தற்கொலை. முட்டாள்தனமான முடிவு என்பது சிலரின் கருத்து. உலகிலிருந்து விடுபட துணிச்சலான முடிவு என்பர் சிலர். தற்கொலை செய்து கொள்பவர்கள் சுயநலவாதிகள் என்று குற்றம் சாட்டுபவர்களும் உண்டு. தற்கொலை செய்து கொள்பவர் ஒவ்வொருவருக்கும் தனித்தனி காரணங்கள். ஒவ்வொரு மனிதனும் ஏதாவதொரு காலகட்டத்தில் தற்கொலை எண்ணத்தில் உளன்று இருப்பார்.இதைப்போன்றதொரு தற்கொலை முயற்சி வீடியோவை யூடுப் தளத்தில் பார்க்க நேர்ந்தது.
இஸ்ரேலை சேர்ந்த 56 வயது பெண்மணி, தான் வேலை பார்த்து வந்த டிராவல் ஏஜென்சியில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டதால் தற்கொலை முடிவை எடுத்து உள்ளார். அவர் ரயில் வரும் நேரம் பார்த்து தண்டவாளத்தில் படுக்கிறார். மிகவும் அதிர்ஷ்டகரமான(?) , வியப்பான விஷயம் ரயில் கடந்ததும் எழுந்து சென்று விட்டார். போலீஸார் அவரை கைது செய்து விட்டனர். மரணத்தின் வாயில் கதவை தட்டி விட்டு திரும்புவது இதுதானோ?
அங்கிருந்த கண்காணிப்பு கேமெராவில் இந்த காட்சி பதிவாகி உள்ளது. அதிர்ச்சியூட்டிய வீடியோ இது .
பதிவுகளை வாசித்து கொண்டிருந்த போது பிளாக் எழுதுபவர்களுக்கு என்று பதிவர் சுமஜ்லாவின் பதிவு கண்ணில் பட்டது. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் இடுகைகள் தோன்றுவதில் சிக்கல் இருப்பதாக தெரிவித்து இருந்தார். நான் பெரும்பாலும் பயர்பாக்ஸ் உபயோகிப்பது வழக்கம். இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் எனது இந்த பிளாக் எப்படி தெரிகிறது என திறந்து பார்த்தேன். பிளக்கின் முகப்பு பக்கம் தெரிவதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் இடுகை பக்கங்களை தனியே திறந்து பார்க்கும் போது பக்கத்தில் தவறு இருப்பதாக அதே பிழை செய்தி வந்தது. அடுத்து "Page not found" என்று இடுகை பக்கம் மூடப்பட்டு விடுகிறது. 
எதனால் இந்த பிழை வருகிறது என்று கூகிள் ஆண்டவரை கேட்டேன். அவர் "கவலை படாதே! பக்தா!! இது உனக்கு மட்டுமல்ல! பெரும்பாலான மக்களுக்கு நேர்ந்துள்ளது!" என்று இந்த பிளாக்கர் பக்கத்தை சென்று பார்க்க சொன்னார்.பிளாக்கர் நிர்வாகம் இந்த பிழை வருவதை இன்னும் தீர்க்காத பிரச்சினையாக ஒப்பு கொண்டுள்ளது. பிளாக்கில் "Followers" gadget நிறுவி இருப்பதால் தான் இந்த பிரச்சினை வருகிறது என்று தெரிவித்து உள்ளார்கள். இத்தனை சரி செய்ய பிளாக்கரின் Dashboard சென்று Layout --> Page Elements செல்லவும். "Follower" gadget ஐ நீக்கி விடவும். அல்லது உங்கள் சைடு பாரில் இறுதிக்கு கொண்டு சென்று நிறுவி விடவும் (இப்படித்தான் இந்த பிளாக்கில் செய்து உள்ளேன்) .

இப்போது பிரச்சினை தீர்ந்து விட்டது. பிளாக்கர் நிரந்தர தீர்வு தரும் வரை இதனை கடை பிடிப்போம்.
எனவே பிளாக்கில் "Follower" Gadget நிறுவி உள்ளவர்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் உங்கள் இடுகை பக்கங்கள் சரியாக தெரிகிறதா? என்று சோதிக்கவும். பிழை வந்தால் சரி செய்யவும். இல்லையெனில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மூலம் உங்கள் இடுகையை பார்வையிடும் பார்வையாளரை நீங்கள் இழக்க நேரிடும். இன்னும் பெரும்பாலான இணைய பார்வையாளர்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உபயோகித்து வருகிறார்கள் என்பது குறிப்பிட தக்கது.
குறிப்பு : நான் சோதித்து பார்த்தது Internet Explorer 8.0 . இந்த பிழையை அறியச்செய்த பதிவர் சுமஜ்லாவிற்கு மிக்க நன்றி.
விண்டோஸ் 7 RC இலவசமாக தரவிறக்கி நிறுவுவது பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் எழுதி இருந்தேன். தற்போது விண்டோஸ் 7 உபயோகித்து வருகிறேன். இதுவரை ஏதும் குறை சொல்லும்படி இல்லை.விண்டோஸ் எக்ஸ்பி , விண்டோஸ் விஸ்டா போன்றவற்றிக்கு Tweak மென்பொருள்கள் நிறைய புழக்கத்தில் உள்ளன. விண்டோஸ் 7 க்கும் தற்போது எளிய Tweak மென்பொருள்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்று தான் EnhanceMySe7en.
இத்தனை உபயோகித்து விண்டோஸ் 7 இல் Registry Cleaning, Disk Defragmenter, Startup கையாளுதல் உள்ளிட்ட மேலும் பல வேலைகளை எளிதில் செய்யலாம்.
தோற்ற படங்கள் (Screen Shots)


இந்த மென்பொருள் பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கே செல்லுங்கள். இந்த மென்பொருளுக்கான தரவிறக்க லிங்க்.
இணைய வடிவமைப்பாளர்களுக்கு (Web Designers) உயர்தர ஐகான்களை தேடி கண்டுபிடிப்பது சற்றே கடினமான வேலைதான். பெரும்பாலும் கூகிள் இமேஜசில் தேடி கொண்டு இருப்பார்கள். திருப்திகரமான ஐகான் கிடைப்பது குதிரை கொம்பான விசயமாக இருக்கும்.அவர்களுக்கான வேலையை எளிதாக்குகிறது iconfinder.net . இந்த தளத்திற்கு சென்று உங்களுக்குதேவையான உயர்தர ஐகான்களை இலவசமாக பெற்று கொள்ளலாம். உங்கள் தேடலுக்கு ஏற்ற ஐகான்களை இந்த தளம் தரும்.

வெவ்வேறு அளவுகளிலும் இந்த ஐகானை பெற்று கொள்ளலாம். இந்த ஐகான்கள் ICO மற்றும் PNG பார்மேட்டுகளில் கிடைக்கின்றன.
மைக்ரோசாப்ட் இயங்குதளங்களில் (Operating System) விண்டோஸ் விஸ்டா குறிப்பிடத்தக்கது. பல பிரச்சினைகளுக்கு இடையில் வெளிவந்தது. மைக்ரோசாப்ட் தனது அடுத்த இயங்கு தள பதிப்பான விண்டோஸ் 7 விரைவில் வெளியிட போகிறது. இந்நேரத்தில் விண்டோஸ் விஸ்டாவை மேம்படுத்தும் நோக்கில் சர்வீஸ் பேக் 2 மைக்ரோசாப்ட் வெளியிட்டு உள்ளது.சர்வீஸ் பேக்குகள் வெளியிடப்படும் போது அவற்றை நிறுவி உங்கள் இயங்குதளத்தை மேம்படுத்தி கொள்வது முக்கியமாகும். அது உங்கள் கணினிக்கு பாதுகாப்பையும் சிறந்த செயல்பாட்டையும் அளிக்கும்.
விண்டோஸ் விஸ்டா சர்வீஸ் பேக் 2 நீங்கள் கீழ் கண்ட முறைகளில் பெறலாம்.
EXE இன்ஸ்டாலர் பேக்கேஜாக விரும்புவோர் இந்த லின்க்கில் சென்று தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள். கோப்பின் பெயர் : Windows6.0-KB948465-X86.exe . கோப்பின் அளவு : 348.3 MB
ISO இமேஜாக விரும்புவோர் இந்த லின்க்கில் சென்று தரவிறக்கி DVD யில் எழுதி பின்பு உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள். கோப்பின் பெயர் : 6002.18005.090410-1830_iso_update_sp_wave0-RTMSP2.0_DVD.iso . கோப்பின் அளவு : 1376.8 MB
முக்கியமாக இதை நீங்கள் நிறுவும் முன்பு உங்கள் விஸ்டாவில் சர்வீஸ் பேக் 1 நிறுவி இருக்க வேண்டும். விஸ்டா சர்வீஸ் பேக் 1 வேண்டுவோர் இந்தலின்க்கில் சென்று தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொண்டு பின்பு சர்வீஸ் பேக் 2 நிறுவி கொள்ளுங்கள். கோப்பின் பெயர் : Windows6.0-KB936330-X86-wave0.exe . கோப்பின் அளவு : 434.5 MB .விண்டோஸ் விஸ்டா உபயோகிப்பாளர்கள் தவறாது செய்யவும்.
பொறுத்தார் பூமியாள்வார் என்பார்கள். கணினியை பொறுத்தவரை நம் பொறுமையை சோதிக்கும் பல விஷயங்கள் நடக்கும். அதில் ஒன்று மிகப்பெரிய கோப்புகளையோ, போல்டெர்கலையோ காப்பி செய்யும் போது மிக குறைவான வேகம் மற்றும் பல இடையூறுகள்.அதிக கோப்புகள் உள்ள பெரிய போல்டெர்களை காப்பி செய்யும் போது இடையில் ஏதாவது பிழை செய்தி தந்து விட்டு காப்பி செய்வது நின்று விடும். எந்த கோப்பு வரை காப்பி ஆனது எது காப்பி ஆகவில்லை என்ற குழப்பம் நேரிடும். மீண்டும் அந்த ஒட்டு மொத்த போல்டரயுமே காப்பி செய்ய வேண்டும். காப்பி செய்யும் போது நேரக்கூடிய மிக குறைவான வேகம் எரிச்சலை தரும்.
விண்டோஸ் இயங்குதளத்தில் இந்த பிரச்சினைக்கு தீர்வு தரும் விதம் ஒரு மென்பொருள் உள்ளது. TeraCopy - இங்கே கிளிக் செய்து இந்த மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள். இனி நீங்கள் காப்பி செய்து பேஸ்ட் செய்யும் போது இந்த மென்பொருள் தானாக இயங்க ஆரம்பிக்கும்.

இந்த மென்பொருளின் சிறப்பம்சங்கள் :
1. துரிதமாக காப்பி வேலையை செய்து முடிக்கும்.
2. காப்பி செய்து கொண்டிருக்கும் போது அதனை "Pause" செய்து வைத்து கொண்டு பின்பு "Resume" செய்து காப்பி வேலையை தொடரலாம்.
3. காப்பி செய்து கொண்டு இருக்கும் போது , ஒரு குறிப்பிட்ட கோப்பு காப்பி செய்வதில் இடையூறு ஏற்பட்டால் அந்த கோப்பை விட்டு விட்டு மற்ற கோப்புகளை காப்பி செய்யும். ஒட்டு மொத்த காப்பி வேலையையும் தடை செய்து விடாது.
4. இடையூறு ஏற்பட்ட கோப்புகளின் பட்டியலை காண்பிக்கும். அந்த கோப்புகளை நீங்கள் சரி செய்து பின்பு காப்பி செய்து கொள்ளலாம்.
உபயோகித்து பாருங்கள். இந்த மென்பொருள் தேவை இல்லை என்றால் Start --> Programs --> Teracopy --> Uninstall Teracopy செய்து விட்டு பழைய காப்பி முறையை பெற்று கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக