இதுநாள் வரை இந்திய அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் வரி ஏய்ப்பு செய்து ஸ்விஸ் வங்கிகளில் சேமித்து வைத்திருக்கும் பதுக்கல் பணம் 72 இலட்சம் கோடியில் இருந்து 92 இலட்சம் கோடி வரை இருக்கலாம் என்று மதிப்பீடுகள் கூறுகின்றன. இந்த பணத்தை நாட்டிற்கு கொண்டு வர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் பாரதிய ஜனதா கட்சியும் தேர்தல் வாக்குறுதி அளித்திருக்கின்றன.
இந்த 72 இலட்சம் கோடியில் என்னென்ன செய்யலாம்?
மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் என அனைத்து வகைக் கல்லூரிக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வியை இலவசமாக்கலாம். (கல்விக்காக பொருட்களின் மீது விதிக்கப்படும் 2 சதவீத கூடுதல் வரியை நீக்கலாம்.)
நதிகள் இணைப்புத் திட்டத்தை நிதிப் பிரச்சினை இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாய் செயல்படுத்தத் துவங்கலாம்.
சமூக பாதுகாப்பு, அடிப்படை சுகாதார வசதிகள் என்பவை எல்லாம் முன்னேறிய ஏகாதிபத்திய நாடுகளின் மக்களுக்குத் தான் என்றில்லாமல் இங்கும் சீரிய முறையில் அமல்படுத்தலாம்.
இப்படி எந்த திட்டம் என்றாலும் அது முழுமையாக 110 கோடி மக்களையும் திருப்திப்படுத்தாமல் கூட போய் விடலாம். அதனால் திருமங்கலம் தொகுதியில் அரசியல்வாதிகள் செய்தது போல் ரொக்கப் பணமாக இந்திய மக்கள்தொகை முழுமைக்கும் தலைக்கு இவ்வளவு எனப் பிரித்துக் கொடுத்து விடலாம். வாக்குரிமை கொண்டவர்களுக்கு மட்டும் என்று பிரித்தாலே, தலைக்கு ஒரு லட்சம் வரை கிடைக்கும். குறைந்த பட்சம் பணப்புழக்கம் அதிகரித்து, பணவீக்கம் அதிகரிக்கும். (இது தானே இப்போது ரிசர்வ் வங்கியின் தலைவலி). திருமங்கலம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!
பாவம் பதுக்கல்வாதிகள். உலகத்தில் பணத்தை எங்கே பதுக்கி வைத்தால் பாதுகாப்பு என்று பார்த்து பார்த்து கோடிகளைக் கொண்டு போய் அயல்நாட்டு வங்கிகளில் குவித்தார்கள். இப்போது ஒபாமா புண்ணியத்தில் அத்தனைக்கும் ஆப்பு.
தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெரி கட்டிய கதையாக, இத்தனை நாளாக இதனைப் பற்றி மூச்சு விடாத இந்திய அரசியல்வாதிகள், அமெரிக்காவின் கறுப்பு பணத்தை வரி வலைக்குள் கொண்டு வர வரி ஏய்ப்பை தடுக்க ஒபாமா ஸ்விஸ் வங்கிகளுக்கு நிர்ப்பந்தம் கொடுக்க, தூக்கத்தில் இருந்து விழித்ததைப் போல இப்போது நமது அரசியல்வாதிகளும் குரல் கொடுக்கத் துவங்கியிருக்கிறார்கள்.
இந்த பணத்தை தேசத்திற்கு கொண்டு வருவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. தேசியவாதி அத்வானியும் அந்த பணத்தை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக மேடை தோறும் முழங்கி காங்கிரசுக்கு தேர்தல் சமயத்தில் நெருக்குதல் அளித்து வருகிறார். ஜமீன்தாரர்கள் கட்சியான காங்கிரசுக்கு தான் நெருக்கடி. பாவம் எத்தனை பெரிய தலைகளுக்கு பக் பக் என்கிறதோ. ஆனாலும் வாக்குவங்கியை விடமுடியுமா. தாங்கள் இந்த கணக்கு விவரங்கள் கோரி சுவிஸ் வங்கிகளிடம் விண்ணப்பம் செய்திருப்பதாகவும், தாங்கள் எதனையும் மறைக்கவில்லை என்றும் உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியிருக்கிறார்.
இலங்கை பிரச்சினை போலவே இந்த பிரச்சினையும் தேர்தலுக்கு பின் பல கட்சிகளால் புறந்தள்ளப்படும் சூழ்ச்சி நேரலாம்.
கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர் வர்க்கத்தின் அனைத்து பிரதிநிதிகளும் இந்த பிரச்சினையில் கவனம் சிதறாமல் வலியுறுத்தினால் மட்டுமே ஊழல் பெருச்சாளிகள் கொண்டு சென்ற பணமூட்டைகளை பத்திரமாய் வீடு கொண்டு வந்து சேர்க்க முடியும். பல்வேறு அரசியல் கட்சிகளுக்குள்ளும் தொழிற்சங்கங்களுக்குள்ளும் சிக்கியிருக்கும் இந்த பிரதிநிதிகள் தங்கள் வர்க்கத்தின் நலன் காக்க ஒன்றுபட்டு போராடினால் தான் உண்மைகள் மட்டுமல்ல உரிமைகளும் மீட்கப்படும். செய்வார்களா?
அனைவருக்கும் மிக்க நன்றிங்கோ
| ஆளவந்தான் | நிஜமா நல்லவன் | இராகவன் நைஜீரியா |
| விஜி | கீழை ராஸா | நாமக்கல் சிபி |
| உருப்புடாதது அணிமா | மிஸஸ்.தேவ் | அத்திரி |
| ரம்யா | தமிழ் ப்ரியன் | சக்தி |
| வருங்கால முதல்வர் | ரோஸ் | முரளி கண்ணன் |
| எம்.எம். அப்துல்லாஹ் | ஜோதிபாரதி | அப்பாவி. முரு |
| கலை அக்கா | ஷோபனா | திவ்யப்ரியா |
| சுரேஷ் | ஆதவா | ஷிநிசி |
| தேனியார் | அறிவிலி | வால்பையன் |
| சந்தனமுல்லை | நசரேயன் | சின்னப்பையன் |
| வேத்தியன் | மேவீ | தேவன்மாயம் |
| அபுஅஃப்ஸர் | சசி ரேகா | பூர்ணிமா சரவணக்குமார் |
| தாரணிபிரியா | கனகு | சரண்யா |
| இரவீ | ஹேமா | அ.மு.செய்யது |
| பிரியமுடன் பிரபு | G3 | குடந்தை அன்புமணி |
| செய்து அகமத் நவாஸுதீன் | குயூட் பேபி | அன்புடன் வாலு |
| நண்பன் | கணினி தேசம் | தமிழ் |
| ஊர்சுற்றி | பார்ஸா குமாரன் | ஸ்ரீராம் |
| கோவி.கண்ணன் | டாக்டர். M.K. முருகானந்தன் | சாதிக் அலி |
| கமல் | முரளி கண்ணன் | அறிவேதெய்வம் |
| அன்புடன் அருணா | ராம் C.M | விய்யா |
| தமிழ்நெஞ்சம் | மகா | லவ்டேல்மேடி |
| பதுமை | சசி | தூயா |
| அமிர்தவர்ஷினி அம்மா | சன்ஜய்காந்தி | Mrs.மேனகாசத்தியா |
| வெங்கிராஜா | சீனா | குந்தவை |
| அமுதா | தமிழ்அரசி | நிலாவும் அம்மாவும் |
| தமிழ்தோழி | கில்ஸ் | லோகு |
| கலைஇராகலை | கார்த்திக் | ஆ.ஞானசேகரன் |
| காயத்ரி | ஹர்வீனா | டவுசர்பாண்டி |
| யாழினி |
தயைகூர்ந்து பெயர்கள் விடுபட்டிருந்தாலோ, பெயர் எழுத்து பிழையுடன் இருந்தாலோ பொருத்து கொள்ளுங்கள்

எந்த நேரத்தில் கத்தியை தூக்கினாரோ, படப்பிடிப்பிலும் கூட உர்ரென்றுதான் இருக்கிறாராம் அனுஷ்கா. வேட்டைக்காரன் படத்திற்காக ஏழே நாட்கள் மட்டும்தான் கால்ஷீட் கொடுத்திருந்தாராம். அதாவது முதல்கட்டமாக எடுக்கப்படவிருந்த பாடல் காட்சிக்கு!
சொன்னபடி ஏழு நாட்களில் ஆடி முடித்துவிட்டு பெட்டியை கட்ட ஆரம்பித்துவிட்டாராம். ஆனால், இன்னும் ஒருநாள் அவர் இருந்தால் முழு பாடலையும் முடித்துவிடலாம் என்ற நிலை. "நாளைக்கு கிளம்புங்களேன்" என்றாராம் இயக்குனர். "ஏழு நாள் கால்ஷீட் கொடுத்தா அதுக்குள்ளே முடிக்க பார்க்கணும். இப்போ கடைசி நேரத்திலே வந்து இருங்கன்னா என்னாலே முடியாது. நான் போகணும்" என்றாராம் முடிவாக. யார் சொல்லியும் கேட்காத அருந்ததியிடம், ஹீரோ பேசினாலாவது கேட்பார் என்ற நம்பிக்கையில் "நீங்க கொஞ்சம் பேசுங்களேன்" என்றார்களாம்.
நல்லவேளையாக விஜய் பேசியதால் கொதிநிலையை அடக்கிக் கொண்டார் அனுஷ்கா. "இல்லே சார், தெலுங்கில ஏழு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கேன். நான் ஒரு நாள் போகலைன்னாலும் தப்பாயிடும். கால்ஷீட் விஷயத்தில் அங்கே என் பெயரை கெடுத்துக்காம வச்சுருக்கேன். இங்கே ஒருநாள் இருந்திட்டா அந்த பேரு கெட்டு போயிடும். ஸாரி, புரிஞ்சிப்பீங்கன்னு நினைக்கிறேன்" என்று சொல்லிக்கொண்டே பெட்டியை கட்டியது கிளி.
அதுவும் நியாயம்தானேப்பா என்று ஒதுங்கிக் கொண்டாராம் விஜய்.

கணக்கு போட்டுதான் காய் நகர்த்தினார் ஜே.கே.ரித்தீஷ்! நினைத்த மாதிரியே ராமநாதபுரம் தொகுதியில் திமுக சார்பில் எம்பி சீட் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகும்போது, 'டங்குவார் அறுந்திச்சுப்பா' என்ற கோணத்திலேயே விமர்சனம் செய்யப்பட்டார் ரித்தீஷ். ஆனால், சினிமா கவர்ச்சி, அரசியலுக்கு எத்தனை முக்கியம் என்பதை அவர் அறிந்து வைத்திருந்தார். அதனால்தான் டிக்கெட்டும் இலவசம். கூடவே பிரியாணி பொட்டலமும் என்பது அவரது படங்களுக்கு பரிசாக இருந்தது. ரசிகர்களும் குவிந்தனர்.
எப்படியோ, வெற்றிப்பட 'நாயகன்' ஆகியிருந்தார் மனுஷன்! ரஜினி- கமல், அஜீத்- விஜய், விக்ரம்- சூர்யா, தனுஷ்- சிம்பு காலங்களில் தைரியமாக உள்ளே நுழைந்தவர், ஸ்பெஷல் அட்ராக்ஷன் பர்சனாலிடியாக எப்படி தன்னை முன்னிறுத்திக் கொண்டாரோ, அந்த சாமர்த்தியம் அரசியலிலும் அவருக்கு கை கூடலாம்!
இப்போதே வையாபுரி, சிசர் மற்றும் கிரேன் மனோகர்கள் உள்ளிட்ட சுள்ளான்கள் குழு ராமநாதபுரத்தை முற்றுகையிட தயாராகிவிட்டார்களாம். ஆனால் ஒன்று.... அண்ணன் தயவில் ஆறு வேளை பிரயாணியும், அசந்து சாயுறதுக்கு ஆஃப்பும் அனுபவித்த சிஷ்யகோடிகள்தான் டர்ர்ர்ராகியிருக்கிறார்களாம். அண்ணன் டெல்லிக்கு போய்விட்டால், நாமும் கூட போக முடியாதே என்பதுதான் அவர்களின் ஏக்கம்!
இன்னொரு சந்தோஷம். பெரம்பலூர் தொகுதியில் நிறுத்தப்பட்டிருக்கிறார் நெப்போலியன். அவரை பொறுத்தவரை இது பிரமோஷன். எம்எல்ஏ வாக இருந்தபோது தொகுதி மக்களின் நன் நம்பிக்கை முனையாக கருதப்பட்டவர். இப்போது தொகுதி மாறியிருக்கிறார். ஜனங்கள் வாரிக் கொடுப்பார்கள் என்று நம்பலாம். எது எப்படியோ, திரையுலகத்திலிருந்து எத்தனை பேர் அரசியலுக்கு வந்தாலும், எந்த கட்சியில் பதவி பெற்றாலும், வாயார வாழ்த்துவதுதான் நமது சந்தோஷம்!
கவுஹாத்தியில் இன்று குண்டு வெடித்து நான்கு பேர் பலியானார்கள். மேலும் 15 பேர் காயமுற்றதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை இதற்கு எவரும் பொறுப்பேற்கவில்லை. எனினும் இது உல்பா இயக்ததைச் சார்ந்தவர்களின் வேலையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக