வெள்ளி, 3 ஏப்ரல், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-04-02


"உபுண்டு லினக்ஸ் " என்பது மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் போன்ற ஒரு graphical ஆபரேடிங் சிஸ்டம் ஆகும்.


சுதந்திர இலவச மென்பொருள் உபுண்டு லினக்ஸ் CD அல்லது DVD உங்களைத் தேடி உங்கள் வீட்டிற்கே வர வேண்டுமா?

இந்த இணைய தளத்திற்கு( https://shipit.ubuntu.com/) சென்று உங்கள் பெயர், முகவரியை பதிவு செய்யுங்கள்.

தபால் செலவு கூட நீங்கள் கொடுக்கத் தேவையில்லை. தானே வரும்.

--------------------------------------------------------------------------------


சன் மைக்ரோ சிஸ்டத்தின் ஒப்பன்சோலாரிஸ் (Operating System) இலவச மென்பொருள் இலவச CD வேண்டுமா?


இந்த இணைய தளத்திற்கு சென்று உங்கள் பெயர், முகவரியை பதிவு செய்யுங்கள்

தபால் செலவு கூட நீங்கள் கொடுக்கத் தேவையில்லை. தானே வரும்.

---------------------------------------------------------------------


ஆரகிள் கூட லினக்ஸ் போடுது.

அதன் பெயர் "ஆரகிள் அன்ப்ரேகபில் லினக்ஸ்".

இது ரெட் ஹாட்டின் மொத்த காப்பி.

இது இலவசமாக அனுப்பப்படுகிறது.

இந்த இணைய தளத்திற்கு சென்று உங்கள் பெயர், முகவரியை பதிவு செய்யுங்கள்.

தபால் செலவு கூட நீங்கள் கொடுக்கத் தேவையில்லை. தானே வரும்.




.

Enjoy.......


சுதந்திர இலவச மென்பொருள் உபுண்டு லினக்ஸ் ஆறு மாதத்துக்கு ஒரு முறை புதிய எடிஷன் ரிலீஸ் செய்யும்.

தன்னுடைய ஒவ்வொரு புது ரிலீசுக்கும் ஒரு விலங்கின் பெயரை வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.

கடைசியாக வெளியான 8.10 ரிலீஸ் பெயர் "இண்ட்ரபிட் ஐபெக்ஸ்"(Intrepid Ibex).

அது என்ன 8.10 ?-- 2008 வருஷம் 10வது மாதம்.

இப்போது தயாரிப்பில் இருக்கும் 9.04 பெயர் ஜாண்டி ஜாக்கலோப் (Jaunty Jackalope).

இது ஏப்ரல் 2009இல் வெளி வரும்..

இப்போது 9.10 ரிலீஸ் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பெயர் கார்மிக் கோலா. (Karmic Koala).

பார்த்தீர்களானால், a, b, c, d என பெயர்கள் ஆரம்பிக்கும்.

கார்மிக் கோலா (9.10) 2009 அக்டோபர் மாதம் வெளிவரும்.

பின்னால் சேர்த்தது.

இதை இணைய‌த்திலிருந்து ப‌திவிற‌க்க‌ம் செய்ய‌ இய‌லுமா? என்று பார்வையாளர் கருத்தில் MK கேட்டிருந்தார்.

திரு. MK, உபுண்டு கார்மிக் கோலா இந்த வருடம் அக்டோபர் மாதம்தான் வெளிவரும்.

கடைசியாக வந்திருக்கும் உபுண்டு "இண்ட்ரபிட் ஐபெக்ஸ்"(Intrepid Ibex) 8.10 டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.




.



லினக்ஸ் பயன்படுத்த 100 காரணங்கள் தொடரை ஆரம்பிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்


1. லினக்ஸ் இலவசமா? ஆமாங்க ஆமாம்.


2. லினக்ஸ் இன்ஸ்டால் செய்தபிறகு வைரஸ் வருமா ?
வரவே வராது, வரவும் முடியாது!

ஆன்டி வைரஸ் தேவையே இல்லை.

போயிந்தி , போயே போச்சி, It's gone, சொலகாசே (அந்த கால அம்ருதாஞ்சன்
விளம்பர பாணியில் படிக்கவும்)

3. ஒரு முறை டவுன்லோட் செய்துவிட்டு 1000 காபி கூட எடுத்துக்குங்க. தடையே இல்லை .

4. நீங்கள்
ஒரு லினக்ஸ் குறுவட்டை சட்டத்தை எந்த விதத்திலும் மீறாமல் சொந்தங்களுக்கும், நண்பர்களுக்கும், எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் தைரியமாக விநியோகிக்கலாம்.



5. லினக்ஸ் இன்ஸ்டால் செய்யும்போது அதை activate செய்ய தேவையே இல்லை.

6. சீரியல் எண் கேட்காது. கேட்கவே கேட்காதுன்றேன்!

7. கள்ள நகல் எடுத்து பயன்படுத்துகிறோமே என்ற குற்ற உணர்வு இருக்காது. (இது காசு கொடுத்து வாங்கற நல்லவங்களுக்கு பொருந்தாது )

8. அடுத்த வெர்சன் லினக்ஸ் வந்தா அப்கிரேடு செய்ய காசு கொடுக்க வேணாம்
(ஐ! இது ரொம்ப நல்லா இருக்கே)


PKP.IN இல் வந்த ஒரு பதிவை ஒரு நாளிதழ் அப்படியே காப்பி அடித்து போட்டது என்று சொல்கிறார்கள் . அப்படி எந்த ஒரு தின, வார, மாத, வருட, நூற்றாண்டு மலர் இந்த தொடரை போட நினைத்தாலும் என்னை தொடர்பு கொள்ளவும்.

909 four twenty double one five one


தொடரும்.......


More than a Blog Aggregator

by shirdi.saidasan@gmail.com

ஓபன் ஆபீஸ் 3 user guides இலவசமாக டவுன்லோட் செய்ய கிளிக் செய்யவும்




ஓபன் ஆபீஸ் ஒரு சுதந்திர மென்பொருள் (Free and Open Source Software)


இது வரை ஏதோ பத்தோட பதினொன்னா இருந்த ஒபன் ஆபீஸ் version 3 வந்த உடனே நிறைய பேரை திரும்பி பார்க்க வைத்து இருக்கிறது .

இது வரை 4 கோடி பேர் டவுன்லோட் லிங்கை கிளிக் செய்து இருக்கிறார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.

அத்தனை முறை மொத்தமாக டவுன்லோட் ஆகி விட்டதா என்று கேட்காதீர்கள். டவுன்லோட் லிங்கை கிளிக் செய்து அப்புறம் அம்போன்னு விட்டதும் இதுலே சேர்த்தி .

இப்படி பார்த்தா ஒரு முறை டவுன்லோட் செய்து ஆபீஸ் முழுக்க 1000 கணினியில் இன்ஸ்டால் செய்தாலும் ஒரு நம்பெர்தான் கணக்கு.

இதைத்தவிர மாத இதழ்களில் கூட வரும் cd அல்லது dvd யில் இன்னும் எத்தனையோ காப்பிஸ் மக்களை போய் சேர இருக்குறது.

கிட்டத்தட்ட எல்லா லினக்ஸ் டிஸ்ட்ரோவிலும் ஓபன் ஆபீஸ் சேர்ந்து வருகிறது.




எம் எஸ் ஆபீஸ் செய்யும் 90 சதவீத வேலைகளை ஓபன் ஆபீஸ் செய்யுதுன்னு சொல்றாங்க.

எம் எஸ் ஆபீஸில்தான் மைக்ரோசாப்ட்கு நல்ல வருமானம்.

இன்ன வரை ஓபன் ஆபீஸ் டவுன்லோட் கணக்கு தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்







More than a Blog Aggregator

by shirdi.saidasan@gmail.com
இந்த வலைப்பூ தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

லினக்ஸ் மற்றும் சுதந்திர இலவச மென்பொருட்கள் (Free and open source software (FOSS)) பற்றி இதில் பேசப்படும்.

குட்டி குட்டியாக நிறைய பதிவுகள் போடத்தான் எனக்கு வசதி. ஒவ்வொன்னும் ஐந்து பத்து லைன் இருக்கும்.

இந்த தருணத்தை கொண்டாடுவதற்காக பத்து இலவச லினக்ஸ் குறுவட்டுகளை சென்னைக்காக கொடுக்கப்போகிறேன்.

பின்னால் சேர்த்தது

"ஏன் நீங்களே ஒரு வலைப்பூ ஆரம்பிக்கலாமே? " என்று என் மனதில் இந்த எண்ணத்தை விதைத்த ஆதிலுக்கு நன்றி.

வடுவூர் குமார் என்ன லினக்ஸ்?உபுண்டுவா? என்று கேட்டிருந்தார். உபுண்டு மட்டும் இல்லே குமார். எல்லா சுதந்திர மென்பொருளையும் பேசலாம்.

வடுவூர் குமார் வலைப்பூ போய் பார்த்தேன். அண்ணன் லினுக்சில் கடுமையாக உழைத்து இருக்கிறது நன்றாக தெரிகிறது. தமிழில் லினக்ஸ் எழுதுவதில் முன்னோடியாக திகழ்கிறார் என்பது என் கருத்து.

comments என்பதை பார்வையாளர் கருத்து என்று மாற்றி இருக்கிறேன். சரிதானே!




.

கருத்துகள் இல்லை: