிச்சதில்லை

முங்கு நீச்சல்
போட்டியில்
மூச்சுத் திணறியதில்லை

கண் பறிச்சு
வெல்லமிட்டு
வெடி தேங்கா தின்னதில்லை

அடுக்குப் பானை
அரிசி திருடி
ஆற்றுச் சோறு ஆக்கியதில்லை

ஆனாலும் சொல்கிறாய்
ஐயாம் லிவிங் என்று

- தாயம்மா

பாதசாரிகள் கவனத்திற்கு

கடந்து போகும்
ஜோடிக் கால்களின்
பின்னாலெல்லாம்
ஓடி ஓடிக் களைத்து
ஏமாந்து திரும்புகின்றன
அநாதை நாய்க்குட்டிகள்!
செய்யாத உதவிக்கு
வாலாட்டியபடியே!

- வனவை தூரிகா

நன்றி : ஆனந்த விகடன். முத்திரைக் கவிதைகள் (2002)

.

கருத்துகள் இல்லை: