திங்கள், 29 ஜூன், 2009

2009-06-29

ஒன்று மட்டும் உண்மை!....

நாம் சிலரை பார்த்திருப்போம், "அண்ணா எப்படி இருக்கின்றீர்கள்?" என்று கேட்டால் " ம்ம்ம்ம் எப்படியோ இருக்கின்றேன்" என்று சலிப்புடன் சொல்லுவார்கள். இவர்கள் வாழ்கையில் ஒரு பிடிப்பு இருக்காது. உடல் வருத்தி உழைக்க மாட்டார்கள், ஆனால் எல்லா நலன்களையும் கடவுள் நமக்கு கொடுக்கவேண்டும் என்று எண்ணுவார்கள். ஏதோ ஒரு வைகையில் பணம் கிடைக்க வேண்டும் என்று நினைபார்கள்.

குதிரை ஓட்டத்தில் 50 குதிரைகள் ஓடுவதாக வைத்துக்கொண்டால் அதில் ஒன்றுமட்டும்தான் வெற்றிபெரும் என்பதுதான் நியதி. அந்த ஒன்றை மட்டுமே நம்பி பந்தயம் கட்டும் வாடிக்கையாளர்களை என்னவென்று நினைப்பது. மீதி 49 குதிரைகள் வெற்றிபெற வாய்ப்பில்லை என்பதுதான் உண்மை.

ஒருவன் லாட்டரி சீட்டு வாங்குபவன் அவனிடம் ஒருவன் "நீ வாங்கும் லாட்டரிக்கு பரிசு விழாது விழுந்தால் நான் 500 ரூபாய் உனக்கு தருகின்றேன், விழவில்லை என்றால் நீ எனக்கு 50 ரூபாய் கொடுத்தால் போதும்" என்றான். அவனோ மறுத்துவிடுகின்றான். நம்பிக்கை இல்லா ஒரு வருமாணத்திற்காக ஏங்கி இருக்கும் மனிதர்கள் நிலை ??????

நாம் ஒன்றை அடைய வேண்டும் என்றால் ஞாயமான வழியில் கடுமையாக உழைக்க வேண்டும், அப்படி இல்லை என்றால் நம்மோடு சேர்ந்து நம் குடுப்பமும் அழியும் என்பதுதான் உண்மையான நிலை. ஒரு ஜென் துறவி தன்னுடைய பழைய நண்பனை பார்க்க சென்றார். அந்த நண்பன் ஒரு விவசாயி. துறவியை பார்த்த அந்த நண்பன் இவரை துறவி என தெரியாது " நீ யார்? எங்கிருந்து வருகின்றாய்? எப்படி இருக்கின்றாய் என்று சாதாரணமாக கேட்டான்.

அதற்கு அந்த துறவி " நீ எப்படி இருக்கின்றாய்? " என்று பதிலுக்கு கேட்டார். அதற்கு அவன் " பரவாயில்லை ஆனால் வாழ்க்கையில் ஒன்றை மட்டும் புரிந்துக்கொண்டேன். நாம் கடினமாக உழைத்தால்தான் ஒன்றை அடையமுடியும் அப்படி அது கிடைக்கவில்லை என்றால் நான் சரியாக உழைக்கவில்லை என்றுதான் பொருள்" என்று சொன்னான்.

அந்த விவசாயி நண்பன் துறவியிடம் சொன்னதுதான் நாம் நமக்காக சொல்ல வேண்டியது.

அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

கருத்துகள் இல்லை: