திங்கள், 29 ஜூன், 2009

2009-06-29

தமிழின் முக்கியமான இலக்கியத் திறனாய்வாளரும் கவிஞருமான ராஜ மார்த்தாண்டன், சாலை விபத்தில் மறைந்த செய்தி துயரம் அளிக்கிறது. 60ஆம் திருமணம் நடந்து, ஓராண்டு கழித்து இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

காலச்சுவடு பத்திரிகை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த அவர், 06.06.2009 அன்று சாலையைக் கடக்கும்போது, பேருந்து மோதி மரணம் அடைந்துள்ளார்.

கொல்லிப்பாவை
இதழ் ஆசிரியராகவும் தினமணி நாளிதழில் உதவி ஆசிரியராகவும் பணியாற்றியவர்.

அப்படியே நிற்கட்டும் அந்த மரம் (கவிதைகள், அஜிதா பதிப்பகம்), என் கவிதை (கவிதைகள்), ராஜமார்த்தாண்டன் கவிதைகள் (கவிதைகள், தமிழினி வெளியீடு), கொங்குதேர் வாழ்க்கை - 3 (தொகுப்பு, தமிழினி), புதுக்கவிதை வரலாறு (திறனாய்வு, தமிழினி), புதுமைப்பித்தனும் கயிற்றரவும் (திறனாய்வு, தமிழினி) ஆகிய நூல்களின் ஆசிரியர்.

மகனுக்கும் மகளுக்கும் திருமணம் முடித்து, ஓரளவு தன் குடும்பக் கடமைகளை நிறைவு செய்துள்ளார். இலக்கியவாதிகள் பலருடனும் நெருங்கிய நட்புப் பூண்டவர்.

தினமணி அலுவலகத்தில் அவர் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய போது, பல முறைகள் அவரைச் சந்தித்து உரையாடியிருக்கிறேன். பழகுவதற்கு இனிய மனிதர். மிக எளிய தோற்றம் கொண்டவர். அதிர்ந்து பேசாதவர். கவிஞர் என்ற முகத்தைத் தாண்டி, அவருக்குள் இருந்த இலக்கியத் திறனாய்வாளர் என்ற முகம், தாமதமாகத்தான் வெளிப்பட்டது. இந்த வகையில் அவரின் முக்கியமான நூல்களைத் தமிழினி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

குடிப்பழக்கத்திற்கு அவர் அடிமையாகாமல் இருந்திருந்தால் தமிழுக்கு இன்னும்கூட நன்மை விளைந்திருக்கும்.

அவர் ஆன்மா, அமைதி கொள்ளட்டும்.

அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் இனியநத்தார் வாழ்த்துக்கள்..
உங்களனைவருக்கும் வரும் 2009 ஆண்டு நல்லதையே கொடுக்கட்டும்!

இவ்வாண்டாவது போரில் வாடும் எம் அன்பு உறவுகளுக்காக மலரட்டும்... :)

நன்றிகளுடன்
மாயா

வணக்கம் நண்பர்களே வாங்க, வாங்க…
வலைப்பதிவுக்கு வந்தமையை இட்டு மகிழ்ச்சி !

அனேகமா, சில வலைப்பதிவுகளில் இருக்கிற சுட்டிகள் மூலமாகவோ, அல்லது கூகிள் , யாஹூ மாதிரி ஏதாச்சும் தேடுபொறிகள் மூலமாகவேனும் எதையாவது தேடும் போது, தடுக்கி இங்கே வந்து விழுந்திருக்கலாம். எதுவா இருந்தாலும், வணக்கம். தாயகத்தில் இருந்து வந்ததிலிருந்து இப்பொழுதெல்லாம் எனது பிரதான வலைப்பதிவான
"மாயாவின் பதிவுகள்" உட்பட ஏனைய பதிவுகளில் பதிவுகளை எழுதுவதில்லை. அதற்க்கு பல காரணங்கள் இருக்கலாம்.(நாடிருக்கிற நிலையில் உந்த பதிவுகளெல்லாம் தேவையா ? என கேட்கும் நண்பர்களின் கேள்விகளும் காரணமாக அடங்கும் ) .

ஆனாலும் முற்றாக எழுதுவதை நிறுத்தவில்லை , இப்பொழுதும் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன், வேறுபெயர்களில். சிலவேளைகளில் அவற்றை நீங்கள் படிக்கவிருக்கும் பதிவாகவோ படித்த பதிவாகவோ இருக்கலாம்.

நிச்சயமாக ஒருநாள் மீண்டும் இப்பதிவில் பதிவெழுவேன்.
அதற்க்குரிய நாள் வெகு தொலைவிலில்லை.
(அப்போது தாயகத்தில் இருந்து எழுதும் போது 20க்கும் குறைவான பதிவர்களே இருந்தனர். இப்போ 50க்கும் மேற்பட்டவர்கள் எழுதுகின்றனர் . . . எல்லாம் நல்லதுக்குத் தான் )

மீண்டும் சந்திக்கும் வரை
கனவுகளோடு மாயா

கருத்துகள் இல்லை: