"விண்டோஸ் 7 beta இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்" என்று மைக்ரோசாஃப்ட் சொன்னாலும் சொல்லுச்சி. அப்பத்திலேயிருந்து அதே நினைப்பு.
வெறும் 1 GB பிராட்பேண்ட் பிளானை வெச்சிக்கிட்டு விண்டோஸ் 7 beta டவுன்லோடு செய்யனும்னு நினைச்சா முடியுமா?
அடடா ? முன்னாடியே தெரிஞ்சிருந்தா ஒரு மாசத்திற்கு மட்டும் "அன்லிமிடெட் டவுன்லோடா" பிளானை மாத்தி இருக்கலாமேன்னு வருத்தப்பட்டேன்.
என்னை கடுப்பேத்தனும்னே, Windows 7 பற்றி இன்டர்நெட் ஃபுல்லா ஆஹா! ஓஹோ!ன்னு ரிவ்யூ வேறே.
இதுக்குள்ளே, beta டைம் முடிஞ்சி RC ( அதாங்க Release Candidate Stage) ரெடியான பிறகுதான்னு அடுத்து டவுன்லோடுன்னு சொல்லிட்டாங்க.
DVD-யோட எவன்னா கெடைச்சா, போட்டு ஜமாய்ச்சிடலாம்னு நெனச்சா, ஒருத்தனும் மாட்டலே.

இன்னிக்கி ராத்திரி சும்மா chip.in போய் பார்த்தபோது பயங்கர ஷாக். மார்ச் 2009 Chip Magazine issue-வோட வர DVD-யிலே விண்டோஸ் 7 பீட்டாவும் இருக்குன்னு போட்டு இருந்தது.
Chip India Magazine March 2009 Issue DVD Contents
எனக்கு தெரியவே தெரியாதுங்க. இதுவரைக்கும் யாரும் சொல்லவும் இல்லே. இனிமே விடிஞ்ச பிறகுதான் வாங்க முடியும்.
சரி. என்னை மாதிரி விண்டோஸ் 7 beta மேலே ஏக்கமா இருந்தவங்களுக்கும் இந்த செய்தி தெரிஞ்சா பயன்படுத்திப்பாங்களேன்னு "ஆந்தை கணக்கா!!" இந்த அர்த்த ராத்திரியில் பதிவு அடிக்கிறேன்.
ஹாவ்.. கொட்டாவி வருது. நாளைக்கு பார்க்கலாம்.
Good Night.
கொசுறு
----------
இந்த பதிவு எழுதுவதின் நோக்கமே, "Issue sold out" என்று கடைக்காரன் சொல்றதுக்கு முன்னாடியே, நம்ம ஆளுங்க Chip Magazine மார்ச் 2009 Issue-வை அப்படியே அமுக்கிடனும்ற நல்ல எண்ணம்தான்.
MRP Rs.125/-தான். பார்வையாளர் கருத்தில் ஒருத்தர் Rs.150/-க்கு விக்குதுன்னு சொல்றார். அது Black Market ரேட் போல.
விண்டோஸ் 7 beta-வை ஆகஸ்ட் முதல் தேதி வரை legal-ஆ பயன்படுத்திக்கலாம்.
ஹய்யா! இன்னும் 5 மாசம் இருக்கு.
.

வெறும் 1 GB பிராட்பேண்ட் பிளானை வெச்சிக்கிட்டு விண்டோஸ் 7 beta டவுன்லோடு செய்யனும்னு நினைச்சா முடியுமா?
அடடா ? முன்னாடியே தெரிஞ்சிருந்தா ஒரு மாசத்திற்கு மட்டும் "அன்லிமிடெட் டவுன்லோடா" பிளானை மாத்தி இருக்கலாமேன்னு வருத்தப்பட்டேன்.என்னை கடுப்பேத்தனும்னே, Windows 7 பற்றி இன்டர்நெட் ஃபுல்லா ஆஹா! ஓஹோ!ன்னு ரிவ்யூ வேறே.
இதுக்குள்ளே, beta டைம் முடிஞ்சி RC ( அதாங்க Release Candidate Stage) ரெடியான பிறகுதான்னு அடுத்து டவுன்லோடுன்னு சொல்லிட்டாங்க.
DVD-யோட எவன்னா கெடைச்சா, போட்டு ஜமாய்ச்சிடலாம்னு நெனச்சா, ஒருத்தனும் மாட்டலே.

இன்னிக்கி ராத்திரி சும்மா chip.in போய் பார்த்தபோது பயங்கர ஷாக். மார்ச் 2009 Chip Magazine issue-வோட வர DVD-யிலே விண்டோஸ் 7 பீட்டாவும் இருக்குன்னு போட்டு இருந்தது.
Chip India Magazine March 2009 Issue DVD Contents
எனக்கு தெரியவே தெரியாதுங்க. இதுவரைக்கும் யாரும் சொல்லவும் இல்லே. இனிமே விடிஞ்ச பிறகுதான் வாங்க முடியும்.
சரி. என்னை மாதிரி விண்டோஸ் 7 beta மேலே ஏக்கமா இருந்தவங்களுக்கும் இந்த செய்தி தெரிஞ்சா பயன்படுத்திப்பாங்களேன்னு "ஆந்தை கணக்கா!!" இந்த அர்த்த ராத்திரியில் பதிவு அடிக்கிறேன்.
ஹாவ்.. கொட்டாவி வருது. நாளைக்கு பார்க்கலாம்.
Good Night.
கொசுறு
----------
இந்த பதிவு எழுதுவதின் நோக்கமே, "Issue sold out" என்று கடைக்காரன் சொல்றதுக்கு முன்னாடியே, நம்ம ஆளுங்க Chip Magazine மார்ச் 2009 Issue-வை அப்படியே அமுக்கிடனும்ற நல்ல எண்ணம்தான்.
MRP Rs.125/-தான். பார்வையாளர் கருத்தில் ஒருத்தர் Rs.150/-க்கு விக்குதுன்னு சொல்றார். அது Black Market ரேட் போல.
விண்டோஸ் 7 beta-வை ஆகஸ்ட் முதல் தேதி வரை legal-ஆ பயன்படுத்திக்கலாம்.
ஹய்யா! இன்னும் 5 மாசம் இருக்கு.
.

"ஒரு கோடி சன்லைட், ஒரு கோடி மூன்லைட் "
என்று பாடிக்கொண்டே வந்த என் மனைவியை இடைமறித்து, இனிமே
"ஒரு கோடி சன்லைட், 20 கோடி வெப்சைட்,
எல்லாமே சேர்ந்த இதுதானே என் நெட்"
என்று பாடனும் என்றேன்.
உங்களுக்கு விஷயமே தெரியாதா?
இங்கிலாந்தைச் சேர்ந்த "நெட்கிராஃப்ட்" (Netcraft Ltd.) என்ற இன்டர்நெட் சேவை நிறுவனம் தனது ஃபிப்ரவரி 2009 சர்வேயில், இன்டர்நெட்டில் மொத்தமாக சுமார் 20 கோடி வெப்சைட்டுகள் செயல்படுவதாக தெரிவித்து இருக்கிறது.

முக்கியமான செய்தி என்னவென்றால், ஒரே மாதத்தில் 3 கோடி வெப்சைட்டுகள் புதிதாக வந்துள்ளன. இதுலே, சைனாவின் பங்கு மட்டும் 2 கோடி. ஒரே மாதத்தில் 16% jump.
"எண்ணிக்கையில் என்ன சார் இருக்கு? குறைவா இருந்தாலும் தரமா, பயனுள்ளதா இருந்தா போதாதா ?" என்று கேட்கிறீர்களா?
அதுவும் சரிதான்.
....please spread the link.
மைக்ரோசாஃப்ட் 10,000 அமெரிக்க பேடன்ட்டுகள் (கண்டுபிடிப்பு உரிமம்) வாங்கிக் குவித்துள்ளது.
2008ஆம் வருடம் சுமார் 2,000 பேடன்ட்டுகள் வாங்கியுள்ளது.
அப்போ பேடன்ட் வாங்கறதுலே தலைவர் யாருங்கோ? என்றால் அது மைக்ரோசாஃப்டா?
ம்ம்ம்ம்... அதுதான் இல்லை. அந்த பெருமை IBMஐத்தான் சாரும்.

மொத்தத்தில் IBMதான் உலகிலேயே அதிக பேடன்ட் வைத்துள்ள நிறுவனம்.
சத்தமே இல்லாமல் 2008ஆம் வருடம் மட்டும் 4000 அமெரிக்க "கண்டுபிடிப்பு உரிமங்களை" அள்ளியது.
அப்போ பேடன்ட் வாங்கறதுலே, தலைவரு திமிங்கலம் .........."IBM"தானுங்கோ.
.

2008ஆம் வருடம் சுமார் 2,000 பேடன்ட்டுகள் வாங்கியுள்ளது.அப்போ பேடன்ட் வாங்கறதுலே தலைவர் யாருங்கோ? என்றால் அது மைக்ரோசாஃப்டா?
ம்ம்ம்ம்... அதுதான் இல்லை. அந்த பெருமை IBMஐத்தான் சாரும்.

மொத்தத்தில் IBMதான் உலகிலேயே அதிக பேடன்ட் வைத்துள்ள நிறுவனம்.
சத்தமே இல்லாமல் 2008ஆம் வருடம் மட்டும் 4000 அமெரிக்க "கண்டுபிடிப்பு உரிமங்களை" அள்ளியது.
அப்போ பேடன்ட் வாங்கறதுலே, தலைவரு திமிங்கலம் .........."IBM"தானுங்கோ.
.
போன வாரம் செவ்வாய்க்கிழமை, கூகுளின் ஜீமெயில் திடீர்னு உடம்புக்கு முடியாம சுமார் 3 மணி நேரம் படுத்துகிச்சி.
ஜீமெயில் பயன்படுத்துகிறவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டு வருவதாலோ என்னவோ, அய்யாவுக்கு லோடு தாங்க முடியலே போல இருக்கு.

ஜென்டில்மேனா "ஸாரி" சொன்ன கூகிள், காசு கொடுத்து ஜீமெயில் பயன்படுத்துபவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுப்பதாக ஒத்துக்கொண்டது .
பின்னே சும்மாவா. ஜீமெயில், 99.9 சதவீதம் சேவையில் பிரச்சனை வராது. இல்லேன்னா பணம் வாபஸ்ன்னு கேரண்டி கொடுத்துதானே காசு வாங்குச்சி.
இந்த கேரண்டி "கூகிள் அப்ஸ்" (Google Apps) packageலே இருக்கும் கூகிள் கேலண்டர், கூகிள் டாக்ஸ், கூகிள் Talk போன்ற மற்றதுக்கும் பொருந்தும்.

நம்மள மாதிரி ஓசியில் ஜீமெயில் பயன்படுத்துறவங்களுக்கு refund இல்லீங்ணா! ஹிஹிஹி!
அது மட்டும் இல்லாமே, என்னை மாதிரி "ஜீமெயில் வரலையே, ஜீமெயில் வரலையேன்னு" கீ போர்டுலே F5 கீயே உடைஞ்சு போற அளவுக்கு அடிக்கடி refresh செய்து பார்த்தவங்க வயித்தெரிச்சலை இனிமேலாவது கொட்டிக்கக் கூடாதுன்னு ஒரு "கூகிள் சர்வீஸ் ஸ்டேடஸ் பக்கம்" ஒன்று ஆரம்பித்து இருக்கிறது.

இதுலே போய் பார்த்தால் பிரச்சனை யார் பக்கம்னு க்ளீனா தெரிஞ்சிடும். அப்புறம் எதுக்கு F5 க்கு கொட்டு கொட்டு.
இதுதான் சமயம்னு "ஜீமெயில் லேப்ஸ்" கண்டுபிடிப்பான "ஆஃப்லைன் ஜீமெயிலை" பயன்படுத்தலாமேன்னு கூகுளோட யோசனை வேறே.

அது பயன்படுத்தினால் கனக்ஷன் இருக்கோ இல்லியோ, மெயில் அடிச்சு outboxலே போட்டு வெச்சுக்கலாம். கனக்ஷன் வந்தவுடனே தானா மெயில் ஆயிடும்.
அது வேணும்னா ஜீமெயிலே Settings -> Labs போய் enable பண்ணிக்குங்க.

வரட்டுமா!!

ரெட் ஹேட்டின்(Red Hat) ஆதரவில் செயல்பட்டு வரும் ஃபெடோரா (Fedora) லினக்ஸ், தன்னுடைய ஆபரேடிங் சிஸ்டம் சுமார் 1.2 கோடி கணினிகளில் பயன்பாட்டில் உள்ளதாக அறிவித்துள்ளது.

இதில் 10 லட்சம் கணினிகளில் கடைசியாக வெளியான ஃபெடோரா 10-ம், மற்றவற்றில் முந்தைய வெர்சன்கள் 7, 8, 9-ம் ஓடுவதாகவும் சொல்கிற்து.

இது உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?
.

அஸெம்பிள்ட் கம்ப்யூட்டர் அல்லது extra ஹார்ட் டிஸ்க் வாங்கனும்னு நினைத்துக்கொண்டு இருப்பவர்களுக்கு தேவையான செய்தி.
"ஹார்ட் டிஸ்க் வாங்கனுமா, சீகேட் நல்ல பிராண்ட்"ன்னு எத்தனையோ பேர் சொல்லிக் கேட்டிருப்பீர்கள்.
சில மாதங்கள் முன்னால் வரை, அதற்கு 5 வருடம் வாரண்டி கொடுத்தார்கள்.
ஆனால் ஜனவரி 3, 2009-ல் இருந்து சில வகை ஹார்ட் டிஸ்க்களுக்கு (டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் உபயோகப்படுத்தப்படும் சீகேட் பாரகுடா 7200 ஸீரிஸ், etc ) வாரண்டியை 5 வருடங்களிலிருந்து 3 வருடங்களாக குறைத்து விட்டார்கள்.

என்னவென்றால், ஹார்ட் டிஸ்க்களில் ஏற்படும் பிரச்சனைகளில் 95 சதவீதம், முதல் 3 வருடங்களில்தான் வருவதாகவும் , வாரண்டி காலத்தை குறைப்பதால் வாடிக்கையாளர்களுக்கு, அப்படி ஒன்றும் பெரிய பாதிப்பு இல்லை என்கிறது சீகேட்.
அடடே! முன்னாடியே தெரியாம போச்சே என்கிறீர்களா?
உங்கள் ஹார்ட் டிஸ்க்கை ஜனவரி 3க்கு முன்னால் வாங்கி இருந்தால், உங்களுக்கு 5 வருட உத்தரவாதம் உண்டு.
மேலும் விவரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.
enjoy.....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக