கணவன்- மனைவியிடையே மன அழுத்தம் இருந்தால் அவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்படுவார்கள். மன அழுத்தத்தை
குறைத்துக்கொள்ளாவிட்டால் அவர்களை அறியாமலே அவர்கள் செக்ஸ் வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுவிடும்.
மன அழுத்தமும், சோர்வும் திருப்திகரமான செக்ஸ் வாழ்க்கைக்கு தடையாக
இருந்து கொண்டிருக்கிறது. இவை இரண்டும் இருக்கும் போது உறவு
வைத்துக்கொண்டால் உறவு திருப்தியில்லாமால் தோல்வியில் முடிகிறது.
மன அழுத்தத்தை நீக்கி, உறவை நன்றாக அமைத்துக்கொள்ள சில ஆலோசனைகள்:
* அலுவலகத்திலோ, வெளி இடத்திலோ, வீட்டிலோ நடக்கும் பிரச்சினைகளால் உருவாகும் மன அழுத்தத்தை படுக்கைஅறை வரை கொண்டு செல்லக்கூடாது. தம்பதிகளிடையே கருத்து வேறுபாடோ, மன அழுத்தமோ இருந்து கொண்டிருக்கும்போது உறவில் ஈடுபடுவதை தவிர்த்துவிட வேண்டும். மனதில் மகிழ்ச்சி இருந்தாலே செக்ஸ் சந்தோஷத்தை தரும். இல்லாவிட்டால் செக்ஸ் ஒரு சடங்கு சம்பிரதாயம்
போல் மாறி விடும்.
* கணவருக்கு பிரச்சினைகளோ, கவலைகளோ இருந்தால் அதை மனைவியிடம் மனம் விட்டு சொல்ல வேண்டும். அது போல் மனைவியின் பிரச்சினைகள் கணவரிடம் வெளிப்படுத்தப்பட வேண்டும். ஒருவர் இன்னொருவரிடம் வெளிப்படுத்தும்போது மனபாரம் குறைந்து, அவர்களிடையே மனநெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கையை தம்பதி கள் தன்னம்பிக்கையோடும், தைரியத்தோடும் எதிர்கொள்ள வேண்டும். இப்படி எதிர் கொள்கிறவர்கள் செக்ஸ் வாழ்க்கையை நன்றாக அமைத்துக்கொள்ள
முடியும்.
* மனதையும், உடலையும் இலகுவாக்கும் யோகா, மனதை அமைதிப்படுத்தும் `டீப் பிரீத்திங் எக்சசைஸ்' போன்றவை மன அழுத்தத்திற்கு சிறந்த வடிகால்.
மூக்கின் வழியாக மூச்சை நன்றாக உள்ளிழுத்து, மூன்று நிமிடங்களாவது
மூச்சைப் பிடித்து வையுங்கள். பின்பு உள்ளே இழுத்ததைவிட அதிக நேரம்
எடுத்து, மூச்சை நிதானமாக வெளியே விடுங்கள். இந்த பயிற்சியை கணவர்- மனைவி இருவருமே செய்தால், உட லுக்கு நல்ல உற்சாகம் கிடைக்கும். அதன் பின்பு அவர்கள் உறவில் ஈடுபடுவது நல் லது.
* மன அழுத்தத்திற்கு மசாஜ் சிறந்த மருந்து. வெளியே போய் மசாஜ்
செய்வதைவிட, கணவருக்கு, மனைவியும்- மனைவிக்கு, கணவரும் மசாஜ் செய்ய வேண்டும். ஒருவர் மீது மற்றொருவர் அதிக அன்பு வைத்திருப்பதை இது உணர்த்தும். இதன் பின்பு உறவில் ஈடுபடுவது அதிக மகிழ்ச்சியை தரும்.
* தினமும் அரை மணிநேரம் உடற்பயிற்சியில் ஈடுபட்டால் உடலுக்கும்,
உள்ளத்துக்கும் ஆரோக்கியம் கிடைக்கும். நல்ல செக்ஸ்க்கு உடற்பயிற்சி மிக
அவசியம். செக்ஸ் சக்தி யையும், ஆர்வத்தையும் அதிகரிக்கும் ஆற்றல்
உடற்பயிற்சிக்கு இருக்கிறது. உடலில் ரத்த ஓட்டத்தை சரியான முறையில்
சீரமைக்க உடற்பயிற்சியால் முடியும்.
* மன அழுத்தத்தை குறைக்கும் டானிக் போல் செக்ஸ் செயல்பாடு அமைகிறது.
ஆனால் செக்சில் ஈடுபடும் ஆர்வம் கணவன்- மனைவி இருவருக்குமே இருக்க
வேண்டும். மனம் திறந்த பேச்சு, வெளிப்படையான அன்பு, நம்பிக்கை போன்றவை நல்ல உறவுக்கு அடித்தளம் அமைத்து தரும்.
-ஆஷாதினேஷ்.
(கொச்சியிலிருந்து ஒரு வாசகி)
என் வயது 34. சாப்ட்வேர் என்ஜினீயர். இரண்டு குழந்தைகளின் தாய். என்
கணவர் இதே துறையில் இன்னொரு மாநிலத்தில் பணிபுரிகிறார். நான் பணிபுரியும் நிறு வனத்தின் புராஜக்ட் மேனேஜராக இருப்பவர், என்னைவிடவும் வயது குறைந்தவர். திருமணமாகாதவர். அவரை நான் காதலித்தேன். அவரோடு என் உறவை வலுப்படுத்திக்கொள்ள நான் சில தவறான வழிமுறைகளை கையாண்டேன். அதை எல்லாம்
அறிந்து கொண்ட பின்பும் அவர் மிகுந்த பக்குவத்துடன், `தான் அந்த
மாதிரியான உறவுக்கு ஏங்கும் ஆள் இல்லை. உங்களுக்கும்,கணவருக்கும் உறவு நிலை சரியில்லாதது போல் தெரிகிறது. அதை மேம்படுத்துங்கள். என்னை உங்கள் சகோதரன் போல் பாவித்து இனி பழகுங்கள்' என்று கூறிவிட்டார். நான் முதலில் தடு மாறிப் போனாலும், பின்பு தியானம் மூலம் என் மனதை பக்குவப்படுத்தி, அவரை சகோ தரனாக ஏற்றுக் கொண்டேன். அவரை நான் ஒரு தலையாக `காதலித்துக் கொண்டி ருந்த' கால கட்டத்தில் என் கணவரை அலட்சியப்படுத்தி புறக்கணித்துவிட்டேன். இனி என் கணவரோடு உறவினை மேம்படுத்தி, மகிழ்ச்சியாக வாழ வழி சொல்லுங்கள்?
உங்கள் எண்ணங்களையும், நடத்தையையும் செம்மைப்படுத்திக் கொண்டது மகிழ்ச் சிக்குரியது. உங்களிடம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்திய அந்த சகோதரர் பாராட்டுக் குரியவர். முதலில், `என் சிந்தனையில் இனி இந்த மாதிரியான எண்ணம் எதற்கும் இடம் கொடுக்கமாட்டேன். கணவரின் நம்பிக்கைக்குரியவளாக வாழ்ந்து காட்டுவேன்' என்று உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். அடுத்து கணவரின் அன்பைப் பெறுவதற்கான செயல்களில் ஈடுபடுங்கள். `நாம் இருவரும் வெவ்வேறு இடங்களில் வேலை பார்ப்பதால் நமது குழந்தைகளுக்கு நமது பாசம் கிடைப்பதில்
நெருக்கடி ஏற்படுகிறது. குழந் தைகளுக்காக நாம் இருவரும் அதிக நேரத்தை ஒன்றாக செலவிட முன்வர வேண்டும்' என்ற அன்பு கோரிக்கையை கணவரிடம் வைத்துவிட்டு, குழந்தைகளோடு அவரைத் தேடிச்சென்று உங்கள் அன்பையும், எதிர்பார்ப்பையும் முழுமையாக அவரிடம் வெளிப் படுத்துங்கள். அவருக்கு பிடித்தமானவைகள் என்னவென்று உங்களுக்கு தெரியும். அதை அவருக்காக நிறைவேற்ற தனிமையான நேரத்தை இருவருக்காகவும் உரு வாக்குங்கள். உங்களிடம்
இருக்கும் குறைகளாக அவர் கருதுவதையும், நீங்கள் கருதுவதையும் ஒருசேரக் கண்டறிந்து அவைகளை களையுங்கள். மனம் விட்டுப்
பேசுங்கள். உங்கள் நிம்மதிக்கும், குழந்தைகளின் எதிர்காலத்திற்கும் கணவர் உங் களோடு இருப்பது அவசியம் என்பதை உணர்த்தி, யாராவது ஒருவர் வேலை விஷ யத்தில் விட்டுக்கொடுத்து ஒரே இடத்தில் வேலை பார்க்கும் வாய்ப்பினை உருவாக்க முயற்சியுங்கள். உடல் ரீதியாகவோ, செக்ஸ் ரீதியாகவோ, அன்பு ரீதியாகவோ உங்கள் கணவரிடம் நீங்கள் குறையாக எதைக் கருதினாலும் அவை அனைத்துக்கும் தீர்வு இருக்கிறது.
-விஜயலட்சுமி பந்தையன்.

நாம் ஒவ்வொருவருமே வாழ்க்கையில் சில விஷயங்களக் கற்றுக் கொண்டு, அதை மனதில் பத்திரப் படுத்திக் கொள்கிறோம். விவேக முள்ளவர்கள், அந்த அனுபவங்களை தகுந்த தருணத்தில் பயன்படுத்திக் கொள்கிறோம். நிறையப்
பேர், நட்பில், காதலில், அன்பில் வெற்றி பெற, அடுத்தவர் எதிர்பார்ப்புகளப் பூர்த்தி செய்யும் வகையில் தங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள் கிறார்கள். உண்மயில் நீங்கள் திருப்திப்படுத்த வேண்டியது மற்றவரை அல்ல. உங்களைத்தான்.மேலே
இது சுயநலமல்ல. தன் மீது அன்போ, மரியாதையோ கொண்டிராத ஒருவர் அடுத்தவருடய அன்பை, மரியாதையை உய்த்துணர முடியாது
அப்படியெனில்,
அன்போ, நட்போ தொடர்ந்து நிலைத்திருப்பதன் ரகசியம் என்ன?
அன்பு வற்றாமல் இருப்பதற்கு நாம் என்ன செய்யவேண்டும்!
ஜேனட்லூர் என்பவருடய 'Simple Loving' என்ற புத்தகம் சில எளிமயான யோசனகளை முன் வைக்கிறது.
உங்கள் அன்பு நன்கு மலர்ந்து நிலைத்திருக்க வேண்டுமெனில் மற்றவருக்கு உகந்த வகையில் நான் நல்லவனாக இருக்கவேண்டும். மிகுந்த ஆர்வம் காட்ட வேண்டும் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு, உங்கள் மீதே மரியாதை கொள்ளு ங்கள். உங்கள் வாழ்க்கையையும், செயல்களையும் மகிழ்ச்சியாக, உற்சாகமாக செய்யுங்கள்.
உண்மயான அன்பு பணத்தை வைத்து எடை போடக் கூடாது. அல்ல பொருளை பகிர்வதோடு நின்று விடக் கூடா.
உங்கள் உறவுகளில் நீங்கள் தவறிழைக்கும் போது மற்றவர்கள் உங்களை மன்னித்து விட்டால் மட்டும் போதாது. நீங்களும் உங்களை மன்னிக்க வேண்டும்.
மற்றவர்கள் உங்களை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்க வேண்டும்.
நீங்கள் மற்றவர் வாழ்க்கையை வாழ முயற்சி செய்யக் கூடாது; அவர்கள் உங்களுக்கு நெருங்கியவராக இருந்தாலும். ஏனென்றால் உங்கள் வாழ்க் கையை யாரும் வாழ முடியாது. உங்கள் வாழ் நாளில் நீங்கள் பார்க்கப் போகும் அத்தன பேரிலும், உங்களை விட்டுப் பிரியாத ஒரேயொருவர் நீங்கள் மட்டும்தான்.
உங்கள் வாழ்க்கையை நீங்கள் சிறப்பாக, உற்சாகமாக, அர்த்த முள்ளதாக வாழத் தொடங்கினால் போதும். உங்களுக்கு அமையும் உறவுகளும், மகிழ்வும் உங்களை விட்டு எளிதில் விலகி போகாது.
உங்கள் மனப்பான்மையைப் பொறுத்துத்தான் உங்கள் உறவு நீடிக்குமா, அல்ல
காற்றில் கரந்த கற்பூரம் போலாகுமா எனச் சொல்ல முடியும்.
மனப்பான்மை என்றால் என்ன?
உங்களைப் பற்றி, மற்றவர்களைப் பற்றி, உங்களைச் சுற்றி நடக்கும் சம்பவங் களைப் பற்றி நீங்கள் கொண்டுள்ள கருத்துக்கள் நாளடைவில் உங்கள் நம்பிக் கையாக மாறி விடுகிறது. உங்களின் தீர்மானமான உணர்வுகள் நிரந்தர நிழலாய் மனதில் படிந்து விடுவதுதான் மனப்பான்மை
உங்கள் உறவுகளின் அஸ்திவாரமான மனப்பான்மை எவ்வாறு உருவாகிறது?
நேற்றைய வார்த்தைகள் இன்றைய செயல்கள்
இன்றைய செயல்கள் நாளைய மனப்பான்மைகள்
இன்றைய மனப்பான்மைகள் நாளைய குணங்கள்
இன்றைய குணங்கள் தாம் அவருடய நாளைய விதி!
எனவே ஆரோக்கியமான, வளர்ச்சியடையக் கூடிய மனநிலையை நாம் வளர்த்துக் கொண்டோம் என்றால் உறவுகள் இலேசில் புளித்துப் போகாது. ஐஸ்கிரீம் கலந்த அன்பு பேச்சுகள் எளிதில் அலுத்துப் போகாது.
ஆரோக்கியமான மனநிலைக்கு அடிப்படையே, நாம் நாமாக இருப்பதுதான்.
அன்பு என்பது ஒருவர் ஒருவரைப் பார்த்துக் கொள்வதல்ல. மாறாக இருவரும் சேர்ந்து ஒரே திசையில் பார்ப்பது. ஒருவர் அழகாக இருக்கிறார் என்பதற்காக நீங்கள் அவரை அன்பு செய்யக் கூடாது. நீங்கள் அன்பு செய்வதால்தான் அவர் அழகாக இருக்கிறார். ஷேக்ஸ்பியர் கேட்பது போல் கடவுள் உங்களுக்கென ஒரு முகத்தைக் கொடுத்திருக்கிறார்! நீங்கள் ஏன் வேறொரு முகத்தைத் தேடுகீறீர்கள்?
கோபென்ஹெகன் பல்கலக் கழகத்தின் இயற்பியல் தேர்வு நடந்து கொண்டிருந் தது. ஒரு பெரிய வானளாவிய கட்டிடத்தின் உயரத்தை ஒரு பாரோமீட்டர் உதவியுடன் எப்படிக் கணக்கிடுவது? ஒ உடனே ஒரு மாணவன் எழுந்து சொன்னான்.
பாரோமீட்டர் கழுத்தில் ஒரு கயிற்றைக் கட்டி விட்டு அதை மெல்ல இறக் கவும். கயிற்றின் நீளம்+பாரோமீட்டர் நீளம்-இவயிரண்டயும் சேர்த்தால் கட்டடத்தின் உயரம் தெரியும்.
அந்த மாணவன் பெயிலாக்கப்பட்டான். எனினும் தனித்தன்மை வாய்ந்த பதிலைக் கூறிய அந்த இளஞன் சோர்ந்து விடவில்ல. தாமாகவே பிரச்னை '
களுக்குத் தீர்வு கண்டு வந்த அவரின் பெயர் தான் நீல்ஸ்போர். இயற்பியலுக் காக நோபல் பரிசு வாங்கிய ஒரே டேனிஷ் நாட்டவர்.
தனித் தன்மையுடன், இயல்பாக இருப்பதுதான் நாளடைவில் பெரும் வெற்றி களைப் பெற்றுத் தரும்.
ஒரு நாள் இரண்டு நண்பர்கள் கடலில் படகு ஓட்டி சென்றார்கள். பெரியவர் ஜிம் படகை ஓட்ட, சிறியவரோ, ஒரு முனையில் நின்று கொண்டு இயற்கை அழகை ரசித்துக் கொண்டு வந்தார்.
அன்றிரவு இருவரும் உணவருந்தும் போது ரே கேட்டார், ஜிம் காலையில் நாம் சென்ற கடற்கரைப் பகுதியில் நூற்றுக்கணக்கான பாறைகள், கோர புற்கள் இருந்தனவே? எப்படி ஒன்றில் கூட மோதாமல் ஓட்டினீர்கள்?
ஜிம் புன்னகைத்துக் கொண்டே சொன்னார்,
அங்குள்ள ஒவ்வொரு பாறையையும் நான் இடித்துப் பழகி விட்டேன்!
வாழ்க்கையில் நாம் படும் ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் பாடங்களைக் கற்றுக் கொள்வதோடு, அத்தகைய வாழ்க்கை முறையிலிருந்து ஓடிவிடாமல், அதையே சிறப்பாக வாழ கற்றுக் கொள்பவர்தாம் சிறந்த மனிதர். நம்முடன் வாழ்பவர்களுக்கு வாழ்க்கை சுலபமாக அமையக் கூடும். நமக்கிருப்பது போன்ற துன்பங்கள் அவருக்கு வராமல் இருக்கக்கூடும். ஆனால் தொடர்ந்து போராடி வெற்றி பெறுங்கள். பிறகு உங்களுக்கும் அவருக்கும் உள்ள வித்தி யாசங்களை நீங்கள் உணர்வீர்கள்; கொஞ்ச காலத்தில் மற்றவர்களும் உணர்வார்கள்.
நான் கற்றுக் கொண்ட சில விஷயங்கள்: (பலருடைய அனுபவங்களிலிருந்து)
என்னை அன்பு செய்யுமாறு நான் யாரையும் வருத்திட முடியாது. நான் செய்யக் கூடியதெல்லாம் அன்பு செலுத்த தகுந்தவனாக என்ன மாற்றிக் கொள்வதுதான். பிறகு அவர்கள் விருப்பம்.
ஒரு சிலர் மீது நான் எவ்வளவு அக்கறை காட்டினாலும் அவர்கள் மீண்டும் என் மீது அக்கறை காட்டுவதில்லை.
மற்றவர்களை ஒரு கால் மணி நேரத்திற்கு வேண்டுமானால் நம் அழகால் வசீகரப்படுத்தலாம். அதற்கு மேல் வசீகரப்படுத்த நமக்கு நாலு விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும்.
மற்றவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதைப் பற்றி நான் அதிகம் கவலைப்பட தேவையில்லை. அவர்கள் அதை எவ்வாறு எதிர் கொண்டார்கள் என்பதான் எனக்கு முக்கியம்.
வாழ்க்கையில் எனக்குப் பிடித்த மனிதனாக நான் மாற நிறைய காலம் பிடிக்கிறது.
நான் அன்பு செய்பவரை விட்டுப் பிரியும் போது கனிவான வார்த்தையுடன் பிரிவது நல்லது. சிலசமயம் அவர்களை மீண்டும் சந்திக்காமலே போகக்கூடும்.
இனி இவர்களுடன் அன்போடு பழகவே முடியாது என நினத்த பிறகும், நீண்ட காலத்திற்கு அன்போடு பழகலாம்.
என் மனப் பான்மையை நான் கட்டுப் படுத்தாவிட்டால் அது என்னைக் கட்டுப்படுத்தி விடும்.
எவ்வளவுதான் ஒரு உறவில் உணர்ச்சிகள் தலைவிரித்து ஆடினாலும் அதையும் மீறி நல்ல காரணங்கள் இல்லாவிட்டால் ஒரு உறவு நீடிக்காது.
என்னை அன்பு செய்பவர்கள் நிஜத்தில் இன்னும் நிறையப் பேர் இருக்கிறார்கள். ஆனால் அதை எப்படி வெளிப்படுத்துவது என்றுதான் அவர்களுக்குத் தெரியவில்லை.
என் உற்ற நண்பருடன் சேர்ந்து ஏதாவது வேல செய்தாலும் சரி, சும்மா இருந்தாலும் சரி, அதைவிட மகிழ்ச்சியான நேரம் இருந்ததில்லை.
நான் வாழ்க்கையில் தவறு செய்துவிட்டு, என்னை இவர்கள் அவமானப்படுத்த போகிறார்கள் என்று யாரைக் கருதினேனோ அவர்கள்தாம் நிறைய சமயம் என்னத் தூக்கி விட்டிருக்கிறார்கள்.
நான் கோபப்படலாம். ஆனால் குரூரமாக நடக்கக்கூடாது.
நான் விரும்பும் வகையில் மற்றவர்கள் என்ன அன்பு செய்யவில்ல என்பதற்காக அவர்கள் என்னை அன்பே செய்யவில்ல என அர்த்தம் கிடயாது.
மரியசார்லஸ்

பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
1. கவனமான பார்வை
2. ஆர்வம், அக்கறை
3, புதிதாகச் சிந்தித்தல்
இந்த மூன்றிற்குமே சிறப்பான பயிற்சி தேவை. அந்தப் பயிற்சிக்காக எந்தப் பயிற்சிக் கூடத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. நமக்கு நாமே பயிற்சி அளித்துக் கொள்ளலாம். அதற்கான சில பயிற்சி முறைகளைப் பார்ப்போம். முதலாவதாக ஒரு பயிற்சி.
ஒன்றிலிருந்து நுõறு வரை எண்ணுங்கள். பிறகு 2,4,6 என்று இரண்டு இரண்டாக எண்ணுங்கள். பிறகு 100 லிருந்து தலைகீழாக, 100, 98 96, என்று இரண்டு இரண்டாகக் குறைத்து எண்ணுங்கள். பிறகு நான்கு நான்காகக் குறையுங்கள். இப்படியே 5,6,7 வரை தாவித் தாவி குறைத்து எண்ணுங்கள். இப்படி ஏழு ஏழாக குறைத்து எண்ணக் கற்றுக் கொண்டீர்கள் என்றால், உங்களுடைய நினைவுத் திறன் நல்ல அளவில் வளர்ந்திருக்கிறது என்று அர்த்தம்.
இப்போது ஓர் ஆங்கிலப் பத்தரிகையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பத்தியில் எஸ். எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். அடுத்து இரண்டு மூன்று பத்திகளில் உள்ள ஏ எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். இப்போது மீண்டும் ஒரு முறை திருப்பிப் பார்த்தீர்கள் என்றால், எத்தனை எஸ் அல்லது ஏவை எண்ணாமல் விட்டிருப்பீர்கள் என்று தெரியவரும். அதை வைத்து உங்கள் நினைவுத் திறனின் அளவை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
புதிய சிந்தனை மூலமும் நினைவுத் திறனை வெகுவாக வளர்த்துக் கொள்ளலாம்.
தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப் பாரங்கள். அந்த விளம்பரம் பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணுங்கள். வேறு எந்த மாதிரி இந்த விளம்பரம் இருந்திருந்தால், இதைவிட நன்றாக இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். சிந்திக்க சிந்திக்க மூளையின் சிந்திக்கும் ஆற்றல் வளர்வதோடு நினைவாற்றலும் பெருகும். முயன்று பாருங்கள்.
இதே போன்று இன்னொரு பயிற்சி. உங்கள் நெற்றியை கற்பனையாக நீங்களே 6 அறைகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒரு அறையை இழுங்கள். அதில் மறுநாள் 9 மணி புரோகிராம் என்று எழுதிப் போடுங்கள். (உதாரணமாக 9 மணிக்க ராம்கோபாலை சந்திக்க வேண்டும் என்று கற்பனையாக எழுதிப் போடுங்கள்). பிறகு அந்த அறையை இழுத்து மூடுங்கள்.
இதே போன்று இரண்டாவது அறையைத் திறந்து இன்னொரு புரோகிராம் எழுதிப் போடுங்கள். அதே போன்று அடுத்தடுத்த நான்கு அறைகளும், இப்படிச் செய்து விட்டால் இரவு படுக்கையில் படுத்ததும் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். இந்த 6 புரோகிராம்களும் அடுத்தடுத்து உங்களை அறியாமலே உங்கள் மனதில் தோன்றும். இன்னும் இதே போன்று நீங்கள் கூட புதிய புதிய முறைகளைக் கையாண்டு உங்கள் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளலாம்.
புத்தகங்களைப் படிப்பது, காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திருந்து அன்றைய நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவது, அபிப்யாசங்கள் செய்வது இதனாலெல்லாம் கூட உங்கள் சிந்திக்கும் திறனையும், நினைவுத்திறனையும் வளர்த்துக் கொண்டே போகலாம்.
உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஓர் இயந்திரம். அதிலும் இதயமும், மூளையும், ஓய்வில்லாத இயந்திரங்கள். இதயம் ஓய்வு எடுத்துக் கொண்டால் வாழ்க்கை நின்று விடும். மூளைக்கு ஓய்வு கொடுத்தால் அது துருப்பிடித்துப் போய் ஒன்றுக்கும் பயனற்று வாழ்க்கை முன்னேற்றம் நின்று போய்விடும்.
ஆகையால் எந்த நேரமும் மூளைக்கு ஏதேனும் வேலை கொடுத்துக்கொண்டே இருங்கள். நினைவாற்றலை மேம்படுத்துங்கள். நினைத்ததைச் சாதியுங்கள்.
-ஜி.வி.ராவ்-

எந்திரமயமான பொருளாதாரத்தை மட்டுமே மையமாகக் கொண்டு அமைந்துவிட்ட வாழ்க்கைச் சூழலில், எங்கெங்கு காணினும்-போட்டிகள், பொறாமைகள், அருவருக்கத்தக்க சூழ்ச்சிகள். மனித வாழ்க்கை ஒரு நாளில் உள்ள 24 மணிநேரமும் அதிகபட்ச விழிப்புணர்வுடன் இருந்தால்தான் வாழ்க்கைப்போராட்டத்தை சமாளிக்க முடியும் என்ற சூழல். உளவியல் ரீதியாக பல முக்கிய காரணங்கள் இருந்தாலும் உறக்கம் வராததற்கு உடலியல் ரீதியாக சில பிரச்சினைகள் இருக்கலாம்.
மூளை மற்றும் நரம்புகள் தொடர்பான பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு, இதயம் தொடர்பான பிரச்சினை இருப்பவர்களுக்கு, உடலில் ஏற்படும் ரசாயன மாற்றத்தால் உறக்கம் பாதிக்கப்படலாம்.
எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தாலும் உறக்கம் தொடர்பான பிரச்சினைகள் வரலாம்.
ஹார்மோன் பிரச்சினைகளாலும் தூக்கமின்மை ஏற்படும்.
தூக்கத்தில் நடப்பது மற்றும் உளறுதல் தூக்க்தில் பற்களை நறநறவென
கடிப்பது; இவை தவிர இன்சோமினியா எனப்படும் தூக்கமின்மை நோயும் ஒரு சிலருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த நோயின் அறிகுறிகள்:சீக்கிரம் விழிப்பு வருதல், அடிக்கடி விழிப்பு வருதல், தூங்கமுடியாமை, காலையில் எழும்போது ஒருவித மந்த நிலை (சுறுசுறுப்புடன் செயல்பட முடியாத நிலை). இதுபோன்ற பிரச்சினைகள் இருப்பவர்கள் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும். உறக்கம் என்பது இயற்கையாக உடலும் உள்ளமும் ஓய்வு பெறுவதற்கு அத்தியாவசியமான ஒன்றாகும்.
ஆழ்ந்த நிலையில் தேவையான அளவு தூங்கி எழுந்தால் உடலும் உள்ளமும் புத்துணர்ச்சியும் உத்வேகமும் பெறும். குழந்தைகளுக்கு பொதுவாகவே 15 முதல் 16 மணி நேரம் தினமும் உறக்கம் தேவை. அதுவே இளம் வயதில் 8 முதல் 9 மணி நேரமும் அதற்கடுத்து உள்ளவர்களுக்கு 7 முதல் 8 மணி நேரம் உறக்கம் தேவை. அதாவது பொதுவாக சராசரியாக ஒரு மனிதனுக்கு தினமும் 8 மணி நேரம் உறக்கம் தேவை.
வாழ்நாளில் மூன்றில் ஒரு பகுதியை உறக்கத்திற்காக ஒதுக்கினால் ஆரோக்கியமான வாழ்வுக்கு உத்தரவாதம். அது மட்டுமல்ல; தெளிவான
சிந்தனையுடன், முழுமையான அர்ப்பணிப்புடன், முழு உழைப்பையும் நமது வேலைகளில் காட்டமுடியும். உறக்கம் தொடர்பாக எந்தப் பிர்ச்சினை இருந்தாலும், மருத்துவரை அணுகி அவர்தம் ஆலோசனையைப் பெற்று அதன்படி செயல்படுவது மிகச்சிறப்பானது. இருப்பினும் நாமும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் சிறப்பாக வாழலாம். அவற்றுள் சில:
உறக்கத்திற்கு என ஒதுக்கப்படும் நேரத்தை (சராசரியாக தினமும் 8 மணி நேரம் மற்றும் குறித்த நேரத்துக்கு) முழுமையாக முறையாகப் படுத்து, பயன்படுத்த வேண்டும்.
உறங்குவதற்கு முன் மது வகைகளை பயன்படுத்தக்கூடாது. படுக்கைக்கு முன் புகைபிடிப்பதோ இடையில் விழிப்பு வந்தால் புகை பிடிப்பதோ கூடாது.
படுப்பதற்கு முன் அளவுக்கு அதிகமாக உணவு உட்கொள்ளக் கூடாது. மிதமான அளவு உணவு உட்கொண்ட பின் ஒன்றரை அல்லது இரண்டு மணி நேரம் கழித்து உறங்குவது நல்லது.
தினமும் உடற் பயிற்சி செய்வதைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உறங்குவதற்கு 4 அல்லது 5 மணி நேரம் முன்னதாக உடற்பயிற்சி செய்தால் ஆழ்ந்த உறக்கத்திற்கு வழி கிடைக்கும்.
உறங்கும் நேரத்தில் அதிக அளவு ஒலி-ஒளி இரைச்சல்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இரவில் குறிப்பிட்ட நேரத்தில் உறங்கி அதிகாலையில் குறித்த நேரத்துக்கு விழித்துக்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
தியானம், யோகா போன்ற பயனுள்ள பயிற்சிகளை செய்யலாம். உறங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாக மனதுக்கு மகிழ்ச்சி தரும் புத்தகங்களைப் படிப்பது மற்றும் பாடல்களையோ, இசையையோ கேட்பதை வாடிக்கையாகக் கொள்ளலாம். படுக்கைக்குச் செல்லும் முன், கவலைகளை மறந்துவிட்டு உறங்குவதை மட்டுமே நோக்கமாகக் கொள்ள வேண்டும்.
வாய்ப்புள்ள போதே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதற்காக கண்ணிரண்டையும் விற்று சித்திரம் வாங்குவதைப் போல ஆகிவிடாமலும், உடலும் உள்ளமும் முழு ஓய்வு பெறும் வகையில், ஆழ்ந்த தேவையான உறக்கத்தைப் பெற்று நோய் நொடியின்றி அமைதியாக நாமும் வாழ்ந்து மற்றவர்களும் வாழ வழி விடுவோம்.
நந்தினி ஹரிகுமார்
மூளை மற்றும் நரம்புகள் தொடர்பான பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு, இதயம் தொடர்பான பிரச்சினை இருப்பவர்களுக்கு, உடலில் ஏற்படும் ரசாயன மாற்றத்தால் உறக்கம் பாதிக்கப்படலாம்.
எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தாலும் உறக்கம் தொடர்பான பிரச்சினைகள் வரலாம்.
ஹார்மோன் பிரச்சினைகளாலும் தூக்கமின்மை ஏற்படும்.
தூக்கத்தில் நடப்பது மற்றும் உளறுதல் தூக்க்தில் பற்களை நறநறவென
கடிப்பது; இவை தவிர இன்சோமினியா எனப்படும் தூக்கமின்மை நோயும் ஒரு சிலருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த நோயின் அறிகுறிகள்:சீக்கிரம் விழிப்பு வருதல், அடிக்கடி விழிப்பு வருதல், தூங்கமுடியாமை, காலையில் எழும்போது ஒருவித மந்த நிலை (சுறுசுறுப்புடன் செயல்பட முடியாத நிலை). இதுபோன்ற பிரச்சினைகள் இருப்பவர்கள் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும். உறக்கம் என்பது இயற்கையாக உடலும் உள்ளமும் ஓய்வு பெறுவதற்கு அத்தியாவசியமான ஒன்றாகும்.
ஆழ்ந்த நிலையில் தேவையான அளவு தூங்கி எழுந்தால் உடலும் உள்ளமும் புத்துணர்ச்சியும் உத்வேகமும் பெறும். குழந்தைகளுக்கு பொதுவாகவே 15 முதல் 16 மணி நேரம் தினமும் உறக்கம் தேவை. அதுவே இளம் வயதில் 8 முதல் 9 மணி நேரமும் அதற்கடுத்து உள்ளவர்களுக்கு 7 முதல் 8 மணி நேரம் உறக்கம் தேவை. அதாவது பொதுவாக சராசரியாக ஒரு மனிதனுக்கு தினமும் 8 மணி நேரம் உறக்கம் தேவை.
வாழ்நாளில் மூன்றில் ஒரு பகுதியை உறக்கத்திற்காக ஒதுக்கினால் ஆரோக்கியமான வாழ்வுக்கு உத்தரவாதம். அது மட்டுமல்ல; தெளிவான
சிந்தனையுடன், முழுமையான அர்ப்பணிப்புடன், முழு உழைப்பையும் நமது வேலைகளில் காட்டமுடியும். உறக்கம் தொடர்பாக எந்தப் பிர்ச்சினை இருந்தாலும், மருத்துவரை அணுகி அவர்தம் ஆலோசனையைப் பெற்று அதன்படி செயல்படுவது மிகச்சிறப்பானது. இருப்பினும் நாமும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் சிறப்பாக வாழலாம். அவற்றுள் சில: உறக்கத்திற்கு என ஒதுக்கப்படும் நேரத்தை (சராசரியாக தினமும் 8 மணி நேரம் மற்றும் குறித்த நேரத்துக்கு) முழுமையாக முறையாகப் படுத்து, பயன்படுத்த வேண்டும்.
உறங்குவதற்கு முன் மது வகைகளை பயன்படுத்தக்கூடாது. படுக்கைக்கு முன் புகைபிடிப்பதோ இடையில் விழிப்பு வந்தால் புகை பிடிப்பதோ கூடாது.
படுப்பதற்கு முன் அளவுக்கு அதிகமாக உணவு உட்கொள்ளக் கூடாது. மிதமான அளவு உணவு உட்கொண்ட பின் ஒன்றரை அல்லது இரண்டு மணி நேரம் கழித்து உறங்குவது நல்லது.
தினமும் உடற் பயிற்சி செய்வதைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உறங்குவதற்கு 4 அல்லது 5 மணி நேரம் முன்னதாக உடற்பயிற்சி செய்தால் ஆழ்ந்த உறக்கத்திற்கு வழி கிடைக்கும்.
உறங்கும் நேரத்தில் அதிக அளவு ஒலி-ஒளி இரைச்சல்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இரவில் குறிப்பிட்ட நேரத்தில் உறங்கி அதிகாலையில் குறித்த நேரத்துக்கு விழித்துக்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
தியானம், யோகா போன்ற பயனுள்ள பயிற்சிகளை செய்யலாம். உறங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாக மனதுக்கு மகிழ்ச்சி தரும் புத்தகங்களைப் படிப்பது மற்றும் பாடல்களையோ, இசையையோ கேட்பதை வாடிக்கையாகக் கொள்ளலாம். படுக்கைக்குச் செல்லும் முன், கவலைகளை மறந்துவிட்டு உறங்குவதை மட்டுமே நோக்கமாகக் கொள்ள வேண்டும்.
வாய்ப்புள்ள போதே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதற்காக கண்ணிரண்டையும் விற்று சித்திரம் வாங்குவதைப் போல ஆகிவிடாமலும், உடலும் உள்ளமும் முழு ஓய்வு பெறும் வகையில், ஆழ்ந்த தேவையான உறக்கத்தைப் பெற்று நோய் நொடியின்றி அமைதியாக நாமும் வாழ்ந்து மற்றவர்களும் வாழ வழி விடுவோம்.
நந்தினி ஹரிகுமார்
நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா, தனுஷ் ஆகிய இருவரின் திருமணத்தை ஒட்டி பரபரப்பாக பல்வேறு விஷயங்கள் சொல்லப்பட்டாலும், மிக முக்கியமாக சொல்லப்பட்ட விஷயம், ஐஸ்வர்யாவை விட தனுஷ் மூன்று வயது சிறியவர் என்பதுதான்!தனுஷ், தன் திருமணம் பற்றி பிரஸ்மீட்டில் அறிவித்தபோதே இதை ஒரு கேள்வியாகவே தனுஷிடம் கேட்டார்கள் பத்திரிகையாளர்கள்!
அதனாலென்ன? என்று மிகச் சாதாரணமாக பதில் கேள்வி கேட்டார் தனுஷ்.
நடிகர் தனுஷ் மட்டுமல்ல.. நம்மைக் கவர்ந்த பல கிரிக்கெட் நட்சத்திரங்கள் கூட தங்களைவிட வயது அதிகமான பெண்களைத்தான் காதலித்துத் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
பெங்களூரில் ஏர்போர்ட் செல்லும் சாலையில் இருக்கிறது அந்தப் பல மாடிக் கட்டடம். அங்கே வேலை செய்யும் தன் நண்பன் அனிலைப் பார்க்க அந்தக் கட்டடத்துக்கு எப்போதாவது ஒரு முறை வருவார் உயரமான அந்த இளைஞர்.
கூடிய விரைவிலேயே எப்போதாவது ஒருமுறை என்ற நிலை மாறி அடிக்கடி அந்த இளைஞர் அங்கே வர ஆரம்பித்தார். காரணம், இனிமையாகப் பேசும் ஜெயந்தி.
அழகும் புத்திசாலித்தனமும் நிறைந்த அந்தப் பெண், எப்படியோ அந்த இளைஞரின் மனதை அந்தளவுக்கு வசீகரித்திருந்தார். இத்தனைக்கும் அந்தப் பெண் அந்த இளைஞரை விட ஏழு வயது பெரியவர்.
ஆனால் அந்த இளைஞருக்கு அந்தப் பெண்ணைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் மனசு சந்தோஷமாக இருந்தது.
ஒரு பெரிய நிறுவனத்தின் பொறுப்பான, டென்ஷன் மிகுந்த உத்தியோகத்தில் இருந்தும் அவர் முகத்தில் எப்போதும் இருந்த அந்தப் புன்னகை... தன்னுடன் வேலை செய்யும் மற்றவர்களுடன் மிக இயல்பாகக் கலந்து பழகிய தன்மை... அங்கே வேலை செய்பவர்களுக்கு ஏற்படும் பெரிய பிரச்னைகளுக்குக்கூட அழகாய் யோசித்து தீர்வு அளித்த பொறுமை... குறிப்பாக அடிக்கடி சிரிக்கும் அந்தப் பெண்ணின் பளீர் சிரிப்பு என்று எல்லாமே அவருக்குப் பிடித்துப் போய்விட்டது.
தன் மனசைத் திறந்து ஒரு நாள் ஐ லவ் யூ சொன்னார் அந்த இளைஞர். ˜நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க விருப்பப்படறேன்... என்றும் தன் மனசைக் கொட்டினார்.
இவர்களுக்குத் திருமணமாகி இன்று அழகான ஆண் குழந்தையும் இருக்கிறது. பெங்களூரில் மரங்கள் அடர்ந்த குளிர்ச்சியான இந்திரா நகர் பகுதியில் இருக்கிறது இன்று இவர்களது இனிமையான வீடு...
அனில் கும்ப்ளே என்ற தன் நண்பனை (கிரிக்கெட் ஸ்டார்தான்!) பார்க்க வந்து, ஜெயந்தியைக் காதலித்துக் கைப்பிடித்த அந்த உயரமான இளைஞர் வேறு யாருமல்ல.. மற்றொரு கிரிக்கெட் வீரரான வெங்கடேஷ் பிரசாத்தான்!
தன்னைவிட வயதில் பெரிய பெண்ணை திருமணம் செய்தது குறித்து வெங்கடேஷ் பிரசாத்துக்கு எந்தவித தர்மசங்கடமும் வந்ததில்லை. சொல்லப்போனால் மற்ற தம்பதியரையும்விட இவர்களது தாம்பத்ய வாழ்க்கை
இன்னும் அதிக சந்தோஷமாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது!கிரிக்கெட் சூப்பர் ஸ்டாரான சச்சின் டெண்டுல்கர், காதலித்துக் கைப்பிடித்த மனைவி டாக்டர் அஞ்சலி, சச்சினை விட ஐந்து வயது மூத்தவர்!
சுத்திச் சுத்தி வந்தீக என்று பாடாத குறையாக ரோமியைச் சுற்றிச் சுற்றி வந்து காதலித்துக் கைப்பிடித்த கபில்தேவ், தன் மனைவியை விட நாலு வயது இளையவர்.
இளம் பெண்களால் வெறித்தனமாகக் காதலிக்கப்பட்ட ஹீரோவான அனில் கும்ப்ளே கூட, தன்னைவிட வயதில் மூத்த ஒரு பெண்ணைத்தான் கடைசியில் திருமணம் செய்து கொண்டார்.
(கங்குலி_நக்மா காதல் பற்றிப் பத்திரிகைகளில் அடிபட்டபோது கூட, பலரது கவனத்தையும் கவர்ந்த விஷயம் அவர்களது வயது வித்தியாசம்தான். நக்மாவைவிட கிட்டத்தட்ட ஆறு வயது இளையவர் கங்குலி)
பொதுவாக நம்மூரில், கணவனை விட மனைவி இரண்டு மூன்று வயதாவது சிறியவராக இருக்க வேண்டும் என்று பார்த்து திருமணம் முடிப்பதுதான் வழக்கம். அந்த வழக்கத்தை மீறிய விஷயம் என்பதாலேயே இதுபோன்ற திருமணங்கள் பரபரப்பாகப் பேசப்படுகின்றன.
இதுபோன்ற திருமணங்கள் சற்றே அரிதான விஷயம்தான் என்றாலும், இதற்கு முன் நம்மூரில் நடக்காமல் இல்லை. மகாத்மா காந்தி கூட தன்னைவிட நான்கு வயது மூத்த கஸ்தூரி பாயைத்தான் திருமணம் செய்துகொண்டார் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் காந்தி_கஸ்தூரிபாய் விஷயத்தில் ஒரு
முக்கியமான, பெரிய வித்தியாசம் இருக்கிறது.
காந்தியின் திருமணம், வீட்டுப் பெரியவர்களால் பார்த்து ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்று. அவரே தேடிப்போன உறவில்லை..
ஆனால் மேலே சொன்ன கிரிக்கெட் வீரர்களுடையது காதல் திருமணம்! அவர்களே விரும்பிப் போய் தேடிக்கொண்ட உறவு!
சரி.. விஷயத்துக்கு வருவோம்! ஏன் சில ஆண்கள் தங்களைவிட வயது அதிகமுள்ள பெண்களை விரும்பித் திருமணம் செய்கிறார்கள்?
சில ஆண்களுக்கு, சூழ்நிலையின் காரணத்தால் டென்ஷன் நிறைந்த ஒரு வாழ்க்கை அமைகிறது. அந்த வாழ்க்கையை அவர்கள் பாலன்ஸ் செய்ய நினைக்கும் போதுதான் தன்னைத் தாங்கித் தோள் கொடுக்கவும், தன் பிரச்னைகளைத் தீர்த்து ஆறுதல் சொல்லி, தனக்குத் தெளிவூட்டவும் தன்னையறியாமல் அவர்கள் மனசு இப்படிப்பட்ட பெண்களை நாடுகிறது என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள்.
இதுபற்றி சற்றே விரிவாகப் பார்ப்போம்... உதாரணமாக கிரிக்கெட்டிலேயே, எதிர்பாராத அடியாக திடீரென்று தோல்வி வந்து தாக்கும்... தோல்வியடைந்து விடுவோமோ என்று துவண்டு கொண்டிருக்கும் ஒரு நேரம் திடீரென்று வெற்றி வந்து, காலில் விழும்! இதெல்லாம் இந்த ஃபீல்டில் அடிக்கடி நடக்கும் ஒன்று. அது மட்டுமல்ல.. திடீரென ஒரே இரவில் உலக அளவிலான ஸ்டாராகி விடுவதில் ஏற்படும் உணர்வு ரீதியான தத்தளிப்புகள் வேறு...
சரியாக மீசை, தாடி கூட வளர ஆரம்பிக்காத இருபதுகளின் ஆரம்பத்திலேயே, பெரும்பாலான கிரிக்கெட் வீரர்களுக்கு இப்படிப்பட்ட புகழும், பணமும், திடீர் முக்கியத்துவமும் கிடைக்க ஆரம்பிக்கிறது.. அதை எப்படி ஹேண்டில் செய்வது என்றுகூட தெரியாத ஒரு நிலையில் அவர்களில் பலர் உணர்வு ரீதியிலான தத்தளிப்புகளுக்கும், டென்ஷனுக்கும் ஆளாகி விடுகின்றனர்.
அதை பாலன்ஸ் செய்து, தன் டென்ஷனைக் குறைத்து தனக்கு வழிகாட்ட பொறுப்பும், திறமையும் மிக்க ஒரு துணையை ரகசியமாக உள்மனசு
ஒருபக்கம் தேடிக் கொண்டிருக்கிறது.தன்மேல் அக்கறையுடன் பேசும் வயசு கூடுதலான பெண்களைப் பார்த்ததும் தன்னையறியாமல் அவர்களது மனதுக்கு மிகவும் பிடித்துப் போகிறது.
ஜாலியாக, எந்தப் பொறுப்பும் இல்லாமல் சுற்றிவரும் இளம் பெண்கள், மேலே குறிப்பிட்ட பெண்கள் அளவுக்கு இதுபோன்ற கிரிக்கெட் வீரர்களின் மனசில் பெரிதாக இடம் பிடிக்காமல் போவதும் இதனால்தான்.
தனுஷைப் பொறுத்தவரையும் கூட, அவருக்குக் கிடைத்ததும் எதிர்பாராத புகழ்தான்! இருபது வயதிலேயே இரண்டு கோடி வாங்கும் ஹீரோவாக சட்டென்று புகழ் வெளிச்சத்துக்கு வந்தார். அவரால் சாதாரணமாக யாரிடமும் வெளியே, நாலு வார்த்தைகூடப் பேச முடியவில்லை... ஃப்ரீயாக நடக்க முடியவில்லை. எல்லாமே பேப்பரில் வந்தது. அவர் விஷயமாக தயாரிப்பாளர்கள் பேசினாலும் சரி, அப்பா பேசினாலும் சரி, பத்திரிகைகளில்
கவர் ஸ்டோரியாக வந்தது!
ஃபுட் வேர்ல்டில் சேல்ஸ் பையனாக வேலை செய்தபோது இருந்த அமைதிகூட, புகழ்பெற்ற பிறகு அவருக்குக் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. பாவம் தனுஷ்.... அவன் வயதில் அனுபவிக்க வேண்டிய நார்மலான விஷயங்களைக்கூட அவனால் அனுபவிக்க முடியவில்லை. அவனை ஏண்டா நடிக்க வைத்தோம் என்றிருக்கிறது என்று தனுஷின் அண்ணன் செல்வராகவன் கூட ஒரு தரம் பேட்டியில் சொல்லியிருந்தார்.
இவை எல்லாவற்றையுமே தவிர, இயல்பாகவே சில ஆண்கள், தங்களைவிட பெண்கள் புத்திசாலிகளாகவும், நிர்வாகத்தில் சிறந்தவர்களாகவும் இருப்பதை மிகவும் விரும்புகிறார்கள். அதன் விளைவுதான் இன்று, வயது ஒரு பிரச்னையே இல்லை என்கிற அளவில் சில காதல் திருமணங்கள் நடக்க ஆரம்பித்திருக்கின்றன.
கணவன்_மனைவி, காதலன்_காதலி, நண்பர்கள்_உடன் பணிபுரிபவர்கள் என்று, இரண்டு பேருக்குமிடையே உருவாகும் எந்த ஒரு உறவுமே ஒரு எதிர்பார்ப்புடன்தான் ஆரம்பிக்கின்றது என்று உறுதியாகக் கூறுகிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள்.
உதாரணமாக, எனக்கு என் நண்பன்கிட்டே எந்த எதிர்பார்ப்பும் இல்லே.. ஒருத்தருக்கொருத்தர் மனசுவிட்டுப் பேசுவோம். அவ்வளவுதான்! என்று சிலர் சொல்வதுண்டு.
உண்மையில் மனசுவிட்டுப் பேச ஒரு நம்பிக்கையான ஆள் என்ற எதிர்பார்ப்புதானே வெளியில் தெரியாமல் அவர்கள் உறவை பலப்படுத்தி இருக்கிறது!
ஆக, எல்லாவித உறவுகளுக்குமே ஒரு எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது!
அதற்காக இப்படியரு எதிர்பார்ப்பைக் கையில் ஏந்திக்கொண்டு நாம் ஒவ்வொருவரும் அலைகிறோம் என்று அர்த்தமல்ல.. நமக்கும் தெரியாமலேயே நம் ஆழ்மனசில், நாம் தேடும் உறவு குறித்த எதிர்பார்ப்பு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
சரியான அடையாளங்களுடன் அப்படியருத்தரை நாம் கண்டடையும் போது ஆ.. இதுதான்! இதற்காகத்தான்! என்று மனசு குதூகலித்துக் காட்டிக் கொடுக்கிறது. அந்த சந்தோஷத்தை விரும்பியே அந்தப் புதிய உறவை நாம் ஏற்படுத்திக் கொள்கிறோம்!
சரிதானே!
குமுதம்.
கணவன்-மனைவி இடையே எந்த ரகசியமும் இருக்கக் கூடாது. இருவரும்
ஒருவரை ஒருவர் அகமும் புறமும் அறிந்திருக்க வேண்டுமென்று பொதுவாகச் சொல்வார்கள். ஆனால் அப்படி திறந்த புத்தகமாக இருக்காதீர்கள், அது நன்மையை விட தீமையைத் தான் அதிகம் ஏற்படுத்தும் என்கிறார்கள் உளவியல் நிபுணணர்கள். தம்பதிகள் காக்கும் தலையாய ரகசியங்களாக அவர்கள் கூறும் விஷயங்கள்.
பழைய நட்பு, காதல்…
திருமண வாழ்க்கை மீதும், புதிதாக வாழ்வில் இணைந்திருக்கும் கணவர் மீதும் அளவற்ற மரியாதை வைத்திருக்கும் பெண்கள், தங்களின் முந்தைய காதல், நட்பு பற்றி வெளிப்படையாகச் சொல்ல வேண்டும், இல்லற வாழ்க்கையை ரகசியங்களுடன் ஆரம்பிக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள். ஆனால் அது வேலைக்காகாது. நல்ல 'மூடில்' அதை ரசித்துக் கேட்கும் கணவர் கூட, பின்னாளில் பிரச்சனை என்று வரும் போது அதைக் குத்திக் காட்டலாம். மனைவி முன்பு செய்த தவறை ஏன் மீண்டும் செய்யமாட்டாள் என்று கணவன் நினைக்கலாம். கணவன் 'ஆட்டோ கிராப்' பாணியில் தனது காதலை விவரித்தால், மறுபடியும் அவர் மலர் தாவ நினைப்பாரோ என்று மனைவிக்குச் சந்தேகம் எழலாம். எனவே இந்த விஷயத்தில் வாயை இறுக மூடிக் கொண்டிருப்பதே நல்லது.
பண விவகாரம்
தம்பதிகளுக்கு இடையே நடைபெறும் 60 சதவீத வாக்குவாதங்கள் பணம் தொடர்பானவையே. கணவன்-மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் வங்கி அக்கவுண்ட் விவரங்கள், பின் நம்பர்கள், பாஸ்வேர்டுகள் போன்றவற்றை அப்படியே ஒப்பிக்க வேண்டியதில்லை என்கிறார்கள். இது ஒருவர் நிதி விவகாரத்தில் ஒருவர் புகுந்து பிரச்சினை ஏற்படுத்த வழிவகுக்கலாம்;.
கணவன் மனைவியாக இருந்தாலும் அவரவர் தனித்தனியாக செலவழிக்க நினைக்கும் விஷயங்கள் இருக்கலாம். அக்கவுண்ட் நம்பர், பின் நம்பர்களை அறிந்திருப்பதனால், அந்த செலவு பற்றி துணை அறிய நேரும் போது, 'ஏன் அந்தச் செலவு தேவையா?' என்ற கேள்வியை எழுப்ப நேரலாம். எரிச்சலை ஏற்படுத்தலாம். ஆனால் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்யப் போகிறீர்கள் அல்லது சேமிப்புத் திட்டத்தில் ஈடுபடப் போகிறீர்கள் என்றால் குடும்பத்தில் விவாதித்துக் கொள்வது நல்லது.
நண்பர்களைப் பற்றிய ரகசியங்கள்.
கணவன் - மனைவி தங்களுடன் படித்த, வேலை பார்த்த நண்பர்களைப் பற்றிய மிகவும் ரகசியமான விஷயங்களைப் பேச்சு சுவாரசியத்தில் பரிமாறிக் கொள்ள வேண்டாம். இவ(ர்) சரியான ஓட்டை வாயா இருப்பா(ர்) போலிருக்கிறதே? என்ற எண்ணத்தை அது ஏற்படுத்தும். இருவர் சம்பந்தப் படாத மூன்றாம் நபர் பற்றிய விஷயம் தானே என்று நீங்கள் நினைக்கலாம். அது நினைத்துப் பார்த்திராத, எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தும். 'அறியாமல் தவறு செஞ்சீட்டிங்க.. இதை நான் யாரிடமும் சொல்ல மாட்டேன்' என்று உங்கள் நண்பர், தோழிக்கு உறுதி அளித்திருந்தால் அது உங்களின் துணையையும்
சேர்த்து தான். உங்கள் நண்பரைப் பொறுத்தவரை உங்கள் துணை மூன்றாம் நபர் தான். அவரிடம் உங்கள் நண்பர் பற்றிய ரகசியங்களைப் போட்டுடைப்பது எந்த வகையில் நியாயம்?
குடும்ப விஷயங்கள்.
ஒவ்வொரு குடும்பமும் வெளியே கசியாமல் பாதுகாக்கும் ரகசியங்கள் உண்டு. அவற்றையும், குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் பற்றிய அந்தரங்க, வெளித் தெரியாத விஷயங்களைப் பட்டியலிட்டு கூற வேண்டுமென்பதில்லை. கணவன் - மனைவிக்கு இடையே வாய்ச் சண்டை ஏற்படும் போது நீ(ங்க) அப்படிப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவ(ங்க) தானே? என்ற வார்த்தை வந்து, குடும்ப நிம்மதிக்கு 'குண்டு' வைத்து விடலாம். தவிர உறவினர் ஒருவரின் நடத்தை, பழக்க வழக்கம் பற்றி துணையிடம் விவரிக்கும் போது அவர், குறிப்பிட்ட உறவினரைச் சந்திக்கும் முன்பே ஒரு முன் முடிவுக்கு வந்து விடுவார். அது நன்மை தராது.
அலுவலக ரகசியங்கள்.
ஒவ்வொரு அலுவலகத்திலும் வெளியே தெரிய விடாமல் காக்க வேண்டிய ரகசியங்கள் என்று எழுதப்படாத விதி உள்ளது. துணையிடம் கூட அதை மீறக் கூடாது. அது நீங்கள் பணி புரியும் அலுவலகத்துக்குக் கொடுக்கும் மரியாதை மட்டுமல்ல, அடிப்படை நெறியும் கூட. அலுவலக விஷயம் பற்றி மனைவி
ஆவலாகக் கேட்டால் கூட, 'நீ வெளியே சொல்ல மாட்டாய்(மாட்டீர்கள்). நான் நம்புகிறேன். ஆனால் இதைச் சொல்வது சரியாக இருக்காது.' என்று மென்மையாகக் கூறலாம். 'அதையெல்லாம் சொல்லக் கூடாது' என்று ஆரம்பத்திலேயே வெட்டி விடுவதும் நல்லது தான். ஒரு நிறுவனம் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைத் தகர்ப்பது சரியாகாது. சட்டத்துறை, ஊடகத்துறை, மருத்துவத் துறைகளுக்கு இது மிக முக்கியமாகப் பொருந்தும்.
paristamil.com
பழைய நட்பு, காதல்…
திருமண வாழ்க்கை மீதும், புதிதாக வாழ்வில் இணைந்திருக்கும் கணவர் மீதும் அளவற்ற மரியாதை வைத்திருக்கும் பெண்கள், தங்களின் முந்தைய காதல், நட்பு பற்றி வெளிப்படையாகச் சொல்ல வேண்டும், இல்லற வாழ்க்கையை ரகசியங்களுடன் ஆரம்பிக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள். ஆனால் அது வேலைக்காகாது. நல்ல 'மூடில்' அதை ரசித்துக் கேட்கும் கணவர் கூட, பின்னாளில் பிரச்சனை என்று வரும் போது அதைக் குத்திக் காட்டலாம். மனைவி முன்பு செய்த தவறை ஏன் மீண்டும் செய்யமாட்டாள் என்று கணவன் நினைக்கலாம். கணவன் 'ஆட்டோ கிராப்' பாணியில் தனது காதலை விவரித்தால், மறுபடியும் அவர் மலர் தாவ நினைப்பாரோ என்று மனைவிக்குச் சந்தேகம் எழலாம். எனவே இந்த விஷயத்தில் வாயை இறுக மூடிக் கொண்டிருப்பதே நல்லது.
பண விவகாரம்
தம்பதிகளுக்கு இடையே நடைபெறும் 60 சதவீத வாக்குவாதங்கள் பணம் தொடர்பானவையே. கணவன்-மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் வங்கி அக்கவுண்ட் விவரங்கள், பின் நம்பர்கள், பாஸ்வேர்டுகள் போன்றவற்றை அப்படியே ஒப்பிக்க வேண்டியதில்லை என்கிறார்கள். இது ஒருவர் நிதி விவகாரத்தில் ஒருவர் புகுந்து பிரச்சினை ஏற்படுத்த வழிவகுக்கலாம்;.
கணவன் மனைவியாக இருந்தாலும் அவரவர் தனித்தனியாக செலவழிக்க நினைக்கும் விஷயங்கள் இருக்கலாம். அக்கவுண்ட் நம்பர், பின் நம்பர்களை அறிந்திருப்பதனால், அந்த செலவு பற்றி துணை அறிய நேரும் போது, 'ஏன் அந்தச் செலவு தேவையா?' என்ற கேள்வியை எழுப்ப நேரலாம். எரிச்சலை ஏற்படுத்தலாம். ஆனால் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்யப் போகிறீர்கள் அல்லது சேமிப்புத் திட்டத்தில் ஈடுபடப் போகிறீர்கள் என்றால் குடும்பத்தில் விவாதித்துக் கொள்வது நல்லது.
நண்பர்களைப் பற்றிய ரகசியங்கள்.
கணவன் - மனைவி தங்களுடன் படித்த, வேலை பார்த்த நண்பர்களைப் பற்றிய மிகவும் ரகசியமான விஷயங்களைப் பேச்சு சுவாரசியத்தில் பரிமாறிக் கொள்ள வேண்டாம். இவ(ர்) சரியான ஓட்டை வாயா இருப்பா(ர்) போலிருக்கிறதே? என்ற எண்ணத்தை அது ஏற்படுத்தும். இருவர் சம்பந்தப் படாத மூன்றாம் நபர் பற்றிய விஷயம் தானே என்று நீங்கள் நினைக்கலாம். அது நினைத்துப் பார்த்திராத, எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தும். 'அறியாமல் தவறு செஞ்சீட்டிங்க.. இதை நான் யாரிடமும் சொல்ல மாட்டேன்' என்று உங்கள் நண்பர், தோழிக்கு உறுதி அளித்திருந்தால் அது உங்களின் துணையையும்
சேர்த்து தான். உங்கள் நண்பரைப் பொறுத்தவரை உங்கள் துணை மூன்றாம் நபர் தான். அவரிடம் உங்கள் நண்பர் பற்றிய ரகசியங்களைப் போட்டுடைப்பது எந்த வகையில் நியாயம்?குடும்ப விஷயங்கள்.
ஒவ்வொரு குடும்பமும் வெளியே கசியாமல் பாதுகாக்கும் ரகசியங்கள் உண்டு. அவற்றையும், குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் பற்றிய அந்தரங்க, வெளித் தெரியாத விஷயங்களைப் பட்டியலிட்டு கூற வேண்டுமென்பதில்லை. கணவன் - மனைவிக்கு இடையே வாய்ச் சண்டை ஏற்படும் போது நீ(ங்க) அப்படிப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவ(ங்க) தானே? என்ற வார்த்தை வந்து, குடும்ப நிம்மதிக்கு 'குண்டு' வைத்து விடலாம். தவிர உறவினர் ஒருவரின் நடத்தை, பழக்க வழக்கம் பற்றி துணையிடம் விவரிக்கும் போது அவர், குறிப்பிட்ட உறவினரைச் சந்திக்கும் முன்பே ஒரு முன் முடிவுக்கு வந்து விடுவார். அது நன்மை தராது.
அலுவலக ரகசியங்கள்.
ஒவ்வொரு அலுவலகத்திலும் வெளியே தெரிய விடாமல் காக்க வேண்டிய ரகசியங்கள் என்று எழுதப்படாத விதி உள்ளது. துணையிடம் கூட அதை மீறக் கூடாது. அது நீங்கள் பணி புரியும் அலுவலகத்துக்குக் கொடுக்கும் மரியாதை மட்டுமல்ல, அடிப்படை நெறியும் கூட. அலுவலக விஷயம் பற்றி மனைவி
ஆவலாகக் கேட்டால் கூட, 'நீ வெளியே சொல்ல மாட்டாய்(மாட்டீர்கள்). நான் நம்புகிறேன். ஆனால் இதைச் சொல்வது சரியாக இருக்காது.' என்று மென்மையாகக் கூறலாம். 'அதையெல்லாம் சொல்லக் கூடாது' என்று ஆரம்பத்திலேயே வெட்டி விடுவதும் நல்லது தான். ஒரு நிறுவனம் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைத் தகர்ப்பது சரியாகாது. சட்டத்துறை, ஊடகத்துறை, மருத்துவத் துறைகளுக்கு இது மிக முக்கியமாகப் பொருந்தும்.paristamil.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக