திங்கள், 29 ஜூன், 2009

2009-06-29

கோட்பாட்டாளர்களின் ஆணவத்தால் அழிக்கப்பட்ட இலக்கியநிலம் என்றே ஈழத்தை எண்ணுகிறேன். ஈழ எழுத்தின் பெருக்கத்தை வைத்துப் பார்த்தால் மிகமிகக் குறைவான அளவு எழுத்துகக்ளையே இலக்கிய வாசகன் பொருட்படுத்த முடியும் என்பதே உண்மை. இதை பல காலகட்டங்களில் பல தமிழ் எழுத்தாளர்கள் சொல்லி , ஈழ எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களின் தாக்குதல்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள். [ஈழத்தில் முற்போக்கு நோய்க்கு பூச்சிக்கொல்லி மருந்து அடிக்க வேண்டும் என்ற வண்ணநிலவனின் கருத்து நினைவுக்கு வருகிறது] சங்கடமான விஷயம்தான் இது, ஒரு பிராந்திய உணர்வின் மீது தொட்டுச் சீண்ட நேர்வது. ஆனால் வேறு வழியில்லை. எத்தனை மழுப்பினாலும் இதமாகச் சொன்னாலும் அதுவே உண்மை, ஈழம் கிட்டத்தட்ட ஓர் இலக்கியப்பாலைவனம். மு.தளையசிங்கம், எஸ்.பொன்னுதுரை, அ.முத்துலிங்கம், ஷோபா சக்தி முதலிய சிற்சில சோலைகள். ரஞ்சகுமார், சட்டநாதன், உமாவரதராஜன் போல உருவாகும் நிலையிலேயே நின்று விட்டவை பல. பெரும்பாலான ஈழ இலக்கியங்கள் அவர்களின் வாழ்க்கையின் எளிய ஆவணங்கள் என்ற அளவிலேயே கவனிக்கத்தக்கவை. இலக்கியமாக அல்ல. ஈழத்தை மொட்டையாக்கியது கோட்பாட்டுநோக்கின் மிதமிஞ்சிய மேலாதிக்கம்.

ஈழம் அளவுக்கு செல்வாக்கான கோட்பாட்டாளர்கள் எவரும் தமிழில் இருந்ததில்லை என்பதை ஓரு நல்லூழ் என்றே சொல்ல வேண்டும். இங்கே அரசியல் இயக்கங்களின் குரல்களாக மட்டுமே கோட்பாடுகள் பேசப்பட்டன. அவற்றை மறுத்து இலக்கியத்தின் தனித்த இயக்கத்தை முன்வைக்கும் அழகியல் திறனாய்வாளர்களான ஏ.வி.சுப்ரமணிய அய்யர், க.நா.சுப்ரமணியம், சி.சு.செல்லப்பா போன்றவர்களின் குரல்கள் எப்போதும் இருந்தன. இலக்கியம் என்றுமே தன் முக்கியத்துவத்தை இழக்க நேரவில்லை. ஆனால் ஒப்புநோக்க தமிழகத்தைவிட மேலான கல்வியறிவும் மேலான இலக்கிய அறிமுக விகிதாச்சாரமும் இருந்தும் கூட ஈழத்தில் நேர் மாறான நிலையே நிலவியது. ஈழத்து அரசியலியக்கங்களை விட வலிமையான மையங்களாக அங்கே கோட்பாட்டாளர்களான க.கைலாசபதி, கா.சிவத்தம்பி இருவரும் இருந்தார்கள் என்று தோன்றுகிறது. இருவருக்குமே மிக விரிவான கல்வியறிவும் வாசிப்பும் இருந்தது. மிகவும் மதிக்கப்படும் பதவிகளில் இருந்தார்கள். கைலாசபதி நெடுநாள் இதழியல் தளத்தில் செல்வாக்குடன் விளங்கினார் . எழுத்தாளர்கள் நாடும் பதிப்பு வசதியை எளிதில் செய்துகொடுக்கக் கூடியவராக இருந்தார். மேலும் முக்கியமாக இருவருமே தனிப்பட்டமுறையில் மிக இனிய குணம் கொண்டவர்களாக, நட்பும் பெருந்தன்மையும் மிக்கவர்களாக இருந்தனர். இக்காரணத்தால் இவர்களே ஈழ இலக்கியத்தின் மையங்களாக ஆனார்கள்.கோட்பாடு மையம் கொள்ளும்போது இலக்கியம் விலகிச்செல்கிறது


முழுவதையும் வாசிக்க ஜெயமோகனின் தளத்திற்க்கு செல்ல இங்கே அழுத்தவும்



நம் வாழ்வில் பொதுவாக ஏகாந்தம் என்பது குறைவாக உள்ளது.நாம் தனிமையில் இருந்தாலும் நம் வாழ்விலும் மனதிலும் ஏராளமான அனுபவங்கள்,நிறைய விசய ஞானங்கள்,அனுபவங்களின் நினைவுகள் கவலை துன்பம் மனப்போராட்டங்கள் முதலியனவை வந்து மனதை ஊக்கமில்லாத்ததாகச் சோர்வுற்றதாக செய்து விடுகின்றன.பின்னர் ஏகாந்தம் எங்கே ? அல்லது நேற்றைய நினைவுகளின் சுமையை இன்னும் சுமந்து கொண்டிருக்கிறமோ?

இரண்டு துறவிகளை பற்றி சுவையான கதை ஒன்று உண்டு .ஒரு நாள் இருவரும் ஒரு கிராமத்திலிருந்து இன்னொரு கிராமத்து சென்று கொண்டு இருக்கும் போது ஆற்றின் ஒரத்தில் ஒரு இளமை ததும்பும் பெண் ஒருத்தி அழுது கொண்டிருப்பதை கண்டார்கள் .ஒரு துறவி அவளிடம் சென்று தங்கையே ஏனம்மா அழுகிறாய்? என்று கேட்க,அந்தத பெண்  என்னுடைய வீடு ஆற்றிற்க்கு அந்த கரையில் இருக்கிறது .நான் இன்று காலை ஆற்றை கடந்து வந்தேன்,அப்போது நீர் வடிந்திருந்ததால் எளிதாக வந்து விட்டேன்.ஆனால் இப்பொழுது வெள்ளம் அதிகமாக இருக்கிறது.படகும் இல்லை.நான் அக்கரைக்கு போக முடியவில்லையே என்று கூறினாள்.அதற்கு அந்த துறவி அவ்வளவுதானே என்று கூறி அந்த பெண்ணை தூக்கி கொண்டு ஆற்றை கடந்து அக்கரையில் விட்டு விட்டுப் பின்னர் இரு துறவிகளும் பயணத்தை தொடர்ந்தனர்.இரண்டு மணி நேரம் கழித்து இரண்டாவது துறவி சகோதரனே நான் இருவரும் ஒரு பெண்ணையும் தொடுவதில்லை சபதம் பூண்டு உள்ளோம் .நீ செய்த செயல் பெரிய பாவமல்லவா? அந்தப் பெண்ணை தூக்கிக் கொண்டு வந்த போது உன் உணர்ச்சிகள் கிளர்ச்சி அடையவில்லையா?,மனம் இன்பம் அடையவில்லையா ? என்று கேட்க,பெண்ணை தூக்கி கொண்டு வந்த துறவி அந்த பெண்ணை இரண்டு மணி நேரத்துக்கு முன்பே இறக்கி விட்டு விட்டேன் .ஆனால் நீ அவளை இன்னும் மனதில் சுமந்து கொண்டிருக்கிறாய் அல்லவா என்று கேட்டராம்.

இதைத்தான் நாமெல்லாரும் செய்து கொண்டிருக்கிறோம் . நம்முடைய சுமையை எந்நேரமும் சுமந்து கொண்டிருக்கிறோம் .நாம் அவற்றிற்க்கு முடிவு காண்பதில்லை அந்த சுமைகளை அவற்றி அகற்றி விடுவதுமில்லை எந்த பிரச்சனையாக இருந்தாலும் நம்முடைய முழு கவனத்தையும் அந்த பிரச்சனையில் செலுத்தி உடனடியாக தீர்வு காண வேண்டும் .அடுத்த நாளைக்கு அடுத்த நிமிடத்திற்க்கென்று அதைத் தள்ளி போடக்கூடாது.அப்போது தான் மனதில் ஏகாந்தம் இருக்கும்.இந்த நிலையில் நீங்கள் பெருங்கூட்டத்தில் இருந்தாலும் ,எங்காவது பேருந்தில் சென்று கொண்டிருந்தாலும் கூட மனம் ஏகாந்தத்தில் இருக்கும் அந்த ஏகாந்த நிலை புத்துணர்வு கொண்ட மனதை களங்கமற்ற மனதை காட்டுகிறது.




நீண்ட நாட்களாகத் திரைப்படங்கள் எதுவும் பார்க்கவில்லை. பார்க்கும் சூழல் இல்லெயென்பதிலும் பார்க்க மனநிலை வாய்த்திருக்கவில்லை என்தே உண்மை. குடும்பமாய் அமர்ந்திருந்து படம் பார்த்துக் கன நாளாயிற்று எனப் பிள்ளைகள் விரும்பியழைக்க, சென்றவாரத்தில் நண்பரொருவர் விதந்தெழுயிருந்த " அபியும் நானும் " திரைப்படத்தைப் பரிந்துரைத்தேன். ஏற்கனவே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய, அத் திரைப்படத்தின் பாடல் ஒன்றால் கவரப்பட்ட பிள்ளைகளும் விரும்பிச் சம்மதிக்க, ஒன்றாய் அமர்ந்தோம்.
தொலைக்காட்சித் திரையில் 'அபியும் நானும் '
அப்பா மகளுக்கான உறவை அற்புதமாய் சொல்லியிருக்கின்றார்கள். இரத்தம் தெறிக்கும் இன்றைய சினிமாக்களின் மத்தியில், பச்சைப் பசேலெனும் பின்னணியில், ஒரு பாசப்பிணைப்புக் கதையை பக்குவமாகச் சொல்லியிருக்கின்றார்கள். ரசிக்கவும், இன்னும் ஒரு படி மேலாகச் சுகிக்கவும் முடிகிறது.
திரைப்படம் பார்த்து எப்போதும் அழமாட்டாத நான் இப்போது அழுகின்றேன்.
ஏனென்றால் காரணம் திரைப்படத்தின் காட்சிகளும், கதையும் மீட்டித்தந்த நினைவுகளின் நீட்சியிலே அழுகின்றேன்.
எங்கள் நிலத்தின் நிறமும், ஒரு காலத்தில் பச்சைதான். எங்களிடமும் பாசஉறவுகளும், அவை பேசுங் கதைகளும் பலவிருந்தன.
ஆனால் இன்று எங்கள் நிலம், எங்கள் இரத்தங்களினாலேயே சிவப்பாகிப் போனது. எங்கள் குரலும், மொழியும் ஒப்பாரியொன்றைத் தவிர வேறு செப்பாது போய்விட்டது.

எங்கள் வாழ்வின் பசுமையையும் , இனிமையையும் பறித்தெடுத்தவர்களிடம் உறவுகொள்ளச் சொல்கின்றீர்கள். பாதகமில்லை பழகலாம் வாருங்களென்றால், நீட்டிய கைகளின் பின்னால் நெடுவாள் கொண்டுவருகின்றார்களே; கண்டுகொள்ளீரோ அல்லது கண்டுங் காணாதிருப்பதே உங்களி்ன் மானுடப் பேச்சின் மகிமை என்பீரோ? கொடிகளிலும், கோஷங்களிலும், உங்கள் கொள்கைகள் மறைந்து போனதுவோ, மறந்து போனதுவோ?
எத்தனை கதைகள் சொல்ல? எத்தனை சோகம் சொல்ல? எத்தனை முறை சொல்லியாயிற்று.

மாதுமை!

கோணமாமலையில் கோயில் கொண்டவனின் தேவி பெயர். என் தங்கை தவமாய் தவமிருந்து பெற்றெடுத்த பெண்ணுக்கு இட்ட பெயரும் அதுவே. தங்கை குழந்தையாய் இருந்த போது பிரிந்த நான், ஒரு குழந்தைக்கு அவள் ஏங்கிய வயதிலேயே மீளவும் சந்திக்க முடிந்தது. ஆச்சரியமாய் இருந்தது காலத்தின் வேகம். என் கைபிடித்து நடை பழகித் திரிந்த பெண், கல்யாணமாகிக் கணவனோடு வந்திருந்தாள். மணவாழ்வின் மகிழ்வில் திளைத்திருந்தாலும், மகவொன்றில்லாத மனக் குறையில் துவண்டிருந்தாள்.

பின் வந்த சில காலத்தில் பெண்மகவுக்குத் தாயானாள். பெருமிதமுற்றாள். எழுதிய கடிதத்தில் இவ்வுலகின் மகிழ்ச்சியையெல்லாம் எண்ணத்தில் குவித்து, எழுத்து மலர்களாய் சொரிந்திருந்தாள். இறைமீது கொண்ட பற்றுதலால் மாதுமை எனப் பெயர் சூட்டியிருந்தாள். இன்றவள் வன்னி வனத்திடையில்....
இறுதியாய் பேசிய போது 'வன்னி மண் மட்டுமே எமக்குப் பாதுகாப்பானது ' என இறுமாந்து சொன்னாள்...

இன்று..

தினமும் செய்திகள் சுமந்து வரும் மடல்களைத் திறக்கையில் மனம் பதைபதைக்கிறது. படபடத்துத் திறந்ததும், தெரிகின்ற எழுத்துக்களின் மீது தேடுகையில், தெரிந்து விடக் கூடாது அவர்கள் பெயர் என, வெட்கம் விட்டுப் பிரார்த்திக்கின்றேன்.
நித்திரை வரா முன்னிரவுகள் கழிந்துபோக, பின்னிரவுக் கனவுகளில், குண்டு வெடிப்புச் சத்தங்களின் பின்னணியில், மாதுமை அழுத படியே மாமாவென்றழைத்து நித்திரை கலைத்துச் செல்கின்றாள்.....
கடந்த ஜனவரியில் மைலாப்பூரில் நடந்த மைலாப்பூர் திருவிழாவின் போது எடுக்கப்பட்ட சில படங்கள்
.
அந்த சமயத்தில் நடந்த தெருக்கூத்து படங்கள் சிலவற்றை முன்னமே பதிவிட்டிருந்தது நினைவிருக்கலாம்.










இது 1200 வருடங்களுக்கு முன் பல்லவர்களால் கட்டப்பட்ட பழமையான கோவில்.










ப்பாவி ஈழத் தமிழர்கள் மீதான புவியியல் வன்முறையை, சிங்கள ராணுவரசின் தமிழின சுத்தீகரிப்பு கொடுமையை, இந்திய அரசின் நிழல் போரை, ஆயுத உதவி மற்றும் இராணுவ பயிற்சியை நிறுத்தக் கோரி பிப்ரவரி 12, 13, 14 ஆகிய மூன்று தினங்களும் இந்திய நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் சிறப்பாக நடந்தேறியது.



எழுத்தாளர்கள்/கவிஞர்கள் தலைமையில், மாணவர்கள், மீனவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், கலைஞர்கள், திருநங்கைகள் மொத்தம் 100 பேர் இணைந்து அரசியல் கட்சி சார்பற்று மனிதம் காக்க வேண்டும் போர் நிறுத்தப்பட வேண்டும் என்ற ஒற்றை சிந்தனையுடன் நடத்திக்காட்டினர்.



இம்மூன்று நாள் போராட்டத்தில் அம்மை நோயின் காரணமாக முதல் இரண்டு நாட்கள் மட்டுமே என்னால் பங்குபெறமுடிந்தது. முதல் இரண்டு நாட்களும் நடந்த அறப்போர் வெறும் மனத்திருப்தியன்றி தீர்க்கமான பலன் அளிக்கும் நம்பிக்கை எனக்கு இருக்கவில்லை. ஆனால் இரண்டாம் நாள் இலங்கை தூதரகம் முன்பாக 28 பேர் கொண்ட குழு நடத்திய இரகசிய போராட்டம் மிகவும் குறிப்பிடத்தக்கது. ராணுவ ரத்தவெறியன் ராஜபக்சேவின் கொடும்பாவி எரிப்பு, ராஜபக்சே உருவப்படத்தில் செறுப்படி, போர் நிறுத்தம் மற்றும் இந்திய, இலங்கை அரசுக்கெதிரான முழக்கம் என அதிதீவிர போராட்டமாக அமைந்தது. 2 நிமிடத்திற்கு மேல் எந்த போராட்டமும் நிகழ்த்த முடியாத அப்பாதுகாப்புப் பகுதியில் தொடர்ந்து 45 நிமிடம் தீவிரம் குறையாமல் ஒரு சடங்கியல் நிகழ்வு போல, மொத்த ஈழமக்களின் ஆக்ரோசமும், கண்ணீரும், வலியும் வழிநடத்தியது போல, யாரும் யாருடைய கட்டுப்பாடும் இன்றி முழு அர்ப்பணிப்போடு அப்போராட்டத்தை அர்த்தமுள்ளதாக்கினர். இதுவரை, தேசிய அரசு ஊடகங்களால் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்த ஈழப்பிரச்சனை அன்று சிறிதளவேனும் கவனம் பெற்றதும் அதையொட்டிய சில அரசியல் நிகழ்வுகள் ஏற்பட்டதும் இப்போராட்டத்தின் மிகப்பெரிய வெற்றியாகும்.





கட்சி சார்பின்றி முழு அர்ப்பணிப்போடு, தூயமையான உள்ளத்தோடும் போராடிய அக்குழுவை தீண்டவும் அஞ்சி நின்றது தில்லி காவலர்கள் குழு. மிக கண்ணியாமாக, சிறைபிடிக்கப்பட்டு மீண்டும் நாங்கள் தங்கியிருந்த பகுதிக்கு இரவு 7 மணியளவில் சேர்த்தனர்.




ஈழத் தமிழர் தோழமைக் குரல் என்ற குடையின் கீழ் நடந்த இவ்வறப்போரட்டத்தை குறித்த முழு தகவல்களும் இங்கே பதிவிடப்பட்டுள்ளது. தமிழின விடுதலை வேண்டிய நிகழ்ந்த தாமதமான முயற்சி என்றாலும், மிக மிக அவசியமான முன்னுதாரணமான சுயலாபமற்ற முயற்சி இது. பல்வேறு பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியிலும் வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டிய இதன் அமைப்பாளர்களான திரைப்பட இயக்குநர் லீனா மணிமேகலை மற்றும் கவிஞர்கள் மாலதி மைத்ரி, சுகிர்தராணி மூவருக்கும் என் மனமார்ந்த தீரவாழ்த்துக்கள்.


இப்போராட்டம் முழு அர்த்தம் பெற தொடர்ந்து மக்கள் புரட்சியாக மாறவேண்டும். மாநிலம் முழுவதும் இப் போர் நிறுத்தப் போராட்டத்தை நாம் அனைவருமாக முன்னடத்திச் செல்ல வேண்டும். சோம்பலை, தடைகளைக் கடந்து பங்காற்றுவோம்.

தமிழ் ஈழம் வெல்லட்டும்! மானுடம் வெல்லட்டும்!!

கருத்துகள் இல்லை: