வியாழன், 25 ஜூன், 2009

2009-06-25

சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மத்திய மந்திரி ப.சிதம் பரமும், அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் பலர் போட்டியிட்டனர். ப.சிதம்பரம் வெற்றி பெற்றார். இதில் முறைகேடு நடந்ததாக அ.தி.மு.க. சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் இன்று சென்னை ஐகோர்ட்டில் ராஜகண்ணப்பன் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், ப.சிதம்பரம் வெற்றி பெற்றதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். மேலும் இந்த தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும். நான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த மனுவை ராஜகண்ணப்பன் நேரில் வந்து தாக்கல் செய்தார். TNC
விஜ‌ய் டி‌வி‌‌யி‌ல் ஒ‌ளிபர‌ப்பா‌‌கி வரு‌ம் அடுத்த நடனப் புயலுக்கான தேடலான உங்களில் யார் அடுத்த பிரபு தேவா நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நேயர்கள் முன் நடத்தப்பட்டு விஜய் டிவியில் நேரடியாக ஒளிபரப்பும் செய்யப்பட உ‌ள்ளது.

தொலை‌க்கா‌ட்‌சிக‌ளி‌ல் ஒரு புதிய முயற்சிதான், இந்தியாவின் அடுத்த நடனப்புயலுக்கான தேடலான - உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சி. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத‌ம் துவ‌ங்‌கிய இ‌ந்த ‌நிக‌ழ்‌ச்‌சி ர‌சி‌க‌ர்களை ‌மிகவு‌ம் கவ‌ர்‌ந்த ‌நிக‌‌‌‌‌ழ்‌ச்‌சியாகு‌ம்.

யா‌ர் அடு‌த்த ‌பிரபுதேவா போ‌ட்டி‌ ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் ப‌ங்கே‌ற்ற ஆயிரக்கணக்கான இளைஞர்களில் இறுதியாக நா‌ன்கு பே‌ர் இறுதி சுற்றுக்கு தேர்வாகியுள்ளனர்.

தே‌ர்வா‌கியு‌ள்ள பிரேம் கோபால், செரிஃப், நந்தா மற்றும் மனோஜ் குமார் ஆகியோர் இறுதிப்போட்டியில் மோதுகின்றனர். தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் இதுபோன்ற ஒரு நடன நிகழ்ச்சி நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். இதில் பங்குபெறும் போட்டியாளர்கள் தங்களின் நடனங்களை தானே வடிவமைத்து ஆடுவதுதான் இதன் சிறப்பம்சமாகும்.

வரும் வெள்ளியன்று நடைபெறும் நேரடி இறுதிப்போட்டியில் நடனப்புயல் பிரபுதேவா கலந்துகொள்கிறார். போட்டியாளர்களின் நடனத்தை பார்க்கவும் 'அடுத்த பிரபு தேவா' யார் என்பதை அறிவிக்கவும் அவர் நேரில் வருகிறார்.
இறுதி சுற்று‌ப் போட்டியில் நான்கு போட்டியாளர்களும் இரண்டு கட்டமாக போட்டி‌யிட உள்ளனர். முதல் சுற்றில் மேற்கத்திய நடனமும் இரண்டாம் சுற்றில் போட்டியாளர்களின் விருப்பத்திற்கும் நடனமாடுகின்றனர். உ‌ங்களில் யார் அடுத்த பிரபுதேவா போட்டியில் வெற்றி பெறும் நபருக்கும் இந்தியாவின் மைகேல் ஜாக்சனான பிரபுதேவாவிடம் இருந்து பட்டம் பெறுவதைத் தவிர ரூபாய் 10 லட்சம் பரிசுத் தொகையும் கிடைக்கப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வ‌ரு‌ம் வெள்ளி‌க்‌கிழமை அதாவது ஜூன் 26ஆ‌ம் தே‌தி மாலை 6:30 மணியிலிருந்து அடுத்த பிரபுதேவாவுக்கான மகுடம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள Y.M.C.A வளாகத்தில் நடைபெறுகிறது. மிக பிரம்மா‌ண்டமாக ஆயிரக்கணக்கான நேயர்களின் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி அரங்கேற உள்ளது. மேலும் இதனை விஜய் டிவியில் நேரடி ஒளிபரப்பும் செய்யப்படுகிறது.
விதைக்கப்பட்டோ அல்லது
வேண்டாமென எறியப்பட்டோ...
தன்னையே விதையாக்கி
பூமித்தாயின் புழுக்கத்தை தாங்கி..

சுவாசிக்க காற்று தேடி
பூமி பிளந்து புதிதாய் முளைவிட்டு
சூரிய‌னின் சூட்டிலே கண் விழித்து
பனித்துளியிலே பசியாறி

எவர் காலிலும் மிதி படாமல்
எவை வாய்க்கும் உணவாகாமல்
வ‌ர‌ப்போர‌ம் வாழ்க்கைப் ப‌ட்டு
வேலிக்குள் சிறைப்ப‌ட்டு

நீர் தேடி வேர்பாய்ச்சி
நிலத்திற்குள் நரம்புகள் இறுக்கி
காற்று ஆடிய நடனத்திற்கு
காதலோடு இசைந்தாடி...

வள‌ர்ந்து வாலிபமாகி
வ‌ண்டுக்கடி தாங்கி
உதிர்ந்த‌ பாளையை உர‌மாக்கி
எஞ்சிய பாளைக்கு உயிர் கொடுத்து

பிஞ்சாக பிரசவித்து
திருடிக்குடித்த‌ நீரைக்கொண்டு
திரட்சியான இளநீர் ஆக்கி
சந்தைக்கனுப்பி காத்திருந்த தென்னையிடம்

மேல்நாட்டு குளிர்பானத்தின்
மினுமினுக்கும் மேனிய‌ழ‌கில்
தங்க‌ள் தாக‌ம் தீர்க்கும்
த‌றிகெட்ட‌ த‌லைமுறையால்...

நாகரீக நர‌கத்து வீதியோரம்
விலைபோகாத வேசிபோல்
வெம்பிக் கிடந்த இளநீரின் கதையை
காற்று வந்து காதோரம் சொன்னபோது...

மனம் ஒடிந்து மட்டைகளை இழந்து
குலை நடுங்க குரும்பைகளை உதிர்த்து
அடி வயிற்று வேர் அனைத்தையும் அறுத்து
ஆடிக்காற்றின் துணையோடு அமரராகிப் போனது...
அண்மையில் இடம்பெற்ற இந்திய லோக் சபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஜே கே ரித்தீஸிக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இந்த மனுவை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின், இராமநாதபுர வேட்பாளர் வீ சத்தியமூர்த்தியினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  ரித்தீஸ் இந்த தேர்தலின் போது தமது வேட்பு மனுவில் போலியான தகவல்களை சமர்ப்பித்ததாக கூறியே அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். ரித்தீஸ் இலங்கையின் கண்டி நகரில் பிறந்தவர் எனவும், அவரது பெற்றோர் இன்னும் இல்ங்கை பிரஜைகளாகவே உள்ளனர் எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் ராணுவ வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 10 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. ஒருவார காலத்துக்கு இவர்கள் அனாதை இல்லத்துக்கு சென்று சமூக சேவை செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. கடந்த மே மாதம் 2ந் தேதி கோவை அருகே நீலாம்பூர் என்னும் இடத்தில் ராணுவ வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இலங்கைக்கு உதவி செய்ய ஆயுதங்கள் கொண்டு செல்லப் படுவதாக தகவல் கிடைத்ததை யடுத்து, இந்த வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
971 இலங்கையர்கள் உலக நாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இலங்கைப் பாதுகாப்புப் படையினரினால் தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி இவர்கள் அரசியல் தஞ்சம் கோரியுள்ளனர்.  பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து இவ்வாறு அரசியல் தஞ்சம் கோரப்பட்டுள்ளது. அதிகமானவர்கள் சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. போலியான தகவல்களை வழங்கி அரசியல் தஞ்சம் கோருவோர் தொடர்பில் அந்ததந்த நாடுகளுக்கு அரசாங்கம் அறிவிக்கத் திட்டமிட்டுள்ளது. TNC

கருத்துகள் இல்லை: