
11 வது வயதில் தனது இசை பயணத்தை துவக்கிய மக்கள் கலைஞன் மைக்கேல் ஜாக்சன் தனது நடன அசைவுகளாலும், இனிய குரலாலும், அதிரவைக்கும் இசையாலும் பின்னாட்களில் பாப் இசை பாடல்களின் அரசன் என்று உலக மக்களால் போற்றப்பட்டார். சமுதாய சிந்தனையுடன் கூடிய அவரின் நல்ல பாடல்கள் பல இருப்பினும் "Earth Song" என்ற இவரின் பாடல் நாம் அனைவரும் பார்த்து சிந்தித்து செயல்பட வேண்டிய ஒரு பாடல். இன்று காலமான அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அந்த பாடலை பதிவிடுகிறேன்.
பார்த்துவிட்டு நம்மால் இயன்றதை இப்புவிக்காக செய்வோம். இதுதான் நாம் அவருக்கு செய்யும் மிக சரியான அஞ்சலி என்பதில் ஐயமில்லை
முதல் 3 பாகத்துக்கு இங்கே சொடுக்கவும்

கூடத்தில் அனைவரும் ஒன்றாகக் கூடினர் .ஒரு மணி நேரத்துக்கு முன் இருந்த அவர்களின் காட்டாறு போன்ற மன ஓட்டம் மொத்தமாக வடிந்து, ஒருதெளிந்த மெல்லிய நீரோடையாகச் சலசலவென்று அமைதியானது.
இரண்டு ஆத்மாக்களும் அமைதியாகும் வண்ணம் அங்கே உரையாடல்கள் இங்கும் அங்கும் ஒலி அலைகளை எழுப்பின.
"......அண்ணே! அப்பா இந்த வீட்டை உன் பேருக்குத்தான் எழுதி வைப்பார் ...நாம் எல்லோருமா நல்ல நாளும் கிழமையுமா வந்து போய்ட்டு இருக்கலாமேன்னு இருந்தோம் ...இப்படி எல்லாரையும் ஏமாத்திட்டாரே!!...."
வீட்டில் தங்களுக்கும் பங்கு இருக்குமா என்ற எதிர்பார்ப்புடன் வந்து இறங்கிய சகோதரிகள் இருவரும் அண்ணனுக்கு வீடு கிடைக்காத அவலம் நினைத்து
வருத்தம் தெரிவித்து சங்கடப் பட்டு நின்றார்கள்.
".....கடைசி காலத்தில் அப்பாவுக்கு புத்தி ஏன் இப்படிப் போச்சுதோ தெரியலை
....சரி விடுங்க ...எல்லோரும் அடிக்கடி வந்து போய் இருங்க...."
"...தம்பிமார்களுக்குத்தான் நிறைய செய்திருப்பார் என்று கணக்கு போட்டு, அப்படி மட்டும் நடக்கட்டும் யார் முகத்திலும் முழிக்காம ஊரை வீட்டு ஒதுங்கிடணும் ..."
என்று வந்த அண்ணன், தன் தம்பிகளை ஆதரவாய் அணைத்தவாறு அன்புக் கட்டளை இட்டபடி பெருமூச்சு விட்டு நிற்கவும்,
"....அண்ணனுக்கு அதிகப்படியாக இருந்தால் அடுத்த நிமிஷமே கோர்ட்தான்..."
என்று முடிவு செய்து வைத்திருந்தவர்கள் அண்ணன் காலில் விழாத குறையாக அன்பொழுக நெகிழ்ந்து நின்றனர்.
"....என்ன கிடைக்கும் சுருட்டிக் கொண்டு போலாம்னு குடும்பத்தோட வந்து இறங்கிட்டாங்களே....பொண்ணுங்களுக்கும் சொத்திலே பங்கு உண்டுன்னு கொடி கிடி பிடிக்கப் போகுதுகளோ ......"
என்று ஒருவருக்கொருவர் முணு முணுத்துக் கொண்டிருந்த அண்ணிமார்களும்,
"......பொண்ணுங்களுக்காவது ஏதாச்சும் செய்திருக்கலாம் கல்யாணத்திலே செஞ்சா ஆச்சா?....."
என்று தங்கள் பங்குக்கு அங்கலாய்த்துக் கொண்டார்கள்.
ஆக மொத்தத்தில் குடும்பமே ஒன்று கூடி ரங்கசாமியை ஒரு வில்லனாகப் பாவித்து நின்ற வேளை,தங்களுக்குள் ஒற்றுமை என்ற இழை ஊடுருவ அதில் கட்டுண்டவர்களாக நின்றார்கள்.
தம்பதியரின் படங்களுக்கு மாட்டியிருந்த மாலைகள் காற்றில்லாமலேயே ஆடின,அதுதான் ஆத்மாக்களின் உரையாடல் உத்தி போலும்
"....பார்த்தியாம்மா! நான் என்னதான் பாரபட்சமில்லாம எழுதி வச்சிருந்தாலும் ,அவங்களுக்குள்ளே பாசம் உடைஞ்சுதான் போயிருக்கும்,இப்போ இங்கே ,"தனக்கு குறைச்சல் அவனுக்கு அதிகம்"னு ,"அவன்தான் செல்லம் நான் மட்டம்" னு ஏதாவது ஒரு வார்த்தை உனக்குக் கேட்டுச்சா...?ஆவலாதியோ அங்கலாய்ப்போ அவங்க பேச்சில் வந்துச்சா... நான் பிரிச்சு தராமலேயே எல்லோருமா பாசத்தைப் பங்கு போட்டு நிக்கிறாங்க..கவனிச்சியா .
இதைவிட வேறு என்ன சொத்து நான் அவங்களுக்காக நான் எழுதிவைக்கணும்னு எதிர்பார்க்கிறே சொல்லும்மா....."
சீதாலஷ்மி படத்து மாலை அவரது செய்கையை ஆமோதிப்பது போல் அழகாக ஆடியது.சோக மணம் பரப்பி நின்ற ஊதுபத்திகள் கூட ஆத்மதிருப்தியுடன் கரையத் தொடங்கின.
அன்பு பாசம் பந்தம் இவைகளுக்கு உயிர் தந்த அந்த உயிலின் நகல் நடுக்கூடத்தில் சீண்டுவார் இன்றி கிடந்தது.
அழுக்கான
சிறுத்த, தொங்கிய
கருத்த முலைகளில்
பாலருந்தும் வாழ்வே
சபிக்கப்பட்டிருக்கிறது
பிச்சைக்காரியின்
குழந்தைக்கு
அத் தாயின் பாலிலும்
தூயவெண்மையும்
பரிசுத்தமும்.
சிறுத்த, தொங்கிய
கருத்த முலைகளில்
பாலருந்தும் வாழ்வே
சபிக்கப்பட்டிருக்கிறது
பிச்சைக்காரியின்
குழந்தைக்கு
அத் தாயின் பாலிலும்
தூயவெண்மையும்
பரிசுத்தமும்.






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக