திங்கள், 29 ஜூன், 2009

2009-06-29

இந்த வார துக்ளக்கில் ஒரு கேள்வி பார்த்தேன்....கேள்வி இதுதான்...
"இலங்கை விவகாரத்தில் ஏன் இலங்கையிலுள்ள எந்த தமிழரும் தீக்க்குளிக்கவில்லை???"

எனக்கும் இதற்க்கு பதில் தெரியவில்லை...யாருக்காவது தெரிந்தால் சொல்லவும்!!!!!!!!!!!!!......இப்படி ஒரு பதிவை போட்டதால் என்னை திட்டினாலும் நான் கவலைப்படமாட்டேன்!!!!!!!
  நம்ம தலைவர்????? மன்மோகன் சிங் இப்போதான் பிரதமரான மாதிரி இருக்கு அதுக்குள்ள 5 வருஷம் ஓடிபோயிருச்சு!!!!!!!!!!!!!!!

(மன்மோகன் சிங் : ஏன்டா கொய்யால நானே எப்படா இந்த நாற்காலிய விட்டுட்டு நிம்மதியா இருக்கலாம்னு இருக்கேன்...உனக்கு பீலிங்க்ஸா...உனக்கு 5 வருஷம் ஓடிருச்சு ஆனா எனக்கு அவ்வ்வ்வ்வ்வ்வ் )


எலெக்ஷன் வந்தாலே எனக்கு ரொம்ப குஷி ஆகிடும்....எப்பவுமே. இருக்குற அத்தனை பேப்பர், ரிப்போர்டர்,ஜூ.வீ ,நக்கீரன்,துக்ளக் னு ஒன்னு விடாம படிப்பேன்....அதுவும் போன எலெக்ஷன் நான் காலேஜ் போயிட்டு வந்துட்டு இருந்தேன்...அதனால டிஸ்கஷன் பயங்கரமா இருக்கும்...கீரநூர்ல உள்ள லோக்கல் ஆளுங்கல்ட கருத்து கணிப்பெல்லாம் நடத்துவோம்....:)))))

இப்போ இந்த எலக்ஷனுக்கு நான் மும்பை வந்தாச்சு....இந்த ஊர்ல பயங்கரவாதிங்கலால தான் பிரச்சினையே தவிர அரசியல் வாதிங்க நம்ம ஊர் மாதிரி சண்ட போட்டுக்க மாட்டேங்குறாங்க....அதனால ஒரு பரபரப்பே இல்லாம ரொம்ப சப்புனு இருக்கு எப்பவுமே ... :)) பாப்போம் எலெக்ஷன் நேரத்துலயாவது கொஞ்சம் காரசாரமா இருக்கான்னு?

I miss you Tamilnadu :((((((

அப்படியே கீழ இருக்குற படத்தையும் பாருங்க....கூகிள் லேந்து எடுத்தது!!!!!!!!






















இன்று கே டிவியில் மௌனம் சம்மதம் படம் பார்த்தேன்..அதற்க்கு முன்னமே முரளிகன்ணனின் எதிர்நாயகர்கள் பதிவை வாசித்த காரணமோ என்னமோ அவர் இதுவரை தொடாத இந்த விஷயத்தை பற்றி எழுதலாம் என்று தோணி ஆரம்பிக்கிறேன் :)))))))நான் ரொம்ப சின்னப்பய்யன் அதனால எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்லேந்து வந்தவேற்றுமொழி நாயகர்கள் பற்றி பார்க்கலாம்......இதுக்கும் மின்னாடி முரளிகண்ணன் அவர்கள் தாராளமாக தொடரலாம் ......:அவர்தான் குரு...நான் ஏகலைவன் மாதிரி ஒரு சிஷ்யன் அவ்வளவுதான்.....சரி மேட்டருக்கு போவோம்...

மம்முட்டி:

இவர் படம் நான் பார்த்து ஒரு மலையாள படம்...பெயர் நினைவில் இல்ல..ஆனா இந்த படத்தில் இவர் மோகன்லாலுடன் நடித்திருப்பார் என்று நினைக்கிறேன்...ஒரு ஓடும் ரயிலில்தான் படம் முழுவதும் நடக்கும்....இந்த பதிவை யாரவது படித்தீர்களானால் இந்த படத்தை சொல்லலாம் :)))))))))அடுத்து ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லாஹ்....இந்த படத்தில் இவர் மிக சிறப்பாக நடித்திருப்பார்.....(பட வரிசை ஒழுங்காக இருக்காது....எனக்கு ஞாபகத்தில் இருந்த படங்களை பற்றித்தான் சொல்லிஇருக்கிறேன்).

தளபதி:

இந்த படம் வந்த போது எனக்கு ஒரு 5 அல்லது 6 வயசு இருக்கும்...ஆனால் இந்த படத்தில் மம்முட்டியின் நடிப்பை இப்பொழுது பார்த்தாலும் எனக்கு புல்லரிக்கும்...,,அவ்வளவு இதமாக அருமையாக நடிதிருப்ப்பார்...அவருடைய உடல்மொழி மற்றும் ரஜினியுடனான அவர் காட்சிகள் எல்லாவற்றிலும் அவர் ஒரு மகத்தான நடிகன் என்று காட்டிருப்பார். ஏன் தேவா???? நீ என் நண்பன்டா....டயலாக் எல்லாம் இப்போ கேட்டாலும் கண்ணீர்வரும்.....அப்புறம் ஷோபனாவ தலைவருக்கு பொண்ணுபார்க்க போற சீன்..அதுல சாருஹாசன் கழுத்தை பிடித்து பேசும் காட்சி...மனுஷன் பின்னிருப்பான் .

மௌனம் சம்மதம்:


ஒரு வக்கீலாக இடைவேளைக்கு பிறகே வந்து ஒரு படத்தை தூக்கி நிறுத்தறது இவரால தான் முடியும்.....இவரோட மலையாள accent ல நீதிமன்றத்துல வாதாடுற காட்சி சூப்பரா இருக்கும்...போதாகொறைக்கு அமலா வேற கதாநாயகி...இந்த படம் இயக்கியது யாருன்னு எனக்கு தெரியல :(((...தெரிஞ்சவங்க சொன்னா நல்லா இருக்கும்...கொஞ்சம் பார்க்கலாம்கிற நல்ல படங்கள்ல இதுவும் ஒன்னு....


அழகன்:

அடா அடா அடா....மமுட்டியபத்தி பேசிட்டு இந்த படத்த சொல்லாட்டி என்ன ஆகுறது....ஒரு ஹோட்டேலியர் தன் குழந்தைகளோட தனியா வாழுராறு அவர் வாழ்கையில வர மூணு பொண்ணுங்களோட என்ன மாதிரியான உறவு...நட்பா???காதலா என்று சொல்லும் படம்...இந்த படத்துல வர சங்கீத ஸ்வரங்கள் பாட்டு ஆகா..இப்பவும் கேட்டவுடன் சொக்கி போற பாட்டு...!!!!இசை அம்சலேகா!!!!!!! (நான் இசைஞானி என்று எழுதிருந்தேன்....சுட்டிக்காட்டிய அனானி நண்பருக்கு நன்றி)


எதிரும் புதிரும்!!

இதில் ஒரு போலீசாக வீரப்பனை பிடிக்கிற வேடத்தில் நடித்திருப்பார்.....இதிலும் கலக்கிருப்பார்...


மறுமலர்ச்சி:

இந்த படத்தில் ராசு படையாசியாகவே வாழ்ந்திருப்பார் ....இதில் தேவயானி மம்முட்டியின் மனைவியாக நடித்திருப்பார்...இன்னும் குறிப்பிட்டு சொல்ல ரஞ்சித்.மன்சூரலிகான் ஆகியோரும் கலக்கிருப்பார்கள்....

ஆனந்தம்:

இந்த படத்தில் இவர் பின்னி பெடலடுத்துருப்பார்....இதிலும் இவருக்கு தேவயானி ஜோடி....இவர் கல்யாணம் பண்ணி புது மனைவியிடம் வழிகிற வழிசலாகட்டும்....தம்பியிடம் ஆற்றாமையில் பொங்குவதாகட்டும் தான் ஒரு நடிப்பின் சிகரம் என்பதை சொல்லாமல் சொல்லி விடுவார்.....

அவ்வளவுதான் இனி ஓவர் டு முரளிகண்ணன் :))))))))அவருக்கு ஒரு டாபிக்கை எடுத்து குடுத்த சந்தோஷத்துடன் இந்த பதிவை முடித்துக் "கொல்கிறேன்"...நன்றி வணக்கம்
பாராளுமன்றத் தேர்தலில் பொதுவாக வாக்காளர்களுக்கு காசு கொடுப்பது வழக்கம் இல்லை, ஆனால் இந்த முறை மிகப்பெரிய அளவில்  "கோடிகள் விளையாடியுள்ளது" . இலங்கை பிரச்சனையில் பா.ம.க, ம.தி.மு.க ஆகிய கட்சிகள் பெரிய அளவில் போராட்டங்களை செய்துவந்துள்ளது. இக்கட்சிகள் வெற்றி பெற்றால் மிகப் பெரிய பிரச்சனை எழும் என நினைத்த வெளிநாட்டு சக்கதிகள் தி.மு.க விற்கு பெருமளவில் பணத்தை கொடுத்து அதன் வெற்றிக்கு அடிகோலியுள்ளன. சீனாவின் முன்னேற்பாட்டில் இலங்கையிலிருந்து தமிழகத்தில் பரவலாக அனுப்பி வைக்கப்பட்ட பலர் இந்திய தேர்தலில் அதற்கான பணிகளை மேற்கொண்டனர். இதன் மூலம் தி.மு.க அன்னிய சக்திகளின் ஊடுறுவலுக்கு துணைபோயுள்ளது. இது இந்தியாவின் நலனுக்கு மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.

அதே நேரத்தில் அ.தி.மு.க இருந்த தொகுதியில் அந்த அளவுக்கு பணம் செலவு செய்யவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் நமக்கு காட்டுகிறது. இக்கட்சியை பா.ம.க, ம.தி.மு.க கட்சிகளிடமிருந்து பிரித்தெடுக்கும் முயற்சியாகவும் அந்த கட்சிக்கு எதிராக அதிக நிதி அளிக்கப் படவில்லையாம். இந்த தேர்தலில் அ.தி.மு.க வெற்றி அடைந்துள்ளதால் இரு கட்சிகளிடமிருந்து விலகி இருக்க வேண்டிய நிலை உருவாக்கப்பட்டுள்ளது. ஈழப்பிரச்சனை பேசுவதால் பலன் இல்லை என்று சொல்லி செயலலிதாவையும் பின்னர் திசை திருப்பிவிடலாம் எனவும் இவ்வாறு முடிவெடுத்து செயல் பட்டார்கள் எனவும் தெரிகிறது.

திருமாவளவனும் ஈழப்பிரச்சனையில் ஆபத்தானவராக கருதப்படுவதால் அவர் ஒரு தொகுதியில் தப்பித்தார்.

இந்த தேர்தல் முடிவு " தி.மு.க" கார்பரேட் கம்பெனிக்கு பெரிய வெற்றியாகவும் தமிழினத்திற்கு பெரும் தோல்வியாகவும் அமைந்துள்ளது.
இன்றைய ஆங்கிலம் துணுக்குகள் பகுதியில் ஒரு வினைச்சொல் ஆங்கில மொழியில் எத்தனை வடிவங்களாகப் பயன்படுகின்றன என்பதைப் பார்ப்போம்.ஐந்து வடிவங்களாகப் பயன்படுகின்றன. அவைகளாவன:1. Base Form2. Gerund Form3. Third Person Form4. Past Form5. Participle Formஎடுத்துக்காட்டு: "do" எனும் ஒரு வினைச்சொல்லை எடுத்துக்கொண்டோமானால், அது do, doing, does, did, done என ஐந்து வினை வடிவங்களாகப் பயன்படுவதைப் பார்க்கலாம்.
நாம் இதுவரை Grammar Patterns 1 இன் 26 வது இலக்கம் வரையிலான வாக்கியங்களை விரிவாகக் கற்றுள்ளோம். அத்தோடு கடந்தப் பாடத்தில் "Perfect Tense" தொடர்பான Grammar Patterns 7 உம் கற்றோம். அதில் உள்ள ஒவ்வொரு வாக்கியங்களும் ஒவ்வொரு பாடங்களாக விரிவடையும் என்றும் கூறியிருந்தோம் அதன்படி இன்று Grammar Patters 7 இன் முதலாவது மற்றும் இரண்டாவது வாக்கியங்களை  விரிவாகப் பார்க்கப் போகின்றோம்.முதலில் முதல் வாக்கியத்தை

கருத்துகள் இல்லை: