Source: http://abduzeedo.com/20-impressive-3d-graffiti-artworks
Source: http://abduzeedo.com/20-impressive-3d-graffiti-artworks
பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் ( வயது 50) காலமானார். இருதய கோளாறு நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் வியாழக்கிழமை காலை (உள்ளூர் நேரப்படி) 07:26 மணிக்கு காலமானார் என்று ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன. அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும்போதே சுவாசம் நின்று விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஆஸ்பத்திரிக்கு அவர் கொண்டு வரப்பட்டபோது அவருடைய குடும்பத்தினர் உடன் இருந்தனர். மாரடைப்பால் அவர் இறந்ததாக தற்போது கூறப்பட்டாலும் பிரேத பரிசோதனை நடத்திய பிறகே சரியான காரணம் தெரிய வரும். மருத்துவமனையின் முன்பு அவரது ரசிகர்கள் பெருந்திரளாக கூடி உள்ளனர். ஜாக்சனின் மரணம், அவரது ரசிகர்களை மீளாத சோகக் கடலில் ஆழ்த்தியுள்ளது.

காலுதறி
ஓடத்துவங்கி வெகுநாட்கள் ஆகிறது
இன்னும்
எவ்வளவு தூரம்
தவழ்ந்துகொண்டே துரத்துமோ
குழந்தையின் அழுகை
ஓடத்துவங்கி வெகுநாட்கள் ஆகிறது
இன்னும்
எவ்வளவு தூரம்
தவழ்ந்துகொண்டே துரத்துமோ
குழந்தையின் அழுகை
மு.கு- எழுத்துக்கு சொந்தக்காரர் உங்களுக்கு அறிமுகமில்லாத தனஞ்சயன் .
வெட்டுவார்கள் என்று
தெரியாமல்
கொட்டியதைஎல்லாம்
கொத்தித் தின்றாயே
அசைந்தால் மெலிந்து
விடுவாய் என்றார்கள்
அவர்களின்
அக்கறை கண்டு
புளங்காகிதம்
கொண்டாயே
அவர்களின் அக்கறையின்
காரணம்
எப்படித் தெரியும்
உனக்கு?
கொக்கரிக்கக் கூட
நேரமின்றி
கொத்துவதிலேயே
குறியாய் இருந்தாயே
கழுத்தை
கொத்திய போதாவது
பாழும் மனிதர்களின்
எண்ணம் புரிந்ததா
உனக்கு?
பிறீமாவை
அன்ன பூரனியாய்
எண்ணி இருந்தாயே
அது செய்த
துரோகம் புரிகிறதா?
பிறீமா தீனியை
குழம்பு வைக்க
முடியாமல்
உனக்கு கொடுத்து
உன்னைக் குழம்பு
வைத்தார்களே
இதுவா மனிதம்?
கெட்டவர்களின்
மரணமும்
எதிரிகளின்
மரணமும்தான்
மகிழ்ச்சியைக்
கொடுக்கும்
அரையடி நாக்குக்கு
மகிழ்ச்சி
கொடுப்பதற்காகவே
உன் உயிரை
மாய்த்துக் கொண்டவன்...
உன் மரணத்தில்
சோகத்தை விட
மகிழ்ச்சியையே
அதிகம்
கொடுத்தாய்...
இறந்தும் ஈந்த
வள்ளல்கள் உண்டு...
மரித்தும் மகிழ்ச்சி
தரும்
உத்தமனே
உன் ஆத்மா
சாந்தியடையட்டும்...
உண்ட களிப்பில்
களைப்பில்
நண்பர்கள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக