வெள்ளி, 26 ஜூன், 2009

2009-06-26



இனிய நண்பரும் பதிவருமான வெயிலானுக்கு இன்று பிறந்த நாள்.




உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் ரமேஷ்.

.
சென்னையில் ஒருசில 'மடாக்குடிகாரர்களால்' முற்றுகையிடப்பட்டுள்ள 'வேளச்சேரியில்' இருக்கும் ஒரு 'டாஸ்மாக்' பாரிலிருந்து ஒரு நேரடி ரிப்போர்ட்.....(பின்னணியில் அதிரடியாய் ஒரு குத்துப்பாட்டைக் கற்பனை செய்துகொள்ளவும்)

செய்தியாளர் வாசிக்கிறார்: 'நேரம் இப்போது' தான் சென்னையில் மடாக்குடிகாரர்களால் முற்றுகையிடப்பட்டுள்ள ஒரு டாஸ்மாக்கினுள் நுழைந்த முதல் தொல்லைக்காட்சி சேனல். (கேமரா, இருளடித்த பகுதிகளில் சுற்றி சுற்றி ஒரு ரவுண்டு, சுவர் ஒரம் தனியாய் பஞ்சாயத்து நடத்தும் குடிமகர்களின் மீது ஒரு ரவுண்டு என வந்துவிட்டு, அனாதையாய்க் கிடக்கும் சில பாட்டில்களின் மீது மேயத்தொடங்குகிறது). நீங்கள் இப்போது பார்த்துக் கொண்டிருப்பதுதான் கடந்த நான்கைந்து நாட்களாக நடந்துவரும் 'மடாக்குடிகாரர்களின்' போலி டாஸ்மாக் மதுக்கள் மீதான எதிர்ப்பு மையம் கொண்டிருந்த இடம்.

பாரில் நிருபர் கையில் மைக்குடன்:
(கையில் காலி (ஃபுல்)பாட்டிலுடன் நிற்கும் நான்கைந்து நபர்களை பின்னணியில் காட்டி) இதுதான் போலீசாருக்கு மிக சவாலான இடம், இவர்களைத் தாண்டி போலீசார் செல்வது அவ்வளவு சுலபமாக இருக்காது! ஏனென்றால் இவர்களிடம் கோலி சோடா இருப்பதாகவும் அதை அவர்கள் எந்நேரமும் போலீசார் மீது விட்டெறியலாமென்றும் 'நேரம் இப்போது'வின் மற்றொரு செய்தியாளர் 'பாண்டிச்சேரியில்' இருந்து தகவல் அனுப்பியுள்ளார் (கேமரா சுற்ற சுற்ற நிருபரும் சுற்றுகிறார், பின்னணியில் சில போலீசாரின் உருவங்கள் தெரிகின்றன). இந்த இடத்தைத் தாண்டி என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளவது போலீசாருக்கு மிகவும் கடினமான விசயமாக இருக்கும். என்ன நடக்கிறது என்பதை நாமும் தெரிந்துகொள்வோம். 'மடாக்குடிகாரர்களை' சமாளிக்க இந்த போலீஸ் படை போதாது, எனவே 'எஸ்பிளனேடில்' இருந்து இரண்டோ மூன்றோ போலீஸ் படை வந்துகொண்டிருக்கிறது.

மற்றொரு நிருபர் கையில் வேறொரு மைக்குடன்:
முற்றுகையிடப்பட்டுள்ள டாஸ்மாக்கை விடுவிக்கும் நோக்கில் நடக்கும் இந்த ஆப்பரேஷன் ஆரம்பித்து நான்கைந்து நாட்களில் இன்றுதான் போலீசார் இந்த தூரத்திற்கே வந்துள்ளார்கள் (பாரின் இரண்டாவது வரிசை பெஞ்சைக் காட்டி). ஏனென்றால் வழியெங்கும் காலி பாட்டில்களை உடைத்துப் போட்டிருந்தார்கள் ஒருசில 'சலம்பல்' பார்ட்டிகள். நமக்குக் கிடைத்த தகவல்களின்படி, சற்று தூரத்தில் குடிகாரர்களின் ஒரு கூட்டத்தார் காலி பாட்டில்களையெல்லாம் ஒன்றாக சேர்த்து வைத்து தடுப்பு ஏற்படுத்தியுள்ளார்கள் எனவும் அங்கிருந்துதான் போலீசார் மீது தாக்குதலும் நடத்திவருகிறார்கள் எனவும் தெரிகிறது. அவர்கள் எங்கிருந்து தாக்குதல் நடத்துகிறார்கள் என்பதையும் எப்படித் தாக்குதல் நடத்துகிறார்கள் என்பதையும் கண்டுபிடிக்க போலீஸார் மிகவும் போராடிவருகிறார்கள்.

மறுபடியும்
செய்தியாளர் வாசிக்கிறார்:
நீங்கள் பார்த்தது, நமது நிருபர்கள் 'சொட்டாச்சார்யா' மற்றும் 'ஜம்மித்து' அளித்த செய்தித் தொகுப்பு. அவர்கள் போலீசாருடன் மடாக்குடிகாரர்களின் பிடியிலுள்ள வேளச்சேரி' பாரின் மையப்பபகுதிக்கு முதன்முதலாகச் சென்று, செய்திகளை நமக்கு நேரடியாகத் தந்துகொண்டிருக்கிறார்கள். போலீஸார் ஒரு பகுதிக்குமேல் முன்னேற முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

'எதை வைத்து இப்படி எழுதுகிறேன்' என நினைப்பவர்கள் இங்கே கிளிக்குங்கள்.
(வருங்காலத்தில் நியூஸ் ரிப்போர்ட்டிங் இப்படியும் இருக்கலாம் என்ற ஒரு கற்பனையில் மேற்குறிப்பிட்ட வீடியோவின் தாக்கத்தில் எழுதப்பட்டது.)


More than a Blog Aggregator

by தமிழ்நெஞ்சம்
Via : DjDylan1976




More than a Blog Aggregator

by தர்ஷன் ' in ' DSHAN2009 NETWORK
தொல்பொருள் ஆராய்ச்சியெல்லாம்கூட ரொம்ப சுலபம்தான். விஜய்யின் 50-வது பட இயக்குனர் யார்? என்று ரசிகர்கள் துளைத்தெடுத்த
கேள்விக்கு விடை கிடைப்பது என்பது அவ்வளவு சுலபமாக படவில்லை. இந்நிலையில் இந்த ரகசியம் உடைந்துவிட்டது.

விஜய்யின் 49-வது படமான 'வேட்டைக்காரனை' இயக்கிவருகிறார் பாபுசிவன். இவரைப்பற்றி எந்த மீடியாவும் கண்டு கொள்ளாத நிலையில் 50-வது படத்தை இயக்கப்போவது யாரென்ற ஆர்வமே ரசிகர்களிடமும் மீடியாக்களிடமும் இருந்தது. பிறந்தநாள் பிரஸ்மீட்டில்கூட இதுபற்றி சொல்லாமல் நழுவினார் விஜய்.

'முறைப்படியாக அறிவிப்பு வெளிவரும்வரை காத்திருங்கள்' என்றார் விஜய். ம்ஹூம் யாரும் காதில் வாங்குவதாயில்லை. 50-வது படத்தை இயக்கப்போவது எஸ்.பி.ராஜ்குமார். 'பொன்மனம்' உள்ளிட்ட பிரபு படங்கள் சிலவற்றை இயக்கிய இவர், தற்போது ஆர்.கே.நடிக்கும் 'அழகர் மலை' படத்தை இயக்கியுள்ளார்.

50-வது படத்துக்கு அனேகமாக 'உரிமைக்குரல்' பெயர் சூட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் ஜோடியாக தமன்னா நடிக்க, மீண்டும் விஜய்யுடன் கைக்கோர்க்கிறார் வடிவேலு. மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வும், நட்சத்திர தேர்வும் நடந்துவரும் இப்படத்தை சங்கிலிமுருகனின் முருகன் சினி ஆர்ட்ஸ் தயாரிக்கிறது.

உலகிலே மிகப்பெரிய LCD-திரை தயாரிக்கும் நிறுவணத்தின் (AU Optronics) முதலாலி LJ Chen அறியத்தந்துள வண்னம் இந்த வருட இறுதியில் சீனா மற்றும் யப்பானில் புதிய ePaper-Generation வெளிவரவுள்ளது. இவ் நிறுவணம் மின்நூல் (eBook) வியாபரிகளுடன் மிக நெருக்கமாக செயல்படும்.
வளைந்து கொடுக்கும் மின்திரை பாவணைக்கு வருவதற்க்கு இன்னும் 5 வருடங்கள் எடுக்கலாம் என்று Chen குறிப்பிடுகிறார்.
தற்போதையை தொழில் நுட்பம் கருப்பு வெள்ளை திரையை மட்டுமே அனுமதிக்கிறது. வண்னத்திலான மிந்திரை 2010 ஆண்டு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

கைதொலைபேசி தயாரிக்கும் நிறுவணமான HTC Londonனில் நடந்த பத்திரிக்கையாளர் மாநாட்டில் புதிய Android-கைதொலைசியை அறிமுகப்படுத்தியுள்ளது. HTC Hero தொலைபேசியானது கூகில் இயங்குதளமான Androidடை கொண்டுள்ளது. அத்துடன் 5-Megapixel புகைப்படக்கருவி,HSPA, Touchscreen தொழில் நுட்பங்கள் உள்ளன. G1 எனும் கூகில் கைதொலைபேசியின் தோற்றத்தையுடைய இவ் தொலைபேசியில், தட்டாச்சு அமைக்கப்படவில்லை.
சதாரன Android (Desktop) மேசை தோற்றத்தைக்காட்டிலும்(Desktop) HTC Sense என்னும் பெயருடன் வித்தியாசமான தோற்றத்தை இது கொண்டுள்ளது.TouchFlo 3D உள்ளது.இந்த HTC Sense உதவியுடன் நாம் அதிகாமக பயண்படுத்தும் பயண்பாடுகளை இலகுவில் அடைவதற்க்கு வசதியாக உள்ளது. உதாரணமாக மின்னஞ்சல், இசை, புகைப்படங்கள் போன்றவற்றை வேகமாக பயண்படுத்திக்கொள்ளலாம்.
இந்த Hero தொலைபேசி HTC அறியத்தந்துள்ளது போன்று Web-மற்றும் Multimedia போன்றவற்றுக்கு சிறந்ததாக இருக்கும்.Trackball மற்றும் Touchscreen இதை பயண்படுத்த உதவும்.அதுமட்டுமன்றி iphoneனை போன்று Multitouchசும் உள்ளது. மேலும் சாதாரன 6 பொத்தான்ங்கள்(Button) உள்ளன.GPS-Recever மற்றும் திசைமானி உள்ளது.
8,1cm அளவைக்கொண்ட திரை 480 x 320 dpi களுடன் மிக கூர்மையாக உள்ளது. iphone3G S போன்று தூசிகள் உள் நுலையாதபடி பாதுகாப்பு உள்ளது. கையில் வழுக்காத படிக்கு Teflonனால் இதன் மேல்பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
விலை சுமார் 500Euro.

கருத்துகள் இல்லை: