திங்கள், 6 ஏப்ரல், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-04-04

கவர்ச்சிகரமாக நடிக்கத் தெரியும் என்பதை நிரூபித்த கேத்ரீனா கைப், தனக்கு சமூகம் குறித்த அக்கறைப் பார்வையும் இருக்கிறது என்பதை நிரூபிக்கப் போகிறார்.

தனது தாயார் சூசனுடன் இணைந்து சென்னையி்ல் கைவிடப்பட்ட பெண் குழந்தைகளுக்கான இல்லம் ஒன்றை தொடங்கப் போகிறாராம் கேத்ரீனா கைப்.

இதுதொடர்பாக கேத்ரீனாவின் தாயார் சூசன், தமிழக அரசு அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு இல்லம் அமைப்பது தொடர்பான விதிமுறைகள் உள்ளிட்டவை குறித்து பேசி வருகிறாராம்.

ஏற்கனவே மதுரையி்ல் உள்ள ஹோப் ரீச் என்ற சேவை இல்லத்துடன் சூசனுக்கு நல்ல தொடர்பு உள்ளது. இந்த இல்லத்தில், கைவிடப்பட்ட பெண் குழந்தைகள், பெண் சிசுக் கொலையிலிருந்து தப்பி வந்த குழந்தைகள் பேணிக் காக்கப்பட்டு வருகின்றனர்.

இதே பாணியில் சென்னையில் ஒரு இல்லத்தைத் தொடங்கப் போகிறார்கள் சூசனும், கேத்ரீனாவும்.

இதுகுறித்து கேத்ரீனா கூறுகையில், சென்னையில் கைவிடப்பட்ட பெண் குழந்தைகளுக்கான இல்லம் ஒன்றைத் தொடங்கும் திட்டத்தில் உள்ளேன். இதுதொடர்பாக எனது தாயார் செயல்பாடுகளில் இறங்கியுள்ளார். அவருக்குத் துணையாக நான் இருக்கிறேன்.

இந்தப் பணியை சிறப்பாக செய்து முடிப்பதற்காக எனது தாயார் ஓய்வின்றி பணியாற்றிக் கொண்டிருக்கிறார். எனது பல கனவுகளில் இந்த இல்லமும் ஒரு கனவு. விரைவில் இது நனவாகும் என நம்புகிறேன்.

இல்லம் ஆரம்பிப்பது சாதாரண விஷயமில்லை. அதில் நிறைய முயற்சிகள் தேவைப்படும். இந்த இல்லத்திற்கு வரும் குழந்தைகளை நல்ல மனம் கொண்டவர்கள் தத்தெடுத்தால் பிரச்சினை இல்லை. ஆனால் யாரும் தத்தெடுக்காவிட்டால் அவர்களை 18 வயதாகும் வரை நாம்தான் பத்திரமாக பாதுகாக்க வேண்டும். அது மிகப் பெரிய பொறுப்பு என்றார் கேத்ரீனா.

சரி, திரையுலக வாழ்க்கை எப்படி உள்ளது என்று கேட்டபோது, நான் நடிக்க வந்தபோது இங்கு யாரையுமே எனக்குத் தெரியாது. அப்படிப்பட்ட பின்னணியில் நடிக்க வந்த நான் இன்று இந்த அளவுக்கு வந்திருப்பதை பெருமையாகவும், பெரிதாகவும் கருதுகிறேன்.

நான் யாரையும் போட்டியாக நினைப்பதில்லை. எனது வேலையை நான் சரியாக செய்கிறேன். யாருடைய வேலையையும் நான் பறிப்பதில்லை என்றார் கேத்ரீனா புன்னகையுடன்.

12 பி, இயற்கை என நல்ல படங்களில் நடித்தும் கூட முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை அடைய முடியவில்லையே என்ற ஏக்கம் ஷாமுக்கு.

இப்போது அகம் புறம், அந்தோணி யார் படங்களில் நடித்து வந்தாலும், நல்ல படங்களுக்கான தேடலைத் தொடர்ந்து கொண்டுள்ளார். இந்த நேரத்தில் பாலிவுட்டில் நடிக்கும் ஒரு பெரிய வாய்ப்பு அவருக்கு வந்துள்ளது.

பைசல் இயக்கும் இந்தப் படம் ஒரே நேரத்தில் தமிழ், இந்தியில் உருவாகிறது. இரண்டிலும் ஷாம்தான் ஹீரோ. ஜாக்கி ஷெராப் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.

மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்கள் இன்னும் முடிவாகவில்லை. விரைவில் அதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

இந்த இந்திப் பிரவேசமாவது அவருக்குக் கை கொடுக்குமா... பார்க்கலாம்!

தமிழ், தெலுங்கு என இரட்டைக் குதிரைகளில் வெற்றிகரமாக சவாரி செய்யும் த்ரிஷாவுக்கு இந்த வருஷம் முழுக்க நிற்கக் கூட நேரமில்லாத அளவுக்கு படங்கள்... படங்கள்!

வழக்கமாக இரண்டு மீன்று படங்கள் முடிந்ததும், நண்பிகளுடன் ஜாலியாக வெளிநாட்டுக்கு ட்ரிப் அடிக்கும் த்ரிஷா, கடந்த சில வருடங்களாக ப்ரேக் இல்லாமல் ஓடிக் கொண்டே இருக்கிறார் சென்னைக்கும், ஹைதராபாத்துக்கும். அவ்வப்போது, ஷூட்டிங்குக்காக வெளிநாடுகளுக்குப் பறந்தபடி இருப்பதால் விடுமுறை எடுக்க வேண்டும் என்ற நினைப்பு அவ்வளவாக வருவதில்லையாம்.

டிபிகல் சென்னைவாசியான த்ரிஷா, அடிக்கடி வெளியூருக்குப் போய்விடும்போது எப்படி உணர்கிறார்?

"நான் ஷூட்டிங்ல இருக்கும்போது சென்னையை ரொம்பத்தான் மிஸ் பண்றேன்... அது எனக்கே தெரியுது. இங்க என்னோட லைப் ஸ்டைலே வேற. ஆனா... தொழிலைக் கவனிக்கணுமே. அதுதான் நமது தனிப்பட்ட விருப்பங்களை விட முக்கியம். அதனால் என் வேலையை ரசிக்கப் பழகிக்கிட்டேன். ஒவ்வொரு நொடியையும் அனுவிக்கிறேன்... சந்தோஷமாக", என்கிறார் இந்த முன்னாள் மிஸ் சென்னை.

த்ரிஷாவின் அடுத்த படம் சர்வம். செம ஸ்டைலாக வந்துள்ளதாம் விஷ்ணுவர்தனின் இயக்கத்தில். ரிலீஸ் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார் த்ரிஷா.

12 பி, இயற்கை என நல்ல படங்களில் நடித்தும் கூட முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை அடைய முடியவில்லையே என்ற ஏக்கம் ஷாமுக்கு.

இப்போது அகம் புறம், அந்தோணி யார் படங்களில் நடித்து வந்தாலும், நல்ல படங்களுக்கான தேடலைத் தொடர்ந்து கொண்டுள்ளார். இந்த நேரத்தில் பாலிவுட்டில் நடிக்கும் ஒரு பெரிய வாய்ப்பு அவருக்கு வந்துள்ளது.

பைசல் இயக்கும் இந்தப் படம் ஒரே நேரத்தில் தமிழ், இந்தியில் உருவாகிறது. இரண்டிலும் ஷாம்தான் ஹீரோ. ஜாக்கி ஷெராப் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.

மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்கள் இன்னும் முடிவாகவில்லை. விரைவில் அதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

இந்த இந்திப் பிரவேசமாவது அவருக்குக் கை கொடுக்குமா... பார்க்கலாம்!

கோர்ட்டில் வழக்கு தொடுத்து, வீணாக அசினைப் பகைத்துக் கொள்ளாதே என்று அசினின் கார் டிரைவர் முருகன் தன்னை மிரட்டியதாக நல்லமுத்துக்குமாரின் தாயார் சுடலைவடிவு புகார் தெரிவித்துள்ளார்.

நடிகை அசினிடம் உதவியாளராக இருந்தவர் நல்ல முத்துக்குமார். இவர் காணாமல் போய்விட்டதாகவும், அவரை கண்டுபிடித்து தருமாறும் செங்குன்றத்தில் வசிக்கும் முத்துக்குமாரின் தாய் சுடலை வடிவு சென்னை புறநகர் ஆணையர் ஜாங்கிட்டிடமும், பொன்னேரி துணைக் கண்காணிப்பாளர் ரங்கராஜனிடமும் கடந்த 19ம் தேதி புகார் கொடுத்தார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாரங்கன் உத்தரவின் பேரில் பொன்னேரி துணைக் கண்காணிப்பாளர் ரங்கராஜன் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் நல்லமுத்துக்குமாரை தேடி வருகின்றனர். மும்பை சென்ற தனிப்படை போலீசார் நல்ல முத்துக்குமாரின் நண்பர்களிடமும் விசாரித்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு அசினின் கார் டிரைவர் முருகன் தன்னை செல்போனில் மிரட்டியதாக நல்ல முத்துக் குமாரின் தாய் சுடலை வடிவு சோழவரம் போலீசாரிடம் புகார் கூறியுள்ளார்.

போலீசாரிடம் சுடலை வடிவு கொடுத்துள்ள புகார் விவரம்:

நான் கடந்த 19ம் தேதி பொன்னேரி டி.எஸ்.பி. ரங்கராஜனிடம் புகார் கொடுத்தேன். இதுவரை என் மகனைப் பற்றி விவரம் எதுவும் தெரியவில்லை. எனவே இப்போது சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு (ஹேபியஸ் கார்பஸ்) மனு தாக்கல் செய்ய உள்ளேன்.

நேற்று இரவு 9 மணிக்கு அசின் கார் டிரைவர் முருகன் என்னுடன் செல்போனில் பேசினார்.

உன் மகன் காணாமல் போய் விட்டதாக போலீசில் புகார் செய்தாய். இப்போது கோர்ட்டில் வழக்குப் போடப் போகிறாயா... உன் வக்கீல் யார்? உன்னால் அசினை எதிர்த்து என்ன செய்ய முடியும்? மரியாதையாக இத்துடன் நிறுத்திக் கொள்.

உன் மகன் மும்பையில்தான் உள்ளான். கடந்த 25ம் தேதி கூட அசினின் அப்பாவிடம் செல்போனில் பேசினான். முத்துக்குமார் மும்பையில் பையா என்றழைக்கப்படும் கூட்டத்தினரிடம் சேர்ந்துவிட்டான். வீணாக நீ அசினை பகைத்துக் கொள்ளாதே என்று முருகன் மிரட்டினார் என்று சுடலை வடிவு புகார் தெரிவித்துள்ளார்.

கடந்த 15 நாட்களாக முத்துக்குமார் அங்கிருக்கிறார், இங்கிருக்கிறார், செல்போனில் பேசினார் என்றுதான் போலீசாரும் இதுவரை சொல்லிக் கொண்டிருக்கிறார்களே தவிர, இன்னும் அவரைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: