செவ்வாய், 2 ஜூன், 2009

2009-06-02

அது மலேசியாவின் ஒரு கரையோர நகரம் கடந்த ஜந்து நாட்களாக ஒரே அறையில் அடைபட்டுக்கிடக்கிறோம்.

ஏஜென்சி சொல்லியபடி வெளியே எங்கும் செல்லாமல் ...........

இலங்கையிலிருந்து வெளிநாடு செல்ல என்று கிளம்பி மூன்று வருடங்களாகி விட்டது. இந்தியா மலேசியா இந்தோனேசியா தாய்லாந்து என்று ஆசிய நாடுகளை வலம் வந்தாயிற்று.

இறுதியில் இந்தோனேசியாவிலிருந்து அவுஸ்ரேலியாவுக்கு செல்லவிருந்த கப்பலுக்கு போவதற்காக மலேசியாவின் ஜொகூர் பாருவில்....................

பயங்கர இருள்சூழ்ந்த கடலில் இருந்து மீண்டும் இந்தோவுக்கே திரும்பி வந்த கதை!

எங்கிருந்து ஆரம்பிக்கலாம் நீங்களே சொல்லுங்கள்!

தொடரும் புனிதயாத்திரை.............


பதிவின் நோக்கம் கருதி படத்தில் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் எழுதுகிறேன்.

---

புது முயற்சி என்று சொல்லி எந்த சோதனையும் செய்யவில்லை. யாரையும் சோதிக்கவும் இல்லை. அண்ணனை தேடி சென்னை வரும் தம்பி, அண்ணனை கூட்டி கொண்டு ஊர் திரும்பும் சாதா கதைதான். அதை எஸ்.பி.முத்துராமன் ஸ்டைல் மசாலா பாணியில் போதிய இடைவெளியில் பாடல், சண்டையுடன் சென்டிமெண்ட், காதல், காமெடி கலந்து சொல்லியிருக்கிறார்கள். இயக்குனர் சபா ஐயப்பன், பூபதிபாண்டியன் கேங் என்பதால் நகைச்சுவையே பிரதானம்.

படம் முழுவதும் எதுகை மோனையுடன் வசனங்கள். முன்பாதியில் காமெடிக்காகவும், பின்பாதியில் சவாலுக்காகவும், வசனகர்த்தா ஜாலியான கலகலப்பான வசனத்தில் கலக்கியிருக்கிறார். ஆங்காங்கே தங்களை பற்றியே சுய எள்ளலும் செய்து கொள்கிறார்கள். பாடல் காட்சிகளிலும், சண்டைக்காட்சிகளிலும் ப்ரியன் வைக்கும் ஆங்கிள்கள் அபாரம். அவருடைய ஒளிப்பதிவின் மேல் ப்ரியம் கொள்ளவைக்கிறார்.



படம் வெளியான போன வாரத்துடன் அக்னி நட்சத்திரம் முடிந்தது. படத்தில் அந்த அளவுக்கு ஸ்ரேயா ஜிலுஜிலுவெனயிருக்கிறார். படம் கொஞ்சம் முன்னமே வந்திருக்கலாம். கண்டிப்பாக குறிப்பிடவேண்டியது ஸ்ரேயாவின் வயிறு. யப்பா. (கவனிக்கவும், இடுப்பை அல்ல). இதுபோல் பெண்கள் அவரவர் வயிறை பேணி காத்து வந்தால், வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது.

விஷால் - சந்தானம் காம்பினேஷன் நன்றாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது. தொலைக்காட்சி நடன நிகழ்ச்சி நடுவர் பாணியில் சொல்ல வேண்டுமென்றால், நல்ல கெமிஸ்ட்ரி. கோவிலில் உருண்டு புரண்டு ஓடும் காட்சியிலும், பாட்டிக்கு லிப் கிஸ் கொடுத்து பஞ்சாயத்தில் மாட்டும் காட்சியிலும் தியேட்டர் குலுங்குகிறது. ஏற்கனவே சொன்னது போல், சந்தானம் தான் தற்போதைய கவுண்டமணி. மனிதர் ஏதாவது சொல்லிக்கொண்டே இருக்கிறார். விஷால் வைரமுத்து மாதிரி உடையணிய, அவரையும் வாரி இருக்கிறார்கள்.



படம் முழுவதும் ஏகப்பட்ட நட்சத்திரங்கள். சின்ன சின்ன வேடத்திலும் பிரபல நட்சத்திரங்கள். பிரகாஷ்ராஜ், கிஷோர், கீதா, ஷாயாஜி ஷிண்டே, லால், பாஸ்கர், ஸ்ரீமன், லிவிங்ஸ்டன், பாண்டியராஜன், ஆர்த்தி, மயில்சாமி, பரவை முனியம்மா, டி.பி.கஜேந்திரன், என்னைத்த கன்னையா என்று லிஸ்ட் நீளம். எம்மாடி! எவ்ளோ பேர்?

பாதிக்கு மேல் படத்தில் சில குறைகள் இருந்தாலும் வழக்கமான கமர்ஷியல் படம் என்னும் விதத்தில் எண்டர்டெயின்மெண்டிற்கு செல்லலாம். ஒ.கே. தான்.

பி.கு. - இப்படத்தை செகண்ட் கிளாஸில் பார்த்தேன்.

---

தோரணை என்ற பெயரே படம் மசாலா டைப் என்று சொல்லிவிடுகிறது. அங்கு சென்று உலக சினிமாவை தேட கூடாது.

பாலா, அமீர், பாலாஜி சக்திவேல், வசந்தபாலன், சசிக்குமார் போன்ற இயக்குனர்கள்தான் தமிழ் சினிமாவை கை கொடுத்து தூக்கிவிட போகிறவர்கள் என்றால், ஷங்கர், கே.எஸ்.ரவிக்குமார், ஹரி, பூபதி பாண்டியன் போன்ற கமர்ஷியல் இயக்குனர்கள் தான் அதற்கு தேவையான ஆக்ஸிஜனை கொடுத்து கொண்டிருப்பவர்கள். தூக்குவது பிணமாக இருக்க கூடாதே?

இம்மாதிரி மசாலா படங்களில் நடித்தால்தான், பிரகாஷ்ராஜ் போன்ற கலைஞர்களால் நல்ல படங்கள் என்று பாராட்டப்படும் யதார்த்த சினிமாவை, கிளாஸ் சினிமாவை கொடுக்க முடியும். அதற்காவது மசாலா படங்களையும் காண வேண்டும். பாராட்ட வேண்டும். ஆதரிக்க வேண்டும்.

சினிமா உருக வைக்கட்டும், உணர்வுவயப்பட வைக்கட்டும், நெகிழ வைக்கட்டும், அழ வைக்கட்டும். வரவேற்போம். அத்துடன் துள்ளி குதித்து, ஆட வைத்து, சந்தோஷத்தில் குலுங்க செய்யும் படங்களையும் வரவேற்போமே?
பதிவுகளை தொடர்ந்து ரீடரில் படிப்பதற்கு நன்றி - சரவணகுமரன்
இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் சுமார் இருபதாயிரம் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்கான சூத்திரதாரிகளின் பட்டியலில் முதலிடம் இந்தியாவுக்கும் வழங்கப்பட்டிருக்கின்றது. இப்போது இந்த விடயத்தில் புதுடில்லிக்கும், காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசுக் கும் எதிரான குற்றச்சாட்டு விரல் உள்நாட்டில் இருந்தே நீண்டி ருக்கின்றது. "இந்த விவகாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு மிகவும் அதிருப்தி

இன்று(ஜூன் 2) ஐ.நாவின் சிறுவர் நலன்பேண் அமைப்பான யுனிசெஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில் உலகளாவிய பொருளாதாரச் சரிவு காரணமாக தெற்காசியப் பிராந்தியத்தில் உணவு மற்றும் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால் 100 மில்லியன் பொதுமக்கள் மேலும் பட்டினியால் வாடுவதாகவும் 40 வருடங்களில் அதியுயர்ந்த வறிய மக்களின் தொகையான 400 மில்லியனை இது அண்மித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...

அஸ்ஸ‌லாமு அலைக்கும் ( வ‌ர‌ஹ் )

துபாயில் அமீர‌க‌ காயிதெமில்ல‌த் பேர‌வையின் சார்பில் க‌ண்ணிய‌த்திற்குரிய‌ காயிதெமில்ல‌த் அவ‌ர்க‌ளின் 114 வ‌து பிற‌ந்த நாள் நினைவாக‌ க‌ல்விக் க‌ருத்த‌ர‌ங்க‌ம்.


இன்ஷா அல்லாஹ் ஜுன் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழ‌மை மாலை 7.15 ம‌ணி முத‌ல் அஸ்கான் டி பிளாக்கில் ந‌டைபெற‌ இருக்கிற‌து என‌ பொதுச்செய‌லாள‌ர் ஏ. லியாக்க‌த் அலி தெரிவித்தார்.


இந்நிக‌ழ்வில் இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் ம‌துரை மாவ‌ட்ட‌ த‌லைவ‌ர் ம‌வ்லானா பி.கே.என். அப்துல் காதிர் ஆலிம், 'இசைய‌ருவி' கும‌ரி அபுப‌க்க‌ர், இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் த‌மிழ் மாநில‌ப் பேச்சாள‌ர் ம‌வ்ல‌வி ஜ‌ஹாங்கீர் அரூஸி ம‌ற்றும் க‌ல்வியாள‌ர்க‌ள் உரை நிக‌ழ்த்த‌ உள்ள‌ன‌ர்.


இந்நிகழ்வில் ச‌முதாய‌ப் பெருமக்க‌ள் அனைவ‌ரும் திர‌ளாக‌ க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பிக்க‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.


தொட‌ர்புக்கு

கீழ‌க்க‌ரை ஹ‌மீது யாசின் 050 2533712 /

முதுவை ஹிதாய‌த் 050 5196 433
இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்பினருக்கும், இலங்கை படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் ஏற்க முடியாத அளவுக்கு மிகவும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கீ மூன் அவர்கள் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான தனது விஜயம் குறித்து ஐக்கியநாடுகள் மன்றத்தின் பொதுச்சபைக்கு விளக்கிப் பேசிய அவர், இறந்தவர்களில் தொகையாக ஐ. நாவினால் எந்தவொரு எண்ணிக்கையும் வெளியிடப்படவில்லை என்றும், அப்படியாக ஐ.நாவினால் இறந்தவர்களின் எண்ணிக்கை வெளியிடப்பட்டதாகக் கூறப்படுவது தவறு என்றும் கூறினார். அதேவேளை, இலங்கையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை ஐக்கிய [...]

கருத்துகள் இல்லை: