வெள்ளி, 3 ஏப்ரல், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-04-02

இந்த வலைப்பூவில் உள்ள 3 பதிவுகளை சென்னையில் இருந்து வெளியாகும் "தமிழ் கம்ப்யூட்டர்" பத்திரிகை, தன் மார்ச் 16-31, 2009 இதழில் 34-ம் பக்கம் முழுக்க என் அனுமதி இல்லாமல் "வலைப்பூங்காவில் பறிக்கப்பட்ட செய்திப்பூக்கள்" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது.

இந்த வலைப்பூவில் இருந்து எடுத்தது என்றுகூட ரெஃபரன்ஸ் கொடுக்கவில்லை.

இந்த நிலை தொடராது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.

மனைவி, மக்களுக்கு கூட நேரம் ஒதுக்காமல் பதிவு சிறப்பாக வர வேண்டும் என்று பகல், இரவு பாராமல் உழைத்த எனக்கு இது கசப்பாக இருக்கிறது. மேற்கொண்டு பதிவு எழுத மனம் தயங்குகிறது.

இது பற்றி சட்டம் தெரியாத நான், என்ன செய்வது என்பதை உங்களிடம் கேட்கிறேன்.

அறிவுரை சொல்வீர்களா?

வருத்ததுடன்,

பிரபு


shirdi.saidasan@gmail.com said...

ஆதரவும் ஆலோசனையும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி,
Copyright Notice இப்போது பிளாகில் சேர்த்துள்ளேன்.
அதை முதலிலேயே செய்திருக்க வேண்டும்.

என்ன பொருத்தம், நமக்குள் என்ன பொருத்தம்
காதலெனும் நாடகத்தில் கல்யாணம் சுபமே!

என்று பாடிக்கொண்டிருந்த என்னிடம், ஓடி வந்தாள் என் மனைவி.

'என்னங்க.. நீங்க பாடறதைக் கேட்ட பிறகுதான் ஞாபகம் வருது. உங்க மொபைலைக் கொடுங்களேன்.'

'எதுக்குன்னு முதல்ல சொல்லு.'

'காதல் பொருத்தம் பார்க்க ஜோடியின் பேரை SMS அனுப்பிச்சா, எவ்வளவு பொருத்தம்னு சொல்லுமாம். பேப்பரில் விளம்பரம் பார்த்தேன். என் அண்ணனுக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆயிருக்கே. போட்டுப் பார்க்கலாம்னுதான்.''ஜோடிப் பொருத்தம் இல்லேன்னு பதில் வந்தா, நிச்சயம் ஆன கல்யாணத்தை நிறுத்திடுவியா என்ன?' என்றேன் கிண்டலாக.

'நீங்க எப்பவுமே இப்படித்தான். ஆசைக்குப் போட்டு பார்க்கிறேனே.'

'ஏதோ ஒரு சேனல்ல கூடதான் இப்படி விளம்பரம் வருது. நான் என்னிக்காவது நம்ம பொருத்தம் இப்படி பார்த்து, காசை கரியாக்கி இருக்கேனா? இன்டெர்நெட்டில் ஃப்ரீயா பார்த்துக்கலாமே.'

'அப்படியா! எனக்கு யாருமே சொல்லவே இல்லியே.'

அவளை http://www.lovecalculator.com/ கூட்டிக் கொண்டு போனேன்.

'வெள்ளித் திரையில்' பிரபல ஜோடியான MGR & Saroja Devi போட்டு Calculate அழுத்தினால் பொருத்தம் 78 சதவீதம் வந்தது.

அவ்வாறே, MGR & Nambiar போட்டால் 'ஜீரோ' சதவீதம் வந்தது.

மற்ற பொருத்தங்கள் பார்த்ததில் சில,

cat & rat 0%
India & Pakistan 1%

microsoft & open source software 1%
microsoft & monopoly 93%


இதற்குள், " அப்படி என்னதான் இன்ட்ரெஸ்டா பார்த்துட்டு இருக்கீங்க"ன்னு பக்கத்து ஃப்ளாட் மாமி வந்து அவங்க பங்குக்கு ஃப்ரீயா பொருத்தம் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க.

அரை மணி நேரத்தில் எல்லா ஃப்ளாட்டுக்கும் நியூஸ் பரவி, ஒரு குட்டி கும்பலே வந்துடுச்சின்னா பார்த்துக்குங்களேன்.
நிறைய ஒத்துக்கொள்ள முடியாத ரிசல்ட் கூட வந்தது.

எனக்கும், உங்களுக்கும், பலருக்கும் உடனே ஞாபகம் வரும் பல பிரபல ஜோடிகள், அரசியல்வாதிகள், நடிகர் நடிகைகள், பகைவர்கள் லிஸ்ட்டை போட்டுப் பார்த்தாலும், ஹிட்சுக்கு ஆசைப்பட்டு தரம் தாழ்த்திக்க வேண்டாமேன்னு, ரிசல்ட்டை சென்சார் பண்ணிட்டேன்.

உங்களுக்கு இஷ்டமானதை நீங்களே போட்டு பார்த்துக்குங்க.

Disclaimer: குறிப்பிடப்பட்டுள்ள இணையதளம் பொழுதுபோக்கிற்கும், விளையாடிற்கும்தான். அப்படியே நம்பி உங்கள் பொன்னான வாழ்வை நாசம் செய்துகொள்ள வேண்டாம்.
உங்களுக்கே தெரியும். சுதந்திர மென்பொருள் Firefox browser Search Bar-ல் default ஆக கூகிள்தான் இருக்கிறது.

Search bar-ன் down arrow-வை கிளிக் செய்து யாஹூவையோ, விக்கிபீடியாவையோ செலக்ட் செய்து கொள்ளலாம். ஆனால் வரும் மெனுவில் மைக்ரோசாஃப்டின் search engine http://www.live.com/ இருக்காது.வேண்டுமென்றால் Address Bar-ல் live.com அடித்து அங்கே போய் தேடலாம். ஆனால் கீபோர்டு ஷார்ட்கட் Control+K பயன்படுத்தினால் cursor நேரா search bar போய் விடும் வசதி இருக்கும்போது எத்தனை பேர் மற்ற search engines போவார்கள்?

இதனால் Firefox பயன்படுத்துபவர்களில் பலர் கூகிளிலும், சிலர் யாஹூவிலும்தான் தேடுகிறார்கள்.

முதலில் அவ்வளவாக கண்டுகொள்ளாத மைக்ரோசாஃப்ட், firefox அதிக சந்தைப் பங்கு பெற்றவுடன் விழித்துக் கொண்டது.


Search engine பிசினஸ் இப்போது ஒரு prestige issue-வாக மாறி விட்டது. Market Share-க்கு ஏற்ப விளம்பர வருமானமும் அதிகரிப்பதால், ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுப்பதில்லை.

இப்படியே விட்டால் firefox-ல் இருந்து தன் search engine "live.com" வருபவர்கள் எண்ணிக்கை குறைந்து விடுமோ, என்று கவலைப்பட்ட மைக்ரோசாஃப்ட், சுலபமாக live.com வர firefox-க்கு வழி செய்து கொடுக்க வேண்டும் என முடிவு செய்தது.

இதற்காக official-ஆ Microsoft Live Search add-on (extension) புரோகிராம் எழுதியது.

இதை Mozilla Link-ல் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.


இதை இன்ஸ்டால் செய்தவுடன், search bar down arrow-வை அழுத்தி live.com செலக்ட் செய்து கொள்ளலாம்.

இப்போ, வெறும் Control+K அடித்தால் live.com தேடல் ரெடி.


போனஸாக, கூகிள் ஸ்டைல் autosugget-ம் வருகிறது.

யார் நினைத்து இருப்பார்கள். இப்படி firefox-க்கு மைக்ரோசாஃப்ட் addon எழுதும் என்று.

எதிரி வளர்ச்சி அடைத்தாலும், அவனது வெற்றியை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது எப்படி என்ற பாடத்தை மைக்ரோசாஃப்டிடம்தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும் போலிருக்கிறது.
Recession-னு சொல்லி, மைக்ரோசாஃப்ட் சமீபத்தில் 1,400 தொழிலாளர்களை வேலையை விட்டு தூக்கியது.

அப்புறம்தான், 25 பேருக்கு settlement-ஆ கொடுத்த பணத்தில், கொடுக்க வேண்டியதை விட தவறாக, சுமார் $200 முதல் $5000-த்துக்கும் மேல் அதிகமாக கொடுத்ததாக கண்டுபிடித்தது.

உடனே அந்த 25 பேருக்கு கடிதம் எழுதி, தெரியாமல் அதிகமாக கொடுத்து விட்டதாகவும், excess பணத்தை திருப்பிக் கொடுத்து விடும்படியும் கேட்டுக்கொண்டது.
இந்த லெட்டரை பார்த்து கடுப்பான ஒரு worker சும்மா இல்லாமல், ஒரு வெப்சைட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார்.

அந்த வெப்சைட், மைக்ரோசாஃப்ட்டிடம் இந்த கடிதம் உண்மைதானா என்று கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டு, உடனே தன்னுடைய வலைத்தளத்தில் அந்த கடிதத்தை போட்டுவிட்டது.

விஷயத்தை கேள்விப்பட்ட ஒவ்வொருத்தரும், பலவித reaction கொடுக்க ஆரம்பித்தனர். நான் இணையத்தில் படித்த கமெண்டுகளில் சில....

"மைக்ரோசாஃப்ட்தான் 20 பில்லியன் டாலர் ($20 Billion) பணம் வெச்சு இருக்குதே. அந்த excess பணம் திருப்பி வரலேன்னா கம்பெனியை இழுத்து மூடிட்டா போகப்போறாங்க."

"அவிங்களே வேலை போச்சேன்னு கஷ்டத்திலே இருக்காங்க. அவங்ககிட்டே போய் நீ வாங்கின பணத்தில் ஒரு amount திருப்பி கொடுடான்னா கொடுமைடா சாமி"

"வேற என்ன நடந்துருக்கும். செட்டில்மெண்ட் கணக்கை Microsoft Excel யூஸ் செய்து போட்டு இருப்பாங்க. அதான் இந்த பிரச்சனை" என்று நக்கல் கமெண்ட் வேறே.
இப்படியெல்லாம், ஒவ்வொருத்தனும் இஷ்டத்துக்கு போட்டுத் தாக்க, கிணறு வெட்ட பூதம் கிளம்புதே என்று யோசித்த மைக்ரோசாஃப்ட், ஒரு கட்டத்தில் சுதாரித்துக் கொண்டு அந்தர்பல்டி அடித்து, excess பணத்தை யாரும் திருப்பி தர வேண்டியதில்லை என்று பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்து விட்டது.

இது இப்படி இருக்க, 20 பேருக்கு கொடுக்க வேண்டியதை விட குறைவாக கொடுத்ததாகவும் கண்டுபிடித்து, அவர்கள் கேட்காமலேயே shortage-ஐ கொடுத்து விட்டது. இதற்காக நாம் மைக்ரோசாஃப்ட்டை பாராட்டத்தான் வேண்டும்.

இப்பவாவது பிரச்சனை தீர்ந்துதா என்கிறதை, இன்டெர்நெட்டில் நான் பார்த்த இந்த latest கமெண்ட் பார்த்து முடிவு பண்ணிக்குங்க.

"எல்லாரையும் ஒரே மாதிரி treat பண்ணனும். மத்த 1375 பேர் என்ன பாவம் பண்ணாங்க. அவங்களுக்கும் இதே excess amount-ஐ கூப்பிட்டு கொடுக்கறதுதான் நியாயம்"


.
இந்த வலைப்பூவின் 'மேல்-வலது' பகுதியில் ஷீரடி சாய் பாபாவின் படம் போட்டு கிளிக் செய்தால், மகாராஷ்ட்ர மாநிலத்தில் உள்ள ஷீரடி பாபா கோவிலிலிருந்தே Live Relay தர்ஷன் தெரியும்படி செட் செய்தேன்.

அந்தப் பக்கம் 'Windows Media Player 9 or above' வேண்டும் என்று கேட்டது. லிங்க் ரெடியாக கொடுத்து இருந்தார்கள்.

உடனே, லைன் ஸ்பீட் check செய்து ஸ்பீடா இருந்தா, இப்பவே டவுன்லோடு செஞ்சுக்கலாம். ஸ்லோவா இருந்தா ராத்திரி பார்த்துக்கலாம்னு, கூகிள்லே போய் "Broadband Speed Test"ன்னு அடிச்சேன்.

வந்த links திருப்தியாக இல்லை. முழித்துக் கொண்டு இருந்தபோது, Intel கூட Broadband Speed Test சர்வீஸ் கொடுக்கிறதா எங்கேயோ படிச்ச ஞாபகம் வந்தது.

அப்படி பிடித்ததுதான் இந்த Link - Intel Broadband Speed Test .




டெஸ்ட்டுக்காக upload/download பண்றேன்னு, பேர் தெரியாத வெப்சைட் malware, virus-னு கம்ப்யூட்டரை நாஸ்தி பண்ணிட்டா, நான் எங்கே போறது.

அதுக்குத்தான், Intel மாதிரி நம்பகமான வெப்சைட்களை பயன்படுத்துவது நல்லது என்று தோன்றுகிறது.

கொசுறா, File Size கொடுத்துட்டா, அது டவுன்லோடு ஆக எந்த டைப் கனெக்‌ஷனுக்கு எவ்வளவு நேரம் ஆகும்னும் கணக்கு போட்டு சொல்லிடுது.




ஜாலி, ஒரே கல்லுலே ரெண்டு மாங்காய்!

அப்படியே, February மாத பதிவுகளையும் இதுவரை பார்க்கலேன்னா பார்த்துருங்களேன்.

.

பாமா விஜயம் திரைப்படத்தில் வரும் "வரவு எட்டணா, செலவு பத்தணா" பாட்டில், குடும்பத்தை எப்படி சிக்கனமாக நடத்த வேண்டும் என்று பாட்டோடு பாட்டாக சொல்லி இருப்பார்கள்.


உதாரணமாக, "வாடகை சோபா இருபது ரூபா, விலைக்கு வாங்கினா முப்பதே ரூபா".


இப்போது recession என்று பூச்சாண்டி காட்டி, ஆட்குறைப்பு, சலுகைக்குறைப்பு என நம் கையில் புரளும் பணத்தை வெகுவாக குறைத்து விட்டார்கள்.


இந்த சமயத்தில், கையில் இருக்கும் பணத்தை மாசக் கடைசி வரை ஜவ்வு மாதிரி நீட்டிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் பலர் இருக்கின்றனர்.



அடுத்த மாசம் சம்பளம் வர வரைக்கும்தானேன்னு நீங்க கேட்கறத்துக்கு முன்னாடி, அடுத்த மாசம் வேலையிலே இருப்போமான்னு முதல்ல கேட்டுக்குங்க.


ஏன் இவ்வளவு பில்ட்-அப்?


நம்ம கூகிள் Tip Jar -ன்னு ( http://www.google.com/tipjar) ஒரு புதிய சேவையை ஆரம்பித்து இருக்கிறது.



வீட்டில், அலுவலகத்தில், ஷாப்பிங்கில் என்று எங்கே, எப்படியெல்லாம் சேமிக்கலாம் என்ற மற்றவர்களின் ஐடியாக்களை தெரிந்து கொள்ளவும், உங்களுடைய ஐடியாக்களை பகிர்ந்து கொள்ளவும், ஒரு பயனுள்ள தளமாக விளங்க முயற்சிக்கிறது.



உங்களுக்கு உபயோகமான சேமிப்பு ஐடியாக்களுக்கு ஓட்டு போட்டு அதன் popularity-ஐ ஏற்றலாம், அல்லது பிடிக்காதவற்றுக்கு Negative ஓட்டு போட்டு குறைக்கலாம்.


பார்த்ததில் என் ஃபேவரிட் "சுதந்திர மென்பொருளை பயன்படுத்துங்கள். காசு மிச்சம்!!"


இப்ப இருக்கிற பொருளாதார மந்த நிலைக்கு இந்த சேவை தேவைதான்.


அலர்ட்!!


நீங்க கொடுக்கிற ஐடியாக்களை, ஒரு பைசா கொடுக்காமல் கூகிள் பயன்படுத்திக் கொள்ள அதற்க்கு உரிமை இருக்கிறதாம்.


தேடித் தேடிப் பார்த்தேன். BETA வார்த்தையே காணோம்.


சந்தேகமாக இருக்கிறது. நீங்களே சொல்லுங்க.


BETA -ன்னு ஒரு வார்த்தை இல்லேன்னா, அது உண்மையாலுமே கூகிள் சேவைதானா?




.


கருத்துகள் இல்லை: