தமிழீழக் கனவோடு வாழ்ந்த பல்லாயிரக் கணக்கான மக்கள் பலி கொள்ளப்பட்டுவிட்டார்கள். அந்த இலட்சியத் திற்காகப் போராடிய போராளிகளும், தளபதிகளும் சுட் டெரிக்கப்பட்டு விட்டார்கள்.
உயிருக்குப் போராடிய காயமடைந்த மக்களையும் போராளிகளையும் காப்பாற்றவென்ற வேட்கையுடன் மானத்தோடு மாவீரராகும் தத்துவத்தையும் கைவிட்டு, சரணடைய முற்பட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசனும், சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவனும் கூட வெள்ளைக் கொடியுடன் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்கள். எல்லாமே சுடுகாடாக்கப்பட்டு சாம்பல் மேடாகக் காட்சி தருவதை ஐ.நா.வின் பொதுச் செயலர் பான் கி மூனும் வானிலிருந்து பார்வையிட்டுச் சென்றுவிட்டார்.
வன்னியில் தப்பிப் பிழைத்தவர்கள் முட்கம்பி வேலிச் சிறைக்குள் அடிமைச் சின்னமாக, அடுத்த வேளை உண வுக்கு எதிரியின் கையைப் பார்க்கும் இழி நிலைக்கு உட் படுத்தப்பட்டு உள்ளார்கள். அங்கும் இளம் வயதினர் வடி கட்டப்பட்டு, வதை முகாம்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். சரணடைந்த போராளிகளின் நாட்கள் எண்ணப்படுகின்றன. ஆனாலும், சர்வதேசங்கள் இன்றுவரை ஆக்கபூர்வமாக எதையும் செய்யவில்லை. தமிழீழ விடுதலைப் போராட் டத்தை பயங்கரவாதமாகச் சித்தரித்து சிங்கள சிறிலங்கா நடாத்திய பரப்புரைகளை ஏற்று, விடுதலைப் புலிகளைத் தமது நாடுகளில் தடை செய்ததன் மூலம் இந்த இனப் படுகொலையில் பங்கு வகித்த உலக நாடுகள் தமிழினத்தின் அத்தனை அழிவு களுக்குப் பின்னரும் தமிழர்களுக்கான நீதியை வழங்க முன்வரவில்லை.
வீதியிலிறங்கிப் போராடுகின்றோம்... உண்ணாவிரதங்கள் இருக்கின்றோம்... கண்ணீர் விட்டுக் கதறுகின்றோம்... 'எஞ்சியுள்ள எமது மக்களையாவது சிங்கள இனவாத அரசின் இன அழிப்பிலிருந்து காப்பாற்றுங்கள்...' என்று. உவ்வொரு மணித் துளிகளாக... நாட்களாக... வாரங்க ளாக... காலம் கடந்து செல்கின்றதே தவிர வேறேதும் நடப்பதாகத் தெரியவில்லை. 'தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள்' என்று சிங்களம் மீண்டும் ஒரு கொண்டாட்டத்திற்கு நாள் குறித்துள்ளது. பாதுகாப்பை இழந்த தமிழர்கள் மீது சிங்களனின் காறித் துப்பல்கள்... குனிந்த தலையுடன் அதைத் துடைத்துவிட்டு நகரத்தான் அவர்களால் முடிகின்றது. தமிழ்ப் பெண்கள் நடு ரோட்டில் பாலியல் துன்புறுத்தல்களுக்குள்ளாகிறார்கள்... ஆனாலும் விதியை எண்ணி அழுது கொண்டே வீட்டிற்குச் சென்று தலை முழுக மட்டும்தான் அவர்களால் முடிகின்றது.இப்போது டக்ளஸ் தேவானந்தா, கருணா, ஆனந்த சங்கரிகள் முகங்கள் மட்டும் பயம் நீங்கிப் பிரகாசிக்கின்றன. பாவம், தமிழர்கள் தங்கள் பலத்தை இழந்து கூனிக் குறுகி முடங்கிக் கிடக்கிறார்கள். அவர்களைக் காப்பாற்ற யாருமே கிடையாது. ஆனால், சிங்கள தேசத்தின் விருப்பங்களை ஏற்று 'பாலூற்றிக் கடமை செய்ய' புலம் பெயர் தேசங்களிலும் சிலர் ஆலாய்ப் பறக்கின்றனர்.
விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக நொருக்கப்பட்டிருக்கலாம்... போராளிகள் பலர் அந்த நெருப்பு வேள்விக்குப் பலியாகிப் போயிருக்கலாம்... தளபதிகள் நயவஞ்சகமாகக் கொல்லப்பட்டிருக்கலாம்... ஆனாலும் நாங்கள் நம்ப மாட்டோம் 'எங்கள் சூரிய தேவனை இந்தச் சிறு பொறிகள் சுட்டெரித் திருக்கும் என்று...'எம்முள் நிறைந்து... எப்போதும் உடன் இருந்து... எம்மை வழிநடத்தும் எம் தலைவன் மரணம் என்ற எல்லைக்கு அப்பாற்பட்டவன். 'மனிதன்தான் மரணம் அடைவான். மாவீரனுக்கு ஏதடா மரணம்?' என்ற இயக்குனர் சீமானின் வார்த்தைகள் எம் நெஞ்சத்தை மீண்டும் உறுதி கொள்ள வைக்கிறது. சத்திரியன் சாவதில்லை. அவன் சரித்திரம் ஆகின்றான். 'நாம் வீழமாட்டோம்! நாம் வீழமாட்டோம்!!' என்ற நம்பிக்கைத் துடிப்பு மட்டுமே தமிழர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றது. கரிகாலன் மீண்டும் வருவான்... என்ற நம்பிக்கை மட்டுமே அவர்களை மீண்டும் நிமிர வைக்கின்றது. அது அவர்களின் ஆத்மார்த்த உணர்வு. அந்த நம்பிக்கை அவர்கள் சாவு வரை நீடிக்கும். அதைக் கலைக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. 'கதிரைக் கனவுகளால் எங்களைச் சாகடிக்காதீர்கள்'
நன்றி :ஈழநாடு - பாரிஸ்
தமிழக்கதிர்

இன்று இன்பர்மேஷன் டெக்னாலஜி என்று சொல்லப்படக்கூடிய ஐ.டி துறைக்கு நிகராக வருமானத்தை அளிக்கக் கூடிய துறையாக மீடியா துறை இருந்து வருகிறது. ஆனால் இன்றைய அமெரிக்கா பொருளாதார வீழ்ச்சிக்கு பின்னர் உலகளவிலும் ஐ.டி துறை பின்ன டைவு அடைந்திருப்பதையும், பிரபல மான ஐ.டி நிறுவனங்களே தங்களின் ஊழியர்களை அன்றாடம் வெளியே அனுப்பி வருகிறது. ஆனால் அதற்கு பகரமாக ஊடகத்துறையின் வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றது.
இந்த ஊடகத்துறையின் தொடர்பாக முதலில் என்னென்ன கல்விகள் தமிழகத்தில் இருந்து வருகின்றது என்று பார்க்கலாம்.
விஷுவல் கம்யூனிகேசன், ஜெர்னலிசம், எலக்ட்ரானிக்ஸ் மீடியா, மாஸ் மீடியா அண்ட் கம்யூனிகேசன்ஸ் ஆகிய படிப்புகளை தமிழ கத்தில் பல்வேறு பல் கலைக் கழகங்கள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் பயிற்று விக்கப்பட்டு வருகின்றன.
விஷுவல் கம்யூனி கேஷன்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மீடியா ஆகிய இரண்டு படிப்பு களும் பி.எஸ்.சி., மற்றும் எம்.எஸ்.சி படிப்புகளாக வழங்கப்பட்டு வருகின்றன. பி.எஸ்.சி படிப்பதற்கு பிளஸ் டூவில் எந்த குருப் படித்தவர்களும் இதில் சேரலாம். அது போலவே இளநிலை பட்டம் முடித்தவர்கள் யார் வேண்டுமானாலும் எம்.எஸ்.சி விஸ்காம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மீடியாவைப் படிக்கலாம்.
இந்த விஸ்காம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மீடியா படிப்புகளில் இணை யதள வடிவமைப்பு, தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு, மல்டி மீடியா, அனிமினேஷன் ஆகியவை பாடத்திட்டங் களாகும். இதனை படித்து முடித்து விட்டால் தொலைக்காட்சிகள், வானொலிகள், விளம்பர தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமில்லாமல் பல்வேறு அனைத்து ஊடகங்களிலும் நுழைவதற்கு இந்த படிப்புகள் ஒரு விசிடிங் கார்டு போன்று ஆகும். இதனைப் படித்து விட்டு வேலையில் சேர்பவர் களுக்கு ஆரம்ப நிலை சம்பளமே குறைந்தது ரூ.10,000க்கு மேல் கிடைக் கும். மேலும் வளைகுடா நாடுகளில் இந்த படிப்பு களுக்கு மவுசு அதிகமாக உள்ளது. ஊதியமும் மாதத்திற்கு லகரங்களில் கிடைக்கும்.
ஜெர்னலிசம் மற்றும் மாஸ் கம்யூனிகேஷன் படிப்புகளைப் பொறுத்த மட்டிலும் பத்திரிக்கை துறையில் நுழைய விரும்புபவர்கள் இதனை தேர்ந் தெடுக்கலாம். ஆரம்ப நிலை ஊதியமாக குறைந்தது ரூ.7,000 கிடைக்கும். இதுவே ஆங்கில ஊடகங்களாயின் ஆரம்ப நிலை ஊதியமே ரூ. 20,000க்கு குறையாது.மேற்கண்ட ஊடகப் படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்க விரும்புபவர்கள் ஏதேனும் ஒருதுறையை முன்னரே தேர்ந்தெடுத்து அதில் சிறப்பு பயிற்சி பெறுவதே நன்று. படிக்கும் போதே பகுதி நேரம் வேலையை தேர்ந்தெடுக்கும் வசதியும் இந்தப் படிப்புகளில் உண்டு.
இந்த படிப்பினை வழங்கும் கல்வி நிறுவனங்கள்..
1) புதுக்கல்லூரி, சென்னை
2) லயோலோ கல்லூரி, சென்னை
3) சதக் கல்லூரி, சென்னை
4) அண்ணா பல்கலைக் கழகம்
5) சென்னை பல்கலைக் கழகம்
6) காமராஜர் பல்கலைக் கழகம்
7) ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஜெர்னலிசம், சென்னை
இலங்கையில் போர் முடிவடைந்ததைத் தொடர்ந்து அகதிகள் என்ற போர்வையில் 300 மேற்பட்ட புலிகள் தமிழகத்திற்குள் ஊடுருவியிருக்கிறார்கள் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பின் கீழ் மட்ட போராளிகளே இப்படி ஊடுருவியிருக்கலாம் எனவும் இலங்கை அகதிகள் முகாமில் சந்தேகப் படும்படியான நபர்கள் தனி சிறப்பு முகாம்களுக்கு அனுப்ப படுவதாகவும்,
படிக்காதவன் கிளைமாக்ஸ் பகுதியில் சிவாஜி ரஜினியைப் பார்த்து ஒரு டயலாக் சொல்வார்.
அண்ணன் நீதிபதி, ஒரு தம்பி குற்றவாளி, ஒரு தம்பி சாட்சி
என்று சொல்லி கண்ணீர் விடுவார்.
அதே மாதிரி காட்சி குற்றவாளி தம்பிக்கு பதிலாக தங்கச்சி. அது என்ன படம்
அந்த காட்சிக்கு முன் சூழ்நிலையை உணர்ந்த உடனே (குற்றவாளிக் கூண்டில் நிற்பது தம்பிதான் என்ற உண்மையும் சாட்சியாய் நிற்பது மற்றொரு உடன்பிறப்புதான் என்ற உண்மையும்) அண்ணன் நீதிபதி மயக்கம் அடைந்து விடுவிறார்.
அந்தப் படத்திலும் அப்படித்தான் ஆனால் முப்பது வருஷத்துக்கு முன் வந்தது.
சாட்சியாய் நிற்கும் தம்பிக்கு குற்றவாளி அண்ணன் தான் ஆதரவாய் இருப்பார்.
அதிலும் அப்படித்தான். குற்றவாளி தங்கச்சிக்கு கிறுக்கு அண்ணந்தான் துணையாக இருப்பார்.
ஆரம்ப கட்டத்திலேயே பெரிய அண்ணனை தம்பிகள் பிரிந்து விடுகிறார்கள். இதில் பெரிய அண்ணனை தங்கை பார்த்ததே கிடையாது. அடுத்த அண்ணனும் நடுவில் பிரிந்து விடுகிறார்.
படிக்காதவன் படத்திலும் அப்படித்தான். கடைசித்தம்பிக்கு பெரிய அண்ணனை அடையாளம் தெரியாது. ஆனால் நடுத்தம்பிக்கு மூத்தவரை நன்றாக அடையாளம் தெரியாது.
கடைசியில் யாரும் குற்றவாளி இல்லை என்று விடுதலை ஆகி குடும்பம் மொத்தமும் சேர சுபம்.
ஒன்று படிக்காதவன் என்றால் மற்றது பராசக்தி. உண்மை. சிவாஜி கணேசன் அவர்களின் அறிமுகப் படத்தில் வந்த பல முக்கிய காட்சிகளை மையப் படுத்தியே படிக்காதவன் படமும் வெளி வந்துள்ளது.
ஐயா! ஜாலி கலைஞருக்கே இந்த ரகசியம் தெரியுமான்னு தெரியல.., ஆனா நாம கண்டுபிடித்துவிட்டோம்
.........................................................................................................................................
திருடா திருடி மற்றும் அன்பே வா படங்களை ஏற்கனவே முதல் பாகத்தில் பார்த்திருந்தாலும் சற்று விரிவாகப் பார்ப்போம்.
அன்பே வா.
ஒரு நேர்மையான தொழிலழிபருக்கும் ஒரு கல்லூரி மாணவிக்கும் இடையே ஏற்படும் காதல்கதை.
திருடா திருடியில் வீட்டுக்கு அடங்க்காத பையனுக்கும் எடுத்தெரிந்து பேசும் பெண்ணுக்கும் இடைப்பட்ட காதல் கதை.
இரண்டு படங்களிலும் ஒருவரை ஒருவர் காலை வாரிக் கொண்டே இருப்பார்கள். உள்ளுக்குள் காதல் வைத்திருந்தாலும் வெளிப்படுத்தினால் எங்கே காமெடி கீமெடி பண்ணிவிடிவார்களோ என்றே நினைத்து கொண்டிருப்பார்கள்.
கிளை மாக்ஸில்கூட இந்த நிலைதான் நீடிக்கிறது. திருடா திருடியில் வீட்டு ஓனர் பொண்ணு வருவது போல் இதில் பழைய நண்பர் அசோகன் வருகிறார். இவர்கள் உள்ளே நுழைவதுகூட இரண்டு படங்களிலும் ஒரு சிறிய இடைவெளியை ஜோடிகளுக்கு நடுவே ஏற்படுத்துகிறது. பின்னர் இவர்களே படம் முடிவதற்கும் ஒரு ஏற்பாடு செய்கிறார்கள்.
கிளைமாக்ஸில் கூட சரோஜாதேவியை எம்ஜியார், துரத்திக் கொண்டே ஓட வில்லன் கூட்டம் வழிமறித்து சண்டை
இதிலும் திருடியை தனுஷ் பின் தொடர ஒரே சண்டை கம் ஜாலி.
பிடிந்திருந்தாலும் பிடிக்காவிட்டாலும் தமிழ்மண மேல்நோக்கிய கட்டை விரலிலும் தமிழீஷ் வோட்டிலும் க்ளிக் செய்து விடுங்கள் .
===========================================================
தமிழ் மணத்தில் சூடான இடுகைகளை எடுத்துவிட்டதாலும் இது மக்களை சென்றடைய வேண்டிய கட்டாயம் ஒன்று இருப்பதாலும் தொடர்ச்சியான பின்னூட்டங்களும் தொடர்ச்சியான ஓட்டுக்களும் இந்த இடுகைக்குத் தேவைப் படுகின்றன.
ஒரு கவிதை........
ஒரு தத்துவம்...........
ஒரு ஜோக்கு....
ஒரு சிந்தனை
எப்பிடியிருக்கு...........
ஒரு தத்துவம்...........
ஒரு ஜோக்கு....
ஒரு சிந்தனை
எப்பிடியிருக்கு...........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக