திங்கள், 6 ஏப்ரல், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-04-03



More than a Blog Aggregator

by எண்ணத்துப்பூச்சி(முகு)


சகோதரிக்கு முதல்ல வணக்கம்.

உங்களின் கவிதைகளையும், பெண்ணிய உரிமைக்கான‌
உரைகளையும் வாசித்திருக்கிறேன்,கேட்டிருக்கிறேன்.உங்களின்
எளிமையை கண்டு வியந்தும் இருக்கிறேன்.

ஆனால் இப்போது.....விசயத்துக்கு வருகிறேன்.இப்போதெல்லாம்
நீங்கள் கண்னை மூடிக்கொண்டு உலகைப் பார்க்கிறீர்கள்
எனத் தோன்றுகிறது.இன்னுமா சகோதரி..மௌனம்...ஏன்...ஏன்?

செத்து மடியும் அப்பாவி பெண்கள், குழந்தைகள்,கர்ப்பிணிகள்
உங்களின் மனதை உலுக்கவில்லையா...?தமிழன் என்பதால்
வேண்டாம்....ஒரு மனிதாபத்துடன் கூட பார்க்க ஏன் இயலவில்லை.
ஈழத்தமிழன் என்ன பாவம் செய்தான்....தன் உரிமையைப் பெற
போராடுவதை தவிர?உங்கள் தந்தை இந்திய இறையாண்மையை
இன்னமும் இறுக்கமாக பிடித்துக்கொண்டுள்ளார்.நமக்கு தார்மீக கடமையும்,
பொறுப்பும் உண்டு...ஏனெனில் ஒரு பெரும் தமிழினத்தின்
ஏழு கோடி தமிழனின் தலைவனாக,அதிகாரத்தில் இருக்கும் உங்களின்
தந்தை, ஏன் எதுவும் செய்ய மறுக்கிறார்.(அறிக்கை விடுவதை தவிர)

உலக இணையப் பக்கங்களை புரட்டும் போது...உங்கள் தந்தை பெறப்
போகும் பட்டங்கள் தான் பளிச்சிடுகின்றன...மாதிரிக்கு சில...கீழே;
1.கலைஞர் ஒரு "கொலைஞர்"
2.தமிழின துரோகி

இவைகள் உங்கள் மனதை காயப்படுத்தும்.ஆனால் தினந்தோறும்
செத்துமடியும் தமிழ்ப் பிணங்கள் முன்...இது ஒன்றும் இல்லை.

தயவு செய்து உங்கள் தந்தையுடன் பேசுங்கள்...செத்துக்
கொண்டிருப்பது தமிழினம் என ஞாபகப் படுத்துங்கள்.தேர்தல்
வந்ததால்...ஓட்டு ...ஓட்டு என எல்லோரும் ஒடிப்போவீர்கள்....?

தயவு செய்து பேசுங்கள்....மனிதத்துடன்!
இல்லையேல் வரலாறு மன்னிக்காது.


நன்றி: யாழ்.காம் (படத்திற்கு)

G-20 நாடுகளின் மாநாடு லண்டனில் நடந்து வருகிறது. பிரதமர் மன்மோகன்சிங் அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷிய அதிபர் மெத்வதேவ், இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் மற்றும் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை சீர்செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பொருளாதாரத்தை சரிசெய்ய ரூ.55 லட்சம் கோடி ஒதுக்குவது என்று முடிவு செய்யப்பட்டது. இவற்றை சர்வதேச நிதி அமைப்பு (IMF) மற்றும் பல்வேறு அமைப்புகள் மூலம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.
Flash back. 2004 ஏப்ரல் 1.

இலவச ஈ-மெயில் சர்வீஸில், 10 MB-க்கே வழி இல்லாதபோது, (எக்ஸ்ட்ரா space வேணுமா! ரெண்டு, மூனு ஈமெயில் ஐடி ஓபன் பண்ணிக்கோ என்ற அட்வைசுக்கு நடுவில்) எடுத்த எடுப்பிலேயே, 1 GB இடம் கொடுத்து நம்ம எல்லாரையும் அலற வைத்த ஜீமெயில், 5 வயதை பூர்த்தி செய்துள்ளது.


அந்த சமயத்தில் ஒவ்வொரு கிளிக்குக்கும், முழு பக்கத்தையும் லோட் செய்த ஈமெயில் சர்வீஸுகளுக்கு நடுவில், முன்னோடியாக AJAX தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முழு பக்கத்தையும் லோட் செய்யாமல், தேவையான இடத்தை மட்டும் நொடியில் அப்டேட் செய்யும் சித்து விளையாட்டு செய்து, மக்களை வளைத்துப் போட்டது.

invite-டோட வந்தாதான் ஜீமெயில் ஐடி என்று கறாரா சொல்லி, உன்கிட்டே ஜீமெயில் invite இருக்கான்னு, invite இருக்கான்னு பார்க்கிரவன் ஒருத்தனைகூட விடாமல் நம்மளை கேட்க வைத்து, இலவச word of mouth ஜெனரேட் செய்த மார்கெடிங் ராஜதந்திரம்.

புதுசா கொண்டு வந்த வசதியின் பிரமிப்பு அடங்குவதற்கும், Gmail Labs-ல் இருந்து அடுக்கடுக்காக வசதிகள் அறிமுகம்.

Spam-ஆ! கிலோ எவ்வளவு என்று கேட்கக்கூடிய அளவிற்கு திறமையாக செயல்படும் ஸ்பாம் ஃபில்டர்.

இப்படி எவ்வளவோ சொல்லிக்கொண்டு போகலாம்.

ஒரே ஒரு குறை சொல்லலாம்னா, அது ஜீமெயில் இன்னும் beta-வில்தான் இருக்கு.

கூடிய சீக்கிரம் வயசுக்கு வந்துடும்னு நம்புவோம்.
 அ.தி.மு.க.- ம.தி.மு.க. இடையே இன்னும் தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை. ம.தி.மு.க. கேட்ட தொகுதிகளை அ.தி.மு.க. வழங்க முன்வராததால் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று நாஞ்சில் சம்பத் வழக்கு தொடர்பாக வாதாட ஐகோர்ட்டுக்கு வந்தார்.  
சிறீலங்கா படையினரின் எறிகணை வீச்சில் தாய் இறந்து கிடப்பதை அறியாத குழந்தை அவரிடமே பால் குடித்துக் கொண்டிருக்கும் பரிதாப நிலையை என் கண்ணால் கண்டேன் என தமிழர் புனர்வாழ்வுக்கழகப் பணியாளர் தெய்வேந்திரன் கண்ணீர் மல்கத் தெரிவித்தார். தாக்குதல்களில் காயமடையும் மக்களை மருத்துவமனையில் பராமரிப்பில் ஈடுபடும் இவர் மேலும் தெரிவிக்கையில் அன்றாடம் எறிகணைத் தாக்குதல்களில் காயமடையும் மக்களை வாகனங்களில் இருந்து இறக்குவது முதற்கொண்டு பராமரிப்பது போன்ற பணிகளும் மற்றும் இறந்தவர்களளை அடக்கம் செய்வது போன்ற பணிகளிலும் நான் ஈடுபட்டுவருகின்றேன்.
அம்பாறை மாவட்டம் பாணமை பிரதேச லவுக்கல காட்டுப் பகுதியில் 13 தமிழ் இளைஞர்கள் விசேட அதிரடிப்படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக நேரில் கண்ட சாட்சியங்கள் தெரிவிக்கின்றன. இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 13 இளைஞர்கள் உயிரிழந்துள்ளார்கள். 

கருத்துகள் இல்லை: