வெள்ளி, 26 ஜூன், 2009

2009-06-26

விகடன் டாக்கீசின் இரண்டாவது தயா‌ரிப்பு வால்மீகி. விகடன் பா.சீனிவாசன் படத்தை தயா‌ரித்திருக்கிறார். அறிமுக இயக்குனர் ‌ஜி.ஆனந்த நாராயணன் இயக்கம்.சென்னையின் பிக்பாக்கெட்டுகளில் ஒருவன் படத்தின் நாயகன். அடுத்தவ‌ரின் துன்பத்தைப் பற்றி சிறுதும் கவலைப்படாதவன். அவனுடைய வாழ்க்கையில் இரு பெண்கள் குறிக்கிடுகிறார்கள். இந்த புதிய உறவு அவனுக்குள் சில மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அது என்ன என்பதே படத்தின் கதை.
கல்லூ‌ரியில் கிராமத்து மாணவனாக நடித்த அகில் இதில் சென்னை பிக்பாக்கெட்டாக முரட்டு அவதாரம் எடுத்திருக்கிறார். மதுரைக்காரரான அகில் சென்னைவாசியாக மாற மூன்று மாதங்கள் கடும் பயிற்சி எடுத்திருக்கிறார். படம் முழுக்க சென்னை பாஷை பேசி நடித்திருப்பது முக்கியமான அம்சம்.இயக்குனர் ஆனந்த நாராயணன் ஷங்கர் மற்றும் காந்தி கிருஷ்ணாவிடம் பணிபு‌ரிந்தவர். பிக்பாக்கெட் அடிப்பவர்கள் எந்தெந்த வழிமுறைகளை பின்பற்றுவார்கள், அவர்களின் வாழ்க்கைமுறை எப்படிப்பட்டது என்பதையெல்லாம் ஒரு ஆராய்ச்சி மாணவருக்கு‌ரிய ஈடுபாட்டுடன் நேரடியாக தெ‌ரிந்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். படத்தின் சிறப்பம்சம் இளையராஜாவின் இசை. இசையமைத்திருப்பதுடன் மூன்று பாடல்களை பாடியுமிருக்கிறார் ராஜா. அதில் ஒரு பாடல் முழுக்க சென்னைத் தமிழில் மணக்கிறது.படத்தில் இரு நாயகிகள். இருவருமே மலையாள வரவு. ஒருவர் சிறந்த நடிகைக்கான கேரள அரசின் விருது பெற்ற மீராநந்தன். வால்மீகியில் ஆசி‌ரியராக இவர் நடித்திருக்கிறார். இன்னொரு நாயகி தேவிகா. மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். இந்தப் படத்தில் பூக்கா‌ரியாக நடித்துள்ளார்.மலையாளத்தின் முன்னணி ஒளிப்பதிவாளர் அழகப்பன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பாடல்கள் வாலி. எடிட்டிங் வி.டி.விஜயன். வரும் வெள்ளிக்கிழமை வால்மீகி திரைக்கு வருகிறது. தணிக்கைக்குழு படத்துக்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

தடுப்பு முகாம்களில் உள்ள தமிழர்கள் காணாமல் போதல், சித்திரவதைக்கு உள்ளாதல் என்பன நிறுத்தப்பட வேண்டும், முகாம்களில் இருந்து உடனும் மக்களை விடுவிக்க வேண்டும், இன அழிப்பில் ஈடுபட்ட மகிந்த ராஜபக்ஷ, கோத்தபாய ராஜபக்ஷ, சரத் பொன்சேகா ஆகியோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கறுப்பு உடை தரித்து லண்டன் வாழ் தமிழர் மாபெரும் பேரணி ஒன்றை நடத்தி இருந்தனர். இப்பேரணியானது பிரித்தானிய மற்றும் சர்வதேச சமூகத்துக்கு தமிழர் படும்பாட்டை காண்பிக்கவும், அவர்களைத் தட்டி எழுப்பி நீதி கேட்பதற்குமாக பிரித்தானிய தமிழர் பேரவையினரால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. இந்த கோரிக்கைகள் அடங்கிய மனு பிரித்தானிய பிரதம மந்திரி கோர்டன் பிரவுணிடம் கையளிக்கப்பட்டது.
இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையின் படி, நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் எட்டு குழுக்களை அனுப்ப இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்தியா 4  நிலக்கண்ணி அகற்றும் பணியாளர்களை இலங்கைக்கு அனுப்பவிருப்பதாக தெரிவித்திருந்த நிலையில், அதனை அதிகரிக்குமாறு கோரப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை: