படம் ஆரம்பிக்கும் காட்சியில் நிதின்சத்யாவை அவரது அம்மா துரத்துகிறார். அவரோடு சேர்ந்து ஊரார் எல்லாம் கம்பும், கடப்பாரையும் வைத்துக் கொண்டு அவரைத் துரத்துகிறார்கள்.
அப்போதே தெரிந்திருக்கவேண்டும்... அவர்கள் துரத்துவது நம்மையும்தான் என்று.. எங்கே புரிந்தது மரமண்டைக்கு!
ஊர்க்காரர்களால் துரத்தப்பட்ட நிதின்சத்யா, சென்னையில் (சென்னைதானேப்பா? ஒரு மண்ணும் ஞாபகமில்ல) டேனியல் பாலாஜியைச் சந்திக்கிறார். நிதின் சத்யாவைப் போலவே டேனியல் பாலாஜியும் ஒரு பொறம்போக்கு என்பதால் இருவரும் ஃப்ரெண்டாகி விடுகிறார்கள். டேனியல் பாலாஜி லக்ஷ்மி ராயைக் காதலிக்கிறார். அவருக்கு உதவ டேனியலின் அறைக்கு லக்ஷ்மி ராயை அழைக்க, அங்கே எதிர் அறையில் இருக்கும் சேத்தனைத் தேடி கமிஷனர் கிஷோர் வர.. தங்களைப் பிடிக்க வருகிறார்கள் என்றெண்ணி நிதின், டேனியல் மற்றும் அவர்களது இரு காதலிகளும் ஓட.. சேத்தன் தனது லேப்டாப்பை இவர்கள் காரில் போட்டுவிட்டு ஏற முயலும்போது போலீசாரால் சுடப்பட்டு இறக்கிறார்.
அந்த லேப்டாப்பில் பொன்வண்ணன், தனது அண்ணன் சரவணனைக் கொன்றது பதிவாகி இருக்கிறது. முதலமைச்சராக ஆகப்போகும் முயற்சியில் இருக்கும் பொன்வண்ணனும்..
போங்கப்பா சொல்ற எனக்கே இவ்ளோ போரடிக்குது. படிக்கற உங்களுக்கு என்ன கொடுமையா இருக்கும்னு தெரியுது!
பாலிவுட் ஸ்டைலில் படமெடுக்க முயற்சித்திருக்கிறார்கள். குழப்பமான திரைக்கதையால் கோட்டை விட்டுவிட்டார்கள்.
அதுவும் அந்த க்ளைமாக்ஸில் ஆனந்த், பொன்வண்ணன், டேனியல் பாலாஜி, நிதின் மாறி மாறிப் பேசும்போது திரையக் கிழித்து விடலாமா என்று தோன்றுகிறது!
லக்ஷ்மிராயை பார்க்கும்போதெல்லாம் சம்பந்தமில்லாமல் T 20 ல் இந்தியா செமி ஃபைனலுக்குப் போகாமல் திரும்பியது ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது. சரியான ஸ்ட்ரக்சர் என்பதை மறுப்பதற்கில்லை.
டேனியல் பாலாஜி தனது மாடுலேஷனையும், பாடி லேங்குவேஜையும் மாற்றிக் கொள்ளும் நேரம் வந்துவிட்டது. ஒரே ரிப்பீட்டடாக இருக்கிறது.
நிதின் சத்யா மட்டும் ஆறுதலளிக்கிறார். சரக்கடிக்கும்போது ஐஸ் இல்லாததால் எதிரிவிட்டில் வாங்கிவர டேனியல் பாலாஜி சொல்லும்போது 'குச்சி ஐஸா.. கோன் ஐஸா' என்று கேட்பதில் தொடங்கி படம் நெடுக ரிலாக்ஸாக இருக்க வைக்க உதவுகிறார். அவரையும் காதலியைப் பார்த்து செண்டிமெண்டலாகப் பேச வைப்பது எரிச்சலூட்டுகிறது.
யுவனின் மகுடத்தில் இந்தப் படம் ஒரு பெரிய சறுக்கல். இதுவரைக்கும் பாடல் காட்சிகளில் கொத்துக் கொத்தாக இப்படி ஆட்கள் எழுந்து போவதைப் பார்த்ததே இல்லை. மூன்றாவது பாடலுக்கு தியேட்டரில் ஒரு ஆள் "அய்யோ.. சிகரெட் தீர்ந்துடுச்சுய்யா.. பாட்டு போடாதீங்க" என்று கத்தியதையும் கேட்க முடிந்தது!
மொத்தத்தில் முத்திரை - ஆள வுடு சாமி!
குழந்தைகள் கதையை வைத்து பெரியவர்களுக்கு படம் காட்டியுள்ளார் இயக்குனர். கமர்ஷியல் படங்களில் வரும் கேரக்டர்கள் செய்யும் வேலையை, சிறுவர்களை செய்ய வைத்து, ஜாலியாக சோர்வில்லாமல் கொண்டு சென்றிருக்கிறார். பள்ளிக்கூட காட்சிகள், கடந்து வந்த காலத்தை நினைவுப்படுத்தும். இதற்காக இயக்குனரும், டைட்டிலில் ஏகப்பட்ட அறிமுகங்களை கண்டதால் தயாரிப்பாளர் சசிக்குமாரும் பாராட்டுக்குரியவர்கள்.
ஏனோ தெரியவில்லை. எனக்கு ஆரம்பத்தில் கதையின் நாயகர்களான அன்பு-ஜீவா கதாபாத்திரங்கள் சண்டை போடும் காட்சிகளை விட, அந்த லவ் சீன்கள் பிடித்திருந்தன. இளையராஜா இசையை இப்போது பிண்ணனி இசையாக, டிடிஎஸில் கேட்பது நன்றாக இருந்தாலும், நிறைய படங்களில் பயன்படுத்துவதால், வர வர ஓவர் டோஸாக மாறுகிறது. படத்தில் தொடர்ச்சியாக வரும் வெவ்வேறு செல்போன் காட்சிகள், ரிங்டோன்கள், தமிழ்நாட்டு செல்போன் நிலவரத்தை எதார்த்தமாக பதிவு செய்துள்ளது.
ஜீவாவின் அப்பாவாக வரும் வாத்தியார் நடிகர் அருமையாக நடித்துள்ளார். யார் அவர்? பார்த்த ஞாபகம் இல்லை. ஆனால், பார்த்தது போலவும் உள்ளது. அன்பின் அப்பாவாக வருவது, கல்லூரி படத்தில் நடித்தவர்தானே? அவர் பாலாஜி சக்திவேலின் உதவியாளர் என்று ஞாபகம். புதுசாக இருந்தாலும் பட்டாசாக நடித்திருக்கிறார்கள் அனைவரும். பக்கடா டிரிபில்ஸ் ஏற்றியவாறு, சைக்கிளை பேசி கொண்டு அழுத்தும் அந்த நீண்ட சிங்கிள் ஷாட் காட்சி சூப்பர்.
படமெங்கும் மற்ற தமிழ் படங்களை சிறுவர்கள் மூலம் கிண்டல் அடித்துள்ளார்கள். அதற்காக இது ஒன்றும் வேறு டைப் படம் கிடையாது. இதுவும் சினிமாத்தனங்கள் நிறைந்த பீல் குட் படம் தான். ஆரம்பத்தில் ஜீவா கேங்கிற்கு கொடுக்கும் பில்ட்-அப், கமர்ஷியல் பட ஹீரோக்களுக்கு கொடுக்கும் பில்ட் அப்புக்கு குறைந்ததில்லை. எரிச்சலை வரவழைத்தது. பள்ளியில் தேசிய கீதத்திற்கு அனைவரும் வேலை விட்டுவிட்டு அப்படியே நிற்கிறார்கள். தேசிய கீதம் பாதி ஓடிய பிறகு தான், எனக்கு உறைத்தது. நாம் ஏன் எழுந்து நிற்கவில்லை? ஸோ, எதார்த்ததில, யாரும் இப்படி நிற்க மாட்டாங்க.
எனக்கு படத்தில் ரொம்ப பிடித்தது புஜ்ஜிமா தான். அவன் ஓரத்தில் நின்று கொண்டிருந்தாலும் அவனைத்தான் பார்த்து கொண்டிருந்தேன். இடைவேளையின் போது வரும் குடும்ப சண்டையின் குறுக்கே புகுந்து, வாத்தியாரைக் குத்துவிட்டு விட்டு போவது கலக்கல்.
வெளி மாநில நண்பர்களுடன் சினிமா பற்றிய உரையாடல்களின் போது, தமிழ் சினிமாவை பற்றி உயர்வாக பேச நிறைய விஷயங்கள் இருக்கும். 'தாரே ஜமீன் பார்' படம் வந்த சமயம், குழந்தைகள் உலகம் பற்றிய பேச்சு வந்த போது, அதற்கு இணையாக சொல்ல ஏதும் இல்லாத ஏக்கம் இருந்தது. இனி இருக்காது. நன்றி, பாண்டிராஜ் - சசிக்குமார்.

பதிவுகளை தொடர்ந்து ரீடரில் படிப்பதற்கு நன்றி - சரவணகுமரன்
2005. அக்டோபர் மாதம். தீபாவளி சமயம்.
பனிந்தர சாமா. இருபத்தியெட்டு வயது. பிட்ஸ் பிலானியில் படித்தவர். பெங்களூரில் டெக்ஸாஸ் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். தீபாவளிக்கு சொந்த ஊரான ஹைதராபாத் செல்ல வேண்டும். பின்ன, தீபாவளிக்கு பெங்களூரில் என்ன செய்ய முடியும்? எப்போதும் பிதுங்கி வழியும் பெங்களூர் சாலைகள், விழா விடுமுறைகளின் போது, வெறிச்சோடி கிடக்கும். சாப்ட்வேர் கம்பெனிகளில், சில சமயம், என்ன எப்போது நடக்கும் என்று தெரியாததால். கடைசி வரை ஊருக்கு எப்போது போவோம் என்று அவருக்கு தெரியவில்லை. அதனால் முன்கூட்டியே ரயிலில் டிக்கெட் எடுக்கும் பிளான் இல்லை.
ஆனால், கடைசி நேரத்தில் ஊர் செல்லுவது என்று முடிவாகி விட்டது. ரயிலை கேட்கவே வேண்டாம். டிக்கெட், கண்டிப்பாக இருக்காது. சரி, பஸ்ஸில் எடுத்து விடலாம் என்று பஸ்ஸில் டிக்கெட் எடுக்க செல்கிறார். எங்கேயும் இல்லை. நகரில் இருக்கும் டிராவல்ஸ், டிராவல் ஏஜெண்ட்ஸ் எங்கும் இல்லை. இருக்கும் நெரிசலில், கடை கடையாக சென்று நொந்து விட்டார்.
ஒரு பஸ் டிக்கெட் எடுக்கணும்ன்னா இவ்ளோ கஷ்டப்படணுமா? தெரு தெருவா சுத்தணுமா? ரயிலுக்கு இருப்பது போல், ஏன் பஸ் டிக்கெட்டை இன்டர்நெட்டில் புக் செய்ய முடியாதா? இந்தியா முழுக்க ரயிலை நடத்துவது ஒரே நிறுவனம். அரசாங்கம். பஸ், அப்படி இல்லையே? எல்லா ஊருக்கும், எல்லா பஸ் கம்பெனிகளின் பஸ் டிக்கெட்டுக்கும் சேர்த்து ஒரே வெப்சைட் இருந்தால் எப்படி இருக்கும்?
கனவை வெறும் புலம்பலாக உதிர்த்துவிட்டு போகவில்லை அவர். தன்னுடன் கல்லூரியில் ஒன்றாக படித்த நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டார். சுதாகர், ஐபிஎம்மில் பணிபுரிகிறார். சரண் ஹனிவெல்லில். அவர்களுக்கும் நியாயம் புரிந்தது. ஆர்வம் துளிர் விட்டது. கலந்து பேசினார்கள். பேருந்துகளில் பிரயாணம் செய்யும் மக்களை சந்தித்து பேசினார்கள். அவர்களின் எதிர்ப்பார்ப்பை புரிந்து கொண்டார்கள். பஸ் நிறுவனங்களுக்கு சென்று பேசினார்கள். அவர்களால் என்ன செய்யமுடியும் என்று தெரிந்து கொண்டார்கள். பணம்? முதலீட்டாளர்களை தொடர்பு கொண்டார்கள். இது முடியும் என்ற தெம்பு கிடைத்தது. அடுத்த வேலையை ஆரம்பிக்கலாம்.
பார்த்து வந்த வேலை விடும் எண்ணமே இல்லை. சரியாக திட்டமிட்டால், எவ்வளவு நேரம் என்றாலும் கிடைக்கும். வாரயிறுதிகளில், ஒன்றாக இருந்து ப்ரோக்ராமிங் செய்தார்கள். இன்டர்நெட்டில் உட்கார்ந்து பஸ் இருக்கை தேடும் வசதி. சீட் இருந்தால் புக் செய்யும் வசதி. ஈ-பஸ் டிக்கெட். முடிந்தது வேலை. இண்டஸ் எண்டர்பிரனர்ஸில் தங்கள் கனவை செயலில் காட்டினார்கள். அவர்களும் மனது வைத்தார்கள். இனி வேலையை விடலாம். நல்ல சம்பளம் தந்த பாதுக்காப்பான வேலையை விட்டார்கள். முடிவு அல்ல அது. தொடக்கம். பயணம் இனிதே தொடங்கியது.
http://www.redbus.in
சுலபமாக சொன்னாலும், பின்னால் இருக்கும் உழைப்பு பெரியது. ஒவ்வொரு பஸ் நிறுவனத்தையும் சம்மதிக்க வைப்பது மிக பெரிய காரியம். பஸ் நிறுவனத்தை சம்மதிக்க வைத்தால் போதுமா? யார் டிக்கெட் எடுப்பார்கள்? யாருக்கு தெரியும்? தெரிய வைத்தார்கள். எடுத்தவர்களுக்கு பிடித்திருந்ததால், வாய் மொழி விளம்பரமாக பரவியது. நான் கூட என் நண்பர்களுக்கு பரிந்துரைத்திருக்கிறேன். இன்று 350க்கும் மேற்பட்ட பஸ் கம்பெனிகளின் டிக்கெட்டை ரெட்பஸ் மூலம் பெற்று கொள்ளலாம். இண்டர்நெட் என்றில்லை. வெளியிலும், கடைகள் மூலமாக பெறலாம். சரியான பார்ட்னர்களை தேர்ந்தெடுத்தார்கள். இன்று, ரெட்பஸ் டிக்கெட் கொடுக்க, 75000க்கும் அதிகமான கடைகள் உள்ளது. போன் செய்தால், டிக்கெட் வீட்டுக்கு வரும். எஸ்.எம்.எஸ்ஸில் கூட டிக்கெட் எடுக்கலாம்.
வெற்றி, தேவைகளைப் பூர்த்தி செய்வதில் உள்ளது. அது மக்களுக்கு சரியாக உதவிடும் போது, வெற்றி மகிழ்ச்சியை கொடுக்கிறது. எண்ணங்களை சரியான திட்டமிடலுடன் செயலில் காட்டினால், சாதனை புரியலாம் என்பது ரெட்பஸ் மூலம் இன்னுமொருமுறை நிருப்பிக்கப்பட்டுள்ளது.

மின்னஞ்சலில் வந்தது.
K.S.G.COLLEGE OF ARTS AND SCIENCE is giving a free college education to those who are unable to continue Education beyond Plus Two due to financial limitations.
Applicable only for the students from Poor families!
Students presently taking part in Plus Two examinations are also eligible!
CONDITIONS APPLY AS UNDER:-
Only Two Students, (Boy or Girl) can avail.
Selected student will be exempted from all kinds of College Fees & Hostel Fees.
Seats available only in K.S.G College of Arts & Science under their own scheme of free education.
College situated at Kamarajar Road, Near ESI Hospitals, Varadharajapuram, Singanallur, Coimbatore – 641 015
Website- www.jksgtrust.org
Courses offered:
B.Sc (Computer Science), (Electronics & Communication System), (Information Technology), (Bio-Technology) & Catering Science & Management)
B.Com & (Computer Application)
BCA (Bachelor of Computer Application)
BBM (Bachelor of Business Management)
Academic Years – 2009-12
LAST DATE FOR RECEIPT OF APPLICATION- 30.06.09
For Further details, Please contact
Surya Seva Sangam Members,
Surya Apartments,
Ganapathy,
Coimbatore.
தெரிந்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நண்பர் எவனோ ஒருவன் நேற்று மேட்டரே இல்லாம பதிவு போடுவது
எப்படின்னு கேட்டு
தொடர் பதிவு எழுதணும்ன்னு அழைத்திருந்தார்
எனக்கென்னவோ இவர்கள் தான் ஞாபகத்துக்கு வந்தனர்
இவர்களுக்கு இது ஒரு மேட்டர் அல்ல
இவர்களுக்கு கால் இல்லாதது ஒரு மேட்டரே இல்லை

இவர்களுக்கு கை இல்லாதது ஒரு மேட்டரே இல்லை

இவர்களுக்கு பார்வை இல்லாதது ஒரு மேட்டரே இல்லை

மாற்றுத்திறன் கொண்டவர்களால் இவ்வளவு முடியும்போது
எல்லாம் பெற்ற நான் ஏன் மேட்டர் இல்லாம் பதிவு போடணும்?
முடியாது என்ற சொல் முட்டாளுக்கு சொந்தம்
முடியும் என்ற சொல் இவர்களுக்கு சொந்தம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக