திங்கள், 6 ஏப்ரல், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-04-04


தேவையானப்பொருட்கள்:

பகோடாவிற்கு:

கடலைப்பருப்பு - 1 கப்
பெரிய வெங்காயம் (நறுக்கியது) - 1/2 கப்
பச்சை மிளகாய் - 3
சோம்பு - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு

குருமாவிற்கு:

பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பூண்டு பற்கள் - 4 அல்லது 5
கரம் மசாலா பொடி - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
தேங்காய்த்துருவல் - 1/4 கப்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

கடலைப் பருப்பை 2 மணி நேரம் நீரில் ஊற வைக்கவும். பின்னர் ப்ருப்பை நன்றாகக் கழுவி நீரை வடித்து விட்டு, அத்துடன் பச்சை மிளகாய், சோம்பு, உப்பு சேர்த்து சற்று கொர கொரப்பாக அரைத்தெடுக்கவும். அத்துடன் பொடியான நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பிசையவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும், மாவை பகோடாபோல் கிள்ளிப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

குருமாவிற்கு - ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கி சிறிது எண்ணையில் வதக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயையும் எண்ணையில் வதக்கிக் கொள்ளவும். தேங்காய், சோம்பு, இஞ்சி, பூண்டு, வதக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் அனைத்தையும் ஒன்றாகப் போட்டு நன்றாக அரைத்தெடுக்கவும்.

ஒரு வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணை விட்டு காய்ந்ததும், ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிப் போட்டு வதக்கவும். பின் அதில் ஒரு தக்காளியைப் பொடியாக நறுக்கிப் போட்டு அத்துடன் மிளகாய் பொடி, மஞ்சள் தூள், கரம் மசாலா பொடி, உப்பு போட்டு வதக்கி, அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைப் போட்டு மீண்டும் வதக்கவும். பின்னர் அதில் ஒரு கப் தண்ணீர் விட்டுக் கலக்கவும். குருமா சற்று தளர இருக்க வேண்டும். தேவைப்பட்டால் மேலும் கொஞ்சம் தண்ணீர் சேர்க்கலாம். பகோடா சேர்த்த பின்பு குருமா கெட்டியாகி விடும் எனவே குருமாவை கொதிக்க வைக்கும் பொழுது நீர்க்க இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும். மூடி வைத்து 5 முதல் 10 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். இறக்கி வைத்து அதில் பொரித்த பகோடாவைப் போட்டுக் கிளறி விடவும்.


பூரி, சப்பாத்தி, புலாவ் போன்றவற்றுடன் சேர்த்துச் சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு: பகோடாவை கடலை மாவிலும் செய்யலாம். ஒரு கப் கடலை மாவு, ஒரு டேபிள்ஸ்பூன் அரிசி மாவு, ஒரு சிட்டிகை மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து சிறிது நீரைத்தெளித்து பிசைந்து பகோடா போல் எண்ணையில் உதிர்த்து விட்டு பொரித்தெடுத்து குருமாவில் போடவும்.
திருச்சி, மார்ச்.31- 2009
பீரில் விஷம் கலந்து ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளரை கொலை செய்த கள்ளக்காதலியையும், அவருக்கு விஷ மருந்து கொடுத்து உதவிய ஹோமியோபதி டாக்டரையும் போலீசார் கைது செய்தனர்.

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அருகே உள்ள செங்குறிச்சி - மேக்குடி கிராமத்திற்கு இடையில் உள்ள சிறிய பாலத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு ஆண் பிணம் கிடப்பதாக மணிகண்டம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த இடத்தில் இருந்து பீர் பாட்டில், வாழைப்பழம், திராட்சை, தண்ணீர் பாட்டில் போன்றவைகளை போலீசார் கைப்பற்றினார்கள். பிரேத பரிசோதனையில் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினார்கள்.

இந்த விசாரணையில் தெரிந்த விபரங்கள் வருமாறு:-

திருச்சி கே.கே.நகர் காந்தி நகரைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 65). இவர் மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு வீரம்மாள் (60) என்ற மனைவியும், இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

விராலிமலை கொடும்பாளூர் அருகே உள்ள ஊத்துக்குளி கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி (40). இவருடைய மனைவி சகுந்தலா (33). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். சகுந்தலா தனது கணவர் திருப்பதியை பிரிந்து திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஆர்.எம்.எஸ். காலனியில் மகன்களுடன் வசித்து வருகிறார்.

சுந்தரமூர்த்திக்கும், சகுந்தலாவுக்கும் கடந்த 21/2 வருடமாக கள்ளத் தொடர்பு இருந்து வந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். சுந்தரமூர்த்தி தினமும் குடித்து விட்டு இரவு, பகல் என்று பாராமல் சகுந்தலாவிடம் செக்ஸ் தொந்தரவு கொடுத்து உள்ளார்.

சுந்தரமூர்த்தியின் செக்ஸ் சித்ரவதையை தாங்கி கொள்ள முடியாமல் இருந்த சகுந்தலா சுந்தரமூர்த்தியின் கை, கால்களை முடக்கி அவரிடம் இருந்து தப்பித்து விடலாம் என முடிவு செய்தார்.

அதன்படி சோமரசம்பேட்டை அருகே கோப்பு கிராமத்தில் உள்ள சித்த மருத்துவ டாக்டர் சந்திரசேகரிடம் சென்று விஷ மருந்து கேட்டார். அதற்கு அவர் வெள்ளைநிறம் உள்ள துத்தநாக மருந்தை கொடுத்துள்ளார்.

சுந்தரமூர்த்தி நேற்று முன்தினம் இரவு சகுந்தலாவின் வீட்டிற்கு வந்து இன்பமாக இருக்க அழைத்துள்ளார். சகுந்தலாவை தனியாக மோட்டார்சைக்கிளில் செங்குறிச்சி அருகே உள்ள சிறிய பாலத்திற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் சுந்தரமூர்த்தி ஒரு கூடையில் பீர் பாட்டில், வாழைப்பழம், திராட்சை, தண்ணீர் பாட்டில் போன்றவைகள் வாங்கி கொண்டுவந்தார்.

அவர் வைத்திருந்த பீரை எடுத்து குடித்தார். அப்போது சகுந்தலா நைசாக பேச்சுக் கொடுத்து சுந்தரமூர்த்திக்கு தெரியாமல் பீரில் துத்தநாக பவுடரை கலந்து விட்டார். அதை குடித்த சுந்தரமூர்த்தி வாயில் நுரை தள்ளியபடி மயங்கி விழுந்தார். சகுந்தலா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
மேற்கண்டவை யாவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இந்த கொலை குறித்து மணிகண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து வழக்குப்பதிவு செய்து சகுந்தலாவையும், அவருக்கு விஷ மருந்து கொடுத்து உதவிய ஹோமியோபதி டாக்டர் சந்திரசேகரையும் கைது செய்தார்.
ஆகாசவாணி செய்திகள் வாசிப்பது கொள்ளிமலை குப்பு,
இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாண தொடர்ந்து.........................................................................................!!! மத்திய காங்கிரஸ் அரசை வலியுறுத்தப் போவதாக திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட திமுக தலைவர் திரு கருணாநிதி தெரிவித்திருக்கிறார்.

எம்.பி சீட்டு கேட்கும் தொண்டர்களுக்கும், கீழ்மட்டத் தலைவர்களுக்கும் கடும் எச்சரிக்கை விடுத்தார். குடும்பத்தவர்களுக்குப் போதுமான எம்.பி தொகுதிகளைப்பிரித்துக் கொடுக்கமுடியாமல் ஆற்றொணாத் துயர் அடைவதாக சூசகமாக தெரிவித்தார்.

மதிமுகவில் இருந்து வந்த கண்ணப்பன் காரோட்டிகளைக் கவனித்துக் கொள்வர் என்றும், எல்.கணேசன் உடன்பிறப்புகளிடையே தேர்தலின் போது ஏற்படும் உராய்வுகளை பலப்படுத்துவார் என்றும் தெரிவித்தார். மேலும் கூறுகையில் செஞ்சி இராமச்சந்திரன் வஞ்சிக்கப்படுவார் என்றும், கம்பம் செல்வேந்திரன் கொடிக்கம்பங்களைத் தொண்டர்களுக்கு வழங்குவார் என்றும், இவர்களுக்கெல்லாம் அண்ணாவிடம் இரவல் பெற்ற தனது இதயத்தில் கண்டிப்பாக இடம் உண்டு என்றும் உறுதியாகத் தெரிவித்தார்.

இதனிடையே புதுதில்லியில்,
பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவரும் முன்னாலைய துணைப் பிரதமருமான திரு. எல்.கே.அத்வானி, அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசும்போது, இந்தியாவின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு அயோத்தியில் இராமர் கோயில் கட்டப்படும் என்று உறுதியளித்தார்.

மேலும் அவர் கூறுகையில், பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்தால் சுதந்திர தினம் ஆகஸ்டு 15 -க்கு பதிலாக சரஸ்வதி பூஜை அன்று கொண்டாடப்படும் என்று தெரிவித்தார். வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட பாலங்களின் உடைந்த பாகங்களைக் கொண்டு கரசேவை செய்து ராமர் பாலத்தை உயர்த்திக் கட்டுவோம் என்றும் சூளுரைத்தார். முதுகில் இராமர் இட்ட கோட்டுடன் திரியும் அணில்களை பிடிப்பவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்வோம் என்று உறுதிபட கூறினார்.

இத்துடன் இந்தச் செய்திகள் முடிவடைந்தன. மீண்டும் அடுத்த செய்திகளின் சாரத்துடன் உங்களைச் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடை பெற்றுக் கொள்வது உங்கள் கொள்ளிமலை குப்பு.




முதல்வர் கருணாநிதிக்கு புலிகளால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. முதல்வரின் கோபாலபுரம் வீட்டுக்கு வந்த இந்தக் கொலை மிரட்டல் கடிதத்தில் விடுதலைப் புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பும் தொலைபேசியில் இவ்வாறான ஒரு கொலை மிரட்டல் கலைஞருக்கு விடப்பட்டது. தொலைபேசியில் பேசிய மர்ம நபர் ஒருவர், ஈழத் தமிழர்கள் இந்தியாவில் சுதந்திரமாக வாழ அனுமதிக்க வேண்டும். இலங்கையில் தமிழர் பகுதிகளில் ராணுவத் தாக்குதல்களை நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைத் தமிழர் நலனில் முழுமையான அக்கறை செலுத்த வேண்டும். இல்லையென்றால் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்படுவார்கள் என்று கூறினார்.

முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த தொலைபேசி மர்ம நபரைப் பிடிப்பதற்காக மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் மத்திய குற்றப் பிரிவு மற்றும் சைபர் கிரைம் பிரிவு போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

கரூரில் உள்ள பொது தொலை பேசியில் இருந்து மர்ம நபர் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீசார் கரூருக்கு சென்று மர்ம நபர் பேசியதாக கூறப்படும் தனியார் நிறுவன பொது தொலைபேசி நிலையத்தின் உரிமையாளர் மற்றும் பணியாளரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: