திங்கள், 6 ஏப்ரல், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-04-03


எல்லோரும் என்னை அரசியலுக்கு அழைத்தாலும், எந்தக் கட்சியிலும் சேரும் எண்ணம் எனக்கு இதுவரை வந்ததில்லை என்கிறார் கமல்ஹாஸன்.

கமலஹாசனின் தசாவதாரம் படம் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த இதன் வெளியீட்டு விழாவில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

அரசியல் உலகுக்கு என்னை ஏராளமான கட்சிகள், என் நண்பர்கள் அழைக்காமலில்லை. ஆனால் எனக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லை.

வேடிக்கைக்காக, விளையாட்டாக, திடீரென ஆச்சரியம் உண்டாக்குவதற்காக ஒருவர் அரசியலுக்கு வரக் கூடாது என்று நினைக்கிறேன். பொறுப்பாக செயல்பட வேண்டும், உறுதியான வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால்தான் அரசியலுக்கு வரவேண்டும்.

என்னைப் பொறுத்தவரை நான் சொல்ல நினைத்ததை நாயகன், ஹே ராம், இந்தியன், தசாவதாரம் போன்ற படங்களிலேயே சொல்லிவிட்டதாக நம்புகிறேன்.

தென்னிந்திய தலைவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா மாதிரி, வடக்கில் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தவர்களால் மின்ன முடியவில்லையே ஏன்?

"எனக்கு பெரிதாக எந்தக் காரணமும் தெரியவில்லை. ஒரு வேளை தென்னிந்தியாவில் உள்ள படிப்பறிவு நிலை ஒரு காரணமாக இருக்கலாம்" என்றார்.

சரி... நீங்கள் எப்போதும் அரசியலை விட்டு விலகியிருப்பது ஏன்?

நான் எப்போது சேர்ந்து இருந்தேன், இப்போது விலக. ஆனால் ஒருவர் முழுக்க முழுக்க அரசியலை விட்டு விலகி இருக்க முடியாது. ஒன்று தனக்கு விருப்பமான ஒருவருக்கு ஓட்டு போட்டாக வேண்டும், அல்லது விருப்பம் இல்லையென்றால் ஓட்டு போடாமலாவது இருக்க வேண்டும். நான் முதல் வேலையை ஒழுங்காகச் செய்கிறேன் என்றார் கமல்ஹாஸன்.

கொளுத்தும் கோடைக்கு இதமாக, பொதுமக்களுக்கு மோர் வழங்கி மகிழ்ந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி.சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில், ரஜினிகாந்துக்கு சொந்தமான பெரிய தோட்டம் உள்ளது. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ரஜினி, இங்குதான் ஓய்வு எடுக்கிறார்.

எந்திரன் படத்தின் ஹைதராபாத் ஷெட்யூல் முடிந்து, கேளம்பாக்கம் பண்ணை வீட்டில், ரஜினி ஓய்வு எடுத்து வருகிறார். அப்போது, தோட்டத்தில் கொளுத்தும் வெயிலில் தொழிலாளர்கள் வேலை செய்வதைக் கண்டார்.இதையடுத்து, பகல் நேரத்தில் தொழிலாளர்களுக்கு மோர் வழங்க உத்தரவிட்டுள்ளார். இது தன் தொழிலாளர்களுடன் நின்றுவிடாமல், தோட்டத்தின் அருகில் உள்ள சாலையில் செல்லும் பொது மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று விரும்பிய ரஜினி, அதற்காக பெரிய பந்தல் அமைத்து கோடைகாலம் முடியும் வரை தினசரி வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, தோட்டத்துக்கு வெளியே நேற்று பந்தல் அமைக்கப்பட்டது. பெரிய அண்டாவில் மோர் வைக்கப்பட்டிருந்தது. கேளம்பாக்கத்தில் இருந்து இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள், நடந்து செல்பவர்களுக்கு மோர் வழங்கப்பட்டது.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ரஜினி, நேற்று காலை 10 மணிக்கு, அந்த வழியாக சென்ற பொது மக்களுக்கு தன் கையாலேயே மோர் வழங்கி மகிழந்துள்ளார். இதை கேள்விபட்டதும் அப்பகுதியில் மக்கள் கூட்டமாக திரண்டு வந்துவிட்டனராம்.

ஏற்கெனவே, ராகவேந்திரா கல்யாண மண்டபம் வளாகத்தையொட்டி பெரும் பந்தல் அமைத்து இலவச மோர் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டும் கூட இதேபோல வழங்கப்பட்டது.

படிச்சுட்டு 'அச்சக்க்க்க்...'குன்னு தும்மல் போட்டாலும் தப்பில்லே, இது ஒரு குளுகுளு குளியல் மேட்டர்! 'ஆதவன்' படத்திற்காக அடையாறு பகுதியில் குளித்துக் கொண்டிருந்தார் நயன்தாரா. வெட்ட வெளியில் குளிச்சா விடுவாங்களா ரசிகர்கள்? அந்த தண்ணியை அள்ளிட்டு போய் தீர்த்தமா குடிச்சாலும் ஆச்சர்யமில்லே! அதனால், அங்குள்ள பங்களா ஒன்றில் நீச்சல் குளத்தில் குளிக்க வைத்தார்கள். பங்களாவை சுற்றி செக்யூரிடியை நிறுத்தி பாதுகாப்பு கொடுத்திருந்தாலும், ஏரியல் வியூவில் பார்ப்பதற்கு எல்லா வசதிகளும் இருந்தன. (பக்கத்து பில்டிங்குகள் நல்ல உயரம்)

ஒரு சிக்கன் பீஸ், டூ பீஸ்ல குளிக்கிற அந்த காட்சியை பார்க்க பக்கத்து பில்டிங்குகளில் இருந்து திடீர் திடீர் என்று தலைகள் முளைக்க, வெட்கத்தில் முகம் சிவந்தார் நயன்தாரா. எல்லாரையும் போக சொல்லுங்க. அப்போதான் குளிப்பேன்Õ என்று அடம்பிடிக்க, எங்க பில்டிங், நாங்க நிப்போம். வேணும்னா வேற இடத்திலே போய் குளிக்க சொல்லுங்கÕ என்றார்களாம் வெறி பிடித்த அந்த ரசிகர்கள்.

வேறு வழியில்லாமல் அவுட்டோர் நீச்சல் குளத்தை, இன்டோர் ஆக்கிவிட்டார்கள். பெரிய நீலக்கலர் பிளாஸ்டிக் ஷீட் கொண்டு டாப்பை மூடினார்களாம். அதன்பின் வெட்கப்படாமல் குளித்து முடித்தார் நயன்தாரா!

மிஸ்டர் 'நாக்க முக்க' என்றுதான் விஜய் ஆன்டனியை அழைக்கிறார் நடிகர் விஜய். அவ்வ்வ்ளோ பெரிய விஜய்கே 'நாக்க முக்க' பிடிச்சிருந்தா, மற்றவங்களுக்கு கேட்கவா வேணும்? சமீபத்தில் மலேசியாவுக்கு போயிருந்தாராம் ஒரு பாலிவுட் இயக்குனர். அங்கே உள்ள ஒரு ஆடியோ கடையில் இந்த 'நாக்க முக்க' ஒலிக்க, யாருய்யா இந்த பாட்டை உருவாக்குனது என்று கேட்ட பாலிவுட் இயக்குனர், எப்படியோ விசாரித்து விஜய் ஆன்டனியை லைனில் பிடித்துவிட்டாராம். அவரது அழைப்பின் பேரில் இந்தி படத்திற்கு போகிறார் ஆன்டனி. அழைத்த இயக்குனர் யார் என்பதை இன்னும் சில நாட்களில் தெரிவிப்பார் என்று நம்புவோமாக.

இதற்கிடையில், நீங்க நடிச்சே ஆகணும்னு இவருக்கு வெற்றிலை பாக்கு வைக்காத குறையாக அழைக்கிற இயக்குனர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே இருக்கிறது தினம் தினம்... நம்ம மியூசிக் ரூட் நல்லா போயிட்டு இருக்கு. இதை டைவர்ட் பண்ணி கெடுத்திராதீங்கப்பா என்று இவர் பிடிவாதமாக மறுத்தாலும், விடாமல் நச்சரிக்கிறார்களாம்.

எறும்பு ஊர கல்லும் தேயும்ங்கிற மாதிரி, ஒரு இயக்குனரிடம் கதை கேட்டு ஓ.கேவும் சொல்லிவிட்டாராம். சீக்கிரம் யாராவது ஒரு பொண்ணை கட்டிபிடிச்சிகிட்டு இவரு நிக்கிற மாதிரி போஸ்டர்கள் ஒட்டியிருந்தால், ஆச்சர்யப்பட வேண்டாம் பொதுமக்கள்ஸ்....
சுவிட்சர்லாந்து நாட்டின்  இரண்டு விசேட பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். இவர்களின் விஜயம் சுவிட்சர்லாந்து அபிவிருத்தி ஒத்துழைப்பு அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை பார்வையிடும் பொருட்டு அமையவுள்ளது.
03.04.2009. வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்குவதற்கான நிவாரணப் பொருள்களை ஏற்றிக்கொண்டு பிரித்தானியாவிலிருந்து புறப்படவிருக்கும் 'வணங்கா மண்' நிவாரணக் கப்பலை நாட்டுக்குள் வரவிடாமல் தடுப்பதற்கான முயற்சிகளில் இலங்கை அரசாங்கத் தரப்பு ஈடுபட்டிருப்பதாகத் தெரியவருகிறது. அடுத்தவாரம் பிரித்தானியாவிலிருந்து நிவாரணக் கப்பலொன்று புறப்படவுள்ளமை தொடர்பாக அங்கிருக்கும் இலங்கை உயர்ஸ்தானிகராலயம், பிரித்தானிய அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டுசென்றிருப்பதாக கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த காலங்களிலும் விடுதலைப் புலிகள் நிவாரணக் கப்பல்களைக் பயன்படுத்தி ஆயுதங்களைக் கடத்தியிருப்பதால், இந்தக் கப்பல் குறித்தும் தாம் கூடுதல் அக்கறை செலுத்தியிருப்பதாகவும், இந்த விடயத்தில் கவனம் [...]

கருத்துகள் இல்லை: