செவ்வாய், 30 ஜூன், 2009

2009-06-30



பட்டிமன்ற நடுவர் மாதிரி கொஞ்சம் பேசிப் பார்த்தது இங்கே :)) :


உரையின் எழுத்து வடிவம்:
வணக்கம் நண்பர்களே!

கொஞ்ச காலத்துக்கு சும்மா இருக்கலாம்னா, மெயில்ல மெரட்டல் விடுறதே நம்மாளுகளுக்குப் பொழப்பா போச்சு. [-( மொதல்ல பலூன்மாமா, இப்போ சிந்தாநதி. என்னத்த பண்றது, உங்க தலையெழுத்து அப்படி இருந்தா?!

பொதுவாகவே என்னைப் பொறுத்தமட்டில் சமூக மாற்றம் என்பதில் அனைத்து விதமான மனிதர்களுக்கும் பங்குண்டு. சுய விமர்சனத்திற்கு ஆட்படாத தனிமனிதன் மாத்திரமல்ல, எந்த ஒரு சமூகமும் முன்னேற முடியாது என்பதைத் திடமாக நம்புகிறவன் நான்.

உண்மையான சமூக முன்னேற்றமென்பது பெண்கள், தலித்துகள், மற்றும் விளிம்புநிலை மனிதர்களின் சரியான சமூக அங்கீகாரத்தில் மட்டுமே இருக்க முடியுமென நம்புகிறவர்களில் நானும் ஒருவன்.

நிலைமை அப்படி இருக்க, நம்ம சிந்தாநதி, மகளிர்தினத்திற்கு ஒரு போட்டி அறிவிச்சி, ஆளுக்காளு வந்து கருத்து சொல்லிட்டுப் போயிருக்காங்க.. "எல்லாத்தையும் ஒட்டுமொத்தமா படிச்சி, யாருக்குப் பரிசு கொடுக்கலாம்னு சொல்லு ராசாங்கிறாரு" நம்ம சிந்தாநதி. :-S

பெண்ணியத்தை பெண்களும்

தலித்தியத்தை தலித்துகளும்

மட்டுமே பேச வேண்டும்.


சரி... தவறு...



இது தான் சிந்தாநதி கொடுத்திருந்த தலைப்பு. இந்தத் தலைப்பிலேயே எனக்கு கொஞ்சம் மாற்றுக் கருத்து உண்டு. இதில் மட்டுமே என்பதை, தவிர்த்திருந்தால், இந்த விவாதம் இன்னும் பல கோணங்களில் ஆராயப்பட்டிருக்கும்.

கொடுத்த தலைப்புக்குள், நின்று, அடித்து ஆடியவர்களில் முக்கியமானவர்கள், முத்துலட்சுமியும் நிலாவும். சென்ஷி, பொன்ஸ், சக்தி, கயல்விழி, கவிதா, மங்கை, மாசிலா போன்றோர் பின்னூட்டக் கயமைக்காக வந்து போனதாக எனக்கு படுகிறது.

சென்ஷி, ஆடுவதற்கு முன்பே பெண்களுக்குத் தான் பரிசு என்று முடிவு கட்டிக் கொண்டு, அருமையாகத் தொடங்கி, ஆடாமலே போனது எனக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்தது. எலேய்! கவுத்திட்டியே ராசா.. >:) !!

மற்றபடி, முத்துலட்சுமி சில முன்முடிவுகளுடன் வந்து, அதையே பின்னிப் பெடலெடுத்திருந்தார். அவர் பின்னிய இடங்களில் எல்லாம் இடைவெளியை ஏற்படுத்த மற்றவர்கள் முயற்சித்திருந்தாலும், தொடர்ச்சியாக நின்று முயற்சித்துக் கொண்டே இருந்த நிலாவுக்கு என் வோட்டு.

ஆக மகளிர் தின பரிசுப் போட்டியை வென்றது நிலா. < :-P


More than a Blog Aggregator

by ♠ யெஸ்.பாலபாரதி ♠



அடுத்தவன் பேச்சை கேட்டு, நடந்து.. மாட்டிக்கொள்வதே வாடிக்கையாக போச்சு. இப்படித்தான் ஏற்கனவே ஒருமுறை சொன்னதாக நினைவு. இது அதனுடைய இரண்டாம் பாகம்னு வச்சுக்கிடலாம்.

ரொம்ப அடம்புடிச்சு.. அழைத்துக்கொண்டு போனான் சேரனின் மாயக்கண்ணாடி படம் பார்க்க. சேரனின் மேல் பெரிய அளவில் ஈர்ப்பு இல்லாவிட்டாலும்.. சில எல்லைகளை தொட அவர் முயற்சி செய்திருக்கிறார் என்பதால் எப்போதும் ஒரு மென்மையான முக்கு(அட! சாஃட் கார்னரின் தமிழாக்கம்) என்னுள் உண்டு. அந்த நம்பிக்கையில் தான் கிளம்பிப் போனேன்.

நவீன சலூன் கடையில்( பியூட்டி பார்லர்) வேலை பார்க்கும் காதல் ஜோடி சேரன், நவ்யா. கடையின் முதலாளியாக ராதாரவி.

நண்பனின் ஓசி வண்டியில் காதலியோடு விடுமுறை நாளில் ஊர் சுற்ற கிளம்புகிறார் சேரன். ஆனால்.. தொடர்ச்சியாக பல இடையூறுகளினால் அந்த ஜோடி போட்ட திட்டம் பனால் ஆகிறது. எல்லாவற்றுக்கும் கையில் காசு இல்லாதது தான் காரணம் என்று முடிவுக்கு வருகிறார்கள். பணம் சம்பாதிக்க, சீக்கரமே பணக்காரணாக என்று அவர்கள் வேறு வேலைகளில் ஈடுபட முடிவெடுத்து முதலில் எல்.ஐ.சி ஏஜெண்டாக மாறுகிறார்கள். ஆனால்.. எல்.ஐ.சி ஆபிஸர் சொல்லுகின்ற மாதிரி இவர்களால் வாடிக்கையாளர்களை பிடிக்க முடியாமல் அந்த முயற்சி தோல்வியில் முடிகிறது.

அடுத்ததாக சினிமா நாயகனாக வலம் வரும் கனவுடன் அலைகிறார். வேலை பறி போகிறது. சில வாய்ப்புகள் கிடைக்கிறது. ஆனால் சில கசப்புகளுடன் மீண்டும் முயற்சியை தொடரும் சேரனிடம், தன் சினிமா கனவுகளால் வாழ்வை தொலைத்த கதையை சொல்லுகிறார் ஒரு பெரியவர்(கவிஞர்.முத்துலிங்கம்). அத்துடன் இவரும் திசை திரும்பி வேறு வேலைக்கு போகிறார். கடத்தல் காரர் ஒருவரிடம் வேலைக்கு சேர்ந்து, உள்ளே போய், வெளியே வரும் சேரன் மீண்டும் தனக்கு தெரிந்த கைத்தொழிலையே தொடர்கிறார். படம் நிறைவு பெறுகிறது.



நிறைய முரண்பாடுகள். சாதாரண மிடில் கிளாச் வாழ்க்கை வாழும் நாயகனும் நாயகியும் உடுத்தும் ஆடைகள் படு ரிச்சாக இருப்பது தொடங்கி ஏகப்பட்ட லாஜிக் மிஸ்ஸிங். வழக்கமான சேரன் பாணி படங்களை எதிர்பார்த்து போனால்.. ஏமாற்றமே!

முதல் பாதி முழுவதும் சவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வு மிட்டாய் போல இழுத்துக்கொண்டே போகிறது காட்சிகள். படத்தில் காட்டப்படும் அனேக காட்சிகள் ஏற்கனவே வேறு படங்களில் வேறு சந்தர்ப்பங்களில் வந்த அதே காட்சிகள் என்பதால் செம போர். துணிக்கடைக்குள் ஆடை மாற்றும் அறைக்குள் நாயகனும், நாயகியும் சேர்ந்து கனவு காணுவது, வெளியே கூட்டம் கூடி கதவை தட்டுவது...என்பது போன்ற காட்சிகளை குறிப்பிடலாம்.

இரண்டாம் பாதி முழுக்க விதவிதமான அட்வைஸ் மழை. சினிமாவில் தோற்ற பெரியவர், போதை மருந்து கடத்தும் "வெள்ளைக்காலர்" பெரியவர், ராதாரவி என எல்லோருமே இளைஞர்களை நோக்கி, அசையா கேமராவைப் பார்த்து நீளளளளளளமான வசனமாக பேசிக்கொண்டே இருக்கிறார்கள். வசனங்களை நம்பிக்கொண்டிருந்த பழையகாலத்து படம் போல இருக்கிறது. நமக்கு வீட்டில் சொன்னாலே ஆவாது. காசு கொடுத்து படம் பார்க்க வந்தா.. இங்கேயுமான்னு பக்கத்து சீட்டுக்காரர் முணுமுணுத்ததை சேரன் கேட்க வேண்டும்.

குறிப்புட்டு சொல்லும் படி இப்படத்தில் இருப்பது..

முடிதிருத்துபவரின் உடலசைவை நன்கு உள்வாங்கி செய்திருக்கிறார் சேரன். மோதிர விரலில் கத்திரியை வைத்துக்கொண்டு வேலை செய்வது, கத்திரியை தட்டி ஓசை எழுப்புவது என்பது போன்ற நுணுக்கமான விசயங்களையும் கவனித்து செய்திருப்பது பாராட்டுக்குறியது.

இசை: இளைய ராஜா என்றார்கள். நம்பவே முடியலை. பாடலாகட்டும், பின்னனி இசையாகட்டும்.

சேரன் கொஞ்சம் கவனித்து பயணிப்பது நல்லது.

இது என் கருத்து. நீங்களும் பார்த்துட்டு வந்து சொல்லுங்க!!


More than a Blog Aggregator

by ♠ யெஸ்.பாலபாரதி ♠
பதிவர் சந்திப்பு குறித்து நண்பர் ஓசை செல்லா.. சூப்பராக படம் காட்டி விட்டார். அவரளவுக்கு முடியாவிட்டாலும் ஏதோ என் அளவில் நான் படம் காடுகிறேன். விடியோ குவாலீட்டி சரி இருக்காது. கை பேசியில் எடுத்தது. மிக்ஸிங் கூட கைபேசியில் தான் செய்தது. அதனால்.. சிரமத்திற்கு மன்னித்தருளுங்கள். ;)

அப்புறம் அஞ்சலி பாப்பா மாதிரியான குட்டீஸ் வீடியோவை கடைசி வரை பார்க்க வேண்டாம். கடைசியில் வரும் உருவத்தைக் கண்டு குட்டீஸ்கள் பயந்து விடக்கூடும் என்பதால் இது எச்சரிக்கை!




youtube-ல் படம் பார்க்க முடியாதுன்னு சொல்லுற சாமீகளுக்கு.., கீழே இருப்பதில் பார்க்க முடியுதான்னு பாருங்க!

நண்பர்களே!

இதோ.. தமிழ்மணத்திற்கு ஆதரவு அளிக்க நினைக்கும் பதிவர்களுக்காக.. இந்த பதிவு!

ஓரத்தில் இருக்கும் "பொத்தானை" அமுக்குங்கள் அது வழி நடத்தும்.

நன்றி!!

லக்கியின் பதிவு இங்கே!

குறிப்பு:--

பதிவர் குறித்த ரகசியங்களை தமிழ்மணம் வெளியே விட்டிருக்காது என்ற எங்களின் நம்பிக்கையுடன்.. எத்தனை பேரின் நம்பிக்கை இணைகிறது என்று சோதித்துப் பார்க்கவே.. பட்டையைப் போட்டோம்.

நிறைய பதிவர்கள் தங்களின் நிலைபாட்டினை ஆரதவு மூலம் காட்டிய பின் பட்டையின் தேவை இல்லாமல் போனது அதனால தூக்கியாச்சி! :))




சென்னை பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடத்தி முடிச்சாச்சு. மீடியா மூலம் தமிழ்வலைப்பதிவூகளை பொது மக்களின் கவனத்திற்கு கொண்டு போகும் வேலையையும் செய்தாச்சு. ஆனா.....



அங்கே எனக்கு எதிராக நடத்தப்பட்ட ஒரு சதி இப்போது தான் வெளியே வந்திருக்கிறது.


சந்திப்பின் போது எடுக்கப்பட்ட படங்கள் இன்று காலை தான் பார்வைக்கு வந்தன.. அதில் ஒன்று தான் நீங்கள் மேலே பார்ப்பது. அந்த படத்தை உற்று நோக்கினால் ஒரு எனக்கு எதிராக நடந்த சதி தெரியும்.


அந்த போட்டோவை/சதியை கீழே வட்டம் போட்டு காட்டி இருக்கிறேன்.

---


---


---


---


---




--



---


---




--




--




--



---







--




எனக்கு 'கொம்பு' வைத்த மாப்பு வரவனையின் இச்செயலை வண்மையாக கண்டிக்கிறேன். ஆமா!


More than a Blog Aggregator

by ♠ யெஸ்.பாலபாரதி ♠
உனக்கான
காத்திருப்புக்களிலெல்லாம்
ஏறிவிடும்
மனதின்வயது
உன்னை பார்த்தநிமிடத்திலேயே
குழந்தையாக மாறி குதுகுலிக்கிறது.

****

உன் மூச்சுக் காற்றும்
போதை ஏற்றுகிறது பார்
நீஊதிக்கொடுத்த பலூன்
ஒரு இடத்தில் நிற்கமாட்டாமல்
அறையெங்கும் தள்ளாடியபடியே
வலம் வருகிறது.

***

சத்தமிடாமல்முத்தமிடத்தெரியாதா
என்று கோபப்படத்தெரிகிறது
உனக்கு
நம்ப மறுக்கும்காதுகளுக்கு
சத்தத்தைமட்டுமே
கொடுக்கத்தெரிந்திருக்கிறது எனக்கு.

***
இரவு நேரங்களில்
மொட்டைமாடிக்குவராதே
என்றேன்கேட்டாயா
இப்போது பார்
நட்சத்திரங்கள்
வெட்கித்தற்கொலை
செய்துகொள்கின்றன.

***

இலக்கணமாக நீ
இருக்கும் தைரியத்தில் தான்
உனைபேசும்கவிதைகள்
மரபுடைக்கின்றன.

***

திருவிழாவுக்குக் கூட
கிராமத்துப் பக்கம்
வருவதில்லை என்று
அலட்டிக்கொள்கிறாள் அம்மா
திருவிழா பார்க்கும்மகிழ்ச்சியை விட
பத்து மடங்கு கூடுதலாக கிடைக்கிறது
உனைப் பார்க்கும் போதெல்லாம்
நீதான் நகரத்தில் இருக்கிறாயே!

***
புரையெறினால்
தட்டுவாய் என
தெரிந்திருக்கிறதுதலைக்கு
அதனாலேயே
நீ இருக்கும்
போதெல்லாம்புரையேற்றிக் கொள்கிறது.
***
கங்கையாற்றின்
அழுக்கை கரையிலிருந்தே
பார்த்து திரும்பி விட்டாயாமே
உன் கால்களையாவது
நனைத்திருந்தால
்புனிதப்பட்டு போயிருக்கும் அது.

***

கோவிலுக்குள்
கண்மூடி வழிபடும்
போதும்முன்னும்
பின்னுமாய்
அசைந்தபடியே இரு.
சிலைத்திருட்டு செய்திகள்
எல்லா நாளிதழ்களிலும்!

***

கருத்துகள் இல்லை: