திங்கள், 6 ஏப்ரல், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-04-05

பதிவுலகம் அறிமுகமான பிறகு தயங்கி தயங்கி முதன் முதலில் கூகுள் புன்னியத்தில் வலைப்பதிவில் துண்டுப் போட்டு இன்றோடு மூன்று ஆண்டுகள் ஆகிறது. இந்த மூன்று ஆண்டுகளில் தொடர்ச்சியாக செய்த ஒரே செயல் என்றால் அது வலையில் எழுதி வருவது மட்டுமே. இதற்காக தியாகம் செய்த மணித்துளிகள் ஏராளம் ஏராளம். இந்த மணித்துளிகளை தொழில் தொடர்பில் பயன்படுத்தி இருந்தால் பொருளாதாரத்தைக் கூட்டி இருக்கலாம். மற்றபடி செலவு செய்த மணித்துளிகளால் நட்பு வட்டம் பெருகியது, தனிப்பட்ட மகிழ்ச்சி, பொழுது போக்கு என்ற அளவில் பயன் தான்.

நமக்கு பிடித்த செயல் என்றால் அதில் அலுப்பே வராது. வலையுலகம் ஒரு போதை என்று சொல்வதும் ஓரளவு உண்மைதான். எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறோம் என்றாலும் அதற்குக் கிடைக்கும் அங்கீகாரம், பாராட்டுகள் இவற்றிற்கு அடிமை ஆகிறோம் என்பது ஒப்புக் கொள்ள வேண்டிய ஒன்று. மிகச் சிலரே நேரம் கிடைக்கும் போது எழுதுவதையும் வெறும் பொழுது போக்கு என்ற அளவில் வலைப்பதிவை மிகச் சரியாக கையாளுகின்றனர். கட்டட்டச் சுதந்திரத்தை வழங்குகிறது என்பதை தவறாகப் பயன்படுத்திக் கருத்து திணித்தலும் இங்கு உண்டென்றாலும் அதனால் பெரும் பாதிப்புகள் இல்லை என்று சொல்லலாம். இங்கும் மதப்பிரச்சாரங்கள், கொள்கைகள், பகுத்தறிவு போன்றவைகள் எழுதப்பட்டாலும் படித்தே ஆகவேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் இல்லை. சிற்றிதழ்கள், இலக்கிய இதழ்கள் பொதுவாக வாசகர் மனநிலையைக் கட்டமைத்துவிடும், அவற்றில் எழுதி இருப்பதே உலக நடப்பாகும் என்று தனது சிந்தனையை அவற்றிற்கு அடிமை ஆக்குவதும், அடகு வைப்பதும் போன்ற ஆபத்துகள் இங்கு இல்லை. சொல்லப் போனால் கட்டமைக்கப் பட்ட வாசக மனநிலையை வலைப்பதிவு என்னும் மாற்றூடகம் வெற்றிகரமாக உடைத்தே வருகிறது.

மாற்றுக் கருத்துகள் சிறப்பானவையாக இருக்கிறது என்று ஒத்துக் கொள்ளும் மனநிலையை வலைப்பதிவாளர்கள் பலர் பெற்றிருக்கிறார்கள், முன்பு போல் 'ஒரே பார்வை' அதுவே சரியாக இருக்கும் என்கிற மனநிலையை வலைப்பதிவு வாசகர் வட்டம் தொடர்ந்து உடைத்துக் கொண்டு வந்திருக்கிறது. ஆன்மிகவாதிகள் இறைமறுப்பாளர்களைவிட மென்மையான மனதுடையோர் என்கிற எண்ணம் ஒருகாலத்தில் எனக்கு இருந்தது, ஒருவன் திருந்தி வாழ இறைநம்பிக்கையே கைகொடுக்கிறது என்கிற கருத்தையெல்லாம் நான் கொண்டிருந்தேன். ஒழுக்கத்திற்கும் ஆன்மிகத்திற்குமான பலமான முடிச்சு இருப்பதாக நம்பிக்கைக் கொண்டிருந்தேன். அவையெல்லாம் உடைபட்டு...தனிமனித ஒழுக்கம் என்பது வேறு, நம்பிக்கைகள் வேறு அதற்கும் இறை நம்பிக்கை / நம்பிக்கை இன்மை இவற்றிற்கு யாதொரு தொடர்பும் இல்லை என்று தெளிந்தது வலைப்பதிவுகளில் வரும் பல்வேறு தரப்பினரின் கட்டுரைகளை எண்ணங்களை வாசித்து அறிந்த பிறகுதான். இங்கே வலைப்பதிவில் கருத்துத் திணித்தல் என்பது பலமாக எதிர்க்கப்படுகிறது, அப்படி முன்முடிவுடன் எழுத வருபவர்கள் வெறும் விளம்பரதாரர்களாக அறியப்படுகின்றனர்.

யார் யாரெல்லாம் எழுதலாம் என்கிற கட்டுப்பாட்டைக் கொண்டு அவர்களின் கருத்துக்களையே பொதுமக்களின் கருத்தாக அமைக்கும் அச்சு ஊடகங்களில் நச்சுத் தன்மைகள் போன்றவை வலைப்பதிவில் எடுபடுவதில்லை. ஒரு கட்டுரை எழுதப்பாட்டால் அதில் சொல்லப்பட்டிருப்பவை என்ன மறைமுகமாக திணிக்கப்பட்டுள்ளவை எவை என்பதை வாசகர்கள் மிகச் சரியாக அடையாளம் கண்டு உடனடியாக எதிர்வினையைப் பதியவைக்கிறார்கள், இதற்கு 'சிவாஜி' ஷங்கரோ, 'அயோத்தியா மண்டபம்' சுஜாதாவோ தப்புவதில்லை. வாசகர் கடிதம் என்ற அளவில் அதுவும் அந்த இதழிலுக்கு எதிராக அமையவில்லை என்றால் மட்டுமே பொதுமக்களின் கருத்துகள் ஊடகங்களில் இடம்பெற்று வந்தது. ஒரு இணைய இணைப்புடன் கணினி இருந்தால் நமது எண்ணங்களை உலகம் முழுவதும் உள்ள இணைய வாசர்களிடம் எடுத்துச் சொல்லிவிட முடியும்.




தொடர்ந்து ஆதரவு கொடுத்து பாராட்டுத் தெரிவிக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி !

காலம் தொடர்ந்து சுழலும்...
'இலங்கையில் போரை நிறுத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டும் குழு' சார்பில் வரும் 8.4.2009 புதனன்று மதியம் 3 முதல் 6 மணி வரையில், சென்னை மெமோரியல் அரங்கம் எதிரில், இலங்கைத் தமிழர்களைப் படுகொலை செய்வதை நிறுத்தக் கோரியும், தமிழ்ப் பகுதிகளிலிருந்து படைகளைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் "கண்டன ஆர்ப்பாட்டம்" நடைபெற உள்ளது.

இக்குழு இந்த நோக்கங்களுக்காக வரும் 8.04.2009 அன்று உலகெங்கிலும் உள்ள முக்கிய நகரங்களில் சாத்தியமான அளவிற்கு ஆர்பாட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது.

இலங்கையில் போரை நிறுத்துவதற்கும், தமிழர்களைப் படுகொலை செய்வதை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், இந்தியா உள்ளிட்ட 'உலக நாடுகள்' இலங்கைக்கு உதவி செய்வதை எதிர்த்தும் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளாக பங்கு பெறுமாறு வேண்டுகிறோம்.

ஈழப் பிரச்சனையில் அக்கறை உள்ள இயக்கப் பிரதிநிதிகள் பலரும் பங்கு பெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நீங்களும் பங்குபெறுவீர்!

கண்டன உரைகள்:

பேரா.அ.மார்க்ஸ், ஒருங்கிணைப்பாளர், அணிதிரட்டும் குழு.

கோ.சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.

பாவேந்தன், செயலர், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்.

முனைவர் ப. சிவக்குமார், முன்னாள் அரசுக் கல்லூரி முதல்வர்.

துரைசிங்கவேல், புதிய போராளி இதழ்.

அருள் எழிலன், பத்திரிகையாளர், சென்னை.

மோகன்,பொதுச்செயலாளர், சென்னை பத்திரிகையாளர் சங்கம்.

உதயம் மனோகரன், மக்கள் வழக்குறைஞர் சங்கம், சென்னை.

மோகன் குமார், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், கோவை.

இசையரசன், 'தண்டோரா' அமைப்பு.

கென்னடி, மக்கள் போராட்ட மையம்,கொள்ளிடம்.

கீதா, அமைப்பு சாரா தொழிலாளர் தேசீய இயக்கம்.

காதர் ஷெரீப், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்,காஞ்சிபுரம்.

ஜெயக்குமார், வழக்குறைஞர், சென்னை.

வெங்கட், புதிய சோசலிச மாற்று.

ஜென்னி, அணி திரட்டும் குழு.


புதிய பதிவர்களை வரவேற்று சென்னையில் பதிவர் சந்திப்பு

சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் இருக்கும் அனைவரையும் வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம்.

இடம் : மெரினா கடற்கரை காந்தி சிலை அருகில்

நேரம் : மாலை 5 மணி முதல் 7 மணி வரை

நாள் : 05- 04 -2009. ஞாயிற்றுக்கிழமை

இதற்கு அமைப்பாளர்கள் என்று யாரும் இல்லை. கலந்து கொள்ளும் அனைவரும் அமைப்பாளார்களே.

சந்திப்பு பற்றிய் சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள

பாலபாரதி – 9940203132
லக்கிலுக் – 9841354308
அதிஷா – 9884881824
கேபிள் சங்கர் - 9840332666
முரளிகண்ணன் - 9444884964

..
வேலை நிமித்தமாக வந்திருந்தாலும் ஒரு முக்கிய சந்திப்பு நடத்துவதே எங்கள் திட்டமாக இருந்தது!

அது ரங்கமணிகள் பாதுகாப்பு சங்கம்!

கழந்து கொள்ள இருந்தவர்கள்

ஜீவ்ஸ்
T.B.C.D
அரவிந்தன்
லக்சுமனன்(பட்டாம் பூச்சியின்கணவர்)
நானும்

முதலில் ஜீவ்ஸ் வீட்டுக்கு தான் போனேன்!

அவர் வெளியே சொல்ல அனுமதி கேட்டார்.

ஒரே முறைப்பு தான் அப்படியே அமைதி ஆகிட்டார்.

அங்கிருந்து வந்து அரவிந்தனுக்கு போன் செய்தேன்!
வருகிறேன் என்று சொன்னவர் விசயத்தை சொன்னதும் வீட்டில் கேட்க வேண்டும் என்று ஜகா வாங்கினார்.

பட்டாம் பூச்சியின் கணவருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கபடவில்லை அதனால் அவரை அழைக்கமுடியவில்லை.

தெரிந்திருந்தால் கண்டிப்பாக வந்திருப்பார். அவ்வளவு கஷ்டமாம் அவருக்கு

கடைசியாக நானும் T.B.C.D மட்டும் சந்திக்க வேண்டியதாகி விட்டது.


ரெண்டு பேர் சேர்ந்து ஒரு கூட்டமா என்று தள்ளி வைக்கப்பட்டது.
இருப்பினும் ஆண்கள் பாதுகாப்பு சங்க(ஆபாச)தலைவர் ஆதிமூலகிருஷ்ணன்(தாமிரா) தலைமையில் விரைவில் ஒரு கூட்டம் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

அங்கே சில விசயங்கள் விவாதிக்கப்படும், முக்கியமாக

நம்மை நோக்கி வரும் பூரிக்கட்டையோ, பாத்திரமோ அதிலிருந்து லாவகமாக தப்பிப்பது எப்படி

வியர்வை சிந்தாமல் சமைப்பது எப்படி

அழுக்கு போக சீக்கிரம் துவைப்பது எப்படி

தங்கமணி வாங்கிவர சொல்லும் பொருள்களை மறக்காமல் வாங்கி வருவது எப்படி

என்று விவாதிக்கப்படும்

ரங்கமணிகள் வீட்டிற்குள்ளும் ஹெல்மட்டோடு இருக்க அனுமதி கேட்டு அரசிடம் மனு கொடுக்க வேண்டும் என்று ஜீவ்ஸ் ஏற்கனவே சொல்லியிருந்தார்!

ஒருபக்கம் வீக்கிய மண்டைய பார்க்கும் போது தான் காரணம் தெரிந்தது.

T.B.C.D யிடம் கேட்டதற்க்கு தங்கமணியிடம் கேட்காமல் தான் எதையும் சொல்லமுடியாது என்று சொல்லிவிட்டார்.

பாவம் அடி பலம் போல!

வரவிருக்கும் ரங்கமணிகள் பாதுகாப்பு சங்கத்தில் சேர அனைவரும் தகுந்த பாதுகாப்புடன் முன் வரவேண்டும். மற்றவைகளை தலைவர் ஆதிமூலகிருஷ்ணன் பார்த்து கொள்வார்.


பெங்களூர் பற்றி அடுத்த விசயங்கள் இனி வரும் பதிவுகளில்!

கருத்துகள் இல்லை: