வெள்ளி, 26 ஜூன், 2009

2009-06-26

google trends இல் முதலிடத்தை michael jackson மரணம் பிடித்துள்ளது. google trends இல் முதல் 100  hot trends இல் அதிகளவு இடங்களை மைக்கல் ஜாக்சன் பற்றிய செய்திகள் பிடித்திருக்கின்றன. Last Photo of Jackson Video of Ambulance Taking Michael Jackson

அன்பு நண்பர் பதிவர் ஸ்டார்ஜான் இந்த தொடர் பதிவுக்கு என்னை அழைத்திருந்தார். அவருக்கு நன்றிகள்.

நான் படித்த பள்ளி மற்றும் அந்த நினைவுகளைப் பற்றி எவ்வளவோ எழுதலாம். சில முக்கிய நினைவுகளை மட்டும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

பர்த் சர்டிஃபிகேட்

நான் ஆரம்பப் பள்ளியில் படித்த காலத்தில் எங்கள் ஊர் அறியாத ஒன்று. தலையின் மேற்புறமாக வலதுகையைக் கொண்டு சென்று இடது காதின் மேல் நுனியை தொட வேண்டும். அப்படித் தொட்டு விட்டால் ஐந்து வயது ஆகிவிட்டது என்று பள்ளியில் சேர்த்துக் கொள்வார்கள். பின்னர் ஏப்ரல் 2ல் இருந்து தொடங்கி ஜுன் 30 வரை உள்ள தேதிகளில் ஒன்றை ரேண்டமாக தேர்ந்தெடுத்து டேட் ஆப் பர்த்தை அல்லகேட் செய்வார்கள்.

தமிழ்நாடு பென்சனர் பட்டியலில் என் தந்தையின் பென்சன் விபரங்கள் சரியாக இருக்கிறதா எனத் தேடியபோது, பலரின் பிறந்தநாள் தேதியும் ஏப்ரல்,மே, ஜூனிலேயே இருந்ததைப் பார்த்து சிரிப்பு வந்தது.ஏதாவது புள்ளியியல் அறிஞர்கள் இதை ஆராய்ச்சி செய்து, இந்த மாதங்களில் பிறப்பவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும் என கிளப்பிவிட்டால் என்ன நடக்கும் என்பதை நினைத்து.

ஸ்கூல் பீஸ்

மூன்றாவது வரை மூன்று ரூபாய், பின் ஐந்தாவது வரை ஐந்து ரூபாய்.ஆறாவதில் இருந்து பத்தாம் வகுப்பு வரை 12 ரூபாய்.என்பது அப்போதைய நிலவரம். நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது விகடன் 90 பைசா, குமுதம் 60 பைசா.

அப்போது அரசாங்க வேலை நாட்கள் வாரத்துக்கு ஆறு. இரண்டாம் சனி மட்டுமே விடுமுறை. சனிக்கிழமை அலுவலகத்தில் இருந்து வரும் என் தந்தை இரண்டு ரூபாய் கொடுப்பார். விகடன், குமுதம் போக மீத காசில் எங்கள் ஊரின் பிரபல லாலா கடையில் எனக்கு சாப்பிட எதாவது வாங்கிக் கொள்வேன். இதில் ஒருவாரம் மட்டும் ஸ்னாக்ஸ் கட்டாகும். ஏனென்றால் மாலைமதி அப்போது மாதமொருமுறை.
அது 50 பைசா.

இப்போதைய விகடன் விலையோடு ஒப்பிட்டால் 75 ரூபாய் ஓராண்டு கல்விக்கட்டணம்.

கிளாஸ் லீடர்

கிளாஸின் பிரம்பு, டஸ்டர் ஆகிய பொருட்களின் சேப்டி லாக்கரை இப்படியும் சொல்லலாம்.அதைத் தவிர இன்னொரு முக்கிய வேலை பள்ளிக்கு தொடர்ந்து வராத மாணவர்களின் வீடுகளுக்கு ஆசிரியரின் தூதராகச் செல்வது.

சத்துணவு

அப்போது காமராஜரின் மதிய உணவுத் திட்டம் அமலில் இருந்தது. நான் மூன்றாம் வகுப்பில் இருக்கும் போது எம்ஜியாரின் சத்துணவுத் திட்டம் அமலுக்கு வந்தது. உத்தியோகப் பூர்வமாக யோசிப்பவன் அதிகாரி, உணர்வுப் பூர்வமாக யோச்சிப்பவன் அரசன் என்று மெய்ப்பித்த நிகழ்வு இது. பல மாணவர்களின் இடை நிற்றலை நிறுத்திய நிகழ்வு இது. இந்த திட்டம் தொடங்கபட்டது எங்கள் ஊரில்தான். அன்னை தெரசா, எம்ஜியார் ஆகியோர் வந்து தொடங்கி வைத்தார்கள். அப்போது எங்கள் ஊர் மதுரை
மாவட்டத்தில் இருந்தது. கலெக்டர் ஆசிட் புகழ் சந்திரலேகா.
உணமையிலேயே வரலாறு காணாத கூட்டம். முதலில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே அமல் படுத்தப்பட்டது. பின்னர் இரண்டாண்டுகள் கழித்து, 10ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்பட்டது.

நேர வித்தியாசம்.

டிவி இல்லாக் காலம். எனவே எவ்வளவு நேரம் விளையாடினாலும் ஒன்பது மணிக்கெல்லாம் தூங்கி விடுவோம். காலை ஐந்து மணிக்கு இயல்பாக முழிப்பு வந்துவிடும். பள்ளி திறப்பது ஒன்பது மணிக்கு. பள்ளி வீட்டுக்கு மிக அருகில். எனவே காலையில் நான்கு மணி நேரம் கிடைக்கும். இதில் வயல் வெளி, கிணறு, தெரு ஆயா கடை ஆப்பம்,பனியாரம் என எல்லாச் சடங்கும் முடிந்தும் நேரம் கொட்டிக் கிடக்கும். இன்றைய குழந்தைகளை நினைத்தால்?. தூங்கி எழுந்தவுடன் அவர்கள் பள்ளிக்குச்
செல்வது போல் ஒரு பிரமை.

இந்தப் பதிவை தொடர பதிவர் சினேகிதன் அக்பர், தற்கால நிகழ்வுகளை செமையாக
கிண்டலடிக்கும் வலைமனை சுகுமார் சுவாமிநாதன், பதிவர் ஸ்ரீ ஆகியோரை அழைக்கிறேன்.
மூதூர் கிழக்குப் பிரதேசத்தில் அமைந்துள்ள கட்டைபறிச்சான் என்னும் கிராமத்திற்கு பல நூறு கொலைகளுக்குப் பொறுப்பாளராக மூதூர் பிரதேசத்தில் செயற்பட்ட புலிகளின் முக்கிய பயங்கரவாதிகளில் ஒருவரான கணேஸ் என்பவரின் ஞாபகாாத்தமாக கணேசபுரம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது இது விடயத்தில் உள்ளுராட்சி அமைச்சு உடனடிக் கவனம் செலுத்தி அக்கிராமத்தின் பெயரை ஏற்கனவே அழைத்தவாறு கட்டைபறிச்சான என அழைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென நாம் நினைவூட்டுகின்றோம்.

அத்துடன் கிழக்குமாகாணத்திலுள்ள சில பாடசாலைகளுக்கும் கட்டிடங்களுக்கும் ஏற்கனவே சூட்டப்பட்டுள்ள பயங்கரவாதிகளின் பெயர்களை உடனடியாக அகற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.கே.யூ.கே. வீரவர்தனா சகல வலய கல்விப் பணிப்பாளர்களுக்கும் இந்த உத்தரவை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையில்

"இதனை அமுல்படுத்த தவறும் வலய கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்"என்றும் தெரிவித்துள்ளார். 'பாடசாலை மற்றும் கட்டிடங்களுக்கு தனி நபர் பெயர் சூட்டப்படல்'என்னும் தலைப்பிலான அந்த சுற்றறிக்கையில் கடந்த காலங்களில் அரசாங்க பாடசாலைக் கட்டிடங்களுக்கு பயங்கரவாத அமைப்பின் பிரதேச தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளதை அண்மையில் மூதூர் மற்றும் சம்பூர் பிரதேச பாடசாலைகளுக்கு சென்றிருந்த போது அவதானிக்க முடிந்தது.

பாடசாலைகள் ஆரம்பத்தில் என்ன பெயரில் அழைக்கப்பட்டதோ அந்த பெயரே அமுல் படுத்தப்பட வேண்டும். பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தால் ஏற்கனவே இருந்த பெயர், வலயம் மற்றும் தற்போதைய பெயர் ஆகிய விபரங்கள் உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும்.ஒரு பாடசாலைக்குப் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டியிருப்பின் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்மதத்துடனும் மாகாண கல்விப் பணிப்பாளரின் சிபாரிசுடனும் எனது அனுமதிக்காக முன்வைக்கப்பட வேண்டும்.

பிரதேச பயங்கரவாத தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டிருந்தால் அதனை உடனடியாக நீக்க வேண்டும். வலய கல்விப் பணிப்பாளர்கள் மேற்பார்வை செய்து இதனை உறுதிப்படுத்த வேண்டும்.இந்தத் தவறை திருத்தம் செய்யாத வலய கல்விப் பணிப்பாளர்கள் தொடர்பாக மாகாண கல்விப் பணிப்பாளர்கள் எனக்கு அறிவிக்க வேண்டும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

புலிகளின் தலைவர் பிரபாகரனை சூனியத்தின் மூலம் நானே கொலை செய் தேன் என்றும் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி விரைவில் கலையும் என்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கூறிய சோதிடர் ஒருவர் பொலி ஸாரால் கைது செய்யப்பட்டு, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் நான்காம் மாடி யில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தகவலை ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி. தயாசிறி ஜயசேகர நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி சட்டமூலம் மீதான விவகாரத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இது தொடர் பாக மேலும் கூறியவை வருமாறு
பிரபல சோதிடர் ஒருவர் பிரபாகரனை அரசுகொல்லவில்லை. சூனியத்தின் மூலம் நானே கொலை செய்தேன் என்றும் மஹிந்த வின் அரசுவிரைவில் கவிழும் என்றும் தொலைக்காட்சியிலும், பத்திரிகைகளி லும் கூறியிருக்கின்றார்.
அச்சோதிடர் ஜனாதிபதியை கொலை செய்யத் திட்டம் தீட்டினார் என்ற குற்றச் சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவின் நான்காம் மாடி யில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
தனது கருத்தைக் கூறியமைக்காக சோதிடர் ஒருவர் கைது செய்யப்பட்டமை இலங்கை வரலாற்றில் இதுதான் முதல் தடவை. இந்நாட்டில் சோதிடர்கூட தனது கருத்தைக் கூறமுடியாதுள்ளது.
இதுதவிர, யுத்தம் இப்போது முடிவுற்றபோதிலும் பாதுகாப்பு கெடுபிடிகள் முடியவில்லை. பாதைகள் அடிக்கடி மூடப்படுகின்றன. அமைச்சர்கள் பலத்த பாதுகாப் புடன்தான் பயணிக்கின்றனர்.
அப்போது வீதிகள் மூடப்பட்டு மக்கள் கடுமையாக சோதிக்கப்படுகின்றனர். இந்நடவடிக்கை மக்களை மிகவும் பாதிக் கின்றது. இது நிறுத்தப்படவேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை: