வியாழன், 4 ஜூன், 2009

2009-06-04

மிக முக்கியமான ஒரு செய்தியாக இன்று  பேசப்படுகிறது.

இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக ஒரு பெண், மக்களவையின் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அவர் ஒரு தலித் என்பது இந்த நிகழ்வை மேலும் சந்தோஷத்துடன் உற்று நோக்க வைத்திருக்கிறது. ஆரவாரத்துடன் கொண்டாடப்பட வேண்டிய தருணம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ஆனால் கண்முன்னே நாம் பார்க்கும் யதார்த்தங்கள் கசப்பானவை. அவை உண்மையானவை.

சபாநாயகர் பெயருக்கு மாண்புமிகு மீராகுமார் அவர்கள் ஏகமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒத்த கருத்தோடு, மக்களவையின் இந்த நடவடிக்கையில் சேர்ந்து நின்றிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும், இதேபோல் ஒன்றுபட்டு நின்று பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீட்டை மக்களவையில் ஏகமனதாக நிறைவேற்ற முன் வருவார்களா? இல்லையென்பதுதான் கடந்தகாலத்தின் வருத்தமான வரலாறு. அணுசக்தி உடன்பாட்டிற்காக, அத்தனை சித்துவேலைகளும் செய்து, மக்களவையில் பெரும்பான்மை திரட்டிய காங்கிரஸ், மகளிர் சக்திக்காக திறந்த மனதுடன் என்ன காரியம் ஆற்றியிருக்கிறது? அந்தத் தீர்மானம் கொண்டு வரும் நேரத்தில் மட்டும், கட்சிகள் ஆளுக்கொரு திசையில் நவக்கிரகங்களாய் திரும்பிய வண்ணம் காட்சியளிக்கின்றன.

பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சாயத்துக்களில் நின்று வெற்றி பெறும் மகளிரின் நிலைமை எப்படி இருக்கிறது என்பது இன்னொரு வருத்தமான சங்கதி. பஞ்சாயத்துத் தலைவர் என்று போர்டுகளில் அவரது பெயர் இருக்கும். ஆவணங்களில் அவரது கையெழுத்து இருக்கும். ஆனால் அவர் வழக்கம்போல் அடுப்பங்கரையிலேயே இருப்பார். அவரது கணவர்தான் எல்லாம். சகலத்துக்கும் அவரே ஆஜர். பஞ்சாயத்துத் தலைவர் நாற்காலியில் முதல் நாள் உட்கார்ந்துவிட்டு, பிறகு நிரந்தரமாக தன் கணவருக்கு வழிவிட்டுச் செல்கிற அவலம்தான் பெண்களுக்கு இருக்கிறது. தலிதகள் நிலைமை இதைவிட மோசம். சொல்லவே முடியாது.

இப்படியாக, இந்த தேசத்தில்- இந்திய ஜனநாயகத்தில்- ஒரு பெண் ஜனாதிபதியாக வரமுடிவதும், சபாநாயகராக வர முடிவதும் சாத்தியம். ஆனால் அதிகாரம் பற்றி மட்டும் பேச முடியாது. ஜனநாயகம் என்னும் மூகமுடியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அவ்வப்போது நடக்கும் சில ஏற்பாடுகளாகவே இந்நிகழ்வுகள் அமைகின்றன. இந்த லட்சணத்தில் 'மிஸ்டர் சபாநாயகர்' என்றும் 'மேடம் சபாநாயகர்' என்ற விவாதங்களையே இங்கு பெரிதாக ஊதிக்கொண்டு இருப்பார்கள்.

நாம் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியிருக்கிறது. அந்த தூரத்தைச் சொல்லும் மைல்கற்கள் இந்தப் பதவிகள் கிடையாது. அவை நம் கண்முன்னே தினமும் காட்சியளித்துக்கொண்டு இருக்கின்றன. அவற்றைக் காணாமல் கூட்டம் கூட்டமாய் கடந்து போய்க் கொண்டு இருக்கிறோம். காட்சிப்பிழை.

*


ஹா‌ரிபாட்டர் சீ‌ரிஸின் ஆறாம் பாகம் விரைவில் வெளியாகவுள்ளது. வார்னர் பிரதர்ஸின் டாலர் சுரங்கத்தில் ஹா‌ரிபாட்டரும் ஒன்று.

உலக அளவில் அதிக வசூலை ஈட்டிய படங்களின் பட்டியலில் ஹா‌ரிபாட்டர் சீ‌ரிசுக்கு முக்கியமான இடம் உண்டு. இதுவரை வெளியான அனைத்து பாகங்களுமே வசூல் சாதனை பு‌ரிந்தவைதான். என்றாலும் விரைவில் வெளிவரயிருக்கும் ஆறாம் பாகம் முந்தைய படங்களின் வசூலை முறியடிக்க வேண்டும் என நினைக்கிறது படத்தை தயா‌ரித்திருக்கும் வார்னர் பிரதர்ஸ்.

படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிக‌ரிக்கும் விதமாக படத்தின் ஸ்டில்கள் மற்றும் கிளிப்பிங்ஸ்களை தவணை முறையில் வெளியிட்டு வருகிறது வார்னர் பிரதர்ஸ். சென்ற வாரம் படத்தின் சில புகைப்படங்களையும், இரு கிளிப்பிங்ஸ்களையும் வார்னர் பிரதர்ஸ் வெளியிட்டது. இதில் ஒன்று படத்தின் மேக்கிங் பற்றியது.

அவர்கள் எதிர்பார்த்ததைப் போலவே இந்த கிளிப்பிங்ஸ்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. ஆறாம் பாகமான ஹா‌ரிபாட்டர் அண்டு தி ஹாஃப் பிளட் பி‌ரின்ஸ் வசூலில் முந்தைய ஐந்து பாகங்களையும் முந்தும் என அடித்து‌க் கூறுகிறார்கள் ஹாலிவுட் விமர்சகர்கள். தயா‌ரிப்பாளர்களுக்கு அதுதானே வேண்டும்.

வில்லன்களுக்கு தமிழ் சினிமாவில் தட்டுப்பாடு. ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தவர்களை எல்லாம் வில்லனாக்குகிறார்கள் இயக்குனர்கள். சுமன், சிபி என்றும் நீளும் இந்தப் பட்டியலின் புதுவரவு, ராஜீவ் கிருஷ்ணா.

ஆஹா படத்தில் ஹீரோவாக நடித்த ராஜீவ் கிருஷ்ணாவுக்கு பிறகு நல்ல வாய்ப்புகள் அமையவில்லை. ஒன்றிரண்டு படங்களில் சின்ன வேடங்களில் நடித்தார்.

இந்நிலையில், நியூட்டனின் 3ஆம் விதி திருப்புமுனையாக அமைந்திருக்கிறது. ஆஹாவில் வெள்ளந்தி ஹீரோவாக நடித்தவர் நியூட்டனின் 3ஆம் விதியில் வில்லனாக வெளுத்து வாங்கினார். விளைவு...? வில்லன் வாய்ப்புகள் துரத்துகிறது ராஜீவ் கிருஷ்ணாவை!

அஜித்தின் அசல் படத்தில் வில்லனாக நடிக்க ராஜீவ் கிருஷ்ணாவை தேர்ந்தெடுத்திருக்கிறார் சரண். அசல் பழிவாங்கும் கதை. பல்வேறு வெளிநாடுகளில் கதை நடக்கிறது. கதையின் சர்வதேச 'டச்'சுக்கு ஏற்ற வில்லன் தேவை.

ராஜீவ் கிருஷ்ணாவின் தோற்றமும், நடிப்பும் அதற்கு நூறு சதம் பொருந்தும் என்பதால் அவரை தேர்வு செய்திருக்கிறார் சரண். பரத்வாஜ் இசையமைக்கும் இந்தப் படத்தை சிவாஜி பிலிம்ஸ் தயாரிக்கிறது.

நடிப்பு, காமெடி,கருத்துன்னு அவர்'பாட்டு'க்கு இருந்த விவேக்கை இப்ப பாடவும் வச்சுட்டாங்க.

ஐஸ் ஹவுஸ் தியாகு தயாரிக்கும் படம் 'இத்தனை நாளாய் எங்கிருந்தாய்'. சன் டி.வி புகழ் ஆனந்த கண்ணன்தான் படத்தின் நாயகன். புதுமுகம் மனோசித்ரா நாயகி. இன்னொரு நாயகி சுஜிபாலா. மாஜி நடிகை பபிதா பவுர்ணமி திரைக்கதை, வசனம் எழுதிய இப்படத்தின் கதை எழுதி இயக்குகிறார் ஆர்.பாலு.

Viduppu.comபடத்துல விவேக் பாட்டுபாடி நடனமாடுவது போன்ற காட்சி இடம்பெருகிறதாம். விவேக்குக்கு எஸ்.பி.பி,ஜேசுதாஸா பாட முடியும். இளம் பாடகர்களில் ஒருவரை பாடவைக்கும் முயற்சியில் இறங்கிய இசையமைப்பாளர் தினாவுக்கு எதுவுமே திருப்திப்படல.

புதுப்பாடகர் ஒருவரை பாடவச்சிரலாமேன்னு இயக்குனர் சொன்ன ஐடியாவும் சரிபட்டு வரலையாம். என்ன செய்யலாம்னு யோசிச்சப்பதான், "ஏன் நான் பாடினா தமிழ்நாட்டு ஜனங்க காதுல பஞ்சா அடைச்சுக்குவாங்க?" என்று காமெடி செய்தாராம் விவேக்.

விவேக்கின் காமெடியை சிரியஸா எடுத்துக்கொண்ட தினா, நீங்களே பாடிடுங்கன்னு அன்பு கட்டளையிட, அடுத்த நாளே ஆயத்தமாகிட்டாராம் விவேக். நா.முத்துக்குமார் எழுதிய 'ஜாலிலோ ஜிம்கானா...... டோலிலோ போல்கானா' என அர்த்தமுள்ள வரிகளை பாடகி ரீத்தாவுடன் இணைந்து பாடிமுடித்தாராம் விகேக்.

பின் குறிப்பு: தியேட்டர் டெக்னீஸியன்கள் யாரும் ஓடவில்லையாம்.

இந்த கேள்வியைத் தான் 'கண்டேன் காதலை' படக்குழுவினரைப் பார்த்து எல்லோரும் கேட்க வேண்டியதாயிடுச்சு. ஷெரினை முதலில் போய் கேட்க 'தங்கச்சி வேஷமா அய்யோ வேணாம்பா...' என்று நைசாகக் கழன்று கொண்டார்.

வேறு நடிகையைத் தேடும் பணியில் மும்முரமானது படக்குழு. தீவிர வேட்டைக்கு பிறகு தமன்னா தங்கச்சி சிக்கிக் கொண்டார்.

Viduppu.comஅவர் மாடலிங் கேர்ள் 'ஷபான் சரன்'. இவர் ஏற்கனவே பல விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். ஸ்கூட்டி பெப், கிட்கேட் போன்றவை இவர் நடித்த விளம்பரப் படங்கள்.

முதல் முறையாக பெரிய திரைக்கு வருகிறார் ஷபான் சரன்.
கொளத்தூர் பூம்புகார் நகர் 10-வது தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 36). மத்திய அரசு அதிகாரி. இவருடைய மனைவி சங்கீதா (30). சென்னை சாஸ்திரி பவனில் உள்ள மத்திய அரசு அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இவர்களது வீட்டில் கடந்த 13-ந் தேதி இரவு ஜன்னல் ஓரம் வைத்திருந்த செல்போன் திருட்டு போனது. காலையில் சீனிவாசன் திருட்டு போன செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார்.

எதிர் முனையில் பேசிய மர்ம ஆசாமி, ``நான் உங்கள் வீட்டில் திருட வரும் போது நீங்கள் இருவரும் மெய் மறந்து உல்லாசமாக இருந்தீர்கள். அந்த காட்சியை அப்படியே திருடிய செல்போனில் படம் பிடித்தேன். இன்னும் சிறிது நேரத்தில் அதனை இன்டர் நெட்டில் வெளியிடப் போகிறேன்'' என்று மிரட்டினான்.

இதனை கேட்டு திடுக்கிட்ட சீனிவாசன் மர்ம ஆசாமியிடம், ``அப்படி எல்லாம் செய்து விடாதீர்கள்; எங்கள் குடும்ப மானம் கப்பல் ஏறி விடும்'' என்று கெஞ்சினார்.

அந்த மர்ம ஆசாமி, "ஒரு மணிநேரம் கழித்து மீண்டும் தொடர்பு கொள்வதாக'' கூறிவிட்டு போனை துண்டித்து விட்டார்.

மர்ம ஆசாமியை மீண்டும் தொடர்பு கொண்டபோது, ``உடனடியாக ரூ.11/2 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு ரெட்டேரி பாலம் அருகே வந்து பணத்தை கொடுத்து விட்டு உனது செல்போனை வாங்கி செல். இல்லையேல் இரவுக்குள் இன்டெர்நெட்டில் போட்டு விடுவேன். அப்புறம் எனக்கு அமெரிக்கா டாலராக கொட்டும்'' என்று மிரட்டினான். மேலும் படிக்க

கருத்துகள் இல்லை: