செவ்வாய், 30 ஜூன், 2009

2009-06-30

கத்தரிக்காயில் பென்குயின், வாழைப்பழத்தின் நாய், காலிபிளவரில் ஆடுகள், எலுமிச்சம் பழத்தில் பொம்மைத் தலைகள், பப்பாளியில் பன்றி, தக்காளியில் பொம்மை, முட்டைக்கோசில் வாத்து, குடைமிளகாயில் தவளை, காளானில் பொம்மைகள் விளையாட்டு........... என காய்கறியில் கலையம்சம்.
வணக்கம், எல்லோருக்கும் எங்களது மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்.

தீபாவளி எல்லோருக்கும் மகிழ்ச்சியை தரக் கூடிய விஷயம் தான். புத்தாடை, வித விதமான பலகாரங்கள், பட்டாசுகள் என்று நம்மை சந்தோஷப் படுத்த எத்தனையோ விஷயங்கள் தீபாவளியில்.

மக்களை கொடுமைப் படுத்தி, அவர்களுக்கு கஷ்டம் தந்த நரகாசுரன் என்ற அரக்கணை வதம் செய்ததன் கொண்டாட்டமாக இந்த தீபாவளி கொண்டாடப் படுகின்றது என்பது எல்லோருக்கும் தெரியும். மக்களை கொடுமைப் படுத்தி அவர்களை மகிழ்ச்சியாக வாழவிடாதவனை அரக்கர்கள் என்று சொல்கிறோம். ஆனால் இந்த புவியில் இருக்கும் எத்தனையோ உயிரினங்கள் ஜீவித்திருக்க காரணமாக இருக்கும் நம் இயற்கையை அழிப்பவர்களை என்ன வென்று சொல்வது. . . . .?

வாகனப் புகை, தொழிற்சாலை கழிவுகள், பீடி, சிகிரெட் என்று நம் வாயு மணடலத்தை தினம் தினம் நாம் கொடுமைப் படுத்திக் கொண்டிருக்கிறோம்.

இந்த தீபாவளி திருநாளில் நாம் வெடிக்கும் பட்டாசுகளில் இருந்து வெளிவரும் புகை நம் வாயு மண்டலத்தை வெகுவாக பாதிக்கும் என்று நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் உங்களுக்கு இந்த விஷயத்தை நினைவூட்ட வேண்டியது எங்கள் கடமை.

இயற்கைக்கு கேடு விளைவிக்கும் பட்டாசுகளை தவிர்ப்போம். . . . .
நம் இயற்கையை காப்போம். . . . .

தீபாவளி அன்று இயற்கையை இம்சித்து நீங்கள் நரகாசுரன் ஆகப்போகிறீர்களா. . . . .?

கிட்டத்தட்ட 7 வருடங்களாக நான் பட்டாசுகளை வெடிப்பது இல்லை. எங்கள் வீட்டில் ஒரு ரூபாய்க்கு கூட நாங்கள் பட்டாசுகள் வாங்குவதில்லை. சிறியவர்களுக்கு புரியவைக்க வேண்டியது பெரியவர்களின் கடமை. உங்கள் வீட்டு குட்டீஸ்களுக்கு பட்டாசுகளினால் உண்டாகும் தீமைகளை விளக்குங்கள்.

நீங்களும் பட்டாசுகள் வெடிப்பதில்லை என்றால் பின்னூட்டத்தில் கட்டாயம் தெரியப்படுத்துங்கள்.

கட்டாயம் வெடி வெடித்து பக்கத்து வீட்டுக்காரர் காதை கிழிக்க விரும்புகிறவர்கள் இங்கே சொடுக்கவும்
இவை அனைத்தும் சில வருடங்களுக்கு முன் நான் சேகரித்து வைத்த படங்கள்.... இதோ உங்கள் பார்வைக்கு...

இரண்டு வரி சொல்லிட்டு போங்க...

இயற்கையின் ஆளுமை என்பது அசாதாரனமானது. இயற்கையின் வலிமையை மிக அழகாக சில வரிகளில் மதன் அவர்கள் தன்னுடைய கேள்வி பதில் பகுதியில் சொல்லி இருக்கிறார்.

கேள்வி : மனிதன் இயற்கையை வென்றுவிட்டானா ?

மதன் பதில் : அண்ட்டார்டிகா லேசாக சோம்பல் முறித்துக் கொண்டு சற்றே உருக ஆரம்பித்தால், அமெரிக்காவின் அத்தனை அடுக்குமாடிக் கட்டடங்களும் தண்ணீருக்கு அடியில் போய்விடும். பூமி கொஞ்சம் இருமினால் பூகம்பம் ஏற்பட்டு அதோகதிதான்! சூரியன் சற்றே கோபப்பட்டால், சில டிகிரிகள் வெப்பம் அதிகமாகி மனித இனமே காலி! கிரிகெட் அம்பயர் 'சிக்ஸர்' என்று காட்டுவதைப் போல, கடல் தன் அலைக் கரங்களை உயர்த்தினால், சுனாமி! இயற்கையை மனிதனை வெல்ல, இது என்ன 'டேவிட் - கோலியத்' மோதலா?! மொத்த மனித இனமே இயற்கைக்கு முன் ஒரு துரும்பு!

நன்றி : ஆனந்த விகடன்

கருத்துகள் இல்லை: