50 ஆவது Follower நையாண்டி நைனா . மிக்க நன்றி. இதற்கெல்லாமா பதிவு ? பதில் இருக்கிறது. எழுதத் துவங்குமுன் எண்ணவில்லை நம் எழுத்தையும் பின்பற்றுவார்கள் என்று! ஏதோ ஒன்று நமது வலைப்பூவைப் பின்பற்றக் காரணம். வடிவமோ, உள்ளடக்கமோ. 50 வசீகரமான, குறிப்பிடத்தக்க எண். கிரிக்கெட்டில் கூட 50 முதல் மைல்கல். இந்த 50 எனது பொறுப்பை அதிகமாக்குகிறது. இன்னும் தரமான பதிவுகளைத் தர முயற்சிக்கிறேன்.
முதல் இரண்டு பதிவுகளுக்குப் பிறகு பலரையும் வாசிக்கத் துவங்கினேன். கிடைத்த பதிவுகள் பிரமிக்க வைத்தன. காஃபி முதல் கவிதை வரை பல தலைப்புகளில் பதிவர்கள் சிறந்தார்கள். எழுதுவதில் எனக்கிருந்த தயக்கம் அதிகமானது. டிசம்பரில் பதிவர் சந்திப்பில் பங்கேற்றேன். (அதுவும் தயக்கத்துடனே!) மற்றவை சரித்திரம்.
சந்திப்பு முடிந்த கையோடு ஒரு அறிவிப்பு இனிமேல் தொடர்ந்து எழுதுவேன் என அறிவிக்கும்வரை தீர்மானிக்கவில்லை என்ன எழுதுவதென்று. நமது வலைப்பூவுக்கென சிறிய அடையாளமாவது வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தேன்.
ஊர்சுற்றும் பழக்கமும், கேமிராவும் இருந்தது. எனது வலைப்பூவில் தமிழ்நாடு மட்டுமல்லாது கர்நாடகா, ஆந்திரா, ஒரிஸ்ஸா மாநிலங்களைச் சார்ந்த பதிவுகள் இடம்பெற்றன. படங்களுடன் செய்திகள் தருவது வழக்கமானது. இன்று 150 பதிவுகளைக் கடந்து, 50ஆவது Follower! கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. 50 Follower களுக்கும் மனமார்ந்த நன்றிகள். பல்வேறு கட்டாயங்களுக்கிடையிலும் பதிவெழுத மறந்ததில்லை. பல நண்பர்கள் பதிவினால் கிடைத்தார்கள். பல இடங்களைப் பார்ப்பதற்கு அவ்வப்போது வாய்ப்புக்களை நண்பர்கள் வழங்கினார்கள். அவர்களுக்கு நன்றி
எதிர்காலத்தில் எல்லோரும் 15 நிமிடப் புகழ் பெறுவார்கள் என ஆண்டி வார்ஹோலின் வார்த்தையை அடிக்கடிக் கட்டுரைகளில் குறிப்பிடுவார் நமது சுஜாதா. ஒருவேளை வலைப்பூக்களைச் சொல்லியிருப்பாரோ என எண்ணவைக்கிறது இப்போது. இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது, Follower கள் வலைப்பூ வண்டியின் பெட்ரோல்கள். எனது வண்டி இவர்கள் இருக்கும்வரை ஓடும்; இவர்களுக்காக ஓடும்.

கன்னியாகுமரி கடற்கரையின் சமீபத்திய கட்டிடக் கலை நுணுக்கத்தோடு சிறப்பாகக் கட்டப்பட்டிருக்கும் காந்தி மண்டபம் காண வேண்டிய இடம். தேசத்தந்தை காந்தியின் அஸ்தி கடலில் கரைக்கப்படுவதற்குமுன் இங்கு வைக்கப்பட்டிருந்தது. அவரது இளமைக்காலம் முதல் பல அரிய புகைப்படங்கள் சுற்றுவட்டமாய் மாட்டப்பட்டிருப்பது சிறப்பு.
முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரிக்கு காந்தியின் அஸ்தி கொண்டுவரப்பட்டுக் கடலில் கரைக்கப்பட்டது. இந்த நினைவு மண்டபத்தில் உள்ள காந்தி அஸ்தி கட்டத்தின் மீது ஒவ்வொரு ஆண்டும் காந்தி ஜெயந்தி நாளான அக்டோபர் 2-ந் தேதி அபூர்வ சூரிய ஒளி விழுகிறது! 12 மணிக்கு விழும் ஒளி, 12:10 வரை நீடிக்கும். பிற நாட்களில் சூரிய ஒளி இவ்வாறு விழுவதில்லை. படங்களே போதுமான செய்திகளைச் சொல்வதால் இதற்குமேல் சொல்வதற்கு ஏதுமில்லை.

சிறந்த நிறுவனங்களைப் பற்றி ஒரு பார்வை. அவரவர் கணிப்பில் வேறுபடலாம். எனக்குத் தெரிந்ததைச் சொல்லியிருக்கிறேன். அந்தந்த நிறுவனங்களில் பணிபுரியும் நண்பர்களிடம் கேட்டு Update செய்து கொள்ளவும். விடுபட்ட நிறுவனங்களை நினைவுபடுத்தவும்.
அலுவலகத்தில் சோஃபாவில் படுத்துக் கொண்டு, பிட்ஸா சாப்பிட்டவாறே வேலை செய்வதை நினைத்துப் பார்க்க முடியுமா? இந்தக் கனவு மெய்ப்படுவது Google அலுவலகத்தில் மட்டும்தான். சுத்தமான சுதந்திரம் ஒவ்வொரு பணியாளருக்கும் உண்டு. ஊழியர்களும் சுதந்திரத்தைச் சரியாகப் பயன்படுத்தித் தானும் முன்னேறி, நிறுவனத்தையும் உயர்த்துகின்றனர். Appraisal சில சமயங்களில் மேலதிகாரி என்றில்லாமல் கடைநிலை ஊழியர்களாலும் தீர்மானிக்கப்படுவது மற்றொரு சிறப்பு.
மும்பையைச் சேர்ந்த இந்நிறுவனம், Recession உச்சத்தில் இருந்தாலும் யாரையும் வெளியேற்றவில்லை. மாறாகக் கூடுதலாய் முதலீடு செய்து பணியாளர்களைச் சேர்க்கத் தீர்மானித்துள்ளது. வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறையையும் கையாள்கிறது இந்நிறுவனம்.
இந்தியச் சந்தையில் இந்நிறுவனத்தின் பங்களிப்பு சற்று குறைவு. ஆனாலும் வேலைக்குச் சிறந்த கம்பெனிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. வாடிக்கையாளர் சேவையில் சிறந்து விளங்குகிறது. பணியாளர்களுக்கு மதிப்பளிக்கும் மற்றொரு நிறுவனம்.
Online Transaction என்றாலே இந்த நிறுவனம்தான் நினைவுக்கு வரும். பணியாளர் முன்னேற்றம், பணியிடத்தில் கேளிக்கை நிகழ்ச்சிகள் ஆகியவை இந்நிறுவனத்தின் சிறப்புகள். மற்றொரு சிறந்த நிறுவனம்.
நிறுவனத்தின் தொழில் நெறிமுறைகள் சிறந்ததாகக் கருதப்படுகிறது. பணியாளர் முன்னேற்றத்தில் அக்கறையுள்ள நிறுவனம். நிர்வாகத்திற்கும், பணியாளர்களுக்கும் இடையிலான ஒற்றுமை வியப்புக்குரியது.
உலகத்தரத்துடன் கூடிய வசதிகள், பணியாளர் நலன் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றில் தொழிலாளர்களுக்கு உதவும் நிறுவனம். சிறந்த இந்திய நிறுவனங்களில் ஒன்று.
பணியாளர் கல்வி, வளர்ச்சி, அவர்களின் சமூகப்பொறுப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றில் முழுக்கவனம் செலுத்தும் நிறுவனம். மதுரை போன்ற சிறுநகரங்களிலும் தயங்காமல் முதலீடு செய்து வெற்றி கண்டு வருகிறது.
எழுதிக்கொண்டிருக்கும்போதே எந்த மாற்றமும் நிகழலாம் என்ற வகையில் இன்றைய தகவல் தொழில்நுட்பத்துறை இருக்கிறது. எனவே, தகவல்களை உறுதிசெய்ய வேண்டியது நம் அனைவரின் கடமையாகிறது. நினைவாற்றலின் பிழையால் சில் நிறுவனங்களைப் பற்றிக் குறிப்பிடாமல் போயிருக்கலாம். நினைவூட்டுங்கள். குறிப்பிட்டுள்ளவை முன்னணி நிறுவனங்கள். இன்னும் நிறைய இருக்கின்றன. மற்றொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக