திங்கள், 29 ஜூன், 2009

2009-06-29

இலையுதிர் காலம் போல நீ.
காற்றில் படபடக்கும் இலைகளாய் தொய்ந்த குரல்.
கண்களில் குழப்பம்.
பேச்சில் முணுமுணுப்பின் ஆதிக்கம்.
சம்பந்தமில்லாத அழுகை.
புரியாத சிரிப்பு.
தள்ளாமையை மறைக்க முயலாத வெகுளித்தனம் புதுசு.

பொங்கிய பழைய நினைவுகள்
பழுப்பேறிய காகிதங்களாய்.
கனமாய் இருக்கிறது யதார்த்தம்.

அந்த நீண்ட பிரிவிற்கு பின்
நாம் சந்திக்காமலே இருந்திருக்கலாம்.

தெருவெங்கும் முகமூடி அணிந்த மனிதர்கள்!
ஒவ்வொரு வீட்டிற்கு வெளியேயும் தொங்குகின்றன தொய்ந்து நைந்து போன முகமூடி!
வீட்டிற்குள் வந்ததும்
அவரவர் கண்ணாடியில் பார்த்து கொள்கிறார்கள்
முகமூடி கழற்றபட்ட தங்கள் முகங்களை.

முகமூடியை கழற்றியும்
முகத்தில் தெரியவில்லை முகம்.

சிலர் மட்டும் கழுவி கொண்டே இருக்கிறார்கள் முகத்தை!

ஆச்சரியம் தான். நான் இதற்கு முன் பல முறை பல வலைப்பதிவுகளை தொடங்கி இருக்கிறேன். அவற்றிற்கு அதிகபட்ச ஆயுள் ஓரிரு தினங்கள் தாம். ஆனால் இந்த வலைப்பதிவு சற்று மாறுபட்டது. தொடங்கி ஒரு வருடமாகி விட்டது. 67 பதிவுகள் பதிந்தாயிற்று.

தமிழ்மணத்தின் உதவியால் உடனடி பார்வையாளர்கள் கிடைத்தது தான் இந்த வலைப்பதிவு இன்றும் உயிருடன் இருப்பதற்கு முதல் காரணம். நாம் பதிவதை பலர் படிக்க வருகிறார்கள் என தெரிந்த பிறகு வலைப்பதிவு என்னுடைய வாழ்க்கையின் முக்கிய பங்காக மாறி வருகிறது.

வலைப்பதிவு இன்ன காரணத்திற்காக இந்த வகைபட்டதாய் (genre) இருக்க வேண்டும் என தொடக்கத்திலே முடிவு செய்வது மிகவும் கஷ்டம். கவிதைகளுக்கு மட்டும் என்று நான் திட்டமிட்டது இன்று கவிதைகளை தாண்டி புனைவு மற்றும் வெவ்வேறு தலைப்புகளாக வளர்ந்து நிற்கிறது.

இந்த வலைப்பதிவு காரணமாய் நல்ல நண்பர்கள் கிடைத்து இருக்கிறார்கள். பள்ளிப்பருவத்தில் தொடர்பு அறுந்து போன நண்பன் ஒருவன் இந்த வலைப்பதிவு வழியாய் மீண்டும் கிடைத்தான். இந்த வலையுலகத்தை அறிமுகம் செய்தவர் பாலபாரதி. தொடங்கிய சில நாட்களிலே ஓடி வந்து ஊக்கமளித்து இன்றும் தெம்பு தருபவர் ரவி. தவிர நிறைய நண்பர்களுக்கு நன்றி கடன்பட்டிருக்கிறேன்.

ஒரு வருடம் கடந்த இந்த வலைப்பதிவால் என்ன லாபம் என கேட்டால் எனக்கு தெளிவாக தெரியவில்லை. முதலில் ஓர் எழுத்து பயிற்சி. இந்த வலைப்பதிவு இல்லையெனில் 34 கவிதைகளை எழுதியிருக்கவே மாட்டேன். வாரத்தில் செவ்வாய்க்கிழமைதோறும் கவிதைகளை பதிக்க வேண்டும் என்கிற சுய விதிமுறையை அவ்வபோது நான் மீறி இருந்தாலும் 34 கவிதைகளை எழுதியதே எனக்கு பெரிய காரியம். அடுத்து கட்டாயபடுத்தி எழுதுவதெல்லாம் கவிதையா என்கிற கேள்வியை எழுப்பினால் இந்த 34-இல் ஒரு கவிதையாவது தேறி இருக்காதா என்றே யோசிக்கிறேன்.

கதையாடல் என்கிற பெயரில் நான் போட்டு கொண்டிருக்கும் புனைவும் இல்லாத, கட்டுரையும் அல்லாத இரண்டும் கலந்த பதிவுகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த வகையறா பதிவுகளை தொடர்ந்து எழுத முடியவில்லையெனினும் அவ்வபோதாவது முயற்சி செய்வேன்.

வலைப்பதிவில் அவ்வபோது எழுதவில்லையெனில் அது உயிர்ப்புடன் இருக்காது என அறிவேன். அதற்காக தொடர்ந்து எதையாவது எழுதி கொண்டே இருந்தால் தரமிருக்காது என்றும் தெரியும்.

அடுத்த ஆண்டு இந்த சமயம் இந்த வலைப்பதிவு தொடங்கி இரண்டு வருடமாகி விட்டது என நான் எழுதும் போது இந்த வலைப்பதிவின் முகமும் தரமும் நன்றாக இருக்க வேண்டும் என்பதே அடுத்த முயற்சி.

அனைவருக்கும் நன்றி.

- சாய் ராம்

எந்த ஒரு செயல் நடப்பதற்கு முன்பும் அது நடக்க போகிறது என்கிற அறிவிப்பு காட்டுகிற விதமான விஷயங்கள் நடப்பதுண்டு. ஆங்கிலத்தில் சுருக்கமாக Symptoms. தமிழ் இனத்திற்கும், தமிழ் பாரம்பரியத்திற்குமான சாவு மணி பல வருடங்களுக்கு முன்னாலே அடிக்கபட்டாலும் அதன் சாவின் முன்னோட்டம் இப்போது ஈழத்தில் அடித்து வீழ்த்தப்படும் அப்பாவி தமிழ் மக்களின் சாவுகளாலும் அதனை தொடர்ந்து எழும் தமிழ் மக்களின் மௌனத்தாலும் தெளிவாக தெரிகிறது.

தமிழ் நாட்டில் ஆங்கிலத்தில் பேசுவது கௌரவம், ஆங்கிலத்தில் நமது பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும், மேற்கத்திய கலாச்சாரத்தில் ஊறினால் மரியாதை என்கிற விதமான மனோபாவம் பரவலாக பரவிய போதே சாவு மணி கேட்க தொடங்கி விட்டது. இப்போது ஈழத்தில் லட்சக்கணக்கான மக்கள் மனித உரிமைகளை இழந்து போர்கைதிகளாக நிற்கும் சூழலில் அதனை தமிழனே தட்டி கேட்க தயங்கும் நிலை உருவாக்கபட்ட பிறகு, இது "தமிழினி மெல்ல சாகும்," என்பதனை தான் உரத்து சொல்லுகிறது.

ஓவியம்: Frank Frazetta

கருத்துகள் இல்லை: