திங்கள், 6 ஏப்ரல், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-04-04

தாயகத்தில் சிறீலங்கா படையினரது தாக்குதல்கள், மற்றும் பொருண்மியத் தடையினரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிப் பொருள்களை எடுத்துச் செல்லவுள்ள "வணங்கா மண்" கப்பலுக்கான உணவுப் பொருள்கள், மற்றும் நிதி என்பன யேர்மனி, பிரான்ஸ், நோர்வே, நெதர்லாந்து போன்ற நாடுகளுடன் சுவிசிலும் இடம்பெற்று வருகின்றது.

சுவிசிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் நிதி, மற்றும் பொருள் சேகரிப்பு நடவடிக்கை இடம்பெற்று வருவதாக அறிவித்துள்ள ஏற்பாட்டுக் குழுவினர், எதிர்வரும் 7ஆம் நாள் (செவ்வாய்க்கிழமை) இரவு 8:00 மணிக்கு முன்பாக மக்கள் நிதி, மற்றும் பொருள்களை வழங்க முடியும் என அறிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் வாழும் ஆறரைக் கோடி தமிழ் மக்களும் ஒன்றாக இணைந்து "இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்படவேண்டும், ஈழத்தமிழர் படுகொலை நிறுத்தப்படவேண்டும்" என்ற கோரிக்கைகளை முன்வைத்து பலவகையான போராட்டங்களை கடந்த 4 மாதங்களுக்கு மேலாக நடத்தியும் இந்திய அரசு அதற்கு செவிசாய்க்க வில்லை. இந்தச் சூழ்நிலையில் வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர்கள் ஆற்ற வேண்டிய கடமை குறித்து ஆராய்வதற்காக திருச்சியில் வருகிற 4-4-09 சனிக்கிழமை அன்று கலந்தாய்வுக் கூட்டம் ஒன்றை உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் கூட்டியிருக்கிறார்.

இது தொடர்பாக பல்வேறு அமைப்புகளுக்கும் அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைத் தமிழினத்தையே அழித்து ஒழிக்கும் வெறிகொண்டு சிங்கள இராணுவம் தமிழ் மக்கள் மீது ஏவுகணைகளை ஏவியும் குண்டுகள் வீசியும் கொன்று குவித்து வருகிறது. நாளுக்கு நாள் அங்கிருந்து வரும் செய்தி கள் நமது நெஞ்சங்களைப் பிளக்கின்றன. கடந்த இரு மாத காலத்திற்கும் மேலாக தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கமும் மற்றும் பல அமைப்புகளும் தொடர்ந்து நடத்திய போராட்டங்கள், ஊர்வலங்கள், உண்ணா நிலைப் போராட்டங்கள், மனிதச் சங்கிலிகள், மக்கள் திரள் பேரணிகள், எல்லாவற் றிற்கும் மேலாக 12 தோழர்கள் தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்த நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் விளைவாக தமிழகத்தில் மாபெரும் மக்கள் எழுச்சி ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் நாடாளு மன்றத் தேர்தல் குறுக்கிட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி ஈழத்தமிழர் பிரச் னையை பின்னுக்குத் தள்ளி மக்களின் கவனத்தைத் திசை திருப்ப முயற்சிகள் நடைபெறுகின்றன. இதை நாம் ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது. 12 தோழர் களின் உன்னதமான உயிர்த்தியாகம் வீணாக அனுமதிக்கக் கூடாது.

கடந்த தேர்தல்களில் முன் வைக்கப்படாமல் மறைக்கப்பட்ட ஈழத் தமிழர் பிரச்னை இந்தத் தேர்தலில் மய்யப் பிரச்னையாக ஆகியுள்ளது. இதைப் புறந்தள்ள நடைபெறும் முயற்சிகளை முறியடித்து தமிழக மக்களை அணி திரட்டி தமிழ்ப் பகை சக்திகளை இத்தேர் தலில் தோற்கடித்துத் தீர வேண்டிய கட்டாயம் உள்ளது என்பதை தாங்கள் ஏற்பீர்கள் என நம்புகிறேன்.

ஈழத் தமிழர் பிரச்னை மட்டுமல்ல தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிங்களவர் களால் சுட்டுக் கொல்லப்படும் கொடுமை கள் - காவிரி, பாலாறு, முல்லைப் பெரி யாறு ஆகிய நதிநீர்ப் பிரச்னைகளில் உச்ச நீதிமன்றம், நடுவர் மன்றம் ஆகிய வை அளித்த தீர்ப்புக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டு, தமிழகத்தை வஞ்சித்து வரும் அண்டை மாநிலங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மத்திய காங்கிரசு ஆட்சி முன் வரவில்லை. தொடர்ந்து தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறோம்.

மத்திய அரசும் தமிழக அரசும் தொடர்ந்து தமிழர்களின் நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டு வருகின்றன. எனவே வரவிருக்கும் தேர்தலில் மீண்டும் மத்தியில் காங்கிரசு தலைமையிலான ஆட்சி அமையுமானால் ஈழத் தமிழர் பிரச்னைக்குப் பெரும் கேடுகள் விளை யும் என்பதில் அய்யம் இல்லை. எனவே தமிழர் பகை சக்திகளை தோற்கடிப்பதின் மூலம் மட்டுமே தமிழர் நலன்களைப் பாதுகாக்க முடியும்.

இது குறித்து ஆராய்ந்து முடி வெடுக்க அனைத்துத் தமிழ்த் தேசிய அமைப்புகள், முற்போக்கு இயக்கங்கள், பெரியாரியல் அமைப்புகள், வழக்கறிஞர் கள், மகளிர், மாணவர்கள், தொழிலாளர் கள், மீனவர்கள், எழுத்தாளர்கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள் மற்றும் பிற அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதி கள் கலந்து கொள்ளும் கூட்டம் 4-4-09 சனிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திருச்சி, சுமங்கலி மகால் திருமண மண்டபத்தில் நடைபெறும். இக்கூட்டத்தில் தாங்கள் அவசியம் கலந்து கொண்டு சிறப்பிக் கும்படி வேண்டிக் கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள தமிழ் சகோதர சகோதரிகளுக்கு!

கீழே உள்ள சுட்டியை சொடுக்குங்கள்.

அங்கே இருக்கும் மாதிரிக் கடிதத்தைப் படியுங்கள்.

உங்கள் மனதுக்கும், அறிவுக்கும் அது நியாயமாகத் தெரிந்தால் மேற்படி
என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதை முடிவு செய்யுங்கள்.

நான் யாரையும் வற்புறுத்தவில்லை;

என்னைப் பொறுத்தவரை சுதந்திரம் என்பது பிச்சையல்ல கேட்டு வாங்க.
அது ஜனநாயக சமுதாயத்திலிருக்கும் ஒவ்வொரு இனத்துக்கும் , மொழிக்கும்
உரியது. ஆனால் எமது தமிழ் ஈழ மக்கள் கடந்த அரை நூற்றாண்டாக அந்தச் சுதந்திரத்தை
அனுபவிக்க முடியாமல் ஒடுக்கப்படுவதையும், அழிக்கப்படுவதையும் உலகம் வேடிக்கை
பார்த்துக் கொண்டு தானிருக்கிறது. தமது சொந்த அரசியலுக்காகவும், வல்லரசுத்
தன்மையை நிலை நாட்டவும் அக்கறை காட்டுவதாக பாசாங்கு செய்து கொண்டு எம்மை அழிக்க ஆயுத விநியோகமும் செய்து கொண்டிருக்கின்றன சில பிற தேசங்கள்.

எம்முடைய தமிழ் ஈழத்தின் உதயத்தைக் காண எமது சந்ததிகளையாவது காப்பாற்ற வேண்டிய நிலையில் இன்று நாம் இருக்கிறோம். எமது மக்கள் எம் தேசத்தில் கொல்லப்படுவதை தடுக்கும் படி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் உலகத் தலைவர்களைக் கேட்டுக் கொள்வதற்கான முயற்சி இது. சிறு துளி பெரு வெள்ளமாகி எமது தமிழ் மக்களைக் கொல்லும் அரக்கர்களின் கைகளைத் தடுக்கும் சக்தியை உலகத் தலைவர்களிடம் வழங்க விருப்பமுள்ளவர்கள் உங்கள் பங்களிப்பை அங்கே தாருங்கள்.

http://www.congressweb.com/entry.cfm?orgcode=pearl&hotissue=21



glitter-graphics.com
ங்கோ படித்தது ஆனால் எப்போதும் உபயோகப்படுவது...

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்.

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்.

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்.

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய் இரு.

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை.

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்.

16. யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்.

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்.

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்.

19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்.

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்.

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்.

22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்.

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்.

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்.

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்.

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்.

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்.

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.

நன்றி: திரு. ஆனந்த் தாமஸ் அவர்கள், அலங்காநல்லூர்.

.
அவர்கள், மற்ற மனிதர்களைவிட, இணை வைக்கும் முஷ்ரிக்குகளையும் விட (இவ்வுலக) வாழ்க்கையில் பேராசை உடையவர்களாக இருப்பதை (நபியே!) நீர் நிச்சயமாகக் காண்பீர்; அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் ஆண்டுகள் வாழவேண்டும் என ஆசைப்படுகிறார்கள்; ஆனால் அப்படி அவர்களுக்கு நீண்ட வயது கொடுக்கப்பட்டாலும், அவர்கள் இறைவனின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. இன்னும் அல்லாஹ் அவர்கள் செய்வதையெல்லாம் கூர்ந்து பார்ப்பவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன்: 2:96)

கருத்துகள் இல்லை: