செவ்வாய், 30 ஜூன், 2009

2009-06-30



More than a Blog Aggregator

by முத்துகுமரன்
சாதிக் கட்சிகளை ஒழிக்க வேண்டும்
பேசுபவன்
THE HINDU


More than a Blog Aggregator

by முத்துகுமரன்
















நான் சித்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பூ ஆகிட்ட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.

இப்புவியில் உதித்திருக்கும் எங்கள் அடுத்த தலைமுறை ''தலைமகனுக்கு''

உங்கள் அன்பையும் ஆசிகளையும்

வேண்டி



இனிப்புகளுடன்

முத்துகுமரன்




More than a Blog Aggregator

by முத்துகுமரன்
குண்டுகள் இடு!
கொலைகள் செய்!
வன்புணர்!
யோனிகள் சிதை!
வாழ்விடங்கள் தகர்!
சவக்குழிகள் பயிரிடு!
மனிதநேயம் நிர்வாணமாக்கு!
பட்டியலிடு, இறந்த குழந்தைகளையும் தீவிரவாதிகளாக்கி!
எல்லாம் செய்!
அரசாக!
அரசாக!
எம்
தமிழன் விழிக்காதவரை

உன் இறைமைக்கு
உத்திரவாதம் கொடுக்கவும்,
கட்டிக் காக்கவும்,
கூடவும் ஆசிகளோடும்
சிரித்துக் கொண்டிருப்பர்,
காந்தி தேசத்து அகிம்சை ராமர்கள்!


More than a Blog Aggregator

by முத்துகுமரன்
விரவிக் கிடக்கும் ஒலித்திரளினூடாக பயணித்தாலும்
மெளனத்தோடு
இதயக்குழியில் உள்ளடங்கி
உதிர்த்திடாத வார்த்தைகளுக்குள்
உயிர் கொண்டிருக்கிறது
எனது கவிதைகள்
யாரும் மொழிபெயர்த்திட இயலாதவாறு


More than a Blog Aggregator

by முத்துகுமரன்
அருகாமையற்றதின் வலியின் கீறலில்
தொலைவின் நீளத்தை தீடிரென உணர்ந்து கொள்கிறது
இறுக்கம் கொண்ட மனது
பிறர் பார்வை மறைக்க
சலனமற்ற முகமூடியணிந்து மறைந்து கொள்கிறது வெறுமை
சொற்ப கணங்களே நீடித்தாலும்
எதன் காரணம் என்றறிய இயலாது
தாளவியலா அழுத்தத்தை தந்துவிட்டுப் போகிறது
முடிவுறாத் தனிமை



அவ‌ள்
உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறாள்
நீங்கள் பிரியத்தின் வெவ்வேறு வடிவங்களை உணர்த்திக் கொண்டிருக்கிறீர்கள்
அவ‌ள்
த‌ன் துக்க‌ங்க‌ளை ப‌கிர்ந்து
புதிர்க‌ளுக்கான‌ முடிச்சுக‌ளை காட்டுகிறாள்
நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள்
அவளை அவளாகவே
உங்க‌ளை ஏற்றுக் கொள்ள‌ முடியாது என்கிறாள்
சிரிப்பதாக பாவித்த நீங்கள்
ஒரு பனிநனைத்த அதிகாலையில் 
அவ‌ளின் ப‌ட‌த்தை பார்த்து க‌த‌றிய‌ழுதீர்க‌ள்
பிற‌கு
த‌னித்த‌ ப‌ய‌ண‌த்தில்
சூரிய‌ன் முக‌த்தில் விழும் க‌ணத்தில் 
அழுது தீர்த்தீர்க‌ள்
நாட்க‌ள் க‌ழிய‌
உங்களை பிடிக்கும் என்கிறாள்
சொற்க‌ளை 
உங்க‌ளோடு புதைத்து 
கொஞ்சமாகச் சிரிக்கிறீர்க‌ள்
நேற்றுமில்லாத‌ இன்றுமில்லாத
த‌ருண‌த்தில்
உங்க‌ளின் அழ‌கின்மையை ப‌ட்டியலிட்டு
நீங்க‌ள்
க‌ட்டியிருந்த 
ஆளுமையை
சிதைக்கிறாள்
உங்களின் துக்கத்தை அறிந்தவளாய்
தான்
சொன்னவை எதுவும் பொருளற்றவை
த‌ன்
சிக்க‌ல்க‌ளின் வெற்று பிம்ப‌ங்கள் என்கிறாள்
நீங்க‌ள்
நிராக‌ரிக்க‌ எதுவுமில்லை
உண்மையின் வெம்மையில் க‌ச‌ங்க‌த் துவ‌ங்குகிறீர்க‌ள்
இந்த‌த் தார்ச்சாலையின் ம‌திய‌ வெயிலில்
வாகனத்தில் நசுங்குவது கூட
உங்களுக்கு
ஆசுவாசம் தரக்கூடும்
க‌ண்ணீரில் க‌ரைய‌த் துவ‌ங்கும்
உங்களைப் பார்த்து செருப்புத் தைப்ப‌வ‌ன்
வ‌ருத்த‌ப்பட்டிருக்கலாம்
உங்களுக்கு அடுத்தவரின் கருணை தேவையில்லை
உங்க‌ளின் துக்க‌ம் உங்க‌ளுக்கானது
இந்த‌க் க‌ண்ணீருக்கான‌ அர்த்த‌ம் முடிவ‌ற்றது
உற‌ங்க‌ச் செல்கிறீர்க‌ள்
இர‌வின் வெறுமை உங்க‌ளை விழிக்க‌ச் செய்கிறது.
அருகில் கிட‌க்கிற‌து ஒரு நைலான் க‌யிறு.

(த‌ற்கொலை செய்து கொண்ட‌ ந‌ண்ப‌ன் ம‌துவுக்கு)

கருத்துகள் இல்லை: