புது வேலையில் முதல் நாள் தஞ்சாவூரிலிருந்து பூவத்தூர் செல்லும் பஸ்ஸில் வேலை.
டிக்கட், டிக்கட்
யாருங்க அது உள்ள வாங்க சீட்டுதான் காலியா இருக்குள்ள ஏன் படில நிக்கறீங்க வந்து உட்காருங்க
எங்களுக்கு தெரியாதா பஸ்ஸு காலியா இருக்குன்னு,சும்மா கவர்மெண்டு பஸ்ஸுல கை நீட்டி சம்பளம் வாங்குற கண்டக்டர் பயலுக்கே இவளோ திமிருன்னா சொந்தமா வெவசாயம் பண்ணி மார்க்கெட்ல வாலைக்காய் வித்திட்டு வர்ற எனக்கு எவ்ளோ திமிரு இருக்கும். இந்தா கோயீலூருக்கு ஒரு டிக்கட்ட குடு.
என் நேரம் உங்கிட்ட திட்டு வாங்கனும்னு இருக்கு, அப்புரம் இது கவருமெண்டு பஸ்ஸூ இல்லை , தனியார் வண்டிதான் ஓனரு வந்தா பிரிச்சி மேஞ்சுருவாரு உன்னை, இந்தா டிக்கெட்ட பிடி, அப்படி போயி உட்காரு, ம்ஹீம் நாத்தம் தாங்கல , வாழைக்காய் வித்த காசுக்கு எல்லாத்துக்கும் குடிச்சிட்டியா?
ம்ஹ்ம், நான் சொந்தமா உலைச்சி வித்து குடிக்கிறேன், தனியார் வண்டில பிச்சைக்காரத்தனமா கை நீட்டி சம்பளம் வாங்கி ஈனப்பொலப்பு நடத்துற நீயெல்லாம் பேசப்படாது.
ஒழுங்கா வேட்டிய கட்டிட்டு உட்காரு, இல்லாட்டி இறக்கி விட்டிருவேன்.
பேசிக்கொண்டு இருக்கும்போதே வாழைக்காய் விவசாயி, கண்டக்டர் முருகேசனின் கன்னத்தில் பளார் என்று அறைகிறார், அச்சேற்ற முடியாத வார்த்தைகளை உபயோகித்தபடி. பதில் மரியாதையாய் ஏகப்பட்ட அடிகளை வாங்கிக்கொண்டு இறக்கிவிடப்படுகிறார் வாழைக்காய் விவசாயி.
நாளைக்கு இந்த பக்கமாதானாடா வண்டி ஓட்டனும் , கோயிலூர்ல இருக்குடா உனக்கு, உன் சங்க அறுக்காம விட மாட்டண்டா ழேஏய்ய்ய்ய்ய்ய்..
முதல் நாள் அதுவுமே குடிகாரன் தொல்லை தாங்க முடியலையே என்னடா ரூட்டு இது என்று மனதிற்குள்ளேயே புலம்பிக்கொண்டான் முருகேசன். அடுத்த ஸ்டாப் வந்தது, கூட்டமாக நூற்றுக்கு மேலானவர்கள் பஸ்ஸில் ஏற காத்திருந்தனர்.
என்னா கூட்டமா ஊரே கிளம்பிட்டீங்க எங்க போறீங்க.
குடிக்காட்டுல ஒரு எலவு ,அதான் எல்லாரும் போறோம்.
யப்பா நாத்தம் தாங்கமுடியலேயே, ஏம்பா எழவு வீட்டுக்குமா குடிச்சிட்டு போவீங்க.
அட நீ வேற 90 வயசுல கெலவன் செத்துப்போனா துக்கப்படவா முடியும், ஒறமுறையான் வீடு போயிதான் ஆகனும், போனமா சீட்டு வெளாண்டமா , அங்க போய் மாமன்,மச்சாங்களோட சேந்து கெலவன எரிக்கிற வரைக்குற குடிச்சமான்னு இருக்கனும்.
ம்ம் நடத்துங்க நடத்துங்க.
கண்டக்டரு தம்பி , நாங்க எலவுல அலுவுறதே இந்த கம்னாட்டி பயலுவ குடிச்சிட்டு பண்ணுற அலும்ப பாத்துதான்.- ஒரு அரை கிழவி
டேய் கண்டக்டர் பயலே என்னடா, என் பொண்டாட்டிய இடிக்கிற. - ஒரு முழு குடிகாரன்.
'ஹலோ நான் எங்க' அப்படின்னு சொல்லி முடிக்குமுன் குடிகாரர்கள் தரும அடி கொடுத்து முடித்திருந்தார்கள் கண்டக்டர் முருகேசனுக்கு.
குடிக்காடு பஸ் ஸ்டாப் வந்தது எல்லாரும் இறங்கிக்கொண்டிருந்தனர். இழவு வீட்டில் மைக் செட்டில் கிழவிகள் ஒப்பாரி பாடிக்கொண்டிருந்தார்கள்
எப்படியம்மா ஒத்து ஒழக்கிறது
நம்ம நாட்டிலே எலந்த பட்டை சாராயம் காச்சுறது
எப்படியம்மா ஒத்து ஒழக்கிறது
நம்ம நாட்டிலே வேப்பம் பட்டை சாராயம் காச்சுறது
அடி வாங்கின வேதனையிலும் கண்டக்டர் முருகேசன் நினைத்துக்கொண்டான் குடிக்காடுன்னு ஊருக்கு காரணமாதான் பேரு வெச்சிருக்காங்க.
வேலை முடித்து வீட்டுக்கு வந்த முருகேசன் தன் அப்பாவிடம், நான் இனிமேல் இந்த வேலைக்கு போகல பெரிய ஈனப்பொழப்பா இருக்கு, குடிகாரப்பயகிட்டயெல்லாம் அடி வாங்க வேண்டியிருக்கு.
அப்பரம் வேற என்ன பண்ண போற
திருவள்ளுவர் பைனான்ஸ்ல 5000 ரூபாய் டெய்லி வட்டிக்கு வாங்கிட்டு வந்திருக்கேன், பாய் கடைல சாராய சக்கரை கடன் தரேன்னு சொல்லிருக்கான், நான் போய் சாமான் வாங்கிட்டு வரேன் நாளைக்கு நல்ல நாள்,நம்ம காட்டு கொல்லைல ஊறல் போடப்போறேன், நீ போயி விறவு வெட்டி காய வை அடுத்த வாரம் எரியல் இருக்கு.
சிதைவுகள்...: சிறுகதைப் போட்டிக்காக
பி:கு: எழுத்துப்பிழைகள் பேச்சுத்தமிழுக்காக சேர்க்கப்பட்டது.
உங்கள் பின்னூட்டம் படித்தேன். இங்கு ஒரு விஷயம் மிக தெளிவு படுத்த விரும்புகிறேன். உங்களை மன்னிப்பு கேக்க சொல்வது என் நோக்கமல்ல. நீங்கள் இங்குள்ள அனேக பதிவரை விட வயதில், அனுபவத்தில், பதவியில், படிப்பில் மூத்தவர். உங்களை குருவாக பின்பற்றும் பலர் இங்கு உள்ளார்கள். உங்கள் நகைச்சுவை உணர்வு, அறிவியல் அறிவு மிகவும் பாராட்டுதலுக்கு உரியது. எனினும் இத்தனை நல்ல விசயங்களை ஒரு சிறிய கவனக்குறைவு பாதிக்கிறது, எடுத்து சொல்லுவது உங்களை வாசிக்கும் எங்கள் கடமை. மேலும் நீங்கள் உங்கள் மகளை போன்ற ஒரு சமுக அக்கறை உடைய மருத்துவரை, ஒரு பெண்ணை அப்படி எழுதியது என்னை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியது, உங்களிடம் பின்னூட்டம் வாயிலாக கூறினேன், நீங்கள் மறுத்ததால் தான் பதிவிட நேர்ந்தது.
உங்கள் எண்ணங்களுக்கு எப்போதும் நாங்கள் மதிப்பளிப்போம். உங்கள் வேண்டுகோளுக்கு ஏற்ப அந்த பதிவை நான் நீக்குகிறேன்.
கவிதையில் யோகாசனம்
இந்திரனிடம் பெற்றது
இவர்களிடம் தோற்றது
நின்ற இடத்தில் நீதி
கிடைத்து ஒரு தேதி
மாறியது ஆட்சி
மறைந்தது தேர்ச்சி
என் மதியூக மந்திரி பட்டி
கிடக்கும் இடம் குப்பைத் தொட்டி
அழுதது எப்பொழுது
இங்கே இப்பொழுது
32 கேள்விகள்
32 கேலிகள்
ஏறிய படி அந்தரத்தில்
இறங்கிய படி தந்திரத்தில்
நாளொரு கவிதை
பொழுதொரு பொருள்
எதிரெதிர் நிலைக் கண்ணாடிகள்
புதிர் உதிரும் பிம்பங்கள்
வேதாள நட்பு
சிதையும் என் கற்பு
நாடு ஆறு மாதம் காடு ஆறு மாதம்
நீயூமராலஜியின் பயன் போதும் போதும்
சாப விமோசனம்
வேண்டும் சனம்
இரண்டாயிரம் வருடம்
எனக்கோரு கிரீடம்
பிடித்தது பேய்
வெடித்தது தலை
வாயைத் திறக்காதே
பேயைத் துரத்தாதே
சிவன் சொன்னது பார்வதியிடம்
இவன் சொன்னது சௌம்யாவிடம்
உஜ்ஜையினி மாகாளி
நான் முழுவதுமே காலி
(தொடரும்)
குறிப்பு:
இதை எழுதத் தூண்டிய விதூஷ் அவர்களுக்கு நன்றி
கார்த்தி ... மன்னுச்சுக்கோப்பா ...
கவிதையில் யோகாசனம்
இந்திரனிடம் பெற்றது
இவர்களிடம் தோற்றது
நின்ற இடத்தில் நீதி
கிடைத்து ஒரு தேதி
மாறியது ஆட்சி
மறைந்தது தேர்ச்சி
என் மதியூக மந்திரி பட்டி
கிடக்கும் இடம் குப்பைத் தொட்டி
அழுதது எப்பொழுது
இங்கே இப்பொழுது
32 கேள்விகள்
32 கேலிகள்
ஏறிய படி அந்தரத்தில்
இறங்கிய படி தந்திரத்தில்
நாளொரு கவிதை
பொழுதொரு பொருள்
எதிரெதிர் நிலைக் கண்ணாடிகள்
புதிர் உதிரும் பிம்பங்கள்
வேதாள நட்பு
சிதையும் என் கற்பு
நாடு ஆறு மாதம் காடு ஆறு மாதம்
நீயூமராலஜியின் பயன் போதும் போதும்
சாப விமோசனம்
வேண்டும் சனம்
இரண்டாயிரம் வருடம்
எனக்கோரு கிரீடம்
பிடித்தது பேய்
வெடித்தது தலை
வாயைத் திறக்காதே
பேயைத் துரத்தாதே
சிவன் சொன்னது பார்வதியிடம்
இவன் சொன்னது சௌம்யாவிடம்
உஜ்ஜையினி மாகாளி
நான் முழுவதுமே காலி
(தொடரும்)
குறிப்பு:
இதை எழுதத் தூண்டிய விதூஷ் அவர்களுக்கு நன்றி
கார்த்தி ... மன்னுச்சுக்கோப்பா ...
அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலில் விடுதலை புலிகள்
அமைப்புத் தொடர்ந்தும்
இடம்பெற்றுள்ளது.<http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=860&cntnt01returnid=52>
<http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=860&cntnt01returnid=52>
1997ஆம் ஆண்டு முதல் விடுதலை புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா தடை
செய்திருந்தது. இந்தத் தடையை மேலும் 5 வருடங்களுக்கு நீக்குவதில்லையென அமெரிக்க
ராஜாங்கத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி கிரேக் சுலிவான்,
தெரிவித்துள்ளார்.<http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=860&cntnt01returnid=52>
<http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=860&cntnt01returnid=52>
கடத்தல்கள், குண்டுத் தாக்குதல்கள், தற்கொலைத் தாக்குதல்கள் போன்ற அவர்களின்
பயங்கரவாத நடவடிக்கைகளைத் தாம் கண்டிப்பதாகவும், நாடு கடந்த அரசாங்கமொன்றை
ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் அவர் மேலும்
தெரிவித்தார்<http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=860&cntnt01returnid=52>
டூயட் என்ற பெயரில் படுக்கையறை மூவ்மெண்டைதான் அனேக படங்கள் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றன. அவற்றை மவுனமாக அனுமதித்துக் கொண்டிருக்கும் சென்சார் வைகை படத்தின் விஷயத்தில் மட்டும் கறாராக நடந்து கொணடிருக்கிறது.
எண்பதுகளில் மதுரை அருகே நடந்த காதல் கதையை பின்னணியாகக் கொண்டு தயாராகியிருக்கிறது வைகை. அந்த காதல் ஜோடியாக பாலா, விசாக நடித்துள்ளனர். விசேஷம் என்னவென்றால், அந்த நிஜ ஜோடி இன்னும் உயிருடன் இருக்கிறது. படத்தில் அவர்களையும் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் சுந்தர பாண்டியன்.
பிபிஜி என்டர்பிரைசஸ் சார்பில் பிபிஜி குமார், பிபிஜிடி சங்கர் வைகையை தயாரித்துள்ளனர். படத்தைப் பார்த்த சென்சார், படத்தில் வரும் வயாகரா என்ற வார்த்தையை ஆபாசம் என்று நீக்கியது. மேலும், சண்டாளன் என்ற வார்த்தை சாதியை குறிப்பதாகக் கூறி அதையும் படத்திலிருந்து நீக்கியது.
சென்சார் செயல்பாடுகளில் ஒரே ஆறுதல், இந்த எடிட்டிங்குக்குப் பிறகு ஏ சான்றிதழ் தராமல், அனைவரும் பார்க்கும் யு சான்றிதழ் வழங்கியுள்ளது. விரைவில் படம் திரைக்கு வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக