செவ்வாய், 30 ஜூன், 2009

2009-06-30

பொது ஜனம் ஒருவரும், ஆளும் கட்சி ஆள் ஒருவரும் பேசிக் கொள்கிறார்கள்....

"ஏங்க ஸ்கூல் காலேஜ் எல்லாம் வேலை செய்யும்னு பேப்பர்ல போட்டிருக்கான்? நீங்க லீவ்னு சொல்றீங்க..."

"பஸ், ஆட்டோ எதுவும் ஓடலை.. எப்படி வாத்திமாருங்க பள்ளிக்கூடம், காலேசு வருவாக? அதான் லீவ்.."

"என்னது பஸ் ஓடலையா? போலீஸ் பாதுகாப்போட ஓடும்னு ஓடும்னு அரசு அறிவிச்சுகிறதா பேப்பர்ல போட்டிருக்கானே?"

"பஸ்ஸை ஓட்ட மாட்டோம்னு தொழிற்சங்கம்லாம் வேலை நிறுத்தம் பண்ணுது?.. அப்புறம் எப்படி ஓடும்..."

"என்னங்க இது அநியாயமா இருக்கு? அரசு அலுவலகம்லாம் வேலை செய்யுதா இல்லையா?"

"வேலை செய்யுது.. ஆனா ஆளுங்க யாரும் இருக்க மாட்டாங்க.. அப்படியே இருந்தாலும், மக்கள் அங்க போறதுக்கு பஸ், ஆட்டோ கிடையாதுல்ல... இப்ப என்ன செய்வீங்க..."

"எப்படிங்க ஒரு முதல்வர் பந்த் அறிவிக்கலாம்? அவர் அறிவிச்சதுக்கு அப்புறம் அரசு தெரிவித்ததுன்னு அது ஓடும், இது ஓடும், அலுவலகம் தொறந்திருக்கும், காலேஜு தொறந்திருக்கும்னு எப்படி சொல்றாங்க? "

"கட்சித் தலைவரா இருந்து பந்த் அறிச்சிருக்கார்.. அரசோட தலைமைப் பொறுப்பில முதல்வரா பந்த் நடக்கிறப்ப
மக்கள் பாதிக்கப்படாம இருக்க போலீஸ் பாதுகாப்போட பஸ்ஸை இயக்கறார்... அரசு அலுவலகம் வேலை செய்ய ஆவண செய்யறார்"

"என்னய்யா குழப்பறீங்க? அதான் பஸ் ஓடலையே?"

"அதுக்கு முதல்வர் பொறுப்பில்லைங்க... போக்குவரத்து தொழிலாளிங்க பஸ் ஓட்டலைன்னா அவரு என்னங்க செய்வாரு...?"

"அப்ப எதுக்குய்யா போலீஸ் பாதுகாப்பு?"

"யாரும் கலாட்டா பண்ண கூடாதுல்ல அதுக்கு தான்"

"என்னய்யா ஒரு கடை கண்ணி இல்ல.. ஓட்டல் இல்ல... எப்படிய்யா கூலித் தொழிலாளிங்க எல்லாம் பொழைப்பாங்க"

"இதுக்கே இப்படி சொல்றீங்களே? அங்க இலங்கையில தமிழர்கள் எப்படி பாதிக்க படறாங்க தெரியுமா?"

"யோவ்... நீங்க தானேய்யா மத்திய அரசுல இருக்கீங்க.. மந்திரி சபையில் பேசி ஒரு முடிவெடுக்க வேண்டியது தானே..."

"யோவ் அங்கே பிரதமரே முடிவெடுக்க முடியலை அந்தம்மா தன் முடிவெடுக்கிறாங்க... நாங்க என்னத்தை முடிவெடுக்கிறது..."

"அப்ப மந்திரி சபையை விட்டு வெளியே வர வேண்டியது தானே..."

"வெளிய வர்றதுக்குள்ள தான் தேர்தல் வந்திருச்சே? எங்க தப்பு இல்லைங்க"

"அவங்க தான் உங்க பேச்சை கேக்க மாட்டேங்கிறாங்களே? மறுபடி எதுக்கு அவங்களோட கூட்டணி?"

"இந்த முறை கேக்கிறதா சொல்லியிருக்காங்க..."

"கேக்கலைன்னா... மந்திரி சபையை விட்டு வெளியே வந்திடுவீங்களா"

"மந்திரி சபையை விட்டுட்டு வர்றதா? வந்தா இலங்கை பிரச்சினை தீர்ந்திடுமா? யார்றா இவன் விவரம் கெட்டவனா இருக்கான்?"

"பின்ன?"

"மறுபடி தந்தி, மனித சங்கிலி, பேரணி, பந்த் எல்லாம் உண்டு... ஆல் தமிழகம் என்ஜாய்"

திருவாளர் பொது ஜனம் மயங்கி சரிகிறார்...






More than a Blog Aggregator

by மாயன்
நம்மைச் சுற்றி நடக்கும் எவ்வளவோ அநியாயங்களுக்கு நம்மையும் அறியாமல் நாம் பழக்கப் படுத்தப்பட்டு கொண்டிருக்கிறோம்.

ஒரு அநியாய சம்பவம் நடக்கும் போது கேள்வி கேட்க வேண்டும் போல இருக்கும். ஆனால் எல்லோரிலும் நான் ஏன் அந்த கேள்வியை கேட்க வேண்டும் என தயக்கம் அனைவருக்கும் இருக்கிறது.

ஒரு அரசு ஊழியர் கடமையை செய்ய மறுக்கிறார் என் வைத்துக் கொள்வோம். நம்மில் எத்தனை பேர் தட்டி கேட்க விழைகிறோம்? நமக்குள்ளேயே சத்தம் போட்டு போட்டு நமக்கு ஒரு சமுதாய செவிட்டு தன்மையே வந்து விடுகிறது...

ஒரு தலைவன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருக்கிறான் என்று சொன்னால், மற்றவர்கள் சேர்ப்பதில்லையா, அவரை பாருங்கள், இவரை பாருங்கள் என்று சொல்லும் தொண்டர்கள் தான் எங்கு பார்த்தாலும் இருக்கிறார்கள்.

நம் தலைவர் இவ்வளவு சொத்து எப்படி சேர்த்தார் என்று தனக்கு தானே கூட கேட்டு கொள்ள அவர்கள் தயாராயில்லை.. ஏன்?

என்ன தயக்கம்? தலைவர்கள் தவறான வழியில் சொத்து சேர்க்கிறார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரியும் போதும், ஏன் நாம் அதை எதிர்த்து ஒன்றுமே செய்வதில்லை...

இந்த சமுதாயம், இந்த சமுதாயம் என்று நாம் முன்னிலையில் வைத்து பேசும் சமுதாயமே நாம் தான் என்பதை முதலில் நாம் உணர வேண்டும்.

சமுதாயத்தில் தவறுகள் நடக்கிறது என்று சொல்வோமானால் நாம் தான் தவறு செய்துக் கொண்டிருப்பதாக அர்த்தம்.

நாம் செய்யும் சிறு போக்குவரத்து விதிமுறை மீறல், வரி ஏய்ப்பு, சிறு குற்றங்கள் நாம் அறிந்து செய்யாவிட்டாலும், நம் அறிவுக்கு அவை தவறு என்று நன்றாகவே தெரியும்.

வோட்டுக்கு பணம் வாங்கும் வாக்காளர்கள் கண்டிப்பாக தவறு செய்யும் மக்கள் பிரதிநிதிகளை தட்டி கேட்க விழைய மாட்டார்கள்.

சிறு குற்றங்களை உறுத்தல் இல்லாமல் செய்யும் பெரும் மக்கள் கூட்டம் அதானாலேயே மேற்கூறிய தவறுகளை தட்டி கேட்காமல் இருக்கின்றனரோ?

மற்றவர்கள் செய்யும் தவறுகளை தட்டி கேட்க போனால் நான் செய்த, செய்யும் இந்த விதிமுறை மீறலை கண்டுபிடித்து விடுவார்களோ என்ற பயம் தான் பெரும்பாலானவர்களை தவறு நடக்கும் போது கேள்வி கேட்க விடாமல் தடுக்கிறது என்று எனக்கு படுகிறது...

சிறு குற்றங்களை உறுத்தல் இல்லாமல் செய்து பழகுவதால் தான், பெரிய தவறுகள் நடக்கும் போது அவை நமக்கு உறுத்தலாக தோன்றுவதில்லை.

போக்குவரத்து விதிகளை ஒழுங்காக கடைப்பிடிப்பதில் ஆரம்பித்து, வரிகளை ஒழுங்காக கட்டுவது, சிறு சிறு விதிமுறைகளை (உ-ம் வரிசையில் செல்லுதல்) மதித்து நடப்பது போன்றவற்றை ஒழுங்காக செய்ய ஆரம்பித்தால் நாட்டில் தவறுகள் குறைய தொடங்கும்.

விழித்தெழுந்த காலையில்
அவளுடலைத் தின்னும்
வேட்கை யுதித்தது.
முழு உடலை இரண்டாய் மடித்து
லேசாய் உப்பு மிளகு தூவி,
கடித்துத் தின்று கொண்டிருந்தேன்.
உச்சியின் தகிப்பில்
சதைகளை கடித்து இழுத்து
உதடுகளில் இரத்தம் வழிய
அவளுடலைப் புசித்தேன்.
மாலைத் திரும்புகையில்
அதே உடலை நீள வாக்கில்
இரண்டாய் கீறி
பிளவுகளின் உள் நுழைந்து
பத்திரமாய் அமர்ந்து கொண்டேன்.
.....
இரவை நினைத்தால்தான்
பயமாக இருக்கிறது.

ஒரு இனத்தினை அழித்து விட்டதாய்
கொக்கரித்துக் கொள்ளுங்கள்.
எமது மண்ணை
நீங்களும் முத்தமிடுங்கள்.
ஆளுயர கட் அவுட்டுகளையும்,
அசையாத நாற்காலிகளையும்,
சில வருடங்கள் தக்க வைத்துக் கொள்ளுங்கள்....

இங்கிருப்பவர்கள்
வழக்கம் போல்
அஞ்சலிக் கவிதை
எழுதிக் கொல்வதோடு
நின்றுவிடாது
அள்ளி முடியாத
இத்தாலிய திரெளபதியின்
கூந்தலில் சிக்கெடுக்க
உதவிக் கொண்டிருங்கள்...

ப்ளாஸ்டிக்
சோடிப்புகளின்
பின் துருத்திக் கொண்டிருக்கும்
உங்களின் துணுக்குறல்களே
எமக்கு வேண்டியது


கண்மூடி பிரார்த்தித்தேன்

கண்முன் படைத்தவள் வந்தாள்

"வரம் ஒன்று கேள்" என்றாள்


"இலங்கைதமிழர் இன்னல் தீர்" என்றேன்

"என்னால் அது இயலாது" என்றாள்.

"சூடானிய இனப்படுகொலைகளை நிறுத்து" என்றேன்

"முடியாதென்றே" தலைகவிழ்ந்தாள்


"ஜாதி/மத வெறியை ஒழி" என்றேன்

"ஐயகோ முடியாது" என்றாள்

"பெண்கள் துயர் போக்கு" என்றாள்

"அது என்னால் நடவாது" என்றாள்


"வேறு என்னதான் உன்னால் முடியுமென்றேன்"

தலைகுனிந்தே படைத்தவள் பகரலானாள்.

"தோள்சாய இடம்மட்டுமே தரமுடியும்" என்றாள்.


தாயவளின் தோளில் சாய்ந்து

சேயென அழுதேன்

உலகை பற்றிய கவலைகளை மறந்தேன்.

இறைவன் இன்றுமுதல்

என் கவலைகளை மறக்க செய்யும் அபினி

கருத்துகள் இல்லை: