வீரகேசரி இணையம் 6/22/2009 2:12:45 PM - மட்டக்களப்பு சவுக்கடி கிராமத்தில் நேற்றிரவு வீடொன்றில் கொள்ளையடிக்க முற்பட்ட பிரதான தேசிய அரசியல் கட்சியொன்றின் அங்கத்தவர்கள் எனக் கூறப்படும் இருவர் உட்பட மூவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த நபர்கள் உட்பட மூவர் வீட்டிலிருந்தவர்களை அறையொன்றினுள் வைத்து அடைத்து விட்டு பொருட்களை கொள்ளையடித்து எடுத்துச் செல்வதற்கு வெளியே தயாராகவிருந்த வேளை வீட்டிற்குள் அடைக்கப்பட்டிருந்தவர்கள் கதவை உடைத்து வெளியே வந்து கூக்கரலிட்டு அயலவர்களின் உதவியுடன் கொள்ளையர்களை தாக்கி மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.இம் மூவரில் இருவர் மாவடிவேம்பிலுள்ள பிரதான தேசிய அரசியல் கட்சியொன்றின் அலுவலகத்தில் இருந்து வந்தவர்கள் என்றும் இந் நபர்களிடமிருந்து குறிப்பிட்ட கட்சியின் அங்கத்துவ அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் மூலம் தெரிய வருகின்றது.சந்தேக நபர்கள் மூவரும் தொடர்ந்தும் ஏறாவூர் பொலிஸாரினால் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு இவர்கள் பயணம் செய்ததாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிளும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளது என அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

ஈழம் என்றதும் வீரம்வரும் சிலரில் அமீரும் ஒருவர். ஈழத் தமிழருக்கு ஆதரவாகப் பேசி சிறை சென்ற பின்னும் அவரது சீற்றம் குறையவில்லை. அமீர் சினிமா கலைஞனல்லவா... ஈழத்தின் சோகத்தை செல்லுலாயிடில் செதுக்க வேண்டும் என்று அடிக்கடி கூறிக் கொண்டிருப்பார். ஈழத்தைப் பற்றி படமெடுப்பேன் என்று மேடையிலேயே முழங்கியிருக்கிறார். அது வெறும் பேச்சல்ல.யோகி படத்தின் இறுதிகட்ட பணியில் இருப்பவர் ஈழம் குறித்த படத்தின் கதை விவாதத்தை நடத்தி வருகிறாராம். படத்துக்கு கிளிநொச்சி என்று பெயர் வைக்கவும் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அமீரைப் போலவே ஈழப் பிரச்சனையை பிரதிபலிக்கும் படத்தை எடுக்கவுள்ளார் சீமான். அஜித் நடிக்கும் படத்துக்குமுன் இப்படம் தயாராகவுள்ளது. அனேகமாக படத்துக்கு கோபம் என பெயரிடப்படலாம் என தெரிகிறது.
Zip, RAR கோப்பினுள்ளே என்ன உள்ளது? ஆன்லைனின் சோதிக்கDo you want to see what is in on the compressed filewhich you want to download?
தினம்தோறும் எத்தனையோ சுருக்கப்பட்ட கோப்புகளை (compressed files) இணையம் வாயிலாக download செய்கிறோம். தரவிறக்கம் செய்தபிறகு அதை விரிப்பதற்கான (extract) சிறப்பு மென்பொருட்களைக் கொண்டு extract செய்கிறோம். இது வழக்கமாக நாம் செய்யும் ஒரு தொடர் நிகழ்வு.
இந்த சுருக்கப்பட்ட கோப்பின் உள்ளே என்ன இருக்கிறது? - என்பதை தரவிறக்கம் செய்தபிறகு பார்ப்பதனால் பல நேரங்களில் தேவையில்லாத கோப்புகளையும் தரவிறக்கிவிடும் அபாயம் உள்ளது.ஆன்லைனில் இருந்தபடி zip,RAR கோப்பினை தரவிறக்கம் செய்யாமலேயே, நேரடியாக சோதித்து அறிவதற்காக நெருப்பு நரி(Firefox) உலாவிக்கான இந்த நீட்சியைப் (addon) பயன்படுத்தலாம். இதன் மூலம் தேவையற்ற கோப்புகளை தரவிறக்காமல் தவிர்த்துவிடலாம். நல்ல நீட்சி இது.
https://addons.mozilla.org/en-US/firefox/addon/5028
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக