திங்கள், 1 ஜூன், 2009

2009-06-01

தமிழ்சினிமாவில் ரீமிக்ஸ் என்ற பெயரில் நடைபெறுகிற 'இசை வதையை' கண்டிக்காத பிரபலங்களே இல்லை எனலாம். "அடுத்தவர் வாந்தியை சுவைப்பது போலதான் இந்த ரீமிக்ஸ்" என்று கடுமையான வார்த்தைகளால் சாடி இருந்தார் இசைஞானி இளையராஜா. "இனிமேல் ரீமிக்ஸ் செய்யப் போவதில்லை" என்று அறிவித்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

இதோ - திரையுலகத்திலிருந்து ரீமிக்ஸ் கலாச்சாரத்தை நோக்கி மேலும் ஒரு கல்! எறிந்திருப்பவர் வைகைப்புயல் வடிவேலு. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வைகைப்புயல், சற்று வேகமாக சுற்றி அடித்தது வார்த்தைகளை!

தமிழ்சினிமாவில் தற்போது ஓரிரு படங்களுக்கு இசையமைத்துவிட்டாலே பெரிய இசை மேதை போல சுற்றி வருபவர்களுக்கு முன் எவ்வளவோ சாதனைகளை செய்து விட்டு அடக்கமாக இருக்கிறாரே மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்... அவர் ஒரு இமயம். இவர்களை போன்றவர்கள் இரவு பகல் பாராமல் இசையமைத்த பாடல்களை கூசாமல் எடுத்து ரீமிக்ஸ் என்ற பெயரில் கெடுத்து கொல்வது வேதனையாக இருக்கிறது. இந்த கொடுமைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். தயவு செய்து இப்படி அடுத்தவர்களின் உழைப்பை திருடாதீர்கள். முடிந்தால் நீங்களே சுயமாக சிந்தித்து இசையமையுங்கள். அதை சிறிது காலம் கழித்து நீங்களே ரீமிக்ஸ் செய்து கொள்ளுங்கள். யார் கேட்க போகிறார்கள்? என்றார் ஆவேசமாக!

இசையமைச்சவங்க சொல்லியே கேட்கலே, இவரு சொல்லியா கேட்க போறாங்க. விடுங்க சார்...

'பிரபுதேவாவுக்கும் நயன்தாராவுக்கும் காதல், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள்' என்று எல்லா பத்திரிகைகளும் எழுதிவிட்டன. (நம்மை தவிர) இது குறித்து எந்த பதிலுமே சொல்லவில்லை சம்பந்தப்பட்ட இருவரும். முக்கியமாக பிரபுதேவா கூட இது பற்றி கருத்து சொல்ல விரும்பாமல் ஒதுங்கிக் கொண்டார். மீனாவை காதலிக்கிறார் என்று முன்பு ஒரு முறை கிளப்பிவிட்ட பத்திரிகைகள் தானாகவே அடங்கி போகிற வரை அதுபற்றி அவர் பேசியதில்லை. அதே ஸ்டைலைதான் இந்த முறையும் கடைபிடித்தார்.

ஆனால் பிரபுதேவா பேசாவிட்டால் என்ன? நாம் பேசிவிடுவோம் என்று முடிவுக்கு வந்த நயன்தாரா, ரொம்ப தெளிவாக விளக்கியிருக்கிறார். என்னவென்று?

'நானும் அவரும் நல்ல நண்பர்களாகதான் பழகி வருகிறோம். எங்களுக்குள் காதல், கல்யாணம் என்று வித விதமாக எழுதி புழுதியை தூற்றுகிறது மீடியா. என்னை எழுதுவது பற்றி கூட எனக்கு கவலையில்லை. ஆனால் மாஸ்டருக்கு திருமணம் ஆகி மனைவி குழந்தைகள் என்று ஒரு குடும்பம் இருக்கிறது. அதற்காகவாவது இதுபோல எழுதுவதை இனிமேல் குறைத்துக் கொள்ள வேண்டும்' என்று கூறியிருக்கிறார்.

இந்த ஆகாத லவ்வுக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைங்கப்பா...!

வாஷிங்டன்: அமெரிக்காவில் 29 வயது வாலிபர் ஒருவர் 11 மனைவிகளின் மூலம் 21 குழந்தைகள் பெற்று அதிர வைத்துள்ளார்.

அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்தை சேர்ந்தவர் டெஸ்மாண்ட் ஹாட்செட். தற்போது இவருக்கு 29 வயது தான் ஆகிறது. ஆனால், அதற்குள் இவர் 11 மனைவிகள் மூலம் 21 குழந்தைகள் பெற்றுள்ளார்.

இவருக்கு இரண்டு முறை ஒரே ஆண்டில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன. இவரது மூத்த குழந்தைக்கு 11 வயதாகிறது. கடைசி குழந்தைக்கு 11 மாதம் மட்டுமே ஆகிறது. குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்து வருவதால் இவரால் அனைத்து குழந்தைகளையும் பராமரிக்க முடியவில்லை.

இதையடுத்து அவரது மனைவிகளில் சிலர் நீதிமன்றத்தில் சென்று வழக்கு தொடர்ந்தனர். அதன் பின்னர் தான் இவருக்கு 21 குழந்தைகள் இருக்கும் செய்தி வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது. இவரை அமெரிக்க பத்திரிகையாளர் சாதனையாளர் என கிண்டலடித்து வருகின்றன.

இந்நிலையில் நீதிமன்றம் அவரது சம்பளத்தில் பாதியை குழந்தைகளுக்கு செலவிட உத்தரவிட்டுள்ளது. ஆனால் டெஸ்மாண்டின் சம்பளம் மிகவும் குறைவு என்பதால் ஒரு குழந்தைக்கு சுமார் ரூ. 100க்கும் குறைவாக மட்டுமே கிடைக்கும் என தெரிகிறது.

இதையடுத்து மாநில அரசு தலையிட்டு அந்த குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என டெஸ்மாண்டின் வக்கீல் கெய்த் போப் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து டெஸ்மாண்ட் கூறுகையில்,

நான் சாதனை எதையும் படைக்க விரும்பவில்லை. இதனால் இனி குழந்தை பெற்று கொள்ள மாட்டேன். நான் வேண்டுமென்றே இதை செய்யவில்லை. அது தானாக நடந்துவிட்டது. எனது ஒவ்வொரு மனைவிக்கும் எனக்கு மேலும் சில குழந்தைகள் இருப்பது தெரியும்.

எனது 21 குழந்தைகளின் பெயர், வயது மற்றும் பிறந்தநாள் ஆகியவற்றை என்னால் மறக்காமல் சொல்ல முடியும் என்றார் பெருமை பொங்க.

கருத்துகள் இல்லை: