இனப்படுகொலை, மதவெறி போன்றவை ஏற்படுத்தும் வலிகளையும் அவலங்களையும் மற்றவர்களிடம் வலுவாகக் கடத்த திரைமொழி சிறந்தது. அந்தப் பணியை சிறப்பாக செய்த மிஸ்டர் அண்ட் மிஸஸ் அய்யர், பர்சானியா, தற்போது ஃபிராக் போன்ற திரைப்படங்கள் முன்வைக்கும் செய்தி என்ன?
நாம் 21ம் நூற்றாண்டில் வாழ்கிறோம் என்று பெருமைப்பட்டுக் கொண்டாலும், மனித இனம் எவ்வளவு தூரம் முன்னேறி இருக்கிறது என்பதைப் பற்றிய வலுவான சந்தேகங்கள் எழுந்து கொண்டேதான் இருக்கின்றன.

"அப்பிச்சி வாங்க வாங்க, என்ன நெம்ப நாளா உங்களை இந்தப் பக்கமே காணமுங்களே?"
"ஆமாடா பேராண்டி, நீயுமு விடுப்புல கொழந்தைகளோட நெம்ப முசுவா இருந்துட்டு கூடவே இடுகைகளையும் போட்டுட்டு இருந்தியா, அதான் எதுக்கு தொந்தரவுன்னு வருல!"
"ஓ அப்பிடீங்ளா?"
"ஆமா, நீயி இன்னியுமு முசுவாத்தான் இருக்குற மாதரத் தெரியுதூ? தமிழ்ச்சங்க விழாவுக்கு எதோ படிக்கிறயாமா? என்றா சங்கதியது?!"
"அதொன்னுமில்லீங், பல்லூடக(multimedia) நிகழ்ச்சியில கலந்துக்கலாமுன்னு...."
"அட்றா சக்கை, அட்றா சக்கை... நீயே ஒரு அரை வேக்காடு, நீ என்னத்தறா அவுங்க கேக்குற கேள்விகளுக்கு பதிலு சொல்லப் போற?"
"என்னுங்க அப்பிச்சி இப்பிடிக் கேட்டுப் போட்டீங்? நீங்க இப்பிடி வந்து சொல்லிட்டுப் போறதெல்லாமு ஞாவகத்துல வெச்சிருந்து சொல்லமாண்டனாக்கூ? அப்பிடியே அட்லாண்டாவுல நம்ம சனத்தையுமு பாத்து போட்டு வர்லாமல்லோ, அதான்..."
"அப்பச்செரி, அப்பச்செரி"
"நீங்க அப்ப எதுனா சொல்லுங்க இன்னிக்கி!"
"ஆமாமா, உங்கிட்ட கேக்குறதுக்கு விசியம் இருக்குதுறா... ஆமா, நாவல்ன்னா என்ன? சிறுகதைன்னா என்ன? காப்பியம்ன்னா என்ன??"
"நாவல்ன்னா பெரிய அளவுல எழுதுறது. சிறுகதை சின்ன அளவுல எழுதுறது. காப்பியம்ன்னா நெம்பப் பெரிய அளவுல எழுதறது. செரிதானுங் அப்பிச்சி?"
"நீயி இன்னமு ஒரு அரை வேக்காடுங்றது செரிடா பேராண்டி! ஏஞ்சொல்லுறேன்னா, நீயி சொன்னதுல அரவாசி செரி, அரவாசி செரியில்ல, அதான்!"
"என்னுங் அப்பிச்சி இப்பிடிச் சொல்றீங்? அப்ப நீங்களே சொல்லுங் சித்த!"
"செய்யுள், அல்லன்னா பாட்டுலயே ஒரு கதை, கருத்தைத் தொடர்ந்து சொல்லுறதுதான் காவியம், காப்பியம்ங்றது. அந்தக் காலத்துல எல்லாமே பாட்டுத்தேன்... அப்பறமா, நாம பேசற மாதரயே, பழமயிகள அடிப்படையா வெச்சி எழுதுனது நாவல். இந்தப் பழக்கம் சீமையில இருந்து வந்த பழக்கம்!"
"ஆமாங்க அப்பிச்சி, இப்பத்தான் இது ஞாவகத்துல வருது... அப்ப சிறுகதைக்குமு நாவலுக்குமு?"
"அந்த ரெண்டுமே உரைநடைகதான். சிறுகதைங்றது, ஒன்னைப் பத்தி தனிமரமாட்டம் நின்னு சொல்றது. நாவல்ங்றது பலதரப்பட்ட மரங்க ஒன்னு சேந்தா மாதர இருக்குற தோப்பு போலக் கட்டி எழுதுறது!"
"அப்ப புராணம், இதிகாசமுங்றது?"
"புராணம்ன்னா நெம்ப பழையது, அதுனால பழைய பழக்க வழக்கங்கள், வரலாறு இதுகளையெல்லாமுஞ் சொல்ற நூல் புராணம். இதிகாசமின்னா, வட மொழியில உண்மை நிகழ்வுகளைத் தழுவினதுன்னு அர்த்தம்."
"ஆகமமுன்னா?"
"ஆகமம் அப்படின்னா வந்ததுன்னு அர்த்தம். ஆக, வழி வழியா தொன்று தொட்டு வர்ற மரபுகள், பழக்க வழக்கங்களை விவரணம் செய்யுறது ஆகமம்ன்னு சொல்லிச் சொல்றதுறா பேராண்டி!"
"இவ்வளவு இருக்குதுங்ளா இதுல?"
"ஆமாடா பேராண்டி, அப்ப இன்னைக்கு இது போதும். நீ தூங்கு, நான் வாறன்!"
இன்னைக்கு இதாங்க சொன்னாரு! அடுத்த தடவை என்ன சொல்லப் போறாரோ? வந்து, மனுசன் கேள்வி வேற கேப்பாரு. சும்மா, சொல்லிட்டுப் போகலாமில்ல?? எதுக்கும், மறுபடியும் வருவாருன்னு நம்புவோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக