கணினி வாங்கும் பொழுது நீங்கள் போதுமான கொள்ளளவு கொண்ட ஹார்ட்டிஸ்க் வாங்கி இருப்போம். பெரும்பாலானோர் வீடியோ , மென்பொருள்களை தரவிறக்கி உபயோகித்து விட்டு அவற்றை அளிக்க மறந்து இருப்போம். நாளடைவில் பாடல்கள், வீடியோ கோப்புகள், மென்பொருள்கள் என்று பெரிய கோப்புகளால் ஹார்ட்டிஸ்க் நிரம்பி வழிய ஆரம்பித்து விடும்.அதிக இடம் எடுத்து கொண்டுள்ள கோப்புகள் எங்கு சேமித்து வைத்தோம் என்று மறந்து இருப்போம். அந்நேரங்களில் உங்கள் கணினியும் வேலை செய்ய திணறும். "Low Disk Space" என்று எச்சரிக்கை செய்தி தரும்.இத்தருணங்களில் கணினியில் தேங்கி உள்ள கோப்புகளை தேடி கண்டுபிடித்து அளிக்க வேண்டும்.ஹார்ட்டிஸ்கில் எங்கு பெரிய அளவு கொண்ட கோப்புகள் இருக்கின்றன என்பதை கண்டறிவது கடினமான விஷயம். இந்த பெரிய கோப்புகளை அழித்தாலே பெரும்பாலான இடத்தை காலியாக வைத்து கொள்ளலாம்.இதனை செய்ய Primitive File Size Chart என்ற இலவச மென்பொருள் உதவுகிறது. இதனை இந்த லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள். இதனை இன்ஸ்டால் செய்ய தேவை இல்லை. தரவிறக்கிய கோப்பை திறந்தாலே போதுமானது.
இது விண்டோஸ் 2000/2003/XP/Vista/7 இயங்குதளங்களில் இயங்கும். இதன் மூலம் நீங்கள் பெரிய கோப்புகளை , அவை உள்ள போல்டர்களை கண்டறியலாம். பின்பு அந்த போல்டர்களுக்கு சென்று அந்த கோப்புகளை அழித்து கணினியின் ஹார்ட்டிஸ்க் இடத்தை மிச்சப்படுத்தி கொள்ளுங்கள்.
விப்ரோ நிறுவனம் அலுவலகங்களுக்கு ஏற்ற புதிய ரக பர்னிச்சர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக லண்டனைச் சேர்ந்த வடிவமைப்பாளர் டிம் வாலஸýடன் ஒப்பந்தம் செய்துள்ளது. புதிய ரக தயாரிப்புகள் "ஸ்டார்லைன்' என்ற பெயரில் சந்தையில் விற்பனை செய்யப்படும்.
பெருநகரங்களில் இந்த தயாரிப்புகளை சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் துணைத் தலைவர் பராக் குல்கர்னி தெரிவித்தார்.
புதிய தயாரிப்புகள் குறித்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது: அலுவலக பர்னிச்சர்களின் விற்பனைச் சந்தை ரூ. 1,100 கோடியிலிருந்து ரூ. 2,000 கோடியாக உள்ளது.
இதில் உயர் ரக பர்னிச்சர்களின் சந்தை ரூ. 500 கோடியாகும். கடந்த ஐந்தரை ஆண்டுகளாக பர்னிச்சர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள விப்ரோ நிறுவனம் தற்போது உயர் ரக, அதிநேர்த்தியான பர்னிச்சர்களைத் தயாரித்து விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
இதற்காக சர்வதேச அளவில் பிரபலமாக விளங்கும் நிறுவனம் அல்லது வடிவமைப்பாளருடன் ஒப்பந்தம் செய்து புதிய தயாரிப்புகளைச் சந்தைப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் முதல் முறையாக லண்டனைச் சேர்ந்த பிரபல வடிவமைப்பாளர் டிம் வாலஸýடன் விப்ரோ இணைந்துள்ளது. இதன் மூலம் புதிய ரக தயாரிப்புகள் ஸ்டார் லைன் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்துக்கு ஒüரங்காபாத்தில் ஒரு நவீன ஆலை உள்ளது. சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டியில் உள்ள ஆலை நாற்காலிகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.
நாற்காலிகள் தயாரிப்பில் நியூயார்க்கைச் சேர்ந்த பிரபல வடிவமைப்பாளருடன் ஒப்பந்தம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
விப்ரோ நுகர்வோர் விற்பனைப் பொருள் நிறுவனங்களில் பர்னிச்சர் விற்பனை துறையின் பங்களிப்பு 10 சதவீதமாகும். இது வரும் நாள்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறினார்.




சென்னை:ஜூன் 24சென்னையில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக நக்கீரன் இதழுக்கு பேட்டியளித்த காவல்துறை உயர் அதிகாரி திலகவதி ஐ.பி.எஸ். அவர்கள் ''இஸ்லாமியர்களுக்கு கொலை செய்வது ஒன்றும் புதிதல்ல'' என்று பேட்டியளித்துள்ளார். தனியொரு நபரின் செயலுக்கு முஸ்லிம்கள் அனைவரையும் இழித்துரைப்பது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.முஸ்லிம் மத துவேசத்தை உருவாக்கத் துணிந்த காவல்துறை உயர் அதிகாரி திலகவதி ஐ.பி,எஸ்.ஐக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று (24.06.2009) மாலை 4.00 மணியளவில் சென்னை மெமோரியல் ஹால் எதிரே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ் தலைமை தாங்கினார். துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ். ரிஃபாய், தமுமுக மாநில மாணவரணிச் செயலாளர் ஜெயினுலாப்தீன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். மனிதநேய மக்கள் கட்சியின் பொருளாளர் எஸ்.எஸ். ஹாருன் ரசீது, தமுமுக மாநிலச் செயலாளர் காஞ்சி ஜுனைது, வட சென்னை மற்றும் தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில், ''காவல்துறையில் உயர் அதிகாரியாகவும், ஓர் எழுத்தாளராகவும் இருப்பவர் இவ்வாறு பொறுப்பற்று பேசலாமா? அமைதி மார்க்கமான இஸ்லாத்தை வன்முறை மார்க்கமாக சித்தரிப்பது மெத்தப்படித்த அதிகாரிக்கு அழகா?'' என்று கேள்விகள் எழுப்பப்பட்டன. இத்தகைய பொறுப்பற்ற சமூக கருத்துக்கு திலகவதி ஐ.பி.எஸ் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் முஸ்லிம்களை வம்புக்கு இழுத்த நக்கீரன் பத்திரிக்கையும் வெளியிட்ட செய்தியை வாபஸ் பெற வேண்டும் என்றும் இல்லாவிட்டால் போராட்டங்கள் தீவிரப் படுத்தப்பட்டு சட்டரீதியான நடவடிக்கையும் முடுக்கப் படும் என அறிவிக்கப் பட்டது.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்








கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக