திங்கள், 22 ஜூன், 2009

2009-06-22

இப்போதைக்கு அரசியல் இல்லை: விஜய் பிறந்தநாள் பேட்டி
vijay-birthday.jpg
பிறந்தநாளையொட்டி நடிகர் விஜய் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் பேட்டி வருமாறு:
கேள்வி: உங்கள் பிறந்த நாள் விருப்பம் என்ன?

பதில்: ஒவ்வொரு பிறந்தநாளிலும் ஏழைகளுக்கு உதவிகள் செய்து வருகிறேன். ஏழை மாணவ - மாணவிகளுக்காக இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் துவக்க விரும்பினேன்.

அதை இந்த பிறந்தநாளில் நிறைவேற்றி இருக்கிறேன். இரண்டு பயிற்சி மையம் திறந்துள்ளேன். இந்த எண்ணிக்கை மேலும் உயரும். இலவச மருத்துவ முகாம், ரத்ததான முகாமும் நடத்தப்பட்டது. உணவும் வழங்கப்பட்டது.

கே: ரசிகர்களை அழைத்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தி உள்ளீர்களே? அரசியலுக்கு வருவதற்கான முன்னோட்டமா?

பதில்: ரசிகர்களிடம் கருத்து கேட்டது உண்மைதான். பொது மக்கள், பெண்கள் என எல்லோரிடமும் அபிப்பிராயம் கேட்டோம். அரசியலில் ஈடுபட்டு மக்கள் பணிகளில் ஈடுபடலாம் என்று எல்லோரும் தெரிவித்தனர். அவர்கள் கருத்தை நான் ஒதுக்கவில்லை. ஆனாலும் அரசியலில் இப்போதைக்கு ஈடுபடும் யோசனை எதுவும் இல்லை.

கே: ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி உள்ளீர்களே? மிரட்டல் வந்ததா?

ப: மிரட்டல் ஏதும் வரவில்லை. மிரட்டல் வரும் அளவுக்கு நான் பெரிய ஆள்இல்லை. அப்படி வந்தாலும் பயப்படமாட்டேன்.

கே: மக்கள் இயக்கமாக மாற்றுவதால் ரசிகர்கள் தொண்டர்களாக மாற வேண்டி வருமே?

ப: என் ரசிகர்கள் எப்போதோ தொண்டர்களாகிவிட்டார்கள்.

கே: வேட்டைக்காரன் படம் எப்போது ரிலீசாகும்?

ப: 70 சதவீதம் படப்பிடிப்பு முடிந்து விட்டது. தீபாவளிக்கு ரிலீசாகும்.

கே: 50-வது படம் முடிவாகிவிட்டதா?.

ப: எனது 50-வது படத்தை சங்கிலி முருகன் தயாரிக்கிறார். டைரக்டர் முடிவாகவில்லை.

இவ்வாறு விஜய் கூறினார்.

  சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எவ்.) இலங்கைக்கு நிதி உதவி வழங்கும் விடயத்தில் காலம் கடத்தும் போக்கை கடைப்பிடித்தால் இந்தியா உதவத்தயாராக இருப்பதாக அரசாங்கத்தின் உயர் மட்டப் பேச்சாளரொருவர் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 1,900 கோடி ரூபா கடனுதவி எதிர்பார்க்கப்பட்டு வருவதாகவும் அந்த உதவி உரிய காலத்தில் கிட்டாமல் போகுமானால் அதற்கு சமமான கடனுதவியை இந்தியா தந்துதவத் தயாராகவிருப்பதாக அந்தப் பேச்சாளர் தெரிவித்தார். இந்திய அரசு இது தொடர்பில் இலங்கை அரசுக்கு ஏலவே உத்தியோகப்பற்ற வகையில் அறிவித்திருப்பதாகவும் அவர் [...]
  சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எவ்.) இலங்கைக்கு நிதி உதவி வழங்கும் விடயத்தில் காலம் கடத்தும் போக்கை கடைப்பிடித்தால் இந்தியா உதவத்தயாராக இருப்பதாக அரசாங்கத்தின் உயர் மட்டப் பேச்சாளரொருவர் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 1,900 கோடி ரூபா கடனுதவி எதிர்பார்க்கப்பட்டு வருவதாகவும் அந்த உதவி உரிய காலத்தில் கிட்டாமல் போகுமானால் அதற்கு சமமான கடனுதவியை இந்தியா தந்துதவத் தயாராகவிருப்பதாக அந்தப் பேச்சாளர் தெரிவித்தார். இந்திய அரசு இது தொடர்பில் இலங்கை அரசுக்கு ஏலவே உத்தியோகப்பற்ற வகையில் அறிவித்திருப்பதாகவும் அவர் [...]


அப்பாடா...சாயா சிங் படத்தை போட இன்னொரு சான்ஸ் கெடைச்சிருச்சு..

அதாவது நான் சொல்ல வர்ரது என்னன்னா, முந்தா நாள் என்னுடைய பதிவு 4 ஓட்டு வாங்கி வாசகர் பரிந்துரையில் பார்த்தேன் (உரையாடல் கதை விமர்சன பதிவு)

ஆனா நேற்று திறந்து பார்த்தால் நெகட்டிவ் ஓட்டுகளில் வந்து நிற்கிறது. அதாவது வாசகர் பரிந்துரைக்கு என்ன அர்த்தம் ? நிறைய வாசகர்கள் பரிந்துரைத்தால் அது சூடான இடுகையில் வரவேண்டும் என்பது தானே ?

சொம்பு விஜய், சாக்ரீம் மகேஷ் மாதிரி கொலைவெறி குப்பன்கள் இருபத்தெட்டு ஐடி வைத்து, பத்து முறை ரைவுட்டரை சுவிட்ச் ஆப் செய்து டைனமிக் ஐப்பி மாற்றி, ப்ராக்ஸி தளங்களில் இருந்து ஓப்பன் ஐடி உள்ளே நுழைந்து மைனஸ் ஓட்டு குத்தினால் நாங்க என்ன செய்வது ?

ஓப்பன் ஐடி அன்ப்ரேக்கபுளா என்ன ? அது ஒன்று MAC அட்ரஸை எடுப்பதில்லையே ? அதே சமயம், பத்து சிஸ்டம் வைத்துள்ள புரவுசிங் செண்டர் ஓனர் பத்து மைனஸ் ஓட்டு குத்த முடியுமே ?

டிவிஆர் அய்யா பதிவில், நெகட்டிவ் மார்க் போட இது என்ன மெடிக்கல் எண்ட்ரன்ஸ் எக்ஸாமா என்று சொன்னது காமெடியாக இருந்தாலும் அது தானே உண்மை ? ஏன் கன்ஸிடர் செய்யக்கூடாது ???

இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
க்வாட்டர் கோயிந்து

கருத்துகள் இல்லை: