செவ்வாய், 30 ஜூன், 2009

2009-06-30



More than a Blog Aggregator

by ♠ யெஸ்.பாலபாரதி ♠


நண்பர்களே..!

வலைப்பதிவுகளை அடுத்த தளத்திற்கு நகர்த்தும் முயற்சியாக.. கோவையில் ஒரு நாள் பதிவர் பட்டறை நடத்துவது என்று தீர்மானித்து இருக்கிறோம். இப் பட்டறையில் தமிழ் பதிவர்கள் தவிர்த்து சில பிரபலமான எழுத்தாளர்களுக்கும் கலந்து கொள்ளும் படி அழைப்பு அனுப்பி இருக்கிறோம்.

நிகழ்வுகள் இரண்டு அமர்வாக பிரிக்கப்பட்டிருக்கிறது..


முதல் அமர்வு: காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை.

பின் மதிய உணவு இடைவேளை.

இரண்டாவது அமர்வு: ம்மதியம் 2 மணிக்கு தொடங்கி மலை 4 மணி வரை.

அதன் பின், சின்னதாக மினி பிக்னிக்! ;)


பல்வேறு தலைப்புகள், வீடியோ கான்பிரன்ஸிங்,டெக்ன்னிங்கல் விசயங்கள், மற்றும் குட்டிக்கதை, கவிதை, நகைச்சுவை என்று கதைக்கவும், கேட்கவும் நிறைய இருக்கு.

வெளி்யூரிலிருந்து கோவை வரும் பதிவர்களுக்கு தங்குவதற்கும், உணவிற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நீங்கள் செய்ய வேண்டியவைகளில் மிக முக்கியமானது.. தங்கள் ஊரில் இருந்து கோவை வந்து போகும் பயணச் செலவை மட்டும் பார்த்துக்கொள்ளுதல் தவிர வேறில்லை.

அப்ப டிக்கெட் எடுத்துட்டுச் சொல்லுறீங்க!

என்னோடு பேச:- 0- 9940045507.

ஓசை செல்லா:- 0- 9994622423.

செந்தழல் ரவி :- 0-9886397051.


---------------------




நாள்: மே-20-2007

கிழமை: ஞாயிறு

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

இடம்: தாட் இக்நைட் ஃபவுண்டேசன்,
கௌதம் ஆக்ர்கேட் இரண்டாவது தளம்,
மாநகராட்சி கலையரங்கம் எதிரில்,
ஆர்.எஸ்.புரம்
கோயம்புத்தூர்-2.

-----------

நினைவுக்கு:-

வெளி நாட்டில் இருந்து தொலைபேசும் நண்பர்கள் இந்திய நேரப்படி மாலை;- 3.30 மணிக்கு பின் 4.30 க்குள் தொலை பேசினால் நன்றாக இருக்கும். நிகழ்வு நடந்து கொண்டிருக்கும் போது.., அழைப்பு வருவதால்.. தொலை பேசவும் முடியாமல், நிகழ்வை கவனிக்கவும் முடியாமல் போய் விடுகிறது என்பதால் இந்த கோரிக்கை. சிரமத்திற்கு மன்னிக்கவும்.


More than a Blog Aggregator

by ♠ யெஸ்.பாலபாரதி ♠
என்ன பண்றது.. பதிவுலகிற்கும் என்னால் சோதனை காலமே.. ! :)



"எச்சரிக்கை :

இந்தத் தொடர் உங்களை அதிர்ச்சி அடைய வைக்கக் கூடும். உண்மைகளை அப்பட்டமாக, நேருக்கு நேர் சந்திக்க நேரும் போது ஏற்படும் அதிர்ச்சி. இது போன்ற அனுபவங்களை நீங்கள் வாழ்வில் ஒரு முறை கூட சந்தித்திராததால் ஏற்படக்கூடடிய அதிர்ச்சி. அந்த அதிர்ச்சியில் இவற்றை ஆபாசம் என்று எண்ணிக் கூட நீங்கள் முகம் சுளிக்கலாம். எந்தவித அனுபவத்தையும் சந்திக்க மனதைத் தயார் செய்து கொண்டு படிக்க ஆரம்பியுங்கள். "

சில வருடங்களுக்கு முன் இப்படியான வாசகங்களுடன் தான் அந்த தொடர் குமுதம் வார இதழில் தொடங்கப்பட்டது. தொடர்ச்சியான எதிர்ப்பலைகளால்.. அத்தொடர் பாதியிலேயே நிறுத்தப்படதாக நினைவு.

அவ்வளவு வக்கிரம்.. அசிங்கம்.. கழிவறை வாக்கியங்களால் நிறைக்கப்பட்ட தொடர். இப்போது மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது. அதுவும் இணையத்தில்..!, அவர்களின் சொந்த தளமாக இருந்தாளும்..! இப்படியான செயல்களை நாம் கண்டித்தே ஆகவேண்டும் என்று நினைப்பவர்கள்..

உங்கள் எதிர்ப்புக்களை அவர்கள் தளத்திற்கு சென்று (பதிவு செய்திருத்தல் அவசியம்) http://www.kumudam.com/feedback.php பக்கத்தில் உள்ள பொட்டியில் போட்டுவிட்டு வாருங்கள்.




மே ஒன்றாம் தேதி நேற்று வெள்ளித்திரைக்கு வந்தது பெரியார் படம்.

வழமை போல அறை நண்பனும் நானும் முதல் காட்சிக்கு டிக்கேட் எடுத்து திரை

அரங்கினுள் நுழைந்தோம். 200பேர் அமரக்கூடிய அரங்கத்தில் எங்களையும் சேர்த்து

மொத்தமே பன்னிரெண்டு பேர் தான் இருந்தார்கள்.




ஆஹா.. இப்படி ஆகிப்போச்சேன்னு.. நானும் அவனும் இருக்கை எண்களை சரி பார்த்து

அமர்ந்து கொண்டோம். படம் திரையிடுவதற்கு இன்னும் இருபத்தி அய்ந்து நிமிடங்கள்

மீதமிருந்தன. இருவர்.. மூவர்.. நால்வர்.. என்று பார்வையாளர்களின் எண்ணிக்கை

கூடிக்கொண்டே போனது. சரியான பன்னிரெண்டு மணிக்கு பெரியார் படத்தின் முதல்

நாள் முதல் காட்சி தொடங்கிய போது.. அனேக இருக்கைகளை ஆக்கிரமித்திருந்தார்கள்

மக்கள்.



படத்தின் இடைவேளையின் போது கவனித்தோம். எல்லா இருக்கைகளும்

நிறைந்திருந்தன. மொத்தமே 30 பெண்கள் தான் வந்திருந்தார்கள். கருஞ்சட்டை

போட்டவர்கள் 22பேர் மட்டுமே!



நிறைய காட்சிகளில் பார்வையாளர்களிடமிருந்து கரவொலியும், சிரிப்பொலியும்

எழுந்துகொண்டே இருந்தது.


பெரியாரின் வாழ்வைச்சொல்லும் கதை. சிறுவயது குறும்பு பெரியவனாக ஆனபின் நடப்பதாக காட்டி இருப்பது தவிர்த்து, அதிக திரிபுகள் இல்லாமல்.. கொஞ்சம் முன்பின் கால மாற்றங்களுடன் சொல்லப்பட்டிருக்கிறது. நேரம் போவது தெரியாமல்.. திரைக்கதை நன்றாக செய்யப்பட்டிருக்கிறது. (ஞான. ராஜசேகரனின் பழைய படங்கள் போலில்லாமல்!)

பாடல்கள்: வைரமுத்து உண்மையில் பாராட்டுக்குறியவர்.

இசை: வித்யாசாகர்.. உறுத்தாத பின்னனி இசையின் மூலம் அசத்தி இருக்கிறார். (எந்த பாடல் காட்சியிலும் தம்மடிக்க எழுந்து ஆள்கள் வெளியே போகவில்லை.)

ஒளிப்பதிவு: தங்கர்ப்பச்சான் நிச்சயம் விருதுக்கு சிபாரிசு செய்யலாம். காலமாற்றங்களை
அழாகாக ஒளிப்பதிவில் காட்டி இருக்கிறார்.

நடிக,நடிகைகள்: சத்தியராஜும், ஜோதிர்மய்-யும் மனதில் அமர்ந்து விடுகின்றனர். சுமார் எட்டுவிதமான கெட்ட-அப்-களில் அசத்தி இருக்கும் சத்யராஜ் விருதுக்கு பெயர் பதிவு செய்து கொள்ளலாம்.. அவார்டு நிச்சயம். அண்ணா மட்டும் கொஞ்சம் உறுத்துகிறார்.




காலங்கள் கடந்தாலும் இந்த கிழவனின் தேவை மிச்சமிருப்பதை பார்வையாளர்களின் கரவொலி சொல்லிக்கொண்டே இருந்தது.

பெரியார் நிச்சயம் பெரியார் தான்.

அவசியம் பார்க்கவேண்டிய படம்! பார்த்துட்டு சொல்லுங்க!!
----
தொ.சுட்டிகள் :-
1. முன்னமே நான் கொடுத்த பெரியார் கதைச்சுருக்க இலவச மின்னூல் வேண்டுவோர் இங்கே போகவும்.

2. ரிடிஃப் டாட் காமில் வந்த விமர்சனம்.

3. சின்னக்குட்டி தொகுத்த செய்தி வீடியோ.






கோவையில் இந்த மாதம் இருபதாம் தேதி நடக்கவிருக்கும் பதிவர் முகாம் பற்றி அறிந்திருப்பீர்கள்.

சாப்பாடு, தங்கல் அல்லது குளித்து உடை மாற்றிக்கொள்ள என ஏற்பாடுகள் செய்ய வேண்டி இருப்பதால் முகாமிற்கு வரும் நண்பர்கள் முன்கூட்டியே சொல்லுவது அவசியமானதாகிறது.

இதுவரை இக்கூட்டத்தில் கலந்து கொள்வதாக சொல்லி இருப்பவர்களின் பட்டியல் கீழே..

1. முகுந்த் நாகராஜ்.
2. உண்மைத் தமிழன்
3. சுகுணா திவாகர்.
4. வரவனையான்.
5. மோகன் தாஸ்.
6. செந்தழல் ரவி.
7. லக்கிலுக்.
9. தியாகு.
10. பாலபாரதி.
11.நாமக்கல் சிமி.
12. 'தண்டோரா'விக்கி.
13. ப்ரியன்.
14. வினையூக்கி.
15. மா.சிவக்குமார்.
16.உதயசெல்வி.
17.லிவிங் ஸ்மைல்.
18. பொன்ஸ்.
19. சென்ஷி.
20. காசி

இவர்களைத் தவிர பெயர் நினைவில் இல்லாமல்.. தொலைபேசி வழியாக சொன்னவர்கள் சிலரும் இருக்கிறார்கள். நாட்கள் நெருங்கி வருகிறது. வேலைகளை விரைந்து முடிக்கவேண்டும்.

தயவு செய்து வருகை தரும் நண்பர்கள் இங்கே பின்னூட்டமாக பெயர்களைப் பதிவு செய்தால் நலமாக இருக்கும்.


More than a Blog Aggregator

by ♠ யெஸ்.பாலபாரதி ♠


பதிவர்கள்..


மீண்டும் பதிவர்கள்..

மீண்டும்.. மீண்டும்.. பதிவர்கள்... :)




பாமரனின் கோவை லொள்ளுப் பேச்சு..


பேரா.ரமணி பேசுகிறார்.

கருத்துகள் இல்லை: