செவ்வாய், 30 ஜூன், 2009

2009-06-30


இப்படி கூட ஒரு படம் எடுக்க முடியுமா? னு நம்மை ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். பொதுவா விஜய் படத்தை பார்க்கக்கூடாதுன்னு ஒரு கொள்கை உண்டு எனக்கு. அன்னைக்கு ஓசி சோறு (அதாங்க treat) போடுறாங்கன்னு வந்தவனை அப்படியே பார்சல் பண்ணி தியேட்டருக்கு கூட்டிட்டு போய்ட்டானுங்க பாவிப்பசங்க!! சரி பாட்டெல்லாம் கேக்கறதுக்கு நல்லா இருந்துச்சே, அதையாவது ரசிப்போமேன்னு போனேன்!

டைட்டில்ல டைரக்டர் பேர் பரதன் ன்றதை Bhharathhhhhhan ன்னு போட்டப்பவே மனசுக்குள்ள ஒரு அலாரம் அடிச்சுது! இருந்தாலும் தைரியமா உக்காந்திருந்தேன்! படத்துல விஜய் ஒரு ஓடுகாலி! அதாவது ஓட்டப்பந்தய வீரர். இப்ப இந்த படம் தியேட்டரை விட்டு தியேட்டர் ஓடுற வேகத்துக்கு ஓடுவார்னா பார்த்துக்கோங்க! அவர் ஓடுனா தோத்துடுவோமுன்னு பயப்படுற ஒரு சக ஓடுகாலி, அவரை தீர்த்து கட்டுறதுக்காக ரோட்டுக்கு நடுவுல ஒரு கயிறு கட்டிவிடுறான். நம்ம ஹீரோ பைக்ல காத்தை கிழிச்சிகிட்டு (இந்த படத்துல என்ன கிழிச்சேன்னு யாராவது கேள்வி கேட்டா பதில் சொல்லனுமில்ல!) வர்றார். நம்ம ஹீரோ எவ்ளோ பெரிய தில்லாலங்கடின்னா, அந்த கயித்து மேல உக்காந்துகிட்டிருக்கிற பட்டாம்பூச்சியை பார்த்து வீலீங் பண்ணி சதியை முறியடிக்கிறாராம்! நோட் பண்ணுங்கடா! நோட் பண்ணுங்கடா! அதுக்கப்புறம் வழக்கம்போல ஒரு ஃபைட் ஒரு பாட்டு!

பாட்டுல பார்த்தீங்கன்னா, விஜய் கூட ரேஸ் ஓட்டுறவங்க, வக்கீல், டாக்டர், கடற்படை வீரர்கள் ன்னு நிறைய பேர் ஆடுறானுங்க! விட்டா ராணுவ தளபதி, ஜனாதிபதியெல்லாம் வந்து ஆடுவாங்க போல இருக்கு!

ஏ.ஆர் ரகுமான் ஏண்டா இந்த படத்துக்கெல்லாம் இசையமைச்சோம்னு ஃபீல் பண்ணி கதறி கதறி அழதுட்டிருக்கிறாரம். அந்த அளவுக்கு பாட்டு எல்லாத்தையும் கொதறி வெச்சிருக்கானுங்க!

படத்தோட நாயகி ஸ்ரேயா! சென்ஸார்னு ஒண்ணு இருக்கேன்ற ஒரே கரிசனத்துல தான் துணி போட்டிருக்காங்க போல இருக்கு! அந்த அளவுக்கு துணி பஞ்சம். எல்லா படத்துல வர்ற அரைலூசு ஹீரோயின் மாதிரி தான் இவங்களும். ஹீரோ தியாகம் பண்றதை பார்த்து காதல்ல தொபுகடீர்னு விழுந்துற்றாங்க! ஏண்டா டேய், அது எப்படி கரெக்டா ஹீரோயின்னுக்கு கேக்குற மாதிரியே இடம் பார்த்து போய் பேசுறீங்க!

அப்படியே கதை போய்க்கிட்டு இருக்கும்போதுதான் தெரியுது, விஜய் ஒரு தமிழகத்து நாஸ்ட்ரடாமஸ்னு! அவருக்கு extra sensory perception இருக்குதாம்! அதாவது எதிர்காலத்தை இப்பவே தெரிஞ்சுக்கிற பவர். நீங்க உங்க மனசுக்குள்ளே கெட்ட வார்த்தையால திட்டுறது புரியுது! அப்ப நேர்ல பார்த்த நாங்க எவ்வளவு திட்டியிருப்போம்னு பார்த்துக்கோங்க!

இதுக்கு மேல அந்த கதையைப்பத்தி நான் சொல்ல மாட்டேன்! ஏன்னா சொல்றதுக்கு கதைன்னு ஓண்ணுமில்ல!

அதுக்கப்புறம் ரெண்டாவது விஜய் எண்ட்ரி. ரெண்டு விஜய்க்கும் ஸ்டைல்தான் வித்தியாசமாம். டேய் குருவி மண்டையா! நீ எதை ஸ்டைல்னு சொல்றன்னே புரியலையேடா!

படத்தோட ஹைலைட் என்னன்னா படத்துல நமீதா வர்றாங்க! நம்ஸ்! உன் முகம் குழந்தைத்தனமா இருக்கு! அதுக்குன்னு குழந்தைங்க போடுற டிரெஸ்தான் போடுவேன்னு அடம்பிடிச்சா என்ன அர்த்தம்! இங்க ஒண்ணு சொல்லியே ஆகணும்! நம்ஸோட அப்பா சூரத்துல துணி வியாபாரம் பண்றாராம்! என்ன கொடுமை சரவணன் இது! (சிவீஆர் அண்ணா! உங்க தலைவியை பத்தி ஏதாவது தப்பா சொல்லியிருந்தா மன்னிச்சுடுங்க!)

ஷகிலா எதுக்கு படத்துல வர்றாங்கன்னே புரியலை! அப்புறம் இந்த சாயாஜி ஷிண்டே! அஜக்கு மாதிரியே பேசிட்டு திரியுறாரு!

கிளைமாக்ஸ்ல ஒரு கொடுமை! இது வரைக்கும் விஜய் தான் டயலாக் பேசி வில்லனை திருத்துவார். இந்த படத்துல ஹீரோயின் டயலாக் பேசி திருத்துறாங்க! இன்னொரு கொடுமை என்னன்னா டைட்டில்ல இதய தளபதி, டாக்டர் விஜய்னு போடும்போது நம்மால வாந்தி எடுக்காம இருக்க முடியலை! எப்படி வேணும்னாலும் படம் எடுக்கலாம்! நம்ம கேக்குறதுக்கு ஆள் இல்லைன்ற தைரியத்துல படம் எடுத்திருக்காங்க டைரக்டரும் ஹீரோவும்!

ஆக மொத்ததில் அழகிய தமிழ்மகன், அழுகிய வாழைப்பழத்தை சாப்பிட்ட மாதிரி இருக்கு!!
நாட்டுல இவிங்க மாதிரியே நிறைய பேரு சுத்துறாங்கப்பா! மனசுல பெரிய எமினம்னு நினைப்பு!!



நம்ம விஜய டி ஆர் த்ரிஷா கிட்ட காதலை சொன்னார்னா எப்படி இருக்கும்ன்ற ஒரு விபரீத கற்பனை!

அன்பே த்ரிஷா,
நீ தான் என் மோனாலிசா

இழுக்க இழுக்க வர்றது ஜவ்வு!
நான் உன்னை தாறுமாறா பண்ணுறேண்டி லவ்வு!

ரவையை வெச்சு கிண்டுறது உப்புமா!
நீ என்னை கண்டுக்காம இருக்குறது ரொம்ப தப்புமா!

முட்டையை உடைச்சா போடுறது ஆம்லேட்டு
என்னைப் புரிஞ்சுக்கிறதுல எப்பவுமே நீ லேட்டு!

சின்ன பசங்க ஆடுறது கோலி
உங்கப்பன் என்னை பார்த்தான்னா நான் காலி!

ஆற்காட்டில ஃபேமஸ் பிரியாணி
நம்ம காதலுக்கு எவன் குறுக்க வந்தாலும் அவன் மண்டைல நான் அடிப்பேன் பெரிய ஆணி

டி ஆர் னு சொன்னா ஞாபகம் வர்றது தாடி!
நீ கண்டிப்பா வருவ என்னைத்தேடி!

ஆக மொத்தம் நீ தான் என் டிஸ்னி வேர்ல்டு!
நம்ம காதலுக்கு உங்கப்பன் தான் ஆக்ஸா பிளேடு!!

இதுக்கு நம்ம திரிஷா ரியாக்ஷன் எப்படி இருக்கும்னு கற்பனை பண்ணி கமெண்டிட்டு போங்க!!



இது என் பதிவை கஷ்டப்பட்டு படிச்சதுக்காக போனஸ்!! :)


More than a Blog Aggregator

by ச.மனோகர்
மது விருந்துடன் ஆபாச நடனம் 11 பெண், 22 அதிகாரிகள் கைது

புனே, ஆக.28: மகாராஷ்டிராவில் ஆபாச நடனம் பார்த்த சுங்க அதிகாரிகள் 22 பேரை போலீசார் கைது செய்தனர். நடனமாடிய 11 பெண்களும் கைது செய்யப்பட்டனர்.மகாராஷ்டிர மாநிலம் புனே அருமது கே கண்டலா என்ற மலை வாசஸ்தலத்தில் ஒரு சுற்றுலா விடுதியில் ஆபாச நடனம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு மது விருந்துடன் ஆபாச நடனம் நடந்து கொண்டிருந்தது. நடனத்தை பார்த்துக் கொண்டிருந்த மும்பையைச் சேர்ந்த சுங்கம் மற்றும் கலால் துறையைச் சேர்ந்த 22 அதிகாரிகளை போலீசார் கைது செய்தனர். இவர்களில் 7 பேர் சூப்பிரண்டென்ட் அந்தஸ்தில் இருப்பவர்கள். ஆபாச நடனம் ஆடிய 11 பெண்கள், விடுதியின் நிர்வாகிகள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். சோதனையில் ஆபாச சி.டி.க்கள் மற்றும் மது பாட்டில்களும் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்-தினகரன் 28/8/08

'சென்ஸிடிவ் டிபார்ட்மெண்ட்கள்' என்று சொல்லும் இந்தத் துறைகளின் அதிகாரிகளின் இந்த கூத்தடிப்புகள், பல ஊழல் நடவடிக்கைகளுக்கு பயன்பட்டு விடாதா? அதிகாரிகள் தன் கீழ் பணியாற்றும் ஊழியர்களுடன் சேர்ந்து இந்த ஆட்டம் போட்டால் அங்கு எந்தப் பணியாவது நேர்மையாக நடக்குமா?

மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல் :

கொல்கத்தா மற்றும் சென்னை விமான நிலையங்களை விரிவுபடுத்தவும், நவீனப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் கட்டமைப்புப் பணி அடுத்த மாதம் இறுதிக்குள் தொடங்கப்படும். இதற்காக ரூ.1,700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்கு நில ஆர்ஜிதம் செய்வதில் பிரச்சனை நிலவி வருகிறது. அது அந்த மாநிலத்தின் பிரச்சனை. விரிவாக்கத்தை செயல்படுத்த வேண்டுமானால் மாநில அரசுதான் நிலத்தை பெற்றுத் தர வேண்டும். அதையும் சீக்கிரம் பெற்றுத் தந்தால்தான் திட்டம் விரைவில் செயல்படுத்தப்ப முடியும். ஹைதராபாத் விமான நிலையத்தில் பயணிகள் மேம்பாட்டுக்காக கட்டணம் வசூலிக்க தனியார்களை அரசு அனுமதித்தது. அதேபோல பெங்களூரில் தொடங்கப்பட்டுள்ள புதிய விமான நிலையத்திலும் கொண்டு வர பரிசீலித்து வருகிறோம். அது தொடர்பாக முடிவெடுப்பதற்கு முன் சாதக பாதகங்களை ஆய்வு செய்வோம்.

ஒரு இணைய இதழில் ஒரு வாசகர் :
I don't understand, the government is acquiring land from public by paying meagre amount, they are alloting money for the expansion of airport, they are giving the work to private parties. Finally they are collecting money from the air-passengers in huge and it is allowed for years. If any question is asked they say the contract is operating on BOT, if it is BOT why government is allocating money from it's reserves, these reserves are collected as tax from the citizens. It indirectly indicates that the government(politicians)is playing game with the citizens.

வாசகர் சொல்வது சரியா?

கருத்துகள் இல்லை: