காதலிக்கும் ஆண் கிடைப்பது
சிரமமில்லை
பெண்ணான தேவைகளுக்கு
நேர்மையாயிருப்பதில் தான் சிரமங்கள்.
கண்ணாடியின் முன் நிர்வாணமாய் நில்
அவனே பலசாலியாக அவனுக்குத் தோணவும் நம்பவும்..
நீ இன்னும் மிருதுவாக,இளமையாக..
உன் ரசனையை பதிவு செய்.
அவனது தசைகளின் முழுமையை,
ஈரக்கண்களின் சிகப்பை,
குளியலறைத் தரையில் பதிந்த
தயக்கமான நடையை
சிறுநீர் கழிக்கும் மெல்லிய அதிர்வை..
அவனை ஆணாக்கும், உனது ஆணாக்கும்
எல்லா சின்னக் குறிப்புகளையும்..
அவனுக்கு பரிசளி..
உன்னை பெண்ணாக்கும் எல்லாவற்றையும்
நீள்மான கூந்தலின் வாசனையை
மார்பினூடான வாசனையை
தீட்டு ரத்ததின் மெல்லிய அதிர்ச்சியை,
உன்னுடைய எல்லா
முடிவில்லா பெண்ணின் தாகங்களையும்...
ஆமாம்.. காதலிக்க ஆண் கிடைப்ப்பது எளிது
ஆனால் அவனன்றி பிறக்காய் வாழ்வதை எதிர்கொள்
உயிர்ப்பில்லா வாழ்க்கையோடு சுற்றித் திரிந்து
அறிமுகமற்றவர்களை சந்தித்து
அவர்களின் தேடுதலை அற்றொழித்த உன் கண்களோடு
உன் பெயரை கடைசியாய் உச்சரித்த
அவன் குரல் காதில் வழிந்த படி
அவனது ஸ்பரிசத்தால் முன்பு தேய்த்த செம்பாய் மினுங்கிய உன் தேகம்
பொலிவிழந்து, நிராகரிக்கப் பட்டதாய்..
ஸ்நேகமுடன் தமயந்தி
கூடுதிரும்பும் பறவைகள்
சலசலக்கும் மரம்
*************
கூட்டம் போட்டு
பயனற்று போயின
கலையும் மேகங்கள்
*************
மகளிர் உரிமை
மீட்டுக் கொடுத்தது
பொருளாதாரச் சூழல்
உரையாடல் சிறுகதை போட்டிக்கான எனது கதை படிக்க இங்க க்ளிக்கவும்!
.jpg)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக