வெள்ளி, 26 ஜூன், 2009

2009-06-26

"என்ன பாபு! மூணு நாளா கடைய திறக்காம எங்கே போய்ட்ட?"

"ஒண்ணுமில்ல சார். ஆஸ்பத்திரிக்கு போயிருந்தேன்."

"ஆஸ்பத்திரிக்கா? உடம்பு கிடம்பு சரியில்லையா?"

"அத விடுங்க சார். உங்களுக்கு என்ன வேணும்? வழக்கம் போல கோல்டு பிளேக் தானே?"

"எத்தனை வருஷமா உன் கடைக்கு வர்ரேன்? உன் மேல அக்கறை இல்லாமலா கேக்கறேன்.உன் உடம்புக்கு என்னனு முதல்ல சொல்லு"

"சொன்னா உங்க மனசு கஷ்டப்படும் சார்.உங்களுக்கு தெரிஞ்சு ஒண்ணும் ஆகப் போறதில்லை.எல்லாம் முடிஞ்சு போச்சு"

"என்னப்பா இப்படி எல்லாம் பேசுற? அப்படி என்னதான் உடம்புக்கு"

"ஏதோ புத்து நோயாம்? இன்னும் ஆறு மாசந்தான்னு டாக்டர் டைம் கொடுத்துட்டார்"

"என்னது? உனக்கு புத்து நோயா? பெட்டிக்கடை பூரா சிகரெட் வச்சு வித்தாலும் உனக்கு தம் அடிக்கிற் பழக்கம்
கிடையாதே? உனக்கு எப்படி இது?"

"அததான் நானும் டாக்டர்கிட்டே கேட்டேன்.அவரு என் தொழில் என்னனு கேட்டாரு. சொன்னேன்.அவரு சொன்னதை கேட்டா உங்களால் நம்ப முடியாது"

"அப்படி என்ன சொன்னார்?"

"தம் அடிக்கிறதனால மட்டும் இந்த வியாதி வராதாம்.தம் அடிக்கிறவங்க கூட ரொம்ப நேரம் இருந்தாலும் இந்த வியாதி வருமாம்"

"நீதான் தம் அடிக்கிறவங்க கூடவே சேர மாட்டியே?கடையே கதினு இருக்கற ஆளாச்சே?"

"என்ன சார் சொல்றீங்க?என் கடையில தம் வாங்கறவங்க வீட்டுக்கு கொண்டு போயா அடிக்கிறாங்க? வாங்கின கையோட கடைக்கு முன்னாடிதானெ அடிக்கிறாங்க.அவ்வளவு புகையும் எம்மேலதான"

"நீ சொல்றதும் சரிதான். உன் கஷ்டத்துக்கு நானும் ஒரு காரணம் ஆயிட்டேன்ல"

"நாய் வித்த காசு குரைக்காதுன்னு சொல்லுவாங்க.ஆனா குரைச்சுருச்சு.என் ஆயுசையும் குறைச்சுருச்சு"

தருண் கோபி, மணிவண்ணன், ராஜ்கபூர், G M குமார், பொன்வண்ணன், சீமான், சிங்கம் புலி, ரவி மரியா, நந்தா பெரியசாமி, ஜகன்னாத், தமிழரசி, பூங்கொடி
நெறியாள்கை : ராசு மதுரவன்
மியூசிக் : சபேஷ் முரளி

மாயாண்டி குடும்பத்தை சுற்றியே கதை நகர்கிறது, பங்காளி சண்டையை பற்றிய கதைதான் என்றாலும், அந்த மதுரை மண் மனத்தை கண் முன் நிறுத்துகிறார் ராசு மதுரவன். ஐந்து பிள்ளைகலைப் பெற்ற மாயாண்டி திடீர்யென இறந்து போக கடைசி மகனின் நிலைதான் கதை. அந்த கடைசி மன்கனின் பார்வையில் இருந்து கதை சொல்லி இருக்கிறார். சீமான் தானே எழுதிய பாடலைப் பாடி நடித்திருப்பது, பாடலில் ரத்தத்தை சூடேற்றும் வரிகள் தெறிக்கின்றன.

மனைவிகள் தம்பியைப் புறக்கணிக்கும் போதெல்லாம் அண்ணன்கள் உருகி உருகி தம்பியை உபசரிப்பது அருமை. கள்ளக் காதலையே தெரிந்து செய்யும் போது கூடப் பிறந்த பொறப்புக்கு செய்வதை தெரியாமல் செய்யவேண்டியிருக்கிறது (பொட்டில் அடித்த உண்மை - சபாஷ் ராசு மதுரவன்)

இசை சபேஷ் முரளி, பாடல்கள் பின்னணி இசை மதுரை மணத்தை தேனாகப் பாயவைக்கிறது சபாஷ்!!.

மாயாண்டி குடும்பத்தார் - நாமும் தைரியமாக போய் அவர்களுடன் கறிசோறு சாப்பிடலாம்.

More than a Blog Aggregator

by சுரேஷ் கண்ணன்
கதறியழும் குழந்தையை எப்படி சமாதானப் படுத்துவது என்றே தெரியவில்லை. சிரிக்கும் போது தேவகானமாக காதில் விழும் குழந்தையின் சிரிப்பு அழும் போது நாராசமாக ஆகி விடுவது என்ன மாயமோ தெரியவில்லை. அழுதால் கேட்டது கிடைத்து விடும் என்பதுதான் ஒரு குழந்தையின் முதல் கற்றல். பெணகளின் ஆயுதம் கண்ணீர் என்பார்கள். இது பெண்குழந்தை வேறு. சாமான்யத்தில் மசிந்து விடுமா? என்ன சமாதானப்படுத்தியும் அழுகை ஓயவில்லை. மாறாக இன்னும்

மகாவிஷ்ணு பத்து அவதாரங்கள் எடுத்தானாம்.

இதில் சிவனும், பிரம்மாவும் ஏன் அவதாரம் எடுக்கவில்லை என்று தெரியவில்லை.

மகாவிஷ்ணு அவதாரம் எடுத்தது எல்லாம் `பாரத' பூமிக்குள் மட்டும்தான். அமெரிக்காவிலோ, ஜப்பானிலோ, அண்டார்ட்டிகாவிலோ ஏன் அவதாரம் எடுக்கவில்லை என்று இதுவரை இந்து மதாபிமானிகள் யாரும் பதில் சொல்லவேயில்லை.

*****************************************************************************

6. பரசுராம அவதாரம் (கோடாரி ராமன்)

கதை: பூமி பாரம் தாங்க முடியவில்லை. பூமாதேவி மிகவும் கஷ்டப்பட்டதாகவும் அதனைத் தீர்த்து வைக்க பரசுராமனாக அவதரித்து அரசர்களை- யெல்லாம் கோடாரியும் கையுமாக அலைந்து படுகொலை செய்தான்.

கேள்வி: அரசர்களையெல்லாம் கொன்றுவிட்டால் பூமி பாரம் குறையுமா?

இப்பொழுது உலக மக்கள் தொகை 644 கோடியைத் தாண்டிவிட்டதே. விஷ்ணு பக்தர்கள் மகாவிஷ்ணுவிடம் வேண்டி மறுபடியும் பரசுராம அவதாரத்தை எடுக்கச் சொல்லுவார் களா?

-----------------தொடரும்.."விடுதலை" அசுரன் (திராவிடன்) மலர் 2006 -இல் மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை

கருத்துகள் இல்லை: