செவ்வாய், 30 ஜூன், 2009

2009-06-30



More than a Blog Aggregator

by சிறில் அலெக்ஸ்
சர்வேசனின் ஜன கன மன நேயர் விருப்பத்திற்கு என்னுடைய Casioவில் வாசித்து பதித்த வாத்திய இசை.

Get this widget | Share | Track details
உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.

டெல்லியில் உள்ள பிச்சைக்காரர்களுக்கு, சொந்தமாக வீடுகள் இருக்கும் ஆச்சரியத் தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக டெல்லி பல்கலைக்கழக சமூகவியல்துறை அங்குள்ள 3 ஆயிரத்து 526 பிச்சைக்காரர்களிடம் ஆய்வு நடத்தியது. ஆய்வில் பங்கேற்றவர்களில் 4 பேர் பட்டப் படிப்பை முடித்தவர்கள் என்றும், 6 பேர் கல்லு£ரியில் படித்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. டெல்லியில் மொத்தம் 58 ஆயிரம் பிச்சைக்காரர்கள் இருப்பதாகவும், அதில் பெரும்பாலானவர்களுக்கு தினமும் 500 ரூபாய் வருமானம் கிடைப்பதாகவும் தெரியவந்துள்ளது. இவர்களில் 355 பேருக்கு டெல்லியில் சொந்தமாக வீடு இருக்கிற தகவலும் வெளியாகியுள்ளது. இங்குள்ள பிச்சைக்காரர்கள், தாங்கள் தொழில் செய்யும் இடங்களுக்கு செல்ல பேருந்து மற்றும் சைக்கிள்களைப் பயன்படுத்துவதாகவும், சிலர் நாளன்றுக்கு 500 ரூபாய் வரை செலவு செய்து ஆடம்பரமாக வாழ்வதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

ஜே.ராஜா முகம்மது என்பவர் எழுதிய, "புதுக்கோட்டை மாவட்ட வரலாறு' என்ற நுõல் அது.
அதில் —
கப்பத் தொகை 16 ஆயிரத்து 550, மே 31, 1798 வரை பாக்கி இருப்பதாகவும், அத்தொகையை உடனடியாக கட்டும்படியும் கட்டமொம்மனுக்கு மதுரை கலெக்டராக இருந்த ஜாக்ஸன், எச்சரிக்கைக் கடிதம் அனுப்பி வைத்தார்.
ஆனால், குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் பாக்கியை செலுத்தவில்லை கட்டபொம்மன். இதனால், பாஞ்சாலக்குறிச்சியின் மீது படையெடுக்க விரும்பினார் ஜாக்சன். அப்போது, ஆங்கிலேயே படை திப்பு சுல்தானுடன் போரில் ஈடுபட்டிருந்ததால், இதற்கு உடன்படவில்லை. மாறாக, கட்டபொம்மனை, ராமநாதபுரத்துக்கு அழைத்துப் பேசுமாறு பணித்தது. இதன்படி தன்னை ராமநாதபுரத்தில் ஆக., 18, 1798ல் சந்திக்கும்படி கட்டபொம்மனுக்கு கடிதம் எழுதினார் ஜாக்சன். இந்தக் கட்டளையை அனுப்பிவிட்டு, திருநெல்வேலி பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள, ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்டார் ஜாக்சன். அப்போதே ஜாக்சனை சந்திக்க, கட்டபொம்மன் தன் பரிவாரங்களுடன் சென்றார். குற்றாலத்தை ஜாக்சன் அடைந்த போது, கட்டப்பொம்மனும், அவரது பரிவாரங்களும் ஜாக்சனுக்காக காத்திருந்தனர். கட்டபொம்மனை அங்கு சந்திக்க மறுத்து விட்டார் ஜாக்சன்.

பின், சொக்கம்பட்டி, சிவகிரி, ஸ்ரீவில்லிபுத்துõர் போன்ற இடங்களிலும் சந்திக்க முயன்று, தோற்று, பயணம் தொடங்கி 23 நாள் கழித்து, 640 கி.மீ., அலைந்து, செப்.,19, 1798ல் ராமநாதபுரத்தில் கட்டப்பொம்மன், ஜாக்சனை சந்தித்தார்.
கிஸ்தி கணக்கை சரி பார்த்தபோது, ரூ.5,000 (1080 பசோடா) மட்டுமே பாக்கி இருப்பதை கண்டு கொண்டார் ஜாக்சன். ஆகவே, மே 31, 1798க்கும் செப்., 31, 1798க்கும் இடைபட்ட மூன்று மாத காலத்தில் கட்டப்பொம்மன் ரூ.11 ஆயிரம் கிஸ்தி பணபாக்கியை கட்டிவிட்டதாக அறிகிறோம்.

அகந்தை கொண்ட ஜாக்சன், மேற்படி சந்திப்பின் போது கட்டப்பொம்மனையும், அவரது அமைச்சர்களையும் மூன்று மணிநேரம் நிற்க வைத்தே விசாரணை செய்தார். சந்திப்பின் இறுதியில் ராமநாதபுரம் கோட்டையிலேயே அவர்கள் தங்கியிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கை கலப்பில் கட்டப்பொம்மன் தப்பிக்கும் முயற்சியில், லெப்டினன்ட் கிளார்க் என்பவர் கொல்லப்பட்டார். கட்டப் பொம்மனின் அமைச்சர் சிவசுப்ரமணிய பிள்ளை கைது செய்யப்பட்டார். கட்டப்பொம்மன் தப்பித்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பின் கட்டப்பொம்மன் சென்னை கவர்னருக்கு மேல் முறையீட்டுக் கடிதம் ஒன்று அனுப்பினார்.

கவர்னருக்கு அனுப்பிய கடிதத்தில், தான் கலெக்டரின் கட்டளைக்கு மதிப்பளித்து அவரைச் சந்திக்க, பாக்கி இருந்த முழு கிஸ்தி பணத்தையும், ராமநாதபுரத்துக்கு எடுத்துச் சென்றதாகவும், அங்கு ஏற்பட்ட கை கலப்பிற்கு ஜாக்சனின் நடவடிக்கைகளே காரணம் எனவும் குறிப்பிட்டிருந்தார். (கட்டபொம்மன் படத்தில் சிவாஜி பேசும் வசனங்கள் எல்லாம் "டுபாக்கூர்'தானா?)
கடிதத்தை கண்ட கவர்னர் கிளைவ், தற்காலிகமாக ஜாக்சனை பதவி நீக்கம் செய்தும், சிவசுப்ரமணியப் பிள்ளையை விடுதலை செய்தும் ஆணை பிறப்பித்தார். அத்துடன், ராமநாதபுரம் நிகழ்ச்சிகளை குறித்து விசாரிக்க, வில்லியம் பிரவுன், வில்லியம் ஆரம், ஜான் காசா மேஜர் ஆகியோர் அடங்கிய ஒரு குழுவையும் நியமித்தார்.

இக்குழுவின் விசாரணையில் (டிச.15,1798) ராமநாதபுரத்தில், கட்டபொம்மனை, ஜாக்சன் நடத்திய விதம் ஏளனத்திற்குரியது என்று தெரிய வந்தது.
விசாரணைக் குழுவின் முடிவு ஏற்கபட்டு, பதவியில் இருந்து ஜாக்சன் நீக்கப்பட்டார். அவரது இடத்தில் லுõசிங்டன் கலெக்டராக நியமிக்கப்பட்டார்.

http://revver.com/video/169981/veerapaandiya-kattabomman/

— இப்படி குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.

Dinakaran.com
ஷண்முகசுப்பையாவின் கவிதை ஒன்று.

அணைக்க ஒரு
அன்பில்லா மனைவி
வளர்க்க இரு நோயுற்ற சேய்கள்
வசிக்கச் சற்றும்
வசதியில்லா வீடு
உண்ண என்றும்
உருசியில்லா உணவு
பிழைக்க ஒரு
பிடிப்பில்லாத் தொழில்
எல்லாமாகியும்
ஏனோ உலகம் கசக்கவில்லை

துவர்க்கும் நெல்லிக்காயின் அடிவாரத்தில் சுவைக்கப்படும் .00001 மில்லிகிராம் இனிப்புதான் வாழ்க்கை.


லிப்சன் கெய்சர் என்பவர் ஒரு மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளர். உலகெங்கும் சென்று பயிற்சி வகுப்புகளை நடத்தி வருவதையே தொழிலாகக் கொண்டவர்.

ஒருமுறை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இவர் பயிற்சி வகுப்பு நடத்தியபோது, ஐநூறு வெள்ளி கட்டிவிட்டுப் பயிற்சி வகுப்பு மேற்கொண்டவர்களை நோக்கி அதிர்ச்சி தரும்படி பேசினார்.
கெய்சர் இப்படி ஆரம்பித்தார்.

நீங்கள் இறந்து விடுகிறீர்கள். உங்களைச் சவப்பெட்டியில் கிடத்தி இருக்கிறார்கள். மேல் பலகை மீது இன்னும் ஆணிகள் அறையப்படவில்லை. உங்களைச் சுற்றிப் பலரும் சூழ்ந்து நிற்கிறார்கள். சிலர் வாய்பொத்தி அழுகிறார்கள். சிலரோ கதறுகிறார்கள். வேறு சிலர் உங்கள் கால்கள் அருகே மண்டியிடுகிறார்கள். பலர் மலர்வளையம் வைக்கிறார்கள் என்றார்.
நான் இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள நேர்ந்திருந்தால், அடப்பாவி மனுஷா! நாலு நல்ல விஷயம் சொல்வாய் என்று பார்த்தால், சாகவே அடித்துவிட்டாயா? என்று எண்ணியிருப்பேன். ஆனால் இதில் கலந்துகொண்டவர்களோ, எங்கள் வாழ்க்கைப் பாதையையே மாற்றிவிட்ட பயிற்சி வகுப்பு இது என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
கெய்சர் தொடர்கிறார். இப்போது எவரோ ஒருவர் உங்களை விமர்சனம் செய்ய ஆரம்பிக்கிறார்.

நல்ல மனுஷன்! பாவம்! அல்ப ஆயுசுல போய்ச் சேர்ந்துட்டாரு.
இதைக் கேட்டதும், உங்கள் காதுகள் உயிர்ப்பெறுகின்றன. ஒலியை மட்டும் வாங்கிக்கொள்ளும் மூளையின் பகுதி வேலை செய்ய ஆரம்பித்துவிடுகிறது. ஆகையால் காதுகளைத் தீட்டிக்கொண்டு உங்களைப் பற்றிய விமர்சனங்களை நீங்கள் கூர்ந்து கவனியுங்கள்.

இப்போது பேசுகிறார்களே, இவைதான் உங்களைப் பற்றிய கலப்படமற்ற உண்மையான விமர்சனங்கள்.

ஒரு மனிதன் எவ்வளவு காலம் வாழ்ந்தாலும் சரி, அவனுக்கான அஞ்சலி கூட ஒரே நிமிடம்தான். இந்த நேரத்திற்குள் அவன் நினைக்கப்பட்டு இருந்தாலும் மறுநிமிடமே மறக்கப்பட்டுவிடுகிறான்.

இந்த ஒரு நிமிட விமர்சனம் அல்லது ஒரு நிமிடச் சிந்தனை எப்படிப்பட்டவராக இருக்கவேண்டும் என்பதை மற்றவர்கள் முடிவு செய்யக்கூடாது. இதை நாம்தான் தீர்மானிக்கவேண்டும்.

இந்த விமர்சனம்தான் இனி மேற்கொள்ள இருக்கும் வாழ்க்கைப் பாதையை நிர்ணயிக்கப்போகிறது.

நல்ல மனுஷன்தான். ஆனா புள்ளைகளுக்கு ஒண்ணும் வழி பண்ணாமப் போய்ட்டாரே. பெரிசாப் பேசினாரு. ஆனா தன்னோட உடம்பைப் பாதுகாக்காம விட்டுட்டாரு. என்றோ, இனிமே இந்தக் குடும்பம் நல்லா முன்னுக்கு வந்துடும் என்று ஆரம்பித்து ஏகமாய் விமர்சனம் செய்ய அனுமதித்து விடக்கூடாது.
நாம் எப்படியெல்லாம் பாராட்டப்படவேண்டும் என்று விரும்புகிறோமோ அவற்றை அடைவதற்கு என்ன வழி என்று இந்த நிமிடமே நாம் தீர்மானித்துவிட்டால்கூட இந்தச் சமூகத்தின் எதிர்பார்ப்புகளை நம்மால் ஈடுகட்டிவிட முடியும்.

இதுவரை வாழ்ந்த வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருப்பினும், அது துடைத்து எடுக்கப்பட்ட வாழ்க்கையாக நம் புதுவாழ்க்கை அமைய இந்த நிமிடத் தீர்மானம் உங்களுக்கு உதவப் போகிறது.
Kumudam
சங்கெனவே ஒளிர்கின்ற இளமை யங்கம்;தவழ்கின்றத் தென்றலெனச் சிரிக்கும் நங்கை!துங்கமணி மின்போன்றிம் மகளைப் பெற்றோர்;துன்பங்கள் அத்தனையும் வாழ்வில் உற்றேதங்கமதில் கடியாரம், வெள்ளித் தட்டும்,சரிகையெலாம் நிறைந்திருக்குங் கூறைப் பட்டும்,வங்கியிலே பலநூறாய் நோட்டுக் கட்டும்,மங்கையவள் மணமுடிக்கச் சேர்த்தே வைத்தார்!திருநிலவாய்ப் பூத்துநிற்கும் அமுதாம் பெண்ணே!தித்திக்கும் வாழ்க்கையெனுங் கடலில் உன்னை,சிறப்புடனே
சமீபத்தில் பட்ஜெட் உரை தாக்கல் செய்த லாலு பிரசாத் யாதவ், எய்ட்ஸ் நோயாளிகளுக்கு 50 சதவீத கட்டண சலுகை வழங்க முன்வந்துள்ளார்.மருத்துவ தேவைகளுக்காகவோ அல்லது பிற சொந்த விஷயங்களுக்காகவோ ரயில்களில் பயணம் செய்யும் நோயாளிகளுக்கு இது மிகவும் பயன் உள்ளதாக அமையும் என்று கூட்டமைப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நோயாளிகளுக்கு முழுக்கட்டண சலுகை வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது

கருத்துகள் இல்லை: